வதந்தி

அந்த கார்ல இருந்து ஒரு பெரியவர் கீழே இறங்கி வந்தார். வாட்ச்மேனை பார்த்து, “தம்பி, நீங்க யாரை பத்தி பேசிட்டு இருக்கீங்க?”… “ஏதோ சங்கர் மகள்” என்று சொன்னிங்களே, இங்கே எத்தனை சங்கர் இருக்காங்க?”…

இப்படி கேட்கும் போது, “ஒரே ஒருத்தர் தான் இருக்காரு. ஏன் சார், நீங்க யாரு?”…

“இப்பதான் நீங்க என்ட்ரி போட்டு உள்ள வந்து இருக்கீங்க?”… “யார சார் பாக்க வந்திருக்கீங்க?”…

இப்படி கேட்கும் போது, அதுக்கு அந்த பெரியவர் சொன்னார், “இல்ல… இங்க ஒருத்தவங்கள பார்க்க வந்தோம்.”…

“சரி, நீங்க ஏதோ பேசிட்டு இருந்தீங்களே?”… “அதை கொஞ்சம் என்னன்னு சொல்றீங்களா? தெளிவா சொல்லுங்களேன்…”…

இப்படி அவர் பொறுமையாக கேட்டார். அதற்கு, “யார் சார் நீங்க?”… “எதுக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தை எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க?”… “நாங்க யாரை பற்றியும் பேசல.”…

“டேய், வாடா… அந்த பக்கம் போகலாம்” என்று சொல்லிட்டு அந்த வாட்ச்மேன் நகரும் போது, “தம்பி, நில்லு…”…

“நாங்க சங்கர் மகளை தான் பொண்ணு பார்க்கிறதுக்காக இங்க வந்து இருக்கோம். நீ பேசிட்டு இருக்குறத நான் கவனிச்சேன்.” “நான் மட்டும் இல்ல, என் வீட்டில் இருக்கிற எல்லாரும்…”…

“நாங்க ரொம்ப அமைதியான குடும்பம்.” “எங்களுக்கு ஒரு அமைதியான பொண்ணு வேணும்னு தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணலாம்னு இருக்கும்போது, நீங்க பேசுனது காதுல விழுந்துச்சு.”…

“தப்பா எடுத்துக்காதீங்க…” “பொண்ணோட வாழ்க்கை மட்டும் இங்க பெருசா பேசுறாங்க.” “ஆனா பையனுடைய வாழ்க்கையை பத்தி யாரும் பேசுறது கிடையாது.”…

“அந்த பொண்ணு தப்பான பெண்ணாக இருந்தால், நீங்க சொல்லுங்க.” “உங்க பெயர் வெளியில வராம நாங்க தப்பிச்சுக்கிருவோம்.” “ப்ளீஸ், தம்பி…”…

இப்படி சொல்லிக்கிட்டு அவர் 2000 ரூபாயை அந்த வாட்ச்மேன் உடைய கையில திணித்தார்.

இதை பார்த்த அந்த பிளம்பர், “என்னங்க சார்?”… “இப்படி எல்லாம் பணம் கொடுத்துட்டு இருக்கீங்க?”…

இப்படி சொல்லும் போது, அதுக்கு அந்த பெரியவர் அவருடைய பாக்கெட்ல இருந்து மறுபடியும் பணத்தை எடுத்து அந்த பிளம்பர் கையில கொஞ்சம் கொடுத்தார்.

“எங்க குடும்பம் இதுவரைக்கும் எந்த தப்பும் செஞ்சது கிடையாது.” “தயவு செஞ்சு என்ன ஏதுன்னு சொல்லுங்க.” “நாங்க அப்படியே போயிருவோம்.” “ஏதாச்சும் ஒரு காரணத்தை சொல்லி நாங்க இந்த கல்யாணத்தை நிப்பாட்டிக்கிறோம்.”…

“தப்பா எடுத்துக்காதீங்க…” “உங்க வீட்ல இந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வருவீங்களா?”…

இப்படி எல்லாம் அந்த பெரியவர் ரொம்ப சென்டிமெண்டாக பேசினார். அதை கேட்டதுக்கு அப்புறம் அந்த பிளம்பர், வாட்ச்மேன் கிட்ட, “அண்ணே, சொல்லுங்க.” “பாவமா இருக்கு அண்ணே, இவங்களை பார்த்தா…”…

“இவங்க பாக்குறதுக்கு நல்ல குடும்பம் மாதிரி தெரியுது.” “இவங்க வந்து எதுக்குன்னு இப்படி ஒரு கேடு கெட்ட பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு போகணும்?”…

“உண்மைய சொல்லுங்க.” “அவங்க தான் தப்பிச்சு போறேன்னு சொல்றாங்களே…”…

இப்படி அவர் வாட்ச்மேன் கிட்ட சொல்லணும் என்று சொன்னதும்,

“நீ இத்தனை தடவை சொன்னதுக்கு அப்புறம் நான் சொல்றேன்.” “இங்க பாருங்க ஐயா, என் பெயர் வெளியில் வந்து விடக்கூடாது.” “நான் புள்ள குட்டிக்காரன்.” “அப்புறம் இந்த வேலை போயிடுச்சுன்னா நல்லா இருக்காது.” “என் குடும்பம் பிச்சை எடுக்க வேண்டியது தான்.” “உங்க குடும்பத்துக்காக தான் நான் இதெல்லாம் சொல்றேன்.”…

என்று சொல்லிட்டு, இப்ப அந்த கதையை மறுபடியும் சொன்னான்.

“டெய்லியும் எதிர்த்து வீட்ல இருக்கிற ஒரு பையனுடைய அந்த பொண்ண நாங்க சேர்த்து வைத்து நிறைய தடவை பார்த்திருக்கோம்.” “அது மட்டும் இல்லை.” “அவங்க வீட்டில எல்லாரும் ஆறு மணிக்கு மேல தான் எந்திரிப்பாங்க.” “இந்த பொண்ணு ஒரு பட்டிக்காட்டு வேஷம் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள பாவப்பட்ட பொண்ணு மாதிரி காட்டிக்கும்.”…

“ஆனா நாலு மணிக்கு மேல.” “அதாவது விடிய காலைல சொல்றேன்.” “அந்த பையனுடைய ரூமுக்குள்ள போயிடும்.” “அவங்க ரெண்டு பேரும் நிறைய விஷயம் பண்ணுவாங்க.”…

“இது அவங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியுமா, தெரியலையா என்று கூட தெரியல.” “அது எப்படி தெரியாம இருக்கும்?”… “ஒருவேளை கழட்டி விட்டுட்டாங்களோ என்னவோ.”…

“ஒரு தடவை நான் கூட கண்டிச்சேன்.” “அதுக்கு அந்த பொண்ணு, ‘உனக்கு வேணும்னா ஒரு மணி நேரம் ஒதுக்குகிறேன்’ என்று பச்சையா பேசுச்சு.”…

இப்படி சொல்லும்போது, அதுக்கு அந்த பிளம்பர், “ஆமா.” “ஒரு நாள் என்ன பார்த்து அது மாதிரி தான் சைகை காட்டுச்சு.” “நம்மளேவும் கூலி வேலை பார்த்துட்டு இருக்கோம்.” “இதுல இந்த இது வேற தேவையா?”…

“என் வீட்ல தெரிஞ்சா அசிங்கமாயிடும்.” “நானும் பொம்பள புள்ள வச்சிருக்கேன்.” “அதனால நானு அங்க இருந்து வந்துட்டேன்.”…

அந்த பொண்ணு கிட்ட எதுவும் பேசாமல், இரண்டு பேரும் மாத்து கட்டுல அடுக்கடுக்காக பொய்களாக சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

இதை அந்த குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே கேட்க, “ரொம்ப நன்றிங்க…” “இந்த விஷயத்தை நீங்க சொன்னதுக்காக.” “எக்காரணத்திற்காகவும் உங்க பேர் நாங்க வெளியில் வர விடாம பார்த்துக்கிறோம்.”…

இப்படி சொன்ன உடனே, அவங்க ரெண்டு பேரும் அங்கிருந்து கிளம்ப,

அந்த பெரியவர் அந்த வீட்டில் இருக்கிற எல்லாரையும் பார்த்து முறைச்சார். “பாருங்க.” “நான் தான் அப்பவே சகுனம் சரியில்லை என்று சொன்னேன்ல.” “யாராவது என் பேச்சை கேட்டீங்களா?” “இப்ப எப்படிப்பட்ட பொண்ணு வந்து நம்ம பார்க்க வந்திருக்கும்னு பாருங்க.” “இத நான் சும்மா விடமாட்டேன்.” “அந்த ஆள நாலு வார்த்தை நாக்க புடுங்குற மாதிரி கேட்டுட்டு வரேன்.”…

இப்படி சொல்ல, அந்த வீட்டில் இருக்கிற எல்லாரும், “நாங்கள் வரோம்.” “எதாவது அவங்க பொண்ண பத்தி அவ்வளவு சொன்னாரு.” “சரியான கேடு கெட்டவளா இருப்பா போல.”…

இப்படி பேசிக்கொண்டே, அவங்க எல்லாரும் சங்கருடைய வீட்டை நோக்கி நடக்க,

இந்த பக்கம் பிளம்பர் கிட்ட வாட்ச்மேன் கேட்டார், “நீ எதுக்கு என் சம்பந்தமே இல்லாம எக்கச்சக்கமா பொய் சொல்ற?” “எனக்கும் அந்த ஆளுக்கும் கொஞ்சம் பிரச்சனை இருக்கு.” “அது மட்டும் இல்லாம.” “நான் அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா வச்சு பார்த்தேன்.” “நீ என்ன என்னமோ சொல்ற?”…

இப்படி அவர்கிட்ட கேட்கும் போது, அதுக்கு, “ஒரு நாள் லிப்ட்டுக்குள்ள அந்த பொண்ணு தனியா வந்துட்டு இருந்துச்சு.” “நானும் அதுக்குள்ள தான் இருந்தேன்.” “ஒரு ஓரமாக ஒதுங்கி நின்னுச்சு.” “லேசா போட்டு பாக்கலாம்னு போன்ல பேசுற மாதிரியே டபுள் மீனிங் பேசினேன்.”…

“உடனே அவங்க தங்கச்சி கிட்ட சொல்லிடுச்சு.” “அந்த பொண்ணு தைரியமான பொண்ணாச்சே.” “ஓங்கி பளார்னு கன்னத்துல என்ன அறை விட்டுட்டா.”…

“ஒன்னு சரியான கோழை.” “இன்னொன்னு அப்படியே ஆப்போசிட்டா இருக்கு.” “அதான் எனக்கு அந்த பொண்ணு மேல பயங்கர கோபம்.” “பாவப்பட்ட மாதிரி மூஞ்சி வச்சுக்கிட்டு என்னை கேவலப்படுத்திரிச்சு.” “சும்மா வாயில கூட ஓட்டக்கூடாது.” “நான் என்ன அர்த்தம்?”…

இப்படி சொன்னதும், அதுக்கு வாட்ச்மேன் சிரிச்சுக்கிட்டு, “சரிதாண்டா.” “அந்த பொண்ணு அவங்க அப்பன் கிட்ட சொல்லாம விட்டுடுச்சு.” “செஞ்சதெல்லாம் நீயே.” “ஆனா அந்த பொண்ணு மேல பயங்கரமா பழி போடுறியே.”…

இப்படி சொல்லிக்கிட்டே இருக்க, “அதெல்லாம் எனக்கு தெரியாது.” “நீ எனக்கு சரக்கு வாங்கி கொடு.” “உனக்காக நான் பேசியிருக்கேன்ல.”…

இப்படி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு, அங்க இருந்து சாதாரணமா வெளியில போயிட்டாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடக்க போகுதுன்னு தெரியாம,

இப்ப அந்த பெரியவரோட சேர்ந்து அந்த குடும்பமே நேராக அந்த வீட்டுக்கு தான் போச்சு.

வீட்டு வாசல்ல அந்த கோலத்தை பார்த்ததுமே, அந்த பெரியவர் காலிங் பெல்லை வேகவேகமாக அழுத்தினார்.

“யார் இது இப்படி அழுத்தறது?” “இதோ வர்றேன்னு…” என்று சொல்லிக்கிட்டு சங்கர் கதவை திறந்தார்.

“அடடே…” “எல்லாரும் வந்துட்டீங்களா?” “வாங்க, வாங்க…” என்று கையெடுத்து கும்பிட,

“கையை இறக்குடா, மானங்கெட்டவனே.” “இந்த பொழப்புக்கு நாங்களா இருந்தா மருந்து குடிச்சு செத்துப் போயிருப்போம்.” “நல்ல பொண்ண வளர்த்து வச்சிருக்க.” “சந்தி சிரிக்குது உன் குடும்பத்தை பார்த்து.” “நல்லவேளை விஷயம் எனக்கு தெரிஞ்சிருச்சு.” “இல்லனா இந்த அசிங்கத்தை கல்யாணம் பண்ணி என் குடும்பம் அசிங்கமா போயிருக்கும்.”…

இப்படி பயங்கரமாக அவர் பேச ஆரம்பிச்சார். இத கேட்டதும் சங்கர் பயங்கர கோபப்பட்டு, “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” “என்ன ஏதுன்னு சொல்லாம வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க.”…

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னு மரியாதை கொடுத்தார்.” “இப்படித்தான் பேசுவீங்களா?” என்று அவர் சத்தம் போடும்போது,

“யோவ்…” “வாயை மூடு.”…

“தினம் 4:00 மணிக்கு இங்கே என்ன கூத்து நடக்குதுன்னு தெரியுமா?” “உன் பொண்ணு எதிர் வீட்டுக்காரன் கூட கில்மா பண்ணிக்கிட்டு இருக்கா தினமும்.” “இது தெரியாம குடும்பமே குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கு.” “உன் பொண்ணு கிட்ட அம்மாவை இல்லையான்னு கேளு.” “எங்க வெளிய வர சொல்லுங்க.”…

அவர் சொல்லும்போது, அவர் திரும்பி அவருடைய மனைவி லட்சுமியை பார்த்தார். “நிலாவ வர சொல்லு.” “அவன் மட்டும் இல்லைன்னு சொல்லட்டும்.” “இன்னைக்கு இங்க இருக்கிற யாரும் வெளியே போக முடியாது.” “போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி உள்ள தூக்கி வச்சுருவேன் பாரு.” “உங்க மேல மான நஷ்ட வழக்கு போட்டு என்ன பண்றேன்னு பாருங்க.”…

அவர் சத்தம் போட்டுக்கிட்டு, “நிலா, வெளிய வா.” “சீக்கிரம் வா.” என்று பயங்கரமா சத்தம் போட்டு கூப்பிட்டு இருந்தார்.

ஆனா அவள் வீட்டுக்குள்ளேயே இல்லை என்பது சங்கருக்கு தெரியல.

“நிலாவை வர சொல்லு, லட்சுமி.” என்று கோவமா பேசினார்.

“ஒரு நிமிஷம் உள்ள வாங்க” என்று அவங்க கூப்பிட்டு இருக்க,

ஆனா அவர் அதை காதில் வாங்காமல் தாம் தூம் என்று குதிச்சுட்டே இருந்தார்.

அப்ப இரண்டாவது பொண்ணு வந்து, “அப்பா.” “அக்கா இன்னும் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வரலை.” என்று சொன்னதும்,

“இதுல இருந்தே தெரியலையா உன் வீட்டு லட்சணம் என்னன்னு?”…

“உன் பொண்ணு யாரு கூட இருப்பான் நினைச்சுட்டு இருக்க.” “எதிர் வீட்டில் இருக்கிற அந்த குடிகாரன் கூட இருப்பா.” “மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கன்னு தெரிஞ்சு இன்னும் வீட்டுக்கு வரலைன்னா.” “இதுல இருந்து தெரிய வேணாமா?”…

“மான நஷ்ட வழக்கு போடுவான்.” “மான நஷ்ட வழக்கு.” “மானம் இல்லாதவனே.”…

இப்படி பயங்கரமா அசிங்கப்படுத்திட்டு, அங்கிருந்து அந்த குடும்பமே கிளம்பியது.

சங்கரால எதுவும் பேசவே முடியல. வாயடைச்சு, கண்ணெல்லாம் சிவந்து போய் நின்னுட்டு இருந்தார்.

தான் பொண்ணு இன்னும் வீட்டுக்கு வராதது தெரியாம,

அவமானத்தில் கூனி குறுகி போயிட்டாரு.

ஆனால் அதைவிட அவருக்கு பயங்கர கோபம் இருக்கு.

வேகமாக போனை எடுத்து, போன் பண்ணிக்கிட்டே இருக்க.

ரிங் போய்க்கொண்டே இருக்கு…

ஆனா அவள் எடுக்கவே இல்லை…

இனி என்ன நடக்கப்போகிறது என்று அடுத்த எபிசோட்ல பார்க்கலாம்.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page