மௌன ராகம் 14

அத்தியாயம் 14:

​அந்தப்பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் நிலவிய பதற்றம் மெல்ல மெல்லத் தணிந்து, ஒரு நிம்மதியான அமைதிபரவியிருந்தது. கவிவர்ஷனின் வருகையும், அவனது அதிரடி மாற்றங்களும் அங்கிருந்த ஒவ்வொருவரையும் ஒரு மாய உலகிற்குஅழைத்துச் சென்றது போல இருந்தது. ரூபன்தனது தோல்வியை ஒப்புக்கொண்டு தலைகுனிந்து நின்ற அந்த நொடி, அதிகாரத்திற்கும்அன்பிற்கும் இடையிலான நீண்ட காலப் போரின் முடிவாக அமைந்தது.

​கவிவர்ஷன்மேடையின் மையத்திற்கு வந்து, பிரக்யுவின் கரங்களை மீண்டும் ஒருமுறை மென்மையாகப் பற்றினான். அவளது கரங்கள் இப்போது நடுங்கவில்லை; மாறாக, ஒரு மகா சமுத்திரத்தைக்கண்டடைந்த நதியைப் போல அமைதியடைந்திருந்தன. அவளது கண்களில்இன்னும் கண்ணீர் இருந்தது, ஆனால் அது வலியினாலானது அல்ல; மூன்று வருடத் தவத்தின் பலன் கிடைத்த ஆனந்தக்கண்ணீர்.

​”இனி இந்தமண்டபத்தில் அழுகைக்கு இடமில்லை,” என்று கவிவர்ஷன் கூட்டத்தைப் பார்த்து உரக்கச் சொன்னான். “இந்தத் திருமணம் நடக்கும்… ஆனால் ஒரு மிரட்டலுக்காகவோ அல்லதுபணத்திற்காகவோ அல்ல. இது இரண்டு ஆன்மாக்களின்சங்கமமாக நடக்கும்.”

​மேனகாமெல்ல அடியெடுத்து வைத்து மணமக்களின் அருகில் வந்தார். அவரது முகத்தில் இதுவரை இல்லாத ஒரு தேஜஸ் இருந்தது. அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட ஒரு பெண்ணின் சுதந்திரம்அவரது கண்களில் மின்னியது. அவர் ஒரு தட்டில்இருந்த சந்தனம் மற்றும் குங்குமத்தை எடுத்து, கவிவர்ஷன் மற்றும் பிரக்யுவின் நெற்றியில் திலகமிட்டார்.

​”தம்பி கவி… நீ என் மகளை மட்டும்காப்பாத்தல, இந்தத் தாயோட நம்பிக்கையையும் காப்பாத்திட்ட. உன்னை லண்டனுக்கு அனுப்பிட்டு அவ ஒவ்வொரு நாளும்செத்துச் செத்து பிழைச்சப்போ, அவளைத் தாங்கிப் பிடிச்சது உன் நினைவுகள் மட்டும் தான். இனி அவளை எந்தக் குறையும்இல்லாம பார்த்துப்பன்னு எனக்குத் தெரியும்,” என்று மேனகா தழுதழுத்த குரலில் சொன்னார்.

​கவிவர்ஷன்குனிந்து மேனகாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். “அம்மா… நீங்கள் பட்ட கஷ்டம் எனக்குத்தெரியும். பிரக்யுவை நான் ஒரு ராணிமாதிரி பார்த்துப்பேன். அதுக்கு இந்த உலகம் மதிக்கிறசெல்வம் என்கிட்ட இருக்கு, ஆனா அதைவிட அதிகமாஉங்க மேல இருக்கிற மதிப்பும்என்கிட்ட இருக்கு,” என்றான்.

​அப்போதுமண்டபத்தின் வாயிலில் இருந்து கவியின் தந்தை சசிதரன் உள்ளே நுழைந்தார். அவருடன் கவியின் உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். சசிதரன்  நேர்மையானவர்தனது மகன் இன்று ஒருஉலகமறிந்த தொழிலதிபராகத் திரும்பியிருப்பதை விட, அவன் தனதுகாதலில் நேர்மையாக நின்றதை எண்ணி அவர் பெருமிதம் கொண்டார்.

​அவர்மேடைக்கு வந்து ரூபனின் முன்னால் நின்றார். ரூபன் தயக்கத்துடன் அவரைப் பார்த்தார். “சசிதரன் சார்… என்னை மன்னிச்சிடுங்க. உங்களை ஒரு சாதாரண ஆள்னுநினைச்சு நான் பேசின வார்த்தைகள்எல்லாம் தப்பு,” என்றார் ரூபன்.

​சசிதரன்புன்னகைத்தார். “பரவாயில்லை ரூபன் சார். அதிகாரம் மனுஷனை எப்பவும் குருடாக்கிடும். ஆனா என் மகன்அதைத் தன் உழைப்பால சரிசெஞ்சுட்டான். இனி நாம சம்மந்திகளாஇருப்போம், எதிரிகளா இல்ல,” என்று கைகொடுத்தார். அந்த கைகுலுக்கல் இரண்டுவெவ்வேறு சமூக அடுக்குகளுக்கு இடையிலானஇடைவெளியைக் குறைத்தது.

​கவிவர்ஷன்ஹர்ஷாந்தைப் பார்த்துச் சைகை செய்தான். ஹர்ஷாந்த்ஒரு லேப்டாப்பைக் கொண்டு வந்து மேசையில் வைத்தான்.

​”ரூபன் சார்… நான் சொன்னது போல, உங்க மேலஇருந்த அந்தப் புகார்கள் எல்லாத்தையும் நான் வாபஸ் வாங்கச்சொல்லிட்டேன். ஆனா, ஒரு நிபந்தனை. உங்க கம்பெனியோட ஐம்பது சதவீதப் பங்குகளை ஒரு டிரஸ்ட்டுக்கு மாத்தணும். அந்தப் பணம் இனிமேல் கோயம்புத்தூர்லஇருக்கிற ஏழை மாணவர்களோட படிப்புக்காகச்செலவு செய்யப்படும். வசதி இல்லாத எந்தஒரு கவிஞனும், கவிவர்ஷன் பட்ட கஷ்டத்தைப் படக்கூடாது. இதுக்கு நீங்க சம்மதிச்சா, இந்தப் பிரச்சனை இங்கேயே முடிஞ்சுடும்,” என்றான் கவிவர்ஷன்.

​ரூபன்மறுப்பேதும் சொல்லாமல் அந்தக் கோப்புகளில் கையெழுத்திட்டார். “நிச்சயமா கவி… என் பணத்தை விடஎன் மகளோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்னுஇப்பதான் புரியுது,” என்றார்.

மணமக்களைமீண்டும் ஒருமுறை மேடையில் அமர வைத்தனர். அலங்காரங்கள்மாற்றப்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில் ஹர்ஷாந் மீனாவை அழைத்துவந்தான். ஹர்ஷாந் தாயிடம் விடயத்தை சொன்னாலும் ஏன் இவ்வளவு அவசரமாசெய்யனும் என அத் தாயால்எண்ணாமல் இருக்க முடியவில்லை

ஒருமணி நேரத்திற்கு முன்பு இருந்த அந்தப் பயங்கரமான சூழல் மறைந்து, இப்போது மங்கல இசை மீண்டும் ஒலிக்கத்தொடங்கியது. மீனா வந்ததும் சசிதரனும்கவியும் தாயை அழைத்து விடயத்தைப்பகிர்ந்தனர். அவரோ தான் எண்ணியதைக்அவர்களிடம் கேட்க, கவி தாயிடம் எப்படிச்சொல்வான் தன் பிரிவைப் பற்றிசசிதரன் மகனின் விருப்பத்தையும் ரூபன் பற்றியும் சொல்லவே அவர் ஏற்றுக் கொண்டார்.

அடுத்துஅங்கு வைத்தே சாஸ்திரப்படி தட்டை மாற்றிக் கொண்டனர் கவிவர்ஷன் தனது பாக்கெட்டில் இருந்துஒரு சிறிய பெட்டியை எடுத்தான். அதற்குள் லண்டனில் அவன் பிரத்யேகமாகத் தயாரித்தஒரு வைர மோதிரம் இருந்தது. அந்த மோதிரத்தின் நடுவே ஒரு சிறிய ரோஜாஇதழ் போன்ற வடிவம் இருந்தது அது பிரக்யுவுக்கு மிகவும்பிடித்த மலர்.

​அவன்அவளது விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தபோது, மண்டபமே கைதட்டலால் அதிர்ந்தது. பிரக்யுவும் ஒரு மோதிரத்தை அவனுக்குஅணிவித்தாள். அவர்களின் கண்கள் சந்தித்த அந்த நொடி, கடந்தகாலத்தின் அத்தனை கசப்புகளும் கரைந்து போயின.

​அப்போதுஹர்ஷாந்த் மைக்கை எடுத்துப் பேசினான். “அண்ணா! ஒரு கவிதை சொல்லாமஎப்படி? நீ ஒரு கவிஞனாத்தானே லண்டன் போன? இப்போ ஒருவரி கூடச் சொல்லலையே!”

​கவிவர்ஷன்சிரித்துக் கொண்டே பிரக்யுவைப் பார்த்துப் பாடத் தொடங்கினான்:

​”மூன்று வருடமௌனங்கள் – இன்று

முற்றுப்புள்ளிகண்டன!

ஆயிரம்கடல் கடந்தும் – உன்

அன்பின்சுவாசம் என்னை ஈர்த்தது!

வாழும்காலம் முழுதும் – உன்

விழிஅசைவில் நான் வாழ்வேன்!

மௌனங்களின்மொழி – இனி

மங்கலநாணின் ஒலியாக மாறும்!”

​அந்தக்கவிதையைக் கேட்ட போது பிரக்யுவின் முகம் சிவேரெனச் சிவந்தது. அவள் அவனது தோளில்மெல்லச் சாய்ந்து கொண்டாள். அந்தப் பெரிய திருமண மண்டபத்தின் ஒளியில், அவர்களின் காதல் ஒரு புதிய சரித்திரத்தைத்தொடங்கத் தயாரானது

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மௌன ராகம்
2,484 124 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page