மித்ரனின் வீடு
காலை நேரத்தில் அனைத்து வீடுகளிலும் இருக்கும் பரபரப்பு இன்றி அமைதியாக இருந்தது அந்த வீடு. ஜானகி சமையல் வேலையை முடித்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். கணவன் பிள்ளைகள் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். ஆனால் அதில் ஒருவன் மட்டும் இன்னும் வரவில்லை.
( அந்த ஒருவன் யாருன்னு நான் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் அது உங்களுக்கே தெரியும் நம்ம ஹீரோ தான் )
ஜானகி அந்த வீட்டின் தலைவி. மதிவதனன் ஜானகியின் கணவன். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.
மூத்தவன் நம் கதையின் நாயகன் மித்ரன். தாய் ஜானகியின் பெயரில் தந்தை ஆரம்பித்த சூப்பர் மார்க்கெட்டை விரிவுபடுத்தி இன்று அந்த ஊரில் 15 கிளைகளுக்கு மேல் உருவாக்கி தந்தையுடன் சேர்ந்து பொறுப்புடன் நடத்தி வருகிறான். இரண்டாவது ரோஹித் எம் பி ஏ இரண்டாம் வருடம் படிக்கிறான். மூன்றாவது அஞ்சலி எம் பி பி எஸ் இப்போது தான் முதலாம் ஆண்டு படிக்கிறாள் .
ரோஹித் சாப்பிட அமர்ந்ததும் தன் தாயிடம், “என்னமா இன்னும் உன்னோட உத்தமபுத்திரன காணோம். ” என்று வினவ,
” அவன வம்பு இழுக்கலனா உன்னால சும்மா இருக்க முடியாதாடா. “
” ஆமா அவர அப்படியே வம்பு இழுத்துட்டாலும் சரியான சிடு மூஞ்சி. அவர் கிட்ட எல்லாம் பேச முடியுமா. ஏம்மா எனக்கு ஒரு டவுட். நிஜமாகவே அண்ணாவை நீ தான் பெத்தியா. இல்லை வேற எங்கயாவது இருந்து தூக்கிட்டு வந்துட்டியா.”
” டேய், நீ இவ்ளோ பேசுறியே. அண்ணா இருக்கும் போது வாய கூட திறக்க மாட்ட. வெட்டி வாய் பேசாத டா” என்று அஞ்சலி கிண்டல் அடித்தாள்.
” அம்மா, இவள சும்மா இருக்க சொல்லுமா. அப்புறம் நடக்குறதே ” என்று பாதியிலியே நிறுத்தியவன் உணவில் கவனத்தை செலுத்தினான்.
” என்னடா, பாதிலையே நிப்பாட்டிட்ட.” என்க,
அவனோ, ” பின்னால பாரு ” என்று கையை ஆட்டி சைகை செய்தான்.
இட்லியை பிய்த்து அப்போது தான் வாயருகே கொண்டு சென்றவள் அவன் சைகையில் பின்னால் திரும்பி பார்த்தவள் தன் அண்ணன் நிற்பதை கண்டவள் கையில் இருந்த இட்லியை வாயில் திணித்தவள் ” அம்மா, எனக்கு போதும்.” என்றவாரு அங்கிருந்து ஓடி விட்டாள்.
பின்னால் நின்றது நம் நாயகன் மித்ரன் தான். அவன் இருக்கும் இடம் அமைதியாக இருக்கும். காரணம் அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது. வேற ஒன்னும் பெரிய காரணம் எல்லாம் இல்லை 😂😂. சாப்பிடும் போது பேசக்கூடாது. படிக்கும் போது பேசக்கூடாது என்று திட்டுவான். தப்பு செய்தால் அவ்ளோதான். வீட்டில் இவன் பெரியவன் என்பதால் தம்பி தங்கை இருவரிடமும் கண்டிப்பாக இருப்பான். அதனாலே இவர்களுக்குள் இடை வெளி அதிகமாகி விட்டது. ரோஹித், அஞ்சலி இருவருக்குமே அண்ணன் என்றால் மரியாதையுடன் பயமும் இருக்கும். அவன் இருக்கும் போது அமைதியாக இருப்பார்கள். இவன் பேச கூடிய ஒரே ஆள் இவன் நண்பன் விக்ரம் தான்.
அஞ்சலி ஓடியதை கண்ட மித்ரனுக்கு சிரிப்பு வந்தாலும் அதை மறைத்து கொண்டு ரோஹித்தை முறைத்தான்.
அவன் பார்வையில் அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றான்.
மித்ரன் சாப்பிட அமர ஜானகி அவனுக்கு சாப்பாட்டை பரிமாறியவர் இவனிடம் பேசலாமா வேண்டாமா என்ற யோசனையில் நின்றார்.
அதை கண்ட மித்ரன் அவரிடம், “என்னமா, என்ன யோசனை “என்று கேட்க,
“இல்லடா, மாமா காலைல போன் பண்ணாங்க. பிரியாவுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணனும்னு சின்ன வயசுலேயே பேசுனது தான.
அதான் எப்ப கல்யாணம் வச்சிக்கலாம்னு போன் பண்ணாரு. நீ என்ன சொல்ற “
” அம்மா, அவளுக்கு என்னை கண்டாலே ஆகாது. அதுவும் இல்லாம அவளுக்கும் எனக்கும் செட் ஆகாதுமா. ப்ளீஸ் இதை பத்தி இனிமே பேசாதீங்க. நா வேணா அவளுக்கு வேற இடத்துல நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்றேன். ” என்று கூறி விட்டு சாப்பிட்டு எழுந்து சென்றான்.
ஜானகிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அண்ணி மலருக்கு போன் செய்ய சென்றார்.
இங்கே நம்ம பிரியா என்ன பண்றானு பாக்கலாம்.
காலையில் 7 மணிக்கு பிறகு எழுந்து குளித்து கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.
‘ என்ன, அம்மா இன்னும் நம்மள திட்டல. ஒரு வேளை அம்மாக்கு உடம்பு சரி இல்லையோ ‘ என்று யோசித்தவாரு வெளியே வந்தாள்.
சமையல் அறையில் வேலை பார்த்து கொண்டிருந்தவர் அவளை கண்டதும், ” ஏண்டி, நேத்து மட்டும் காலைல எந்திரிச்சு வேலை பாத்த. உனக்கு தேவைனா மட்டும் வேல செய்வியா. கல்யாணம் பண்ணி போற இடத்துல என்ன புள்ள வலது இருக்கீங்கன்னு கேப்பாங்க ” என்று திட்ட ஆரம்பிக்க, ‘ ரைட்டு மலரு பஜனை ஆரம்பிச்சிடுச்சு. நம்ம நைசா கிளம்பிட வேண்டியது தான். ‘
என்று அங்கிருந்து நகர பார்க்க ஒரு கரண்டி பறந்து வந்து மேலே விழுந்தது. அப்போது வெளியே சென்று விட்டு உள்ளே வந்த கதிரவன் கண்களில் இது பட,’ஆத்தி இன்னைக்கு என்ன பண்ணினானு தெரிலயே. நம்ம ஓடிடுவோம்’ என்று நினைத்தவர் சத்தம் இல்லாமல் உள்ளே சென்று விட்டார்.
கரண்டியில் அடி வாங்கியவள் வழி இன்றி சமையல் அறைக்குள் செல்ல,”எரும மாடு, சாப்பிட்டு போய் தொலை ” என்று திட்டவும்,
நமக்கு சோறு முக்கியம் என்று சாப்பிட்டு கிளம்பினாள்.
கல்லூரி
” டேய், வாடா கேன்டீன் போலாம்”
” அடியேய், இருடி அவ வரட்டும். அவளை விட்டுட்டு நம்ம மட்டும் போனா அவ்ளோதான். என்ன நடக்கும்னு உனக்கு தெரியும் தான. “
” எனக்கு பசிக்குதுடா. காலைல எம்டன் திட்டிட்டாரு. அதுனால சாப்பிடலடா “
“சரி ஒரு 5 நிமிஷம் பாப்போம் வரலைனா நம்ம போலாம். ஓகே வா “
” என்னை விட்டுட்டு எங்க போக பிளான் பண்றீங்க ” என்று கேள்வி கேட்டு கொண்டே வந்தாள் பிரியா.
அவள் குரலில் இருந்த உற்சாகம் முகத்தில் இல்லை. அதை கவனித்த இருவரும் அவளிடம்,’ என்ன பங்கு, ரொம்ப சோகமா இருக்க. என்ன உனக்கு அவசரமா கல்யாண ஏற்பாடு ஏதும் பன்றாங்களா பங்கு ” என்று பிரியாவின் தோளில் கை போட்டவாறு வினவினான் சித்தார்த் பிரியாவின் தோழன்.
” ஆமா பங்கு. கல்யாண ஏற்பாடு தான். அதுவும் எனக்கு பிடிக்காதவன் கூட “
” என்ன பங்கு சொல்ற கல்யாணமா. என்ன ஆச்சு பங்கு. ஏன் திடீர்னு இப்டி ஒரு முடிவு உங்க அப்பா எடுத்தாரு ” என்று அதிர்ச்சியுடன் வினவினாள் நந்தினி.
” நீ யாரையாவது அடிச்சி பிரச்சனை பண்ணியா. உண்மைய சொல்லு ரியா. ” என்று சிறு கோபத்துடன் கேட்டான் சித்தார்த்.
( பிரியா, நந்தினி, சித்தார்த் மூவரும் சிறு வயதில் இருந்து நண்பர்கள். அது மட்டும் இல்லை சித்தார்த் நந்தினி இருவரும் கசின்ஸ். அதனால் மூன்று நாட்கள் வீட்டினருடன் சேர்ந்து குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு இன்று தான் கல்லூரி வந்து இருக்கின்றனர். அதனால் பிரியா சேர்மன் பையனை அடித்தது தெரியாது. )
பிரியா பதில் ஏதும் சொல்லாமல் தலை குனிந்தாள்.
” என்ன ஆச்சு ரியா பதில் சொல்லு ” என்று சிறிது கடுமையாக கேட்க அவள் சேர்மன் பையனை அடித்தது. பெற்றோரை வர சொன்னது மித்ரனுடன் திருமணம் எல்லாத்தையும் சொன்னாள்.
” ஏன் பிரியா இப்டி பண்ற. தப்ப தட்டி கேக்குறது தப்பில்ல. ஆனால் நாளைக்கு அவனால உனக்கு ஏதாச்சும் பிரச்சனை னா உங்க அப்பா அம்மா என்ன செய்வாங்கனு யோசிச்சியா.” என்று திட்ட, அதுவரை இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த நந்தினி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
” ஏய், நா இவள திட்டிட்டு இருக்கேன். நீ சிரிச்சிட்டு இருக்க. என்னடி ஆச்சு உனக்கு ” என்று சித்தார்த் கடுப்புடன் கேட்டான்.
நந்தினி, ” டேய் இவ யாரையாவது அடிக்கலன்னா தான் நம்ம கவலை படனும் அத விடு.இவளுக்கு கல்யாணமாம் அத என்னனு கேளு “
” நீ சொல்றதும் சரி தான். இவ என்ன இன்னைக்கு நேத்தா சண்டை போட்றா. சரி அவளுக்கு கல்யாணம்னு சொன்னா நீ ஏண்டி சிரிக்கிற. “
“மாப்பிள்ளை யாருனு கேட்டியா.”
” அத கவனிக்கலயேடி. நீ சொல்லு பங்கு யாரு மாப்பிள்ளை “
நந்தினி சிரிப்பின் காரணம் தெரியாமல் முழித்து கொண்டிருந்த பிரியா சித்தார்த் கேட்கவும், ” அந்த உம்மனா மூஞ்சி மித்ரன் டா ” என்றாள்.
இப்போது நந்தினியின் சிரிப்பின் காரணம் புரிய இவனும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தான்.
பிரியாவிற்கும் இவர்கள் சிரிப்பின் காரணம் புரியவும் பேக்கை வைத்து அவர்களை அடித்தாள்.
சித்தார்த், ” போதும் பங்கு உனக்கு கை வலிக்கும். ” என்றவாரே அங்கே கிடந்த பெஞ்சில் அமர்ந்தான்.
” ஏன்டா நானே எங்க அம்மா மித்ரன கல்யாணம் பண்ணிக்க சொல்றங்கனு கடுப்புல இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் கெக்க பெக்கனு சிரிக்கிறீங்க. “
” இல்லை பங்கு, மித்ரன் அண்ணா ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு சொல்வ. அவர கட்டிக்க போறவ ரொம்ப பாவம்னு சொல்லுவ. ஆனால் அது நீ தானா பங்கு “
” ஆமாடா. எனக்கும் அதான் கடுப்பு. ரோஹித், அஞ்சலி என் ஜானு டார்லிங் எல்லாரும் இருகாங்க. எல்லாரும் ஜாலியா பேசுவோம் விளையாடுவோம். ஆனால் மித்ரன் வந்துட்டா வீடு லைப்ரரி மாதிரி அமைதி ஆகிடும். அவனை எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது பங்கு. அது மட்டும் இல்லை. எனக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு ஆசை. அவனுக்கு எல்லாரும் பணத்துக்காக தான் பழகுறாங்கன்னு நினைப்பு. லவ்னாலே பிடிக்காது. அவன் என்ன எப்ப பாத்தாலும் முறைச்சிட்டே இருப்பான். சோ கல்யாணம் வேண்டான்னு அவனே சொல்லிடுவான் பங்கு. “
நந்தினியோ,” இல்லை பங்கு. எனக்கு என்னமோ மித்ரன் ப்ரோ கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவாருனு தோணுது “
” உன் வாயை டெட்டால் ஊத்தி கழுவுடி மொத. நானே இந்த கல்யாணம் நிக்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன். நீ வேற என்ன வார்த்தை பேசுற “
” சரி விடு பங்கு. இப்பயேவா கல்யாணம் பண்ண போறாங்க. நீ வா பங்கு இன்னைக்கு கேன்டீன்ல சமோசா போடுறாங்க. சுட சுட சாப்பிடலாம் ” சித்தார்த் அழைக்க,
” அப்டியா, வா பங்கு நமக்கு சமோசா முக்கியம் ” என்றவாரு அவனுடன் நடந்தாள் பிரியா. இவர்களை பார்த்து தலையில் அடித்து கொண்டு அவர்கள் பின்னே ஓடினாள் நந்தினி ( சமோசா முக்கியம்ல 😂😂😂)
மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்ற பிரியாவிற்கு நந்தினி கூறியது போல் மித்ரன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான் என்ற செய்தி கிடைத்தது அஞ்சலியின் மூலம்.
