மௌன ராகம் 29
அத்தியாயம் 29:
காலச்சக்கரம்உருண்டோடியது. பிரக்யுவின் கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதம் பிறந்தது. கவிவர்ஷனின் வீட்டில் இப்போது மங்கலப் பொருட்கள் நிறைந்திருந்தன. பிரக்யுவின் வளைகாப்பு விழாவிற்காகச் சசிதரனின் வீடும், ரூபனின் எஸ்டேட்டும் ஒன்றிணைந்து உழைத்துக் கொண்டிருந்தன. இது வெறும் குடும்பவிழா மட்டுமல்ல; இரண்டு வெவ்வேறான சமூக அந்தஸ்துகளைக் கொண்டமனிதர்கள் அன்பால் ஒன்றிணைந்ததைக் கொண்டாடும் திருவிழாவாக மாறியிருந்தது.
அதிகாலைவேளையில், மேனகா மற்றும் மீனா இருவரும் அமர்ந்துசந்தனம் அரைத்துக் கொண்டிருந்தனர். இன்று, மீனாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “மீனா… எனக்குப் பிரக்யுவை விட உங்க மேலதான் அதிக மரியாதை இருக்கு. இவ்வளவு அழகான ஒரு மகனை வளர்த்து, எங்க குடும்பத்தையே மாத்திட்டீங்க,” என்று நெகிழ்ந்தார்.
மீனாசிரித்துக் கொண்டே, “அதெல்லாம் அந்தப் பிள்ளைகளோட தலையெழுத்து அம்மா. கவி சின்ன வயசுலஇருந்தே மௌனமாத் தான் இருப்பான், ஆனாஅவன் மனசுல ஒரு பெரிய கடல்இருந்தது எனக்குத் தெரியும்,” என்றார்.
மேலேஅறையில், பிரக்யுவை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் நிலா. நிலாவின் கைகளில் இருந்த வளையல்கள் ஓசை எழுப்ப, பிரக்யுவின்கைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடியின் வளையல்கள் அந்த அறைக்கே ஒருதனிச் சங்கீதத்தைத் தந்தன.
”பிரக்யு… அன்னைக்குக்காலேஜ்ல நாம கவி அண்ணாவைப்பத்தி ரகசியமாப் பேசினது ஞாபகம் இருக்கா? அன்னைக்கு அவர் ஒரு சாதாரணகவிஞன். ஆனா இன்னைக்கு இந்தஉலகமே வியக்குற ஒரு சாதனையாளர். ஆனாஉன்கிட்ட அவர் இன்னும் அந்தப்பழைய காதலனா இருக்கிறது தான் பெரிய ஆச்சரியம்,” என்றாள் நிலா.
பிரக்யுகண்ணாடியில் தனது பிரதிபலிப்பைப் பார்த்தாள். அவளது முகம் நிறைமாதக் கர்ப்பிணிக்கே உரிய பொலிவுடன் இருந்தது. “காதல் மாறாது நிலா. காலங்கள் வேணா மாறலாம், ஆனாஅந்த முதல் முறை அவர் என்னைஏறிட்டுப் பார்த்தாரே… அந்தப் பார்வையில இருந்த அதே நேர்மை இப்போவரைக்கும் இருக்கு,” என்றாள் பிரக்யு மென்மையாக.
வளைகாப்புநிகழ்வும் மெல்ல ஆரம்பமானது மீனா சந்தனம் பூசிவளையலிட்டு ஆரம்பித்து வைக்க குடுப்ப உறுப்பினவர்கள் விழாவிற்க வந்தவர்கள் என அனைவரும் வளையலிட்டுஆசிர்வாத் வழங்கினர். மறுபுறம் விருந்தும் தடல்புடலாக ஆரம்பமானது.
வளைகாப்புவிழா முடிந்து, மாலையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சிஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூபனின் உயில்படி, கவிவர்ஷன் அச் சொத்துக்களைக் கொண்டு ‘ ரூபனின் தந்தையின் பெயரில் உருவாக்கிய பல்கலைக்கழகத்தின்’ திறப்பு விழா அது. இதுஇந்தியாவின் முதல் இலவச உயர் தொழில்நுட்பப்பல்கலைக்கழகம்.
பல்லாயிரக்கணக்கானமாணவர்கள் அந்த மைதானத்தில் திரண்டிருந்தனர். கவிவர்ஷன் மேடைக்கு வந்தபோது, அங்கிருந்த மௌனம் அவனது சாதனையின் ஆழத்தைச் சொன்னது.
”இங்கே அமர்ந்திருக்கும்மாணவர்களே… நான் ஒரு காலத்தில்இந்தப் பட்டப்படிப்பை முடிக்கப் பணமில்லாமல் லண்டனுக்கு ஒரு கூலியாளாகச் சென்றவன். இன்று இந்தத் தொழில்நுட்ப உலகை நான் ஆளக்காரணம், எனக்குள் இருந்த அந்த மாறாத பிடிவாதம்தான். கல்வியைத் திருடலாம், ஆனால் உங்கள் திறமையை யாரும் திருட முடியாது. இந்தப் பல்கலைக்கழகம் லாபத்திற்காக அல்ல; இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு ஏழை மாணவனும் ஒரு ‘கவிவர்ஷனாக’ மாற வேண்டும் என்பதற்காகஉருவாக்கப்பட்டது,” என்று அவன் உரையாற்றியபோது, ரூபன்தனது இருக்கையில் அமர்ந்து கண்ணீர் வடித்தார்.
திறப்புவிழாவின் ஒரு பகுதியாக, கவிவர்ஷன்தனது புதிய கண்டுபிடிப்பான ‘ஆடியோ கவிதை’ கருவியைத் திறந்தான். அது வாய் பேசமுடியாதவர்கள் நினைக்கும் கவிதைகளை ஒலியாக மாற்றும் கருவி. அவன் முதல்முறையாக அந்தக்கருவியைப் பிரக்யுவின் அருகே கொண்டு சென்றான்.
திரையில்பிரக்யுவின் இதயத்துடிப்பு ஒரு கவிதையாக மாறியது:
“உன் மௌனம்எனக்குப் புரிந்தது…
என்கருவறைக்குள் வளரும் உயிருக்கும் உன் மௌனம் புரியும்!
இனிசொற்கள் தேவையில்லை…
நம்அன்பே ஒரு அகிலம்!”
அரங்கமேஇந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டு மிரண்டு போனது. ஒரு கவிஞன் தொழில்நுட்பத்தைஎப்படிக் காதலுக்குப் பயன்படுத்தினான் என்பதற்கு இதுவே சாட்சியாக அமைந்தது.
அன்றுஇரவு, விழாவிற்குப் பிறகு தந்தையும் மகனும் அந்தப் பழைய ஊஞ்சலில் அமர்ந்திருந்தனர்.
”கவி… நீசாதிச்சுட்டப்பா. ஆனா ஒன்னு மட்டும்எனக்குப் புரியல. உனக்கு எப்படித் தனபால் மாதிரியான ஆளுங்களை எதிர்க்கிற தைரியம் வந்துச்சு?” என்று கேட்டார் சசிதரன்.
கவிவர்ஷன்தந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டான். “அப்பா… நீங்க எனக்குக் கத்துக் கொடுத்த அறம் தான் என்தைரியம். நான் லண்டன்ல பாத்திரம்கழுவின ஒவ்வொரு நாளும், என் அப்பா ஒருநேர்மையான ஆசிரியர்ங்கிற நினைப்பு தான் என்னை எதற்கும்அடிபணிய விடாம தடுத்தது. பணம் என்னை மாத்தலப்பா, உங்களோட அந்த எளிய வாழ்க்கைதான் என்னைச் செதுக்குச்சு,” என்றான்.
சசிதரன்நெகிழ்ந்து தனது மகனை அணைத்துக்கொண்டார். ஒரு ஆசிரியருக்குத் தனதுமாணவன் ஜெயிப்பதை விட, தனது மகன்நேர்மையான மனிதனாக நிற்பது தான் பெரிய பெருமை.
அதேநேரம், சிறையிலிருந்த தனபாலின் உடல்நிலை மோசமடைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவிவர்ஷன் அவருக்குத் தேவையான மருத்துவச் செலவுகளைத் தனது அறக்கட்டளை மூலம்செய்ய உத்தரவிட்டான்.
”ஏன் தம்பி… உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்தினவனுக்குப் போய் உதவி செய்றியே?” என்று ரூபன் கேட்டார்.
“வன்முறையைவன்முறையால வெல்லக்கூடாது. மன்னிப்பால தான் வெல்லணும். அவன்உயிரோட இருந்து நாம சந்தோஷமா இருக்கிறதைப்பார்க்கட்டும். அதுதான் அவனுக்கான பெரிய தண்டனை,” என்றான் கவிவர்ஷன். அவனது முதிர்ச்சி ரூபனை வியக்க வைத்தது.
இரவுஇரண்டு மணி அளவில், பிரக்யுவிற்குத்திடீரென வலி ஏற்பட்டது. வீட்டில்இருந்த அனைவரும் பதற்றமடைந்தனர். கவிவர்ஷன் உடனடியாக அவளைத் தூக்கிக் கொண்டு காரில் ஏறியபோது, வானில் மின்னல் வெட்டியது.
”கவி… எனக்குப்பயமா இருக்கு,” என்று பிரக்யு அவனது கையை இறுக்கமாகப் பற்றினாள்.
”பயப்படாதே பிரக்யு… உன் கூட நான் இருக்கேன். நம்முடைய ராகவி வரப்போறா!” என்று சொல்லி காரைப் பறக்கவிட்டான்.
அந்தமழையிரவில், ஒரு புதிய உயிரின்வருகைக்காகக் கோயம்புத்தூர் மாநகரம் காத்திருந்தது. ஒரு காதலின் முழுமையானவெற்றி அந்த விடியலில் நிகழப்போகிறது.
