சூரியன் இருக்கும் போதே கிரகணம் பிடித்து இருள் சூழ்வது போல,
வாழ்வில் எல்லாம் இருந்தும்
மனம் விரும்பிய ஒன்று
மட்டும் இல்லையென்றால்
அந்த வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிடும்…!
வலியை சூடிய காதலே – 10
“என்னடா மிரட்டுறீங்களா, இந்த பூச்சாண்டி எல்லாம் எங்கிட்ட வேணாம், உன் சார்கிட்ட போய் சொல்லு, முடிஞ்சா நெஞ்சுல கொஞ்சமாவது உரமிருந்தா என் முன்னாடி வந்து நேருக்கு நேரா நின்னு கேட்க சொல்லு” என்றான் ஆரி,
“எங்க சாரோட ரேஞ்சுக்கு எல்லாம், உன்ன மாதிரி ஆளுகிட்ட இவ்வளவு பணிவா பேசுறதே அதிகம்” என்றான் பி ஏ,
“ஓ அப்படியா வித் மை ப்ளசர், சரி விடு நான் இப்ப உங்கிட்ட எதுக்கு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு, இப்ப என்ன அவரு சட்டப்படி பேசணும்னு வந்திருக்காரு, அவ்வளவு தான இட்ஸ் ஓகே நானும் சட்டப்படியே பதில் சொல்லிக்கறேன்,
நீங்க வந்த வேலை ஐ மீன் நோட்டீஸ் குடுத்தாச்சு, உங்க சாரோட புகழை பாடியாச்சு வேற என்ன எல்லாம் முடிஞ்சுதல்ல
நீங்க எல்லாரும் எந்த வழியா வந்தீங்களோ,
அதே வழியில கிளம்புங்க, ஒருவேளை வழி மறந்திருந்தா நான் வந்து வழியனுப்பி வைக்கிறேன் எப்படி வசதி” என்று கையை முறுக்கியவாறு நக்கலாக எச்சரித்தான் ஆரியன்,
அதற்கு மேல் எதுவும் பேசாமல் வந்தவர்கள் அவனை முறைத்தவாறு காரில் ஏறினர், கார் கிளம்பும் போது, பி ஏ மட்டும் நிஷாலினியை ஏளனமாகப் பார்த்துவிட்டு,
“மேடம், சார் உங்களை உயிரோட தான் கூட்டிட்டு வரச் சொன்னாரு, பாத்து பத்திரமா இருங்க இதை நான் சொல்லல சார் சொன்னாரு பார்த்துக்கோங்க” என்று சொல்லி விட்டுச் சென்றான்,
அவர்கள் சென்றதும், அந்த இடமே கலவரம் அடங்கிய மைதானமாக இருக்க, ரஞ்சிதம் பதற்றத்துடன் நிஷாலினியை அணைத்துக் கொண்டார்,
ராஜதுரை ஒரு தூணில் சாய்ந்து நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்,
”ஆமா இப்போ என்ன பண்ணப் போற, சட்டம் பேசி சாதிக்க போறியா, அந்த விஸ்வநாதனெல்லாம் ஒரு ஆளு அவனை கண்டு பயந்துட்டு சட்டப்படி பேசி சமாளிக்க போறானாமே,
ஓங்கி ஒன்னு விட்டா நாலு நாளைக்கி எழுந்துக்க மாட்டான், அவன்கிட்ட சட்டம் சக்கர பொங்கன்னு வியாக்கானம் பேசுறியான் போடா டேய் டாக்டரு,
நம்ம தோப்புல மாட்டுக்கு ஏதோ உடம்பு முடியலையாம் அதை போய் என்னன்னு பாரு, வந்துட்டான் பெருசா” என்று ராஜதுரை எகத்தாளமாக பேசி விட்டு சட்டை காலரை உயர்த்தி விட்டு வேட்டியை மடித்தவாறு வெளியே கிளம்பினார் ராஜதுரை,
“இந்த மனுஷனுக்கு மாட்டுக்கு வைத்தியம் பாக்குறவனுக்கும், மனுஷனுக்கு வைத்தியம் பாக்குறவனுக்கும் வித்தியாசமே தெரியல, எவன்னே தெரியாதவ வீட்டு வாசல்ல வந்து நின்னு அம்புட்டு பேசுறானுங்க,
தட்டி கேட்க துப்பில்ல, ஓரமா வந்தவனுங்க பேசுறப்போ ஒன்னு சொல்லாம வேடிக்கை பார்த்துட்டு, இப்ப என்ன பேச்சு பேசிட்டு போறான் பாரு துப்பு கெட்ட மனுஷன்” என்று தன் கணவனை திட்டி விட்டு உள்ளே சென்றாள் ரஞ்சிதம்,
ஆரியன் நிஷாலினியின் பக்கம் திரும்பினான், அவளது கண்கள் கலங்கி இருந்தன, அவன் அவளது கையை அழுத்திப் பற்றினான்,
“நிஷா நேத்து நான் உனக்கு சொன்னது தான் என்னை மீறி உன்னை யாரும் தொடக் கூட முடியாது, இந்த நோட்டீஸ் ஒரு சாதாரண பேப்பர் தான், இதை பத்தி எதையும் யோசிச்சு பீல் பண்ணாம சிரிச்சு ஜாலியா ஹேப்பியா இரு” என்றான்,
அவனின் தைரியமிக்க வார்த்தைகளில் தன்னைத் தேற்றினாள் நிஷாலினி,
இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த பூவிதழினிக்கு, ஆரியன் நிஷாலினியிடம் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும், தன் காதலுக்குச் செய்யப்பட்ட துரோகமாகவே பட்டது,
விஸ்வநாதனின் ஆட்கள் கொடுத்த அந்த லீகல் நோட்டீஸால் வீட்டில் ஒருவித இறுக்கம் நிலவியது, நிஷாலினி முற்றத்து துளசி மாடத்தின் அருகே இருந்த துணில் சாய்ந்து அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்,
சிறிது நேளத்தில் அவளுக்கு ஆரியனின் நியாபகம் வர, அவனை எங்கே என்று வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாக தேடிய போது, வீட்டின் ஒரு மூலையில் இருந்த சிறிய அறைக்குள் இருப்பதைக் கண்டு கொண்டாள்,
அந்த அறைக்கு உள்ளே போவதா வேண்டாமா என தயங்கிய அவள் இருப்பினும் மெல்ல அந்த அறைக்குச் சென்றாள், அங்கே ஆரியனின் ஒரு வெள்ளை நிறக் கோட் அணிந்து, ஸ்டெதாஸ்கோப்பை மாட்டி வைக்கப் பட்டிருந்தது,
அவனோ ஒரு மருத்துவப் பெட்டியை (Medical Kit) சரி பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தான்,அவனை பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது,
“ஆரி எல்லாரும் சொன்ன மாதிரியே நீ… நீ ஒரு டாக்டரா” என்று கேட்க
ஆரியன் நிமிர்ந்து பார்த்து லேசாகப் புன்னகைத்தான்.
“ஏன் நிஷா, என்னைப் பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலையா, நீ நம்புனாலும் நம்பலைனாலும் நான் ஒரு டாக்டர் தான், டாக்டர் ஆரியன், என்று அவன் தன் வாங்கி பட்டத்தை காட்டினான், அதைப் பார்த்த நிஷாலினி,
“ஆரி உன்னோட முழுப்பேரு ஆரியதுரைன்னு போட்டிருக்கு, அப்போ ஏன் உன் பேர ஆரியன்னு சொல்ற” என்று சந்தேகமாக கேட்டாள் நிஷாலினி,
“அதுவா ஒரு பெரிய கதை, உனக்கு சொன்னா புரியாது” என்று தன் வேலைகளைத் தொடர்ந்தான்,
“கதையா அதுவும் பெரிய கதையா, ஆரி ஆரி ப்ளீஸ் ஆரி நான் இதுவரைக்கும் ஒரு கதை கூட கேட்டதில்ல தெரியுமா, உன் கதைய சொல்லேன், நானும் கதைன்னா எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கறேன் ப்ளீஸ் ஆரி சொல்லு ஆரி” என்று நிஷாலினி அவனை உலுக்கிய உலுக்கில்,
“சரி சரி சொல்றேன், ஆனா ஒரு கண்டிஷன் குறுக்க குறுக்க கேள்வி கேட்க கூடாது அப்படின்னா சொல்றேன்” என்று அவன் சொன்னதும்,
“சரி ஓகே நீ கதை சொல்லி முடிக்கிற வரைக்கும் நான் எதுவும் பேச மாட்டேன் நீ சொல்லு சொல்லு” என்று கூறிவிட்டு சிறு பிள்ளை போல் வாய் மேல் விரலை வைத்துக் கொண்டாள்,
அதைப் பார்க்கும் போது அவன் கண்களுக்கு வளர்ந்த குழந்தையாக தெரிந்தாள் நிஷாலினி, அவள் வாய் மேலிருந்த விரலை எடுத்து விட்டு அவள் முகம் ஏந்தினான்,
“உன்னை பார்த்தா வளர்ந்து மெச்சூடான பொண்ணு மாதிரி தெரியுது, ஆனா பண்ணறதெல்லாமே ஸ்கூல் போற பொண்ணு மாதிரி இருக்கு, இருந்தாலும் பார்க்க கொஞ்சம் க்யூட்டா தான் இருக்கு” என்று ஆரி சொல்ல
அதற்கு அவள் பதில் சொல்லும் முன்பே, வாசலில் ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது,
“டாக்டர் ஐயா, டாக்டர் ஐயா, சீக்கிரம் வாங்க சின்னக் கண்ணு மவன் வயல்ல வேலை செஞ்சிட்டு இருந்தப்போ பாம்பு தீண்டிடுச்சுங்க, மூச்சு விட முடியாம திணறான் வாங்கய்யா” என்று ஒரு விவசாயி அலறினான்,
அந்த அலறல் சத்தம் கேட்டதும் ஆரியனின் முகம் ஒரு நொடியில் தீவிரமானது,
“நிஷா, இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் வாசலுக்கு ஓடினான்,
அவன் பேச்சைக் கேட்காமல் நிஷாலினியும் அவனைத் தொடர்ந்து ஓடினாள், வாசலில் ஒரு வாலிபன் மயக்க நிலையில் கிடந்தான், அவனைச் சுற்றி ஊர் மக்கள் கூடி அழத் தொடங்கினர், ஆரியன் கீழே அமர்ந்து அவனது நாடித்துடிப்பைப் பரிசோதித்தான்,
”எல்லாரும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க, அவனுக்குக் காத்து வரட்டும்” என்று அதிகாரத்தோடு சொன்னவன்,
வேகமாக சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தான், பாம்புக் கடி பட்ட இடத்தில் ரத்தம் உறையாமல் இருக்க அவன் செய்த அந்தச் சிகிச்சை முறை அவ்வளவு நேர்த்தியாக இருந்தது,
மரணத்தின் பிடியில் இருந்த அந்த வாலிபனின் மூச்சு மெல்லச் சீரானது, அந்தப் பெட்டியிலிருந்து முதலுதவி மருந்துகளை எடுத்து அவனுக்கு ஒரு ஊசியைச் செலுத்திவிட்டு,
“இப்போ பயமில்ல, ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணியாச்சு இவனை டவுன் கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போங்க, அங்க நான் தகவல் சொல்லிடுறேன்” என்றான்,
கூட்டத்தில் இருந்த பெரியவர்கள்,
“நல்லவேளை நம்ம டாக்டர் ஐயா இங்க இருந்தாரு, இல்லன்னா பையன் உசிரு போயிருக்கும்” என்று நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டனர்,
நிஷாலினி அங்கேயே உறைந்து நின்றாள், இவ்வளவு நேரம் ஒரு அன்பான முரட்டுத்தனமான ஆரியனைப் பார்த்த அவளுக்கு,
ஒரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றப் போராடும் இந்த மென்மையான, அறிவுப்பூர்வமான டாக்டர் ஆரியன் முற்றிலும் புதியவனாகத் தெரிந்தான்,
சிகிச்சை முடிந்து கைகளைக் கழுவிவிட்டு ஆரியன் அவளிடம் வந்தான், அவளது முகத்தில் இருந்த அந்தப் பிரமிப்பைக் கண்டு,
“என்ன நிஷா, அப்படிப் பார்க்குற?” என்று கேட்டான்,
”ஆரி உன்கிட்ட எத்தனை முகம் இருக்கு, நான் முதல்முதலா பார்த்த ஆரி வேற, இன்னைக்கு இந்த நிமிஷம் நான் பார்க்கிற ஆரி டொட்டலி வேற மாதிரி இருக்க,
ஆனா நீ எப்படி இருந்தாலும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, இவ்வளவு நாளும் நீ ஒரு பெரிய டாக்டர்னு எனக்குத் தெரியாமப் போச்சே” என்றாள் நெகிழ்ச்சியுடன்,
ஆரியன் அவளது கண்களை நேராகப் பார்த்தான், அதில் அளவற்ற மரியாதையும் அன்பும் ஊற்றாக பெருக்கெடுத்தது,
பாம்புக் கடிக்குச் சிகிச்சை அளித்து அவனை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டுத் திரும்பிய ஆரியன், தன் அறையில் இருந்த மேஜையில் அந்த லீகல் நோட்டீஸை விரித்துப் பார்த்தான்,
அவனது விழிகளில் விரிந்தது, நிஷாலினி அவன் அருகிலேயே அமர்ந்து, அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்,
ஆரியன் தன் போனை எடுத்து ஒரு எண்ணிற்கு டயல் செய்தான், இப்போது மாவட்டத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரான பாரதிக்கு தான் போன் செய்தான்,
”ஹலோ பாரதி, நான் ஆரி பேசுறேன், ஒரு சின்ன மெடிக்கல் அண்ட் லீகல் இஸ்யூ, பிசினஸ் மேன் விஸ்வநாதன் எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கார், என் மேல ‘கிட்னாப்பிங்’ கேஸ் போடப் போறாராம்,
அப்புறம் கூடவே அவரோட பொண்ணு மனநிலை சரியில்லாதவங்கன்னு ஒரு ஸ்டாங்கான பாயிண்ட் சேர்த்திருக்கார்” என்று ஆரியன் நிதானமாகச் சொல்ல, நிஷாலினி அதிர்ச்சியில் உறைந்தாள்,
”என்ன நான் மனநிலை சரியில்லாதவளா, என்னைப் பத்தியா என் டாடி அப்படிச் சொல்லிருக்காரு” என்று நினைத்து விம்மினாள் நிஷா,
ஆரியன் அவள் கையை அழுத்திப் பிடித்து அமைதிப்படுத்தினான்,
விஸ்வநாதன் தன் மகளை மீட்க எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் துணிந்தவராய் இருக்க, ஆரி அவரிடம் இருந்து நிஷாலினியை மீட்பானா?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
