மௌன ராகம் 2

அத்தியாயம் 2: 

​நாட்களும் அதன் போக்கில்செல்ல அந்தஒரு மாலை நேரத்துச் சந்திப்பின்தாக்கம் கவிவர்ஷனின் மனதை விட்டு அகலவில்லை. வகுப்பு அறையில் பேராசிரியர் கரும்பலகையில் எழுதும் கணக்குகளை விட, பிரக்யுவின வார்த்தைகள் தான் அவனது காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. ஒரு கவிஞனுக்குத் தேவைப்படுவதெல்லாம்ஒரு சிறு பொறி தான் பிரக்யுவோஅவனுக்குள் ஒரு காட்டுத்தீயையே பற்றவைத்திருந்தாள்.

​அன்றுவியாழக்கிழமை. கோயம்புத்தூர் வானிலை வழக்கத்திற்கு மாறாகச் சற்றே வெப்பமாக இருந்தது. மதிய நேர இடைவேளையில், கவிவர்ஷன் தனது நண்பர்களுடன் கேன்டீனில்அமர்ந்திருந்தான். சுற்றிலும் மாணவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, கவிவர்ஷன் மட்டும் தனது சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவனது கையில் இருந்த தேநீர் ஆறிப்போயிருந்தது.

​”என்னடா கவி… டீ ஆறிப்போச்சு? இன்னும் அந்த ‘வெள்ளை நிலாவையே’ நினைச்சுட்டு இருக்கியா?” என்று செல்வா அவன் தோளைத் தட்டினான்.

​”அப்படி எல்லாம்இல்லைடா செல்வா… சும்மா ஏதோ  யோசனை,” என்று கவிவர்ஷன் மழுப்பினான்.

​”சும்மா கதைவிடாதே! அந்தப் பொண்ணு ரூபனோட மகள். அவ பின்னாடி போறதுநெருப்போட விளையாடுற மாதிரி. அந்த ரூபன் எப்படின்னுஉனக்குத் தெரியாது. அவரோட கௌரவத்துக்கு முன்னாடி அன்புக்கெல்லாம் வேலையே இல்லை,” என்று செல்வா எச்சரிப்பது போலச் சொன்னான்.

​கவிவர்ஷன்அமைதியாக இருந்தான். அவனுக்கு ரூபனின் அந்தஸ்தைப் பற்றித் தெரியும். ஆனால், பிரக்யுவின் அந்தச் சோகமான விழிகள் எதனால் வாடுகின்றன என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அவனது கவிஞன் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது.

​அன்றையமதிய வகுப்பு முடிந்து மாலை நான்கு மணி அளவில், கவிவர்ஷன் நூலகத்திற்குச் சென்றான். அங்குள்ள அமைதி அவனுக்கு மிகவும் பிடிக்கும். நூலகத்தின் கடைசி வரிசையில், ஜன்னல் ஓரம் அமர்ந்து பழையபுத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்தான். அப்போது, புத்தக அடுக்குகளுக்கு இடையில் ஒரு மெல்லிய நிழல்அசைவதைக் கண்டான்.

​நிமிர்ந்துபார்த்தான். அங்கே பிரக்யு நின்று கொண்டிருந்தாள். கையில் ஒரு ஆங்கில நாவலைவைத்துக் கொண்டு, எதைப் படிப்பதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். அவளது முகம் இன்று சற்றே வாடியிருந்தது. கண்களைச் சுற்றி ஒரு லேசான வீக்கம்அவள் அழுதிருப்பாளோ என்று கவிக்குத் தோன்றியது.

​கவிவர்ஷன்மெதுவாக எழுந்தான். “பிரக்யு…” என்று மெல்லிய குரலில் அழைத்தான்.

​அவள்திடுக்கிட்டுத் திரும்பினாள். அவனைக் கண்டதும் அவளது முகத்தில் ஒரு மின்னல் போன்றபுன்னகை தோன்றி மறைந்தது. “ஓ… கவி! நீங்களும்இங்கதான் இருக்கீங்களா?”

​”ஆமாம்… எனக்குஅமைதி பிடிக்கும். ஆனா, உங்களைப் பார்த்தால்அப்படித் தெரியலையே? ஏன் ஒரு மாதிரியாஇருக்கீங்க?” என கவி தயக்கத்துடன்கேட்டான்.

​பிரக்யுஒரு பெருமூச்சை விட்டாள். “வீட்ல அப்படித்தான் கவி… அப்பாவுக்கும் எனக்கும் ஒரு சின்ன வாக்குவாதம். எனக்குப் பிடிச்ச விஷயத்தை விட, அவருக்குப் பிடிச்சதைநான் செய்யணும்னு எதிர்பார்க்கிறார். என் வாழ்க்கையே ஒருடைம்-டேபிள் மாதிரி ஓடுது. இந்த நூலகம் தான்எனக்குக் கிடைச்ச ஒரே ஒரு ரகசியச்சுதந்திரம்.”

​கவிவர்ஷன்அவளது வலியை உணர்ந்தான். “சுதந்திரம்ங்கிறது வெளியில இல்லை பிரக்யு, அது நமக்குள்ள இருக்கு. உங்களை யாரும் பூட்ட முடியாது, ஏன்னா உங்ககிட்ட கவிதை இருக்கு,” என்றான்.

​பிரக்யுஅவனது கண்களைப் பார்த்தாள். “கவிதையா? எனக்கு கவிதை எழுதத் தெரியாது கவி.”

​”உங்களுக்கு எழுதத்தெரியாது… ஆனா நீங்களே ஒருகவிதை தான். உங்களைப் பார்க்கிறவங்களுக்குள்ள அது தானா உருவாகும்,” என்றான் கவி மிகத் தீர்க்கமாக.

​பிரக்யுவின்முகம் சிவந்தது. அவள் இதுவரை எத்தனையோபாராட்டுக்களைக் கேட்டிருக்கிறாள், ஆனால் கவிவர்ஷனின் இந்த வரிகள் அவளதுஆன்மாவைத் தொட்டன.

​திடீரெனஜன்னலுக்கு வெளியே மேகங்கள் கறுத்துத் திரண்டன. கோயம்புத்தூருக்கே உரிய அந்தத் திடீர்மழை பெய்யத் தொடங்கியது. ஜன்னல் வழியாகத் தெறித்த மழைத்துளிகள் பிரக்யுவின் கைகளில் விழுந்தன.

​”எனக்கு மழைரொம்பப் பிடிக்கும் கவி… ஆனா மழையில நனையஅப்பா விடமாட்டார். சளி பிடிக்கும்னு சொல்லுவார். ஆனா அந்த ஈரத்துல ஒருசுகம் இருக்குல்ல?” என்று ஏக்கமாகக் கேட்டாள்.

​கவிவர்ஷன்ஜன்னலைத் திறந்துவிட்டான். “இப்போ நனையுங்க… அப்பா இங்க இல்லையே!”

​பிரக்யுசிரித்தாள். அவள் சிரிக்கும்போது அவளதுகன்னங்களில் விழுந்த குழி கவிவர்ஷனை மயக்கியது. அவள் மெதுவாகத் தன் கையை ஜன்னலுக்குவெளியே நீட்டி, விழும் மழைத்துளிகளைச் சேகரித்தாள். அந்த நொடி, அவள்ஒரு சிறிய குழந்தையைப் போல மாறினாள்.

​”தெரியுமா கவி? நான் உங்களோட அந்தப் பழைய டைரியைப் பார்த்தேன். அதுல இருந்த வரிகள் எல்லாம் ஒரு மாதிரி வலிநிறைந்ததா இருந்துச்சு. ஏன்?” என்று கேட்டாள்.

​கவிவர்ஷன்தன் டைரியை வருடினான். “நிஜமான கவிதைகள் வலியில இருந்துதான் பிறக்குது பிரக்யு. ஆனா, உங்களைச் சந்திச்சதுக்குஅப்புறம் என் பேனா வசந்தத்தைப்பத்தி எழுதத் துடிக்குது.” அவன் காதலை சொல்ல எத்தனிக்கும்போது நூலகத்தின் கதவு திறக்கும் சத்தம்கேட்டது. யாரோ உள்ளே வருவதைக்கண்டு பிரக்யு சட்டெனத் தன் கையை உள்ளேஇழுத்துக் கொண்டாள்.

​”நேரம் ஆயிடுச்சுகவி… கார் வந்துடும். நான்கிளம்புறேன்,” என்று படபடப்புடன் சொன்னாள்.

​”இருங்க பிரக்யு… இதை வச்சுக்கோங்க,” என்று கவிவர்ஷன் தன் டைரியிலிருந்து ஒருகாகிதத்தைக் கிழித்து அவளிடம் நீட்டினான். அதில் ஒரு சிறிய கவிதைஇருந்தது.

​அவள்அதை வாங்கிக் கொண்டு, ஒரு முறை அவனைத்திரும்பிப் பார்த்துவிட்டு ஓடினாள். கவிவர்ஷன் ஜன்னல் வழியாகப் பார்த்தான். அவள் மழையில் நனைந்துகொண்டே காருக்கு ஓடினாள். அவள் காரில் ஏறும்வரை அவனது கண்கள் அவளையே பின்தொடர்ந்தன.

​அன்றுஇரவு, கவிவர்ஷன் தன் வீட்டு மொட்டைமாடியில் மழையின் சாரலில் நின்றிருந்தான்.

​”வானம் மௌனமாகஅழும்போது – அது

மழையாகிறது…

நீ மௌனமாகஇருக்கும்போது – அது

கவிதையாகிறது!

உன் கையில்பட்டமழைத்துளிகள்கொடுத்துவைத்தவை…

ஏனென்றால், அவைஉன்ஸ்பரிசத்தை

முதலில் உணர்ந்தன!”

​மறுபுறம், தன் அறையில் ஜன்னலை மூடிவிட்டு, கவிவர்ஷன் கொடுத்த அந்தக் காகிதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரக்யு. அதில் இருந்த வரிகள் அவளது இதயத்தை இதமாக வருடின. 

நாட்களும்செல்ல பிரக்யுவும் கவிவர்ஷனும் தங்களது காதலை பகிர்ந்து கொண்டனர். கவி கெடுத்த கவிதையில்இருந்து அவன் காதலை புரிந்துகொண்டவள் அடுத்த நாள் அதே நூலகத்தில் வைத்துஅவன் காதலை ஏற்றுக்கொண்டாள்.” கவி உங்க கவிதைரொம்ப புடிச்சிருக்கு அதோட உங்களையும் தான்”என்றாள் தலையைக் குனிந்தபடி.  கவிக்கோஉலகமே தன் வசப்பட்டது போல்அப்படியொரு மகிழ்ச்சி

அவர்களின்காதலும் மெதுவாக அதேவேளை ஆழமாகவும் வளரத் தொடங்கியது. அவர்களது சந்திப்புக்கள் கூட கல்லூரியிலேயே இடம் பெற்றது. ரூபனிற்குபயத்தில் பிரக்யுவும் வெளியே சந்தித்ததில்லை. கல்லூரிக் கட்டடங்களின் இறுதியில் இருந்த இடிபாடடைந்த கட்டடமே அவர்ளது ஆஸ்தான மீடிங் பாயின்ட்  அடுத்துஅவர்களது மீடிங் பாயின்ட்  கல்லூரியில்உள்ள பெரிய அரச மரத்தடி.

சனிஞாயிறுகளில் கூட பிரக்யுவின் வீட்டிற்குஅருகில் உள்ள பார்கில் பார்த்துக்கொள்வர். பிரக்யுவின் பயத்தினால் பார்கில் வைத்து கவி அவளோடு பேசமாட்டான்.

“கவி எண்ணப்பாமுகம் நல்லா வெளிச்சமா இருக்கு” என மீனா கேட்க. கவியோ சிறுபுன்னகையோடு “ஒன்னுமில்லம்மா” என்றான். ஆனால் ஹரர்ஷாந்தோ அது  அண்ணியாலான்   என்றான். ” டேய் யார்ரா என  மீனாஹர்ஷாந்திடம் கேட்க கவியோ ஹர்ஷாந்தின்  காலைஎட்டி உதைக்க அவனும் கவியை  பாhர்த்து  “ஹீஹீ” என்றவன்  மீனாவிடம்  “அப்படிஇருந்தா சந்தோசம் என்டன்மா” என பேச்சை மழுப்பினான்.

அடுத்தநாள் காலையில் எழுந்த கவிக்கோ மனதில் ஏதோ ஒரு சலனம். பிரத்யுவிற்கு அழைப்பெடுக்க அவள் அழைப்பை ஏற்கவேஇல்லை. யோசனையுடனேயே அவன் கல்லுரிக்குக் கிளம்பினான்.

அன்று   பிரக்யுநேரம் சென்றே கல்லூரிக்கு வந்தாள் கவியும் அவளுக்காக அவர்கள் சந்திக்கும்   ஆஸ்தானஇடமான அரசமரத்தடியில் காத்திருந்தான் .அவனை நோக்கி சோர்வாகவேவந்தவள் அவன் தோளில் சாய்ந்ததுஅமர்ந்தாள். ” என்னாச்சுமா ஏன் டல்லா இருக்க” என கவி கேட்க. “டேட்ஸ்  வயிறுவலிக்குது கவி” என அவள் சோர்வாய்ச்சொல்ல. அவனுக்கோ முடிந்தால் அவள் வலியை வாங்கிக்கொண்டிருப்பான்.  “சரியாகிரும்மா” என அவளை தேற்றினான்.இந்நிகழ்வின் பின் இருவரும் இன்னும்நெருக்கமாகினர்..

பிரக்கியுவிற்குநியமித்த பாதுகாவலர்கள் மூலம் பிரக்யு மற்றும் கவியின் காதல் விவகாரம் ரூபனுக்கு தெரிய வந்தது. கல்லூரியில் கல்சரல் நிகழ்விற்கான  முன்னேற்பாடுகள்நடந்துகொண்டிருப்பதால் அன்று கல்லூரியில் விரிவுரைகள் எதுவும் நடைபெறவில்லை ஆதலால் இருவரும் பைக்கில் “வெளியே சென்றனர். ரூபன் ஊரில் இல்லாததால் ரூபனிற்கு தெரியவராது என தப்புக் கணக்குப்போட்டாள் பிரக்யு. பிரக்யுவிற்கு நியமித்த பாதுபாவலர் கண்ணில்  இருவரும்விழுந்தது அவர்களும் தங்களது விசுவாசத்தைக் காட்ட ரூபனிடம் இதைப் பத்த வைத்தனர்.

பிரக்யு வீட்டிற்கு வந்த போது ரூபன்வெளியே கோபமாக  “அந்தப்பையனைப் பத்தி எல்லா விபரமும் எனக்கு நாளைக்குக் கிடைக்கணும். என் மகளைச் சுத்தியாராவது வந்தா அவங்க வாழ்க்கையே முடிஞ்சுடும்!” என ரூபன் கத்திக் கொண்டிருந்தார். 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மௌன ராகம்
2,457 124 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page