மௌன ராகம் 5
அத்தியாயம் 5:
கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட அந்த இரவு, கவிவர்ஷனின்வாழ்க்கையில் மிக நீண்ட இரவாகஇருந்தது. கோயம்புத்தூர் மாநகரம் மின்விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தாலும், கவியின் உலகம் இருளில் மூழ்கியிருந்தது. அவனது அறையில் ஒரு சிறிய மெழுகுவர்த்திமட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தில், சுவரில் விழுந்த அவனது நிழல் ஒரு பெரும் போராட்டத்திற்குத்தயாராகும் வீரனைப் போலத் தெரிந்தது.
“கவிசாப்பிட வா என மீனா அழைக்க கவியோ பசிக்கலமா” என்றவன் அறையினுள் நுழைந்து கொண்டான். தன் தாய் மீனா மற்றும் தந்தை சசிதரனின் முகத்தைப் பார்க்க அவனுக்குக் கூச்சமாக இருந்தது. ஒரு நேர்மையான மனிதனின் மகனாக வளர்ந்துவிட்டு, இன்று ஒரு பெண்ணைத் துன்புறுத்தியதாகப் பழி சுமந்து நிற்பதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. சசி சாப்பிட அமர்ந்தவர்மனைவியிடம் “கவி,ஹர்ஷா சாப்பிடானுகளா?” ஹர்ஷா ப்ரண்சோட வெளிய போறான் லேட்டா தான் வருவானாம், கவி சாப்பிடலங்க புள்ளளைக்கு முகமெல்லாம் நல்லா இல்ல என்னனு தெரியல” சாப்பாட தட்டுல போட்டுத் தா மீனா ? என்றார் சசி. மீனாவும் உணவைக் கொடுத்தார் சசிதரன் மெதுவாக கவியின் அறைக்குள் நுழைந்தார். அவர் கையில் உணவுத் தட்டு இருந்தது. கல்லூரியில்நடந்தது சசிக்கும் தெரிந்திருந்தது
”கவி… சாப்பிடலையாப்பா?” – அவர் குரலில் வருத்தம் இருந்தாலும், மகனின் மீது ஒரு துளி கூடச் சந்தேகம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
”அப்பா… என்னை மன்னிச்சுடுங்க. உங்களுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்திட்டேன்,” என்று கவிவர்ஷன் தலைகுனிந்து சொன்னான். மீனாவும் அப்போது அறைக்குள் நுழைந்து கொண்டார்.
சசிதரன் அவன் அருகில் அமர்ந்து அவன் தோளைத் தட்டினார். “கவி, சமுத்திரத்துல அலைகள் வர்றது சகஜம். அந்த அலைகள் கரையைமோதிட்டுப் போகுமே தவிர, கடலையே அழிச்சிட முடியாது. நீ தப்பு செய்யலன்னுஎனக்குத் தெரியும். அந்த ரூபன் மாதிரிஆளுங்க அதிகாரத்தால எதை வேணா மாத்தலாம், ஆனா உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது. இப்போ நீ சோர்ந்து போயிட்டா, அது அந்த அநீதிக்குக் கிடைச்சவெற்றியா மாறிடும். எழுந்து நில்!”
தந்தையின் வார்த்தைகள் கவிக்கு ஒரு புதிய உத்வேகத்தைத் தந்தன. “ஆமாம்ப்பா… நான் சும்மா இருக்கப்போறதில்லை. ரூபன் என் கௌரவத்தை அழிச்சிருக்கலாம், ஆனா என் அறிவை அவராலதொட முடியாது.” மீனாக்கோ புரிந்தும் பரியாமலும் அவளோ கணவனைப் பார்க அவரோ இமை மூடித் திறந்தார்.
மறுநாள்காலை, ஹர்ஷாந்த் தனது லேப்டாப்புடன் கவியின்முன்னால் வந்து அமர்ந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன. இரவு முழுவதும் அவன்ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்ததுதெரிந்தது.
”அண்ணா… நான்ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சிருக்கேன். ரூபனோட மெயின் பிசினஸ் ‘ரூபன் எக்ஸ்போர்ட்ஸ்’. அவரோட கம்பெனி சர்வர்ல ஒரு சின்ன பலவீனம்இருக்கு. ஒரு டெக்னிக்கல் ஹேக்கராநான் உள்ளே போய் பார்த்தப்போ, சிலமுக்கியமான ஃபைல்கள் என் கைக்குக் கிடைச்சது. அவர் பல கோடி ரூபாய்வரி ஏய்ப்பு செஞ்சிருக்காரு. இது மட்டும் வெளியிலவந்தா, அவரோட கௌரவம் எல்லாம் காத்துல போயிடும்,” என்றான் ஹர்ஷாந்த் ஆவேசமாக.
கவிவர்ஷன்யோசித்தான். “வேண்டாம் ஹர்ஷாந்த்… இது பழிவாங்குற நேரமில்லை. நாம அவரைத் தண்டிக்கிறதை விட, பிரக்யுவை அந்தச்சிறையில இருந்து மீட்கிறது தான் முக்கியம். இந்தஆதாரங்களை வச்சு நாம அவரை மிரட்டப்போறதில்லை. ஆனா, உண்மையை நிரூபிக்கஇதைப் பயன்படுத்தலாம்.”
அதேநேரம், ரூபனின் பங்களாவில் பிரக்யு உணவின்றி உறக்கமின்றி முடங்கிக் கிடந்தாள். அவளது அறைக்கு வெளியே இரண்டு ஆட்கள் எப்போதும் காவல் காத்துக் கொண்டிருந்தனர். அவளது மொபைல் போன் பறிக்கப்பட்டிருந்தது. வெளி உலகத்தோடுஅவளுக்கு இருந்த ஒரே தொடர்பு ஜன்னல்வழியாகத் தெரிந்த அந்த ஒற்றை மரம்தான்.
திடீரெனஅவளது அறைக்கதவு மெல்லத் திறக்கப்பட்டது. உள்ளே வந்தது அவளது தாய் மேனகா.
”பிரக்யு… இந்தாசாப்பிடு,” என்று தட்டை நீட்டினார் மேனகா.
”எனக்கு வேண்டாம்மா. அப்பா ஏன் இப்படிச் செய்றாரு? கவிவர்ஷன் எவ்வளவு நல்ல பையன்னு எனக்குத்தெரியும். அவரோட அடியாட்கள் அவனை அடிச்சது மட்டும்இல்லாம, அவன் மேல பழியும்சுமத்துறாங்க. இதையெல்லாம் பார்த்துட்டு நீங்க எப்படிச் சும்மா இருக்கீங்க?” என்று பிரக்யு அழுது கொண்டே கேட்டாள்.
மேனகாஅவளது கைகளைப் பற்றிக்கொண்டார். “உங்க அப்பாவைப் பத்திஉனக்குத் தெரியும் பிரக்யு. அவருக்குப் பணம் தான் எல்லாம். ஆனா, நான் ஒரு தாயாஉனக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறேன். இதோ பார்…” – மேனகா ஒரு சிறிய சீட்டையும், பழைய மொபைல் ஒன்றையும் அவளிடம் கொடுத்தார்.
”இதுல கவிவர்ஷனோடநம்பர் இருக்கு. யாருக்கும் தெரியாம அவன்கிட்ட பேசு. ஆனா ஜாக்கிரதை, உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா நிலைமை இன்னும் மோசமாகும்,” என்று சொல்லிவிட்டு மேனகா அவசரமாக வெளியேறினார்.
பிரக்யு நடுங்கும் கைகளுடன் அந்தப் பழைய மொபைலை ஆன் செய்தாள். கவிவர்ஷனின் நம்பரைத் தேடினாள். ஒவ்வொரு நொடியும் அவளது இதயம் வேகமாகத் துடித்தது.
கவிவர்ஷன்மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவனது போன் ஒலித்தது. அறிமுகமில்லாத நம்பர். அவன் போனை எடுத்தான்.
”ஹலோ…”
மறுமுனையில் ஒரு மெல்லிய விம்மல் சத்தம் கேட்டது. கவிவர்ஷனுக்கு அது யார் என்று புரிந்தது. அவனது உடல் சிலிர்த்தது.
”பிரக்யு… நீயா?”
”கவி… என்னைமன்னிச்சுடு கவி! அப்பா செஞ்சஎல்லாத்துக்கும் நான் தான் காரணம். உன்னை அடிச்சது, உன்னை காலேஜ் விட்டு அனுப்புனது… எல்லாத்தையும் நினைச்சா எனக்குச் செத்துப் போகலாம் போல இருக்கு. உன்னைமிரட்டுனதா நான் சொல்லலை கவி, அப்பா என் தம்பி மேலசத்தியம் பண்ணி என்னை மிரட்டுனாரு,” என்று பிரக்யு கதறினாள்.
”அழாதே பிரக்யு… எனக்குத் தெரியும் நீ அப்படிச் சொல்லமாட்டேன்னு. இப்போ நீ எப்படி இருக்க? உன்னை ஏதாவது பண்றாரா?” என்று கவி பதற்றத்துடன் கேட்டான்.
”நான் ஒருகைதி மாதிரி இருக்கேன் கவி. ஆனா உன்குரலைக் கேட்டதும் எனக்கு ஒரு தைரியம் வந்துடுச்சு. நீ என்ன பண்ணப் போற? அப்பா உன்னை விடமாட்டாரு,” என்றாள்.
கவிவர்ஷன்உறுதியான குரலில் சொன்னான், “பிரக்யு… உன் மௌனம் தான் அவருக்குப் பலம். ஆனா இப்போ அந்தமௌனம் கலைஞ்சுடுச்சு. இன்னும் ரெண்டு நாள்ல காலேஜ்ல ஒரு பெரிய மீட்டிங்நடக்கப் போகுது. அங்க நான் வருவேன். உண்மையை எல்லாரு முன்னாடியும் நிரூபிப்பேன். அதுவரைக்கும் நீ தைரியமா இரு.”
அவர்கள்பேசிக் கொண்டிருந்த போதே, பிரக்யுவின் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. “கவி… அப்பா வராரு, நான் வைக்கிறேன்!” என்று சொல்லிவிட்டுஅவள் போனை மறைத்து வைத்தாள்.
கவிவர்ஷன் போனை வைத்துவிட்டு ஹர்ஷாந்தைப் பார்த்தான். “ஹர்ஷாந்த்… அந்த ஃபைல்களை ரெடி பண்ணு. நாம ரூபனோட பிசினஸை அழிக்கப் போறதில்லை. ஆனா, அந்தப் புகாரை அவர் திரும்பப் பெற வைக்கப் போறோம். கூடவே, பிரக்யுவை எல்லார் முன்னாடியும் பேச வைக்கணும். இதுதான்நம்ம திட்டம்.”
கவிவர்ஷன் தனது பேனாவை எடுத்தான். அவன் ஒரு கவிதை எழுதினான். ஆனால் அது காதலைப் பற்றியதுஅல்ல; அது நீதியைப் பற்றியது.
”சிறைக்கதவுகள் இரும்பால்இருக்கலாம் – ஆனால்
உன்இதயம் அன்பால் ஆனது!
அதிகாரத்தின்நிழல் நீண்டதாக இருக்கலாம் – ஆனால்
உண்மையின்சூரியன் உதிக்கத் தொடங்கிவிட்டது!
தயாராகஇரு பிரக்யு – நம்
மௌனங்களின்மொழி – இனி
உலகமேகேட்கும் இடியாக மாறும்!”
கவிவர்ஷன்இப்போது ஒரு சாதாரண மாணவன்அல்ல. அவன் ஒரு போராளியாகமாறியிருந்தான். கோவை மாநகரத்தின் அமைதிக்கு பின்னால் ஒரு பெரும் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ரூபனின் சாம்ராஜ்யம் அதன் முதல் அதிர்ச்சியைச்சந்திக்கத் தயாரானது.
