மௌன ராகம் 3
அத்தியாயம் 3:
மறுநாள்காலை. சூரியன் மேகக்கூட்டங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, கோயம்புத்தூரின் சாலைகளில் மெல்லிய ஒளியைத் தூவிக்கொண்டிருந்தது. கவிவர்ஷன் தனது பழைய பல்சர்பைக்கை மிதித்து ஸ்டார்ட் செய்த போது, அவனது மனதிற்குள் பிரக்யுவின் அந்த மழையில் நனைந்தமுகம் தான் நிழலாடியது. அவனதுதோளில் தொங்கிக் கொண்டிருந்த பையில், நேற்றிரவு எழுதிய கவிதைகளும், புதிய கனவுகளும் கனமாகத் தெரிந்தன.
கல்லூரிவாசலை அடைந்த போது, வழக்கமான உற்சாகம் அங்கு இல்லை. ஏதோ ஒரு இறுக்கம்நிலவுவது போல அவனுக்குத் தோன்றியது. பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கியபோது, ஹர்ஷாந்த் மூச்சிரைக்க ஓடி வந்தான்.
”அண்ணா! கொஞ்சம்ஓரமா வா… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம்சொல்லணும்,” என்று அண்ணனின் கையைப் பிடித்து இழுத்தான் ஹர்ஷாந்த்.
”என்னடா ஆச்சு? ஏன் இப்படிப் பதறுற?” என்று கவிவர்ஷன் கேட்டான்.
”அண்ணா… இன்னைக்குக்காலைல காலேஜ் கேட்ல ரெண்டு பேரு கறுப்பு கண்ணாடிபோட்டுட்டு ஒரு கார்ல நின்னுட்டுஇருந்தாங்க. அவங்க கையில உன்னோட போட்டோ இருந்தது. யார்கிட்டயோ உன்னைப் பத்தி விசாரிச்சிட்டு இருந்தாங்க. எனக்கு என்னவோ இது அந்தப் பிரக்யுவோடஅப்பா வேலையா இருக்கும்னு தோணுது,” என்று ஹர்ஷாந்த் எச்சரித்தான்.
ரூபன்இவ்வளவு சீக்கிரம் தனது நிழல் ஆட்டத்தைத்தொடங்குவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. “இருக்கட்டுமடா… நான் என்ன தப்புசெஞ்சேன்? காதலிக்கிறது தப்பா? அவங்க என்ன வேணா பண்ணட்டும், நான் பாத்துக்கிறேன்,” என்று தைரியமாகச் சொன்னாலும், அவனது உள்ளுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம்பரவியது.
வகுப்பறைக்குள்சென்ற கவிவர்ஷனால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்தப் பெரிய அரசமரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, பிரக்யுவின் தோழி ஒருத்தி மெதுவாகஅவனது இடத்திற்கு வந்தாள். அவள் பெயர் நிலா.
”கவிவர்ஷன்… பிரக்யுஇன்னைக்குக் காலேஜுக்கு வரல. அவளுக்கு உடம்புசரியில்லைன்னு சொன்னாங்க. ஆனா, நிஜத்துல அவங்கஅப்பா அவளை வீட்டுல வச்சுப்பூட்டியிருக்காராம். நேத்து வெளிய போனத யாரோ சொல்லிருக்காங்க,” என்று நிலா ரகசியமாகக் கூறிவிட்டுச்சென்றாள்.
கவிவர்ஷனின்இதயம் சுக்குநூறாக உடைந்தது. ‘நான்தான் அவளுக்குப் பிரச்சினையைத் தேடிக்கொடுத்தேனா? என்னாலா அவளுக்க இச்சிறை தண்டனை என அவன்வருந்தினான். அன்று முழுவதும் அவன் ஒரு பிணத்தைப்போலவே நடமாடினான்.
மாலைநான்கு மணி. கல்லூரி முடிந்து மாணவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தனர். கவிவர்ஷன் நேராகப் பிரக்யுவின் வீடிருக்கும் ‘ரேஸ் கோர்ஸ்’ பகுதிக்குச்சென்றான். அது கோயம்புத்தூரின் பணக்காரர்கள்வாழும் பகுதி. பிரம்மாண்டமான பங்களாக்கள், உயரமான மதில்கள். ரூபனின் வீட்டின் முன்னால் இரண்டு பாதுகாவலர்கள் நின்றிருந்தனர்.
கவிவர்ஷன்தூரத்தில் நின்று அந்த வீட்டைப் பார்த்தான். அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு ஜன்னல் மட்டும்மூடியே இருந்தது. அது பிரக்யுவின் அறைஎன்று அவனது உள்ளுணர்வு சொன்னது. அவன் அங்கே செல்வதைக்கண்ட ஹர்ஷாந்த், ஓடி வந்து அவனைத்தடுத்தான்.
”அண்ணா! இப்போஇங்க இருக்கிறது ஆபத்து. அந்த ரூபன்னோட ஆளுங்க இங்கயும்இருப்பாங்க. வா வீட்டுக்குப் போலாம். நாம வேற ஏதாவது ஐடியாபண்ணுவோம்,” என்று ஹர்ஷாந்த் கெஞ்சினான்.
கவிவர்ஷன்மௌனமாகத் திரும்பினான். அன்று இரவு அவன் தூங்கவேஇல்லை. நிலவைப் பார்த்தபடி மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். அவனது தந்தை சசிதரன் மெதுவாக அவன் அருகில் வந்தார்.
”கவி… என்னப்பாச்சு? ரெண்டு நாளா ஒரு மாதிரியாஇருக்க? ஏதாவது பிரச்சினையா?” என்று பாசமாகக் கேட்டார்.
கவிவர்ஷன்தன் தந்தையிடம் எதையும் மறைப்பதில்லை. “அப்பா… நான் ஒரு பொண்ணைவிரும்புறேன். ஆனா அவ பெரியஇடத்துல பிறந்தவ. அவங்க அப்பா இப்போ அவளைச் சித்திரவதை செய்றாரோன்னு எனக்குப் பயமா இருக்கு,” என்றுஉண்மையைச் சொன்னான்.
சசிதரன்பெருமூச்சு விட்டார். “காதல்ங்கிறது ஒரு அழகான கவிதைமாதிரிதான் கவி. ஆனா அந்தகவிதைக்குச் சில நேரங்கள்ல ரத்தம்சிந்திதான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருக்கும். நீ நேர்மையா இருந்தாபயப்படாதே. அந்தப் பொண்ணுக்காக நீ போராடணும்னா, முதல்லநீ ஒரு தகுதியான இடத்துக்குவரணும். வெறும் சொற்களால மட்டும் உலகத்தை ஜெயிக்க முடியாது,” என்றார்.
தந்தையின்வார்த்தைகள் கவிவர்ஷனுக்கு ஒரு புதிய தெளிவைத்தந்தன. “ஆமாம் அப்பா… நான் ஜெயிக்கணும். அவளைஅந்தச் சிறையில இருந்து மீட்க நான் ஒரு பெரியஉயரத்துக்குப் போகணும்.”
மறுநாள்காலை, கவிவர்ஷன் ஒரு துணிச்சலான முடிவைஎடுத்தான். அவன் ஹர்ஷாந்தின் உதவியுடன்பிரக்யுவின் வீட்டிற்கு ஒரு கடிதத்தை அனுப்பத்திட்டமிட்டான். ஆனால் அது சாதாரணக் கடிதமல்ல.
”ஹர்ஷாந்த்… இந்தப்பூக்காரத் தம்பி கிட்ட இதைக் கொடுத்து, எப்படியாவது பிரக்யு கைக்குச் சேரச் சொல்லு,” என்று ஒரு ரோஜாப் பூவுக்குள்மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய காகிதத்தை நீட்டினான்.
அதில்கவிவர்ஷன் எழுதியிருந்தான்:
”சிறகுகளை ஒடிக்கலாம்…
ஆனால் வானத்தைத்திருடமுடியாது!
கொஞ்சக் காலம்பொறுத்திருபிரக்யு…
உன் மௌனத்தைஉடைக்க – ஒரு
பெரிய புயலாகநான்வருவேன்!
அதுவரை உன்தைரியமேஎனக்குமருந்து.”
ஹர்ஷாந்த்சாமர்த்தியமாகச் செயல்பட்டு, அந்தப் பூவை பிரக்யுவின் அறைக்குள்எறியச் செய்தான். பிரக்யு அந்தப் பூவை எடுத்துப் பார்த்தபோது, அவளது வாடிய முகம் மலர்ந்தது. சொல்லப்பட்ட காதலை விட புரிந்து கொண்ட சொல்லாக் காதல் வலிமையானதல்லவா? கவிவர்சனினதும் பிரக்யுதாராவினதும் காதலும் இதுவே
ஜன்னலை மெல்லத் திறந்து, வெளியே தெரிந்த அந்தத் தூரத்து வானத்தைப் பார்த்தாள்.
அதேசமயம், கீழே ரூபன் தனதுகார் அருகே நின்றபடி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தார். “அந்தக் கவிவர்ஷன் பையன் விபரமெல்லாம் தெரிஞ்சாச்சு. அவன் ஒரு சாதாரணமிடில் கிளாஸ். அவனை ஒழிக்கிறது எனக்குஒரு நிமிஷ வேலை. ஆனா, என் மகள்அவனாலா என் பேச்சை மீறக்கூடாது. அவனை இங்கிருந்தே துரத்தணும்,” என்று உறுமினார்.
ரூபனின்கண்களில் தெரிந்த அந்த வஞ்சகம், ஒருபெரிய போரின் ஆரம்பமாக இருந்தது. கவிவர்ஷன் தனது பேனாவைக் கையில்எடுத்தான். அந்தப் பேனா இப்போது வெறும் கவிதைகளை எழுதப் போவதில்லை அது ஒரு சாம்ராஜ்யத்தையேஉருவாக்கப் போகிறது.
