வலியை சூடிய காதலே – 18

நீ தளராமல் தரும் வலிகளைக் கூட சுகமென்பேன், ஆனால் 

உன் பிரிவு தரும் வலியை மட்டும் தாளாமல் தவிக்கிறேன் காதலே…!

வலியை சூடிய காதலே – 18

அந்தியை தொட்ட பொழுது நிலவை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்க, பழங்கால பெரும் தூண்களைப் போல வானுயர்ந்து நின்ற மரங்கள் இருளை துணைகைகழைத்தது, 

மரங்களைத் தழுவிக் கிடந்த தடித்த கொடிகள் பாம்புகள் போல அச்சத்தை கொடுத்தது, ஈரமண்ணின் வாசனையும், அழுகிய இலைகளின் நெடியும், பெயரிட முடியாத காட்டு மலர்களின் நறுமணமும் காற்றில் கலந்திருந்தது,

பரந்து விரிந்த ஆளரவமற்ற இருளும் சூழ அடர்ந்த காட்டுப்பகுதியில் நான்கு கார்கள் வர அதில் கடைசியாக வந்த தீரணின் கார் மட்டும் பழுதாகி நின்று விட்டது, 

அதை கவனிக்காமலே முன்னால் சென்ற மூன்று கார்களும் சென்று விட, வேறு வழியின்றி அவனுடைய காரில் வந்த ஆட்கள் மட்டும் தான் இருந்தனர், 

அவர்களும் எவ்வளவு தான் சரி செய்ய முயன்றாலும், காரை இயக்க முடியாததால் தீரணுக்கு கோபம் தலைகேறியது,

“முட்டாளுங்களை வேலைக்கு வச்சா இப்படித்தான் ஆகும், எவனாவது பின்னாடி வந்த காரைக் கணோம்ன்னு திரும்பி பார்த்துட்டு தேடி வந்திருக்கிறானுகளா பாரு, எங்கயோ வெட்டியா வேலை வெட்டி இல்லாதவனுகளை எல்லாம் வேலைக்கு எடுத்தா வேற எப்படி இருக்கும்” என்று திட்டித் தீர்த்த தீரண்,

​வெறி பிடிச்ச மிருகம் போல் நிஷாவை வலுக்கட்டாயமாகக் காருக்குள் இருந்து இழுத்து வெளியே தள்ளினான் அவள் தடுமாறித் தரையில் விழுந்தாள்,

“ஆரி….” என்று கத்திக் கொண்டு கீழே விழுந்தாள், வலியில் கூட அவளது உதடுகள் ஆரியைத் தான் அழைத்தது, அதைக் கேட்ட தீரண் ஏளனமாகச் சிரித்தான்

“என்னடி பெரிய ஆரி, எதுக்கெடுத்தாலும் ஆரி ஆரி ஆரின்னு, கத்துனா வந்திருவானா,  அவனெல்லாம் உன்னைக் காப்பாத்த வருவான்னு கனவு காணாதே, 

இந்த தீரண் கையில மாட்டுன நீ, அவன்கிட்ட உயிரோட திரும்பிப் போகவே முடியாது” என்று கூறிய ​தீரண் அவளது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்,

‘பளார்’ என்ற சத்தம் அந்தக் காடெங்கும் எதிரொலித்தது, நிஷாவின் கண்கள் கலங்கின, வலி அவளை நிலைகுலையச் செய்தாலும், தன்னவனுக்கு என்னானதோ என்று தான் அதிகம் கலங்கினாள் நிஷாலினி,

காரை எடுக்க முடியாது என்ற நிலையில் தன்க்கு உதவிக்காக யாரையாவது அழைக்கலாம் என்றால் அங்கே சிக்னல் கிடைக்கவில்லை,

என்ன செய்யலாம் என்று புரியாமல் குழப்பத்தோடு இருக்கையில் தான் காட்டின் உள்ளே சென்ற ஒரு அடியாள் வேகமாக ஓடி வந்தான்,

“சார் சார் உள்ள ஒரு மரவீடு இருக்கு சார் நைட்டு அங்க தங்கிட்டு காலையில இங்க இருந்து எப்படிப் போறதுன்னு பார்க்கலாம் சார்” என்றான்,

“ஆமா சார், இருட்டிருச்சுன்னா இந்த காட்டுல திக்குதிசை தெரியாது சார், முன்னால போன காரும் திரும்ப வர்ற மாதிரி தெரியல சார்” என்றான் இன்னொருவன், 

சரியென அவன் காட்டிய மரவீட்டிற்கு செல்லலாம் என்று நிஷாவை இழுத்துக் கொண்டு ஆட்களுடன் அங்கு சென்றான் தீரண்,

சிறிய அளவிலான வீடு தான், பந்தங்களை தயார் செய்து இருளை விரட்டி இருந்தனர், நிஷா வீட்டின் நடுவே இருந்த தூணில் கட்டிப் போடப்பட்டிருந்தாள்,

தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் தீரண் நிஷாவைச் சுற்றி வந்தான்,

​”நான் யாரு என்னன்னு தெரியாம என்கூடவே விளையாடிட்டான் அந்த ஆரி, நான் தாலி கட்டுற நேரத்துல என் கழுத்துல ஒரு ஊசியைப் போட்டு என்னை மயக்கி குப்பை மாதிரி தூக்கி போட்டுட்டு உன் கழுத்துல தாலி கட்டிட்டான்,

அதுக்கு தான் அவன் ஒரு போலி டாக்டர்னு கதை கட்டி ஜெயிலுக்கு அனுப்பினேன், அதுல இருந்தும் தப்பிச்சுட்டான், அவனுக்கு தெரியாத இன்னொரு விஷயத்தை சொல்லட்டா, 

அவனை உங்கிட்ட இருந்து பிரிச்சா தான், உன்ன அவன்கிட்ட இருந்து நிரந்தரமா பிரிக்க முடியும்ன்னு, திட்டம் போட்டு தான் அந்த மாதிரி பண்ணேன்” என்று பல்லைக்கடித்த தீரணின் குரலில் ஒருவித சைக்கோத்தனம் இருந்தது,

ஆரி தன் ஜீப்பை எடுத்துக் கொண்டு தென்றலூரை விட்டு வெளியேற இருக்கும் ஒவ்வொரு திசையின் பாதையிலும் சென்று விட்டான்,

அவன் விசாரித்த வரையில் எந்தத் திசையிலும் நிஷாவைக் கடத்திச் சென்றதற்கான ஒரு துப்பும் கிடைக்கவில்லை, பின்பு தான் காட்டுப் பாதை நியாபகத்தில் வர, 

அவ்வழியாக சிறிது தூரம் வந்ததுமே அங்கு சாலையை விட்டு காட்டின் ஓரத்தில் ஒரு கார் நிற்பதைக் கண்டு,

தன்னுடைய ஜீப்பை நிறுத்தினான், சுற்றிலும் கும்மிருட்டு, எதிரே என்ன இருக்கு என்று கூட தெரியவில்லை, ஜீப்பின் ஹெட்லைட் வெளிச்சத்தைப் பாய்ச்சி பார்த்தான் அந்த காரின் நம்பரைக் கண்டதும் தான் அது தீரணின் கார் என்பதை அறிந்தான்,

கார் இங்கு இருந்தால் தீரண் இங்கு தான் இருக்கிறான், அப்போ அவன் தான் நிஷாவை கடத்திக் கொண்டு வந்தானா, விஸ்வநாதன் இல்லையா என்று எண்ணியவன், இனி ஒரு கணம் தாமதித்தாலும்,

நிஷாவிற்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம், அவளை விரைந்து காக்க வேண்டும் என வேகம் பிறக்க, ஜீப்பிற்கு பின்னால் இருந்து ஒரு கம்புக் குச்சியை எடுத்துக் கொண்டு, 

காட்டிற்குள் புகுந்தான், அவன் சில அடி தொலைவு சென்றதும் எதிரில் ஒரு வெளிச்சம் தெரிய அங்கே வந்து மறைவில் நின்று பார்த்தான், 

அங்கிருந்த ஒரு மரவீட்டின் ​உள்ளே தீரண், நிஷாவின் எதிரே நின்று பேசிக் கொண்டிருந்தான், நிஷா தூணில் கட்டிப்பட்டிருந்தாள், அவளது கன்னத்தில் இருந்த அறை விழுந்த தழும்பு, ஆரியனின் கோபத்தை இன்னும் அதிகரித்தது,

​”என் நிஷா மேல கையை வச்ச உன்னை சும்மா விடமாட்டேன்டா” என்று  அவன் மனதிற்குள் கர்ஜித்தான்,

கையில் இருந்த கம்பைக் கொண்டு ​அவன் தீரணின் அடியாட்களில் ஒருவனைக் குறி வைத்தான், இருளிலிருந்து புலி பாய்வது போல, சத்தம் போடாமல் அவன் பின்னால் சென்று, தலையின் பின் பகுதியில் பலமாகத் தாக்கினான், 

‘அம்ம்மா’ என்ற ஒற்றைச் சத்தத்துடன் அந்த அடியாள் கீழே விழுந்தான், ​தீரண் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். 

“யாருடா அது” என்று சத்தமாக கத்தினான், ஆரியன் இருளிலேயே மறைந்திருந்தான், அவன் கண்களில் நிஷாவின் முகம் மட்டுமே தெரிந்தது, 

அவளது பயம், கண்ணீர், அவளது வலி ஒவ்வொன்றும் அவனுக்குள் ஒரு பேரழிவை ஏற்படுத்தின,

​”என்னடா சத்தம், போய் பாருங்கடா” என்று மீதமிருந்த ஆட்களைப் பார்த்து தீரண் கத்த, அந்த அடியாட்கள் இருளை நோக்கி வந்தனர்,

​ஆரியன் இப்போது தன் மருத்துவ அறிவைப் பயன்படுத்தினான். ஒரு மனிதனின் உடலின் பலவீனமான பகுதிகள் எது என்பதை அவன் அறிவானாயிற்றே, சத்தம் போடாமல், அடுத்த அடியாளின் கழுத்தின் பின்புறத்தில் பலமாகத் தாக்கினான், 

அவன் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான், இன்னொருவனின் முழங்கால் பட்டையில் பலமாக ஒரு உதையிட, அவன் முடங்கிப் போனான்,

அடுத்து இருந்தது ​தீரண் மட்டும் தான், அவனுக்கும் இப்போது பயம் வந்து நடுங்கிப் போனான், 

“மொத்தம் எத்தனை பேருடா வந்திருக்கீங்க, யாரா இருந்தாலும் வெளிச்சத்துக்கு வாங்கடா”

​”எத்தனை பேரா, உன்னை மாதிரி ஒரு கோழையை அடிக்க ஆட்களை கூட்டிட்டு வரனுமா, நான் ஒருத்தன் போதாதா” என்று ஆரியனின் குரல் அந்த இருளில் காடெங்கும் எதிரொலித்தது, 

அது வெறும் குரல் அல்ல, அடிபட்ட சிங்கத்தின் ஒரு பெரும் கர்ஜனை,

​தீரணின் கண்கள் சுழன்றன, அவன் கையில் இருந்த இரும்புத் தடியை இறுகப் பற்றிக் கொண்டான், 

 

​ஆரியன் மெல்ல வெளிச்சத்திற்கு வந்தான், அவன் முகத்தில் ரத்தம் தெறித்திருந்தது, நிஷா அவனைப் பார்த்ததும் அழுகையை நிறுத்தினாள், நம்பிக்கையுடன் அவனையே பார்த்தாள்,

​”ஆரி…” என்று கூறிய அவள் கண்ணில் ஒரு பிரகாசம்,

​ஆரியன் மெல்ல நிஷாவைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தான், 

“என்னையே ஏமாற்றி எனக்கு சொந்தமானவளை உனக்கு சொந்தமாக்கிட்ட உன்னை இன்னைக்கு உயிருடன் விடமாட்டேன்டா” என்று

​தீரண் ஆவேசத்துடன் ஆரியனை நோக்கித் தாக்க வந்தான்,

“உன்னைக் கொன்னுட்டுத் தான் அவளை நான் கூட்டிட்டுப் போவேன்டா” என்று பெருங்குரலெடுத்துக் கத்திய

​ஆரியன், புலியெனப் பாய்ந்தான், 

தீரண் ஆவேசமாக கம்பியை ஓங்கி ஆரியனைத் தாக்க வர, ஆரியன் மின்னல் வேகத்தில் விலகி அவனது மணிக்கட்டைப் பிடித்துத் திருகினான்,

தீரணின் கையிலிருந்த இரும்புத் தடி கீழே விழுந்து அந்த மரத்தரையில் பெரும் சத்தத்தை உண்டாக்கியது,

​”என் நிஷா முகத்துல பயத்தை வரவச்ச ஒவ்வொரு நிமிஷத்துக்கும் நீ பதில் சொல்லணும்டா” என்று கர்ஜித்த ஆரியன், தன் முழங்காலால் தீரணின் வயிற்றில் பலமாக ஒரு குத்து விட்டான், தீரண் நிலைகுலைந்து பின்னால் போய் விழுந்தான்,

அவன் சுதாரிப்பதற்குள், ஆரியன் அவனைச் சட்டையைப் பிடித்துத் தூக்கி, தூணில் கட்டப்பட்டிருந்த நிஷாவின் அருகிலேயே அவனை மண்டியிட வைத்தான், 

“வேண்டா ஆரி, நீ தப்பு மேல தப்பு பண்ற ஆரி, இது உனக்கு நல்லதல்ல, பேசாம போயிடு” என்று அடிபட்ட பின்னும் அடிபணிய மறுத்தான் தீரண், 

“என் நிஷா மேல கைய வைக்க நீ யாருடா, நீ பண்ண முதல் தப்பு தென்றலூருக்குள்ள வந்தது, அடுத்த தப்பு என் குடும்பத்து ஆட்களையே அடிச்சது, அதை விட பெரிய தப்பு, 

என் நிஷாவ இங்கிருந்து கடத்திட்டு போக பார்த்தது, அவளை என் குடும்பத்துக்குள்ள கொண்டு வந்து சேர்க்க எத்தனை கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா, அதை எல்லாம் ஒரே நொடியில ஒன்னும் இல்லாம பண்ண நினைச்சே உன்னை எப்படிடா சும்மா விட முடியும்” என்று கேட்டபடி 

தீரணின் தாடையில் ஆரியன் விட்ட ஒரு குத்து, தீரணின் வாயிலிருந்து ரத்தத்தைக் கசியச் செய்தது, வலியில் துடிதுடித்தான் தீரண், ​

நிஷா கண்களில் கண்ணீர் மல்க ஆரியைப் பார்த்தாள், ‘தனக்காக தன்னவன் வந்து விட்டானே’ என்று உருகினாள் நிஷா

 “ஆரி… எனக்காக நீ வந்துட்டியா, மறுபடியும் எனக்காக தான் வந்தியா” என்று கேட்ட அவள் நாதழுதழுக்க,

​அப்போதுதான் அந்தப் பகுதி முழுவதையும் அதிரச் செய்தபடி மூன்று கார்களில் போன தீரணின் மற்ற அடியாட்கள் பட்டாளமே அங்கே வந்தது, 

சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆட்கள் கையில் அரிவாள் மற்றும் இரும்புத் தடிகளுடன் மரவீட்டைச் சூழ்ந்தனர்,

​தீரணின் பக்கம் காற்று வீசுகிறது,

தீரணின் யுத்தத்தை முடியறித்து நிஷாவை மீட்பானா ஆரியன்?

தொடர்ந்து வாசிப்போம் வாங்க 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page