அமைதி சூழ்ந்து
நிற்கும் வேளையில்
நிசப்தம் கூட
ஒரு ராகம் தான்…!
அதேபோல திசையறியா
பாதையில்
தனிமை கூட உனக்குத்
துணையே!
வலியை சூடிய காதலே – 11
”ஹலோ பாரதி… நான் ஆரியன் பேசுறேன். ஒரு சின்ன மெடிக்கல் அண்ட் லீகல் இஸ்யூ. நம்ம ‘பிசினஸ் மேக்னட்’ விஸ்வநாதன் எனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கார். என் மேல ‘கிட்னாப்பிங்’ கேஸ் போடப் போறாராம்
கூடவே அவரோட பொண்ணு மனநிலை சரியில்லாதவங்கன்னு ஒரு ஸ்ட்ராங்கன பாயிண்ட் சேர்த்திருக்கார்,” என்று ஆரியன் நிதானமாகச் சொல்ல, நிஷாலினி அதிர்ச்சியில் உறைந்தாள்,
”நானா மனநிலை சரியில்லாதவளா, என்னைப் பத்தியா என் டாடி அப்படிச் சொல்லிருக்கார்” என்று விம்மினாள் நிஷா, ஆரியன் அவள் கையை அழுத்திப் பிடித்து அமைதிப்படுத்தினான்,
“பாரதி, அவர் ஒரு தப்பு பண்ணிட்டாரு. நிஷாலினிக்கு கடந்த ஆறு மாசமா சிட்டில இருக்கிற ஒரு பிரைவேட் கிளினிக்ல சைக்கியாட்ரிக் ட்ரீட்மென்ட் நடந்ததா ஒரு போலி ரிப்போர்ட் ரெடி பண்ணிருக்காரு,
ஆனா, அந்த கிளினிக்கோட ஓனர் என்னோட பேட்ச்மேட் தான். அந்த ரிப்போர்ட் ஃபோர்ஜரி அப்படின்னு நான் இப்போவே ப்ரூஃப் பண்ண முடியும், அதை வச்சு இந்த கேஸை உடைக்க நீ ஹெல்ப் பண்ண முடியுமா” என்று கேட்க
எதிர் முனையில் இருந்து வந்த பதிலால் மகிழ்ச்சி அடைந்தான் ஆரியன், போனை வைத்துவிட்டு நிஷாலினியின் பக்கம் திரும்பினான்,
“நிஷா, உன் அப்பா உன்னைத் திரும்பக் கூட்டிட்டுப் போக எந்த எல்லைக்கும் போவாரு போலயே, உன்னை மனநிலை சரியில்லாதவள்னு முத்திரை குத்தி,
உன்னை ஒரு ஹாஸ்பிடல்ல லாக் பண்ணி வைக்கிறதுதான் அவரோட மாஸ்டர் பிளான்னு நினைக்கிறேன்” என்றான் ஆரியன்,
அவனின் வார்த்தைகளைக் கேட்டு நிஷாலினி நடுங்கினாள்,
“அய்யோ, அந்த மாதிரி ஏதாவது நடந்தா நான் என்ன பண்ணுவேன் ஆரி” என்று பயத்துடன் கேட்டாள்,
ஆரியன் ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து அதில் சில மருத்துவக் குறிப்புகளை எழுதினான்,
“பயப்படாத நானே ஒரு டாக்டர் தான், உனக்கு எந்த மனநலப் பாதிப்பும் இல்லைங்கிறதுக்கான பிட்னஸ் சர்டிபிகேட்டை நானே தரலாம், ஆனா அது தப்பாயிடும்,
அதனால இந்த மாவட்டத்தோட கவர்மெண்ட் ஹெட் டாக்டர் என்னோட சீப் டாக்டர் தான், அவரோட முன்னிலையில உனக்கு ஒரு மெடிக்கல் செக்கப் பண்ணி, அந்த ரிப்போர்ட்டை சமிட் பண்ணினா போதும், அப்புறம் உன் அப்பாவால எதுவும் பண்ண முடியாது” என்று அவளை தேற்றியவன்,
தன் பேனாவை மேஜையில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான்,
“விஸ்வநாதன் பிசினஸ்ல வேணா கிங்கா இருக்கலாம், நான் ஒரு சாதாரண டாக்டர் தான், இந்த சாதாரண டாக்டரால என்ன செய்ய முடியும்ன்னு அவருக்கு காட்டுற, அவர் அனுப்புன நோட்டீஸை வச்சே அவர் மேல டிபர்மேஷன் கேஸ் போடப் போறேன்” என்றான் ஆரி,
“நீ என்னென்னவோ சொல்ற அதெல்லாம் எனக்கு ஒன்னுமே புரியல, ஆனா எனக்கு புரிஞ்ச வரைக்கும் எனக்காக இவ்வளவு தூரம் யோசிப்பன்னு நான் நினைக்கல தேங்க்ஸ் ஆரி” என்று கண்கள் பணிய கூறினாள் நிஷாலினி
”இந்த தேங்க்ஸ் சொல்றது, கண்கலங்குறது இதெல்லாம் வேணாமே, நீ நீயா இரு சந்தோஷமா இரு எனக்கு அது போதும்” என்று அவன் சொல்ல, பதிலுக்கு அவள் ஏதோ சொல்ல வந்ததைத் தடுத்தான் ஆரியன்,
“இன்னைக்கு சாயந்திரமே நாம டவுனுக்குப் போகணும், அடுத்து நான் என்ன பண்ணப் போறேன்னு இந்நேரம் கணிச்சிருப்பாங்க, அதனால கண்டிப்பா விஸ்வநாதனோட ஆளுங்க நம்மள தேடி வருவாங்க, அப்படி ஒருவேளை யாராவது வந்தா நீ பயப்படாம தைரியமா இருப்பியா” என்று கேட்டான் ஆரியன்,
நிஷாலினி அவன் கண்களை ஊடுருவிப் பார்த்து,
“யார் வந்தாலும் எத்தனை பேர் வந்தாலும் நான் உன்கூட இருக்கும்போது எனக்கு எந்தப் பயமும் இல்ல டாக்டர் சார்” என்றாள் சிறு சிரிப்புடன், அந்த சிரிப்பில் தானும் கலந்து கொண்டான் ஆரியன்,
மாலை நேரம் நெருங்க நெருங்க, தென்றலூர் கிராமத்தில், கிராமத்துக்கே உரித்தான ஒரு நிசப்தமான பரபரப்பு நிலவியது,
ஆரியன் தன் கார் விடுத்து ஜீப்பைத் தயார் செய்தான், நிஷாலினி ஒரு சாதாரணச் சுடிதாரில், முகத்தை ஓரளவுக்கு மறைத்தபடி வந்து அமர்ந்தாள், ரஞ்சிதம் பதற்றத்துடன் அவர்களுக்குத் திருஷ்டி கழித்து வழி அனுப்பி வைத்தாள்,
”அம்மாடி பார்த்துப் போயிட்டு வாங்க, காலையில வந்த பாவிப் பயலுங்க எங்க நிப்பாங்கன்னு தெரியாது” என்று ரஞ்சிதம் சொல்ல,
ஆரியனைப் பார்த்து விட்டு திரும்பி நம்பிக்கையோடு தலையசைத்தாள் நிஷாலினி ஜீப்பை இயக்கினான் ஆரியன், சில மணிநேர பயணத்தில் அரசு மருத்துவமனை வந்தடைந்தான், அருகே நெருங்கும் போதே, ஆரியன் கவனித்தான்,
மருத்துவமனையின் நுழைவாயிலில் சில அந்நியமான முகங்கள் கருப்புக் கண்ணாடியுடன் சுற்றிக் கொண்டிருந்தனர், அவர்களைப் பார்த்தாலே அடியாட்கள் என்பது தெரிந்தது,
”நிஷா, தலையை நல்லா மறைச்சுக்கோ, நான் சொல்ற வரைக்கும் வண்டிய விட்டு இறங்காதே” என்று எச்சரித்த ஆரியன்,
ஜீப்பை பிரதான நுழைவாயிலுக்குப் பதில், பின்னால் இருந்த அவசரச் சிகிச்சைப் பிரிவு வழியாக உள்ளே செலுத்தினான், யாரும் கவனிக்காத நேரம் நிஷாலினியை அழைத்துக் கொண்டு லிஃப்டில் ஏறியவன்,
நேராக மாவட்ட தலைமை மருத்துவர் சிவராமனின் அறைக்குச் சென்றான், சிவராமன் ஆரியனின் பழைய ஆசான்,
”வாங்க வாங்க டாக்டர் ஆரி, எப்படி இருக்கீங்க, ஓ இவங்க தான் உன்னோட மிஸ்ஸஸ்ஸா நைஸ் டூ மீட் யூ” என்று நிஷாலினியிடம் கூறினார் சிவராமன், அதற்கு சிரிப்பை பதிலளித்து விட்டு ஆரி காட்டிய இருக்கையில் அமர்ந்து விட்டாள்,
ஆரி தான் வந்த காரியத்தை எடுத்துச் சொல்ல,
“நீ சொன்ன விஷயம் எனக்குப் புரிஞ்சது, ஒரு டாக்டரா இருந்துட்டு ஒரு பொய்யான மனநல அறிக்கையைத் தயார் செஞ்சது மெடிக்கல் எதிக்ஸுக்கே விரோதம், பணத்துக்காக இப்படியும் சில டாக்டர்ஸ் இருக்க தான் செய்யுறாங்க ஆரி,
சரிவிடு அவனவன் வினையை அவனவனே அறுக்கிற காலம் வரும், நாம இப்போவே உன்னோட மிஸ்ஸஸூக்கு முறையான பரிசோதனை செஞ்சிடலாம்” என்றார் சிவராமன்,
சுமார் ஒரு மணி நேரம் நடந்த பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, சிவராமன் அந்த அதிகாரப்பூர்வமான அறிக்கையில் கையெழுத்திட்டார்,
“நிஷாலினி நூறு சதவீதம் மன ஆரோக்கியத்தோடு இருக்காங்க, அவங்க காட்டின அந்த போலி ரிப்போர்ட் இப்போ செல்லாது” என்று கூறி அறிக்கையை ஆரியிடம் கொடுக்க அதை வாங்கிக் கொண்ட ஆரியனின் கண்கள் மின்னியது
“தேங்க்யூ சார் தேங்க்யூ சோ மச், இந்த ஹெல்ப எப்பவும் மறக்க மாட்டேன்” என்று ஆரி சொல்ல,
“இத ஹெல்ப்ன்னு யார் சொன்னது, இது என்னோட கடமை, ஒரு ஜூனியர் டாக்டர் தப்பு பண்ணினா, அதை சரி பண்ண வேண்டியது ஒரு சீனியர் டாக்டரா என்னோட கடமை,
அது மட்டும் இல்ல, இந்த மாதிரி போலியான பேக் சர்டிஃபிகேட் குடுத்த டாக்டர் மேல ஒரு கேஸ் பைல் பண்ணி மெடிக்கல் கவுன்சிலுக்கு அனுப்பி பனிஷ் பண்ணப் போறேன், இனிமே இந்த மாதிரி தப்ப எந்த டாக்டரும் பண்ணக் கூடாது” என்று கூறினார் சிவராமன்,
அதைக்கேட்ட ஆரி அதுவும் சரிதான் என தலையசைத்து விட்டு வெளியே வந்தான், அவர்கள் அந்த அறையை விட்டு வெளியே வந்தபோது, அங்கே ஒரு பெரிய கும்பல் அவர்களை வழிமறித்தது,
விஸ்வநாதனின் இரண்டாம் கட்ட வேலைக்காக வலதுகரம் போல் சொல்லப்படும் நந்தா ஆவேசமாக முன்னே வந்தான்,
”டாக்டர் அறிக்கை வாங்கிட்டா எல்லாமே சரியா போயிடும்ன்னு நினைச்சியா, அந்தப் பொண்ணை இப்போவே எங்ககூட அனுப்பி வைக்கணும், இது எங்க சாரோட ஆர்டர்” என்று நந்தா கத்த,
அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள் பயந்து ஒதுங்கினர்,
நிஷாலினி ஆரியனின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள், ஆரியன் மெல்ல அந்த மருத்துவ அறிக்கையைத் தன் சட்டைப் பையில் மடித்து வைத்துக் கொண்டான்,
”ஆர்டர் போட இது உன் சாரோட ஆபீஸ் இல்லடா, இது ஹாஸ்பிடல். இங்க நோயாளிகளுக்குத் தொந்தரவு கொடுத்தா, அதுக்கே உங்களை உள்ள தள்ள வேண்டியிருக்கும்” என்று ஆரியன் நிதானமாகச் சொல்ல, நந்தா ஏளனமாகச் சிரித்தான்,
”ரொம்ப ஓவாரா சட்டம் பேசுறாரு டாக்டரு, இப்போவே இவளை இழுத்துட்டுப் போங்கடா இவனோட சட்டம் என்ன பண்ணுதுன்னு பார்க்கிற” என்று கூறி நந்தா சைகை காட்ட, நாலு பேர் ஆரியனை நோக்கிப் பாய்ந்தனர்,
ஆரியன் தான் முதல் அடியை எகிறி உதைத்தவன், நந்தனின் ஆட்களைச் சல்லடையாய்ச் சுழற்றி அடித்தான், ஒரு டாக்டராக மனித உடலின் எந்த இடத்தில் அடித்தால் ஒருவன் சட்டென முடங்குவான் என்பது அவனுக்கு அக்குவேறாகத் தெரியும்,
என்பதாலேயே அவன் அடித்த ஒவ்வொரு அடியும் அவ்வளவு துல்லியமாக இருந்தது, நிமிடங்களில் அடியாட்கள் தரையில் விழுந்து கதறினர், ஆரியன் நந்தனின் சட்டையைப் பிடித்துச் சுவரோடு சேர்த்தான்,
”உன் சார் கிட்ட போய் சொல்லு இது வெறும் மெடிக்கல் ரிப்போர்ட் மட்டும் இல்ல, அவரோட அதிகாரத்துக்கு நான் வைக்கிற முற்றுப்புள்ளி ன்னு, இனிமே என் பொண்டாட்டியைத் தொடனும்னு நினைச்சா,
உன் கை கால் எல்லாம் ஒட்டுப்போடக் கூட முடியாத அளவுக்கு நார்நாரா கிழிச்சு எரிஞ்சிருவ ஜாக்கிரதை” என்று ஆரியனின் மிரட்டல் தோனியில்
கதிர் பயத்தில் உறைந்து போக,
ஆரியன் நிஷாலினியை அழைத்துக்கொண்டு கம்பீரமாக வெளியேறினான்,
ஜீப்பில் ஏறியதும் நிஷாலினி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் ‘பொண்டாட்டி’ என்று சொன்ன வார்த்தை நிஷாலினியின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது,
“ஹேய் நிஷா என்ன ஆச்சு, ஏன் அப்படி பாக்குற, நடந்த பிரச்சனைய பார்த்து பயந்துட்டியா, நான் தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கும்ன்னு முன்னாடியே சொன்னேனே, இருந்தும் பயந்தா எப்படி” என்று கேட்டான் ஆரி,
“அடிக்க வந்த அவங்கள பார்த்து எனக்கு பயமே இல்ல ஆரி, ஆனா நீ அடிச்சது தான் ஒரு நிமிஷம் நான் மிரண்டு போயிட்டேன், அது எப்படி அவ்வளவு கரெக்டா அடிச்ச” என்று கண்கள் விரிய நிஷா கேட்கவும்,
ஆரியன் சிரித்துக்கொண்டே ஸ்டியரிங்கைப் பிடித்தான்,
“ஒரு டாக்டருக்கு உடம்பை எப்படிக் குணப்படுத்துறதுன்னு தெரியும், அதே சமயம் அநியாயம் பண்றவங்களை எப்படி அடிச்சு பொளக்கனும் அப்படின்னும் தெரியும் நிஷா, எனக்கு நீ தைரியமா இருந்தே இல்ல அது போதும்” என்றான் ஆரி
நிஷாலினி அவன் தோளில் மெல்லச் சாய்ந்தாள், இருட்டத் தொடங்கிய அந்தப் பாதையில், ஆரியனின் ஜீப் தென்றலூரை நோக்கிச் சீறிப் பாய்ந்தது,
நிஷாவின் மனமோ ஆரியின் மீதே படர்ந்திருந்தது, தனக்காவன், தனக்காகவே பிறந்தவன், என்று உள்ளம் சொல்ல அதை எண்ணி சிலிர்த்தாள் அந்தக் கள்ளி,
காதல் எங்கு? எப்போது?
யாருக்கு யார் மீது பிறக்கும் என்பதைக் கண்டவர் உண்டோ?
தொடர்ந்து வாசிப்போம் வாங்க
