வெந்து தணிந்த இதயம்-16(2)
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-16(2)
மறுபுறம் பயந்து பயந்து தன்னறைக்குள் வந்த யாழினியை உடனே கட்டிலில் தள்ளினான் பத்ரி.
அவள் திகைத்து, “இப்பயேவா?” என்று கேட்க, அவன் அக்கேள்வியைப் பொருட்படுத்தாது தன் பட்டு சட்டையின் பட்டன்களை கழற்றிக் கொண்டிருந்தான்.
அதுவரை குழப்பமான மனநிலையில் இருந்தவள் அவன் தன் பனியனை கழற்றி சாக்லேட் சிற்பமாக நிற்கவும், வாயைப் பிளந்து பார்த்தாள்.
அந்நேரம் கூட அவளின் அபரிமிதமான அழகு அவனுக்கு வெறுப்பைத்தான் தந்தது.
அவள் கட்டியிருந்த பட்டுச்சேலையை தொந்தரவாக நினைத்தவன் முதலில் அதைத்தான் அவளைவிட்டு உருவினான். அன்று அவன் ஆசை ஆசையாக அவளுக்கு தேர்ந்தெடுத்துக் கொடுத்தது சுருண்டு பூப்பந்துபோல் தரையில் கிடந்தது.
பட்டினும் மினுமினுப்பான அவளின் தேகத்தில் தீயாய் பற்றிப் படர்ந்தவன் அவளின் முகத்தை அசையவிடாது பிடித்து வன்மையாக இதழை சிறை செய்ய, அவளின் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வழிந்தது.
அவன் எல்லைகளைக் கடந்தபோதோ அவனிற்கும் மேலாக அவனை நாடினாள் யாழினி.
இத்தனைக்கும் அவனின் தொடுகையில் மென்மை கிஞ்சித்தும் இல்லை. முழுக்க முழுக்க அவளை பழிவாங்கும் வெறி தான் அவனை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.
அது தெரிந்தும் என்னுடைய மன வழிகளுக்கு இந்த உடல் வலி தான் மருந்து என்று தன்னை வலிய அவனிடம் தந்தாள்.
அவள் தேக இலை மேல் அவன் புழுவாய் ஊறி மேய்ந்து கொண்டிருந்தபோது இரண்டு கரடிகள் குறுக்கிட்டார்கள்.
முதலிரவிற்காக பத்ரியின் அறையை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவனின் அடியாட்கள் அறைக்கதவை தட்டினார்கள்.
காமம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த வேலையில் தன் கவனத்தை யாழினியின் தேகத்தின் மேலன்றி வேறு எதன் மேலும் செலுத்தத் தயாராயில்லை பத்ரி.
“அண்ணி முதலிரவுக்கு நல்லா பூ அலங்காரம் செய்யனும்னு ஜெயந்தியம்மா நேத்தே எங்களுக்கு உத்தரவு போட்டுட்டாங்க. கொஞ்சம் கதவை திறங்களேன்.” என்று கதவை பலமாகத் தட்டினார்கள்.
ஆனால், உள்ளிருந்து பதிலேதும் வரவில்லை எனவும், “என்னடா டெக்கரேசன் பண்ணலாம்னு வந்தா அந்தப்பொண்ணு உள்ளேயே படுத்து தூங்கிருச்சி போல? ஆமா இந்தப் பத்ரியண்ணே எங்கப்போனாரு? ஒருவேளை பொண்ணு மாறினதுக்கு எங்கேயாவது போய் சோகமா சரக்கடிச்சிட்டு இருப்பாரோ?” என்று விவகாரமாய் யோசித்தான் ஒருவன்.
மற்றொருவனோ, “டேய் மடையா! அவருக்கு தான் தண்ணியடிக்கிற பழக்கமே கிடையாதே” என்று அவனை இழுத்துச் சென்றான்.
தன்னை முழுதாக கொள்ளை கொண்டவனிடமிருந்து தானும் வேண்டிய அளவு பெற்றுக்கொண்டவள் சோர்வாக மூச்சு வாங்கியபோது அவளின் நிலையைக்கண்டு எள்ளலாக சிரித்தவன், “அன்னைக்கு கிணத்துக்குள்ள கிஸ் பண்ணப்போ என் கழுத்துல கீறின. என் ரூமுக்குள்ள கிஸ் பண்ணப்போ மிளகாத்தூள் டீ கொடுத்த. சஷ்டி ரூமுக்குள்ள கிஸ் பண்ணப்போ என் கன்னத்துலயே பளார்னு அறைஞ்ச. இப்ப உன்னை முழுசா அனுபவிச்சிருக்கேனே எனக்கு என்னடி தண்டனை வச்சிருக்க? இப்ப என்னை தொடுடி பார்க்கலாம்?” என்று ஒரு காலை கட்டிலில் ஊன்றி அவள் முகத்தருகே குனிந்து கர்ஜித்தான்.
யாழினி உடல்வலியிலும் முயன்று தன் முகத்தை பின்னால் இழுத்தாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“அந்த பயம் இருக்கனும். ஏன்டா என்கிட்ட வச்சிக்கிட்டோம்னு இருக்குல்ல? ஆம்பளைடி! இனி இந்த நரக வேதனை உனக்கு தினம் தினம் கிடைக்கும். இதுக்கு மேலயும் நீ வருத்தப்படுவ. என்ன சொன்ன? என்னை ஆம்பளையாவே நினைக்கலைனா? இன்னும் பத்து மாசத்துல நான் ஆம்பளையா இல்லையானு எல்லாருக்கும் சொல்லப்போறதே நீதான்டி.” என்று சொல்லிக்கொண்டே தனது உடையை போட்டுக்கொண்டு வெளியே சென்றான்.
யாழினியோ எழும்பக்கூட திராணியற்று அப்படியே கிடந்தாள்.
மனதிற்குள், ‘என் மனவேதனைக்கு தினம் தினம் இந்த மருந்து கிடைச்சாக்கூட தேவலை தான் மாமா.’ என்று நினைத்துக்கொண்டாள்.
அவள் உடல் அப்படியே படுக்கச் சொல்லி கேட்டாலும், காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் வயிறு கபகபவென்றது.
அவ்வறையை ஒட்டிய குளியலறையில் தன்னை சுத்தம் செய்துகொண்டு அதே உடையில் சோர்வாக வெளியே வந்தாள்.
அப்போது பார்த்து அவளைக் கண்ட அதே அடியாட்கள், “நாம நினைச்ச மாதிரியே இவ்வளவு நேரமும் இந்தப்பொண்ணு உள்ள தூங்கிட்டு தான்டா இருந்திருக்கு. சரியான கும்பகர்ணி.” என்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு அறையினுள் சென்று முதலிரவு அலங்காரத்தை ஆரம்பித்தார்கள். ஏற்கனவே அங்கு ஒரு ‘முதல் சாயுங்காலம்’ நடந்துவிட்டதை அறியாமல்.
யாழினி நேரே சமையலறை சென்றவள் இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த பெண்களிடம், “எனக்கு ரொம்ப பசிக்குது. இங்க சாப்பிட ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்க,
ஜெயந்தியின் அறிவுறுத்ததால் அந்தப் பெண்கள் அவளுக்கு உதவத் தயங்கினார்கள்.
அவள், “ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கேட்க,
“இல்லை” என்று தலைகளை மட்டும் அசைத்தார்கள்.
சோர்ந்து விட்டவள் அங்கு ஓரமாக ஒரு கூடையில் அலங்காரத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை என்று அனைத்தையும் எடுத்து உண்ணத் தொடங்கினாள்.
அப்போது பார்த்து சமையலறை வந்த சாவித்ரியும் பொன்னியும் அவளை பாவமாக பார்த்துவிட்டு சென்றார்கள்.
வயிறு நிரம்பியதும் அவள் மீண்டும் பத்ரியின் அறைக்குச் செல்ல முயல, வழியில் அவளை அடாவடியாக கைநீட்டித் தடுத்த ஜெயந்தி, “இனி உன்னோட ரூம் இது இல்ல. உன்னோட ரூம் இனி ஸ்டோரூம் மட்டும் தான். நீயெல்லாம் அங்கயிருக்க தான்டி லாயக்கி.” என்று வலிக்க வலிக்க அவளின் புஜம் பற்றி ஸ்டோரூமில் கொண்டு வந்து தள்ளினார்.
மேலும், வரும் வழியில் பத்ரியின் அறையைக் கண்டு திகைத்து நின்றார். தன் மகள் வாழப்போகும் அறையென்று நேற்று கூலிகளை உயர்த்திக் கொடுத்து அந்த அறையை முதலிரவுக்காக மிக நேர்த்தியாக அலங்கரிக்கச் சொல்லியிருந்தவர் இன்று நிலைமை தலைகீழாகியதும், அந்த மடையர்களை ஏசினார்.
“முட்டாப்பசங்களா! இங்க வந்து அலங்காரம் பண்ணிட்டிருக்கீங்க? என் மகளோட ரூம்ல போய் அலங்கரிங்கடா. என்ன முழிக்கிறீங்க? இனி சஷ்டியோட ரூம் தான் அவளோட ரூம். போங்க” என்று அடியாட்களை முதல்மாடி நோக்கி திருப்பிவிட்டார்.
ஆனால், சஷ்டியோ அவர்களை அதெல்லாம் வேண்டாமென்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டான். அதைக்கேட்டதும் ஜெயந்திக்கு இன்னும் ரத்த அழுத்தம் எகிறியது.
“மடையன்! இவனைப்போய் நம்மப் பொண்ணுக்கு கட்டி வச்சிருக்கோமே” என்று நொந்துகொண்டார்.
யாழினியோ ஸ்டோர் ரூமிலிருந்து வெளியேற முயற்சிக்கவில்லை. ஏனெனில் அங்கு தானே அவளின் தாய் வசந்தியின் புகைப்படமும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அவருக்கு சாமி கும்பிட்ட பின் அப்புகைப்படத்தை அவ்வறைக்குள் ஐக்கியமாக்கிவிடுவார்கள்.
அதைக் கண்டதும், ‘உங்கக்கிட்டயே நான் இருந்துக்கிறேன்மா’ என்று மனதுள் சொல்லிக்கொண்டாள்.
பொன்னியின் இரு மகள்களும் இரவு உணவு சாப்பிட வந்தபோது யாழினியைப் பார்க்க பத்ரியின் அறைக்குச் செல்ல முயல, அதைப் பார்த்த பொன்னி தடுத்தார்.
“ஹேய்! இங்க வாங்க ரெண்டுபேரும். அங்கெல்லாம் போகக்கூடாது.” என்று அதட்டி அழைத்துச் சென்றார்.
உண்மையில் பொன்னிக்குமே யாழினியை நினைத்து பாவமாகத் தான் இருந்தது. ஆனால், தன் தந்தையை பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை.
இன்னொரு பக்கம் சஷ்டியின் முதலிரவுக்காக தெய்வானையை ரதிபோல் அலங்கரிக்கச் சொன்னார் பார்வதி. பணிப்பெண்களும் அவளை மிதமான நகைகளுடன் எடையற்ற புடவையில் அலங்கரிக்க, ஜெயந்தி அவ்வறைக்குள் நுழைந்தவர் அங்கிருந்த பெண்களையெல்லாம் வெளியேறச்சொன்னார்.
அவர்கள் சென்றதும் மகளின் நாடியைப் பற்றி, “இங்கப்பாரு தெய்வா, உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ நீ இந்த வாழ்க்கையை வாழ்ந்து தான் ஆகனும். அந்த சஷ்டியோ ஒரு உருப்படாதவன். உன் அப்பாவை நான் எப்படி எனக்கு அடிமையா வச்சிருக்கேனோ அதே மாதிரி நீயும் அவனை உனக்கு அடிமைப்படுத்தி வச்சிக்கனும்.” என்று சொல்லும்போது, தெய்வானையின் கண்கள் பின்னால் சென்றன.
தொடரும்…
இதுதான் மஜாவானுலாம் கேட்கக்கூடாது. அடுத்தடுத்து வரும்;)
எப்பவும் போல நம்மக் கதைக்கு ஹார்ட்டின் விட்ருங்கோ, கமெண்ட் பண்ணிருங்கோ தங்கோம்ஸ்:)
