வெந்து தணிந்த இதயம்-20
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-20
சற்றுமுன் அவன் சாப்பாட்டை தன் மேல் துப்பியதைக்கூட தன்னை தோண்டுபனை தாங்கும் நிலம் போல பொறுத்துக்கொள்ள முடிந்த யாழினியால் தற்போது அவன் கூறிய அந்த வார்த்தைகளை தான் பொறுக்க முடியவில்லை.
கொதிக்கும் தாரை காதில் ஊற்றியது போல் துடிதுடித்துப் போனாள்.
“ஏன் என்னை பிடிக்கவே செய்யாத மாதிரி நடிக்கிறீங்க?” என்று அவன் கைக்குள் கிடந்தபடியே பரிதாபமாகக் கேட்டாள்.
அவளின் கலங்கிய முகத்தை காணும்போது அவனுக்குமே தன் மேல் கோபம் வந்தது. ஆனால், அவனின் தந்தை வழியில் அவள் குறுக்கிடக்கூடாது என்பதாலும், தான் இப்படி பேசவில்லை என்றால் அவளின் ஆட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும் கடுஞ்சொற்களை கற்களை போல் அள்ளி வீசினான்.
“ராங் ஜட்ஜ்மெண்ட் யாழினி. உன்னைனா உன் மனசு, உன் உடம்பு, உன் குணம் எல்லாம் தானே எனக்கு பிடிக்கனும்? ஆனா எனக்கு பிடிச்சது வெறும் உன் உடம்பு தானே? நீயே யோசிச்சிப்பாரு, எனக்கு உன்னை பிடிச்சிருந்தா நான் ஏன் தெய்வானை கழுத்துல தாலி கட்டுற அளவுக்கு போகப்போறேன்? அப்பறம் எதை வச்சி உன்னை எனக்கு பிடிக்கும்னு சொல்ற? உனக்கு ஒவ்வொரு தடவையும் முத்தம் கொடுத்தது வச்சா? உனக்கு முதல் தடவை முத்தம் கொடுத்த அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? நீ வயல்ல ஒரு கிழக்குத்தெருக்கார குழந்தையை கொஞ்சிட்டு இருந்த. என் அப்பா அதைப் பார்த்துட்டு நீ எல்லாம் எங்க தோட்டத்து வீட்டுக்கு கூத்தியாளாப் போகத்தான் லாயக்கின்னாரு. அதைக் கேட்டதும் தான் நான் உன்னை அப்படியொரு கண்ணோட்டத்துல பார்க்க ஆரம்பிச்சேன். உன்னை எனக்கு கூத்தியாளா ஆக்கிக்கனும் தான் நான் உன்னை அடிக்கடி தொட்டதே. அதுவும் நீ எங்க தாலிங்களை வேற திருடி இருந்த. அதுக்கு ஒரு விலை வேணாம். அதான் உன்னை தொட்டேன்.” என்றதும், சிலை போல் உறைந்தாள் யாழினி.
அவன் அதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாதவனாய் அவளின் இதழில் மூழ்கியிருந்தான்.
அவன் முகத்தை தன்னிலிருந்து பிரித்தவள், “என்னை ஒரு விலை மாதுவா நினைச்சி தான் தொடுறீங்களா?” என்று கண்னீர் பொங்கக் கேட்டாள்.
அவன் அவளின் அழுகை முகத்தை காண விரும்பாததால், ஆமாம் என்று அவளின் மார்பில் முகம் புதைத்தான்.
அவன் அப்போது உணரவில்லை. இப்படியெல்லாம் அவளிடம் பேசுவதற்கு விரைவிலேயே தான் மன்னிப்பு கேட்டு மன்றாடப்போகிறோம் என்று.
“எப்படி என்னை அப்படி நினைக்க முடிஞ்சது? உங்க வார்த்தைகள் விசமா மாறி என் உயிரை குடிச்சிட்டிருக்கு. உங்க அன்பு எப்பவுமே எனக்கு கிடைக்காதா? என் தாலியில இருக்க மீனாட்சி சொக்கர் மாதிரி நாம மனசளவுல சேர்ந்து வாழப்போறதில்லையா? என்னை எவ்வளவு கேவலமா நினைச்சிட்டீங்க நீங்க? என்ன பண்ணினாலும் என்னை உங்க பொண்டாட்டியா நினைச்சி தான் பண்றீங்கன்னு நான் பொறுத்துப்போனேன். ஆனா உங்க மனசுல ஈரமும் இல்ல. நான் உங்கப் பொண்டாட்டிங்கிற நினைப்பும் இல்ல.” என்று மனம் சுக்கு நூறாக உடைந்துப்போய் கூறினாள்.
அவனோ, “இப்ப புரியுதா? நான் ஏன் நீ திரும்பி வந்தா விளைவு மோசமா இருக்கும்னு சொன்னேன்னு? நீ என் கையால தாலி வாங்கினதால தான் இந்த வீட்டுலயாவது இருக்க? இல்ல?” என்று நிறுத்திவிட்டு அவளின் உடைகளை களைவதில் தீவிரமானான்.
அவள் அவனை விடவில்லை. “இல்ல என்னாகியிருக்கும்?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள்.
“என்னாகியிருக்கும்? நீ எங்க தோட்டத்து வீட்டுல கிடந்திருப்ப.” என்றவன் முடிக்க,
“இது எனக்குப் பிடிக்கல” என்று அவனைவிட்டு விலக முயன்றாள்.
ஆனால், அவனின் காமக்கடல் வெயிலடித்தாற் போன்ற இந்த சிறு எதிர்ப்புகளால் வற்றிப்போகக் கூடியதா என்ன? நினைத்ததை நிறைவேற்றினான்.
யாழினியோ தன் இழிநிலையை எண்ணி மனதில் தீர்க்கமானதொரு முடிவெடுத்தாள்.
அவளுடனான கூடல் முடிந்து வெளியேறிய பத்ரி தனது தந்தையோடு கிழக்கூர் குளத்தை ஏலம் எடுக்கச் சென்றிருந்தான்.
மொத்தம் இருபது ஊர்க்காரர்கள் ஏலத்திற்கு வந்திருந்தார்கள்.
அவர்களில் பதினேழு ஊர்க்காரர்களை ஓரம் கட்டிய ரத்னவேல் பாண்டியன், மூன்று ஊர்க்காரர்களுடன் தீவிரமாக போட்டியிட்டார்.
இறுதியில் ஒரு பெரும் தொகைக்கு ஏலம் அவருக்கு கிடைத்தது.
பத்ரி அவரிடம், “இந்தத் தொகை ரொம்பவே அதிகம் ப்பா. இதுல மீன் வளர்த்தா அந்தளவுக்கு நமக்கு லாபம் கிடைக்கப்போறதில்ல.” என்று சொல்ல,
“எனக்கு இப்ப லாபம் முக்கியமில்ல பத்ரி. அவன் ஒரு கிழக்குத்தெருக்காரன். அவனை நான் ஜெயிக்கனும். அவனை ஜெயிச்சா அவன் இனத்தையே நான் ஜெயிச்ச மாதிரி. எனக்கு அதுதான் முக்கியம்” என்றதும், அதற்கு மேல் வாதாடுவதை விட்டுவிட்டான் பத்ரி.
ஆனால், ரத்னவேல் பாண்டியனுக்கு சாதகமாய் ஏலம் முடிந்தாலும் அவருக்கு கூடுதலாய் ஒரு லட்சம் தேவைப்பட்டது. அதை எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றான் பத்ரி.
அங்கு பதட்டமாக நின்றிருந்தார் சாவித்ரி.
அவன் அவரிடம் விசயத்தைக் கேட்க, அவர் கையில் பெட்டியோடு யாழினி தோட்டத்து வீட்டிற்கு சென்ற விசயத்தைக் கூறினார்.
உடனே அவனின் நரம்புகளனைத்தும் புடைத்தன. காலையில் தான் அவளை கீழ்த்தரமாக பேசியதற்கு பழிவாங்கவே இவ்வாறு செய்திருக்கிறாள் என்பது புரிந்ததும், அவனுக்கு கோபம் இன்னும் தலைக்கேறியது.
ஜெயந்தியோ இன்னும் அதற்கு தூபம் போட்டுவிட்டார்.
“அவ நம்மளை அவமானப்படுத்த தான் இப்படி பண்றாடா பத்ரி. அந்த வீட்டுல யாருடா இருப்பா? இந்த பெரிய வீட்டோட கூத்தியாளுங்க தான் இருப்பாளுங்க. உன் கையால தாலி வாங்கிட்டு இவ பெரிய அசிங்கத்தை உண்டு பண்ணிட்டா. இனி ஊர் பூராவும் நம்மளை காரித் துப்பப் போகுது.” என்று பொல்லாப்பு கூறியதும், வீட்டிற்குள் கூட நுழையாமல் தோட்டத்து வீட்டிற்கு சென்றான் பத்ரி.
வானம் வேறு தன் வீட்டிற்கு ரூம் ப்ரெஷ்னர் அடித்துக் கொண்டிருந்தது.
காரிலிருந்து இறங்கியவன் அந்த மென்சாரலில் நனைந்தபடியே மாந்தோப்பை கடந்து தோட்டத்து வீட்டை அடைந்தான்.
நல்ல விசாலமான வீடு அது. ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை, வெளியே ஒரு பெரிய தண்ணீர்தொட்டியுடன் கூடிய குளியலறை என்று அடக்கமாக இருந்தது.
வரும்போது தன்னுடன் ஒரு அடியாளை அழைத்து வந்திருந்த யாழினி, அவரின் மூலம் தனக்கு சமைக்கத் தேவையான பொருட்களை எல்லாம் வரவழைத்திருந்தாள்.
நிச்சயம் பத்ரி தன்னைத்தேடி அங்கு வருவான் என்று நம்பியவள், ஏற்கனவே அங்கிருந்த பாத்திரங்களைக் கொண்டு சமைக்கத் துவங்கினாள். மணக்க மணக்க நகரை மீன் குழம்பு, வாவல் மீன் வறுவல், சுறாப்புட்டு, இறால் தொக்கு என்று அனைத்தையும் செய்து முடித்தவள் அலுப்புத்தீர சாரலில் நனைந்தபடியே குளித்து முடித்தாள்.
பத்ரி கோபமாக அங்கு வந்தபோது, மார்பில் ஒரு சந்தன நிற பாவாடையைக் கட்டிக்கொண்டு தலையை துவட்டிக்கொண்டே அவள் உள்ளே வர, உக்கிரமாக அங்கு நின்றிருந்தவன் அவளின் கோலத்தைக் கண்டு மது குடித்த வண்டானான்.
யாழினியோ திகைத்து நின்றாள்.
அவளின் அங்கங்களோடு ஒட்டிய பாவாடை அவனை அந்த கிணற்று முத்த நாளிற்கு இட்டுச் சென்றது.
அவளுக்குப் போட்டியாய் உடனே தானும் தன் நனைந்திருந்த சட்டையைக் கழற்றிப் பிழிந்தான்.
அவனின் சிக்ஸ் பேக் பாகங்கள் அவளை பித்தாக்க, கிறங்கிய விழிகளுடனே அவனை நெருங்கினாள்.
“ஆமா நீங்க எப்ப வந்தீங்க? அடடா! உங்க மாளிகை மாதிரி இங்க உட்கார சேர் கூட இல்லையே. வாங்க இந்த பாயில வந்து உட்காருங்க.” என்று பாயை விரித்தாள்.
அவனுக்கோ கடுகடுவென்று இருந்தது.
“என்னடி திமிரா? எதுக்கு நீ இப்ப இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்று அடிக்குரலில் உறும, சரியாக அவனது அலைபேசி இசைத்தது.
அழைத்தது ரத்னவேல் பாண்டியன் தான் என்று தெரிந்தும், கோபத்தில் அதனை அணைத்துப் போட்டான்.
அவளோ கிண்டலாக, “உட்கார்ந்திருக்கேனா நின்னுட்டு தானேங்க இருக்கேன்?” என்றதும்,
“ஒழுங்கு மரியாதையா இப்ப நீ ட்ரெஸ் மாத்திட்டு என்கூட கிளம்பற!” என்று மிரட்டினான்.
“கிளம்பவா? எங்க சினிமாவுக்காங்க? அட! தோட்டத்து வீட்டுல இருக்க வப்பாட்டிய யாராவது பகிரங்கமா ஊர்ப் பார்க்க சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டு போவாங்களா?” என்றவள் நக்கலாகக் கேட்டதும், அவன் பொறுமை எல்லையைக் கடந்தது.
“எங்க ஊர்ல வப்பாட்டிக்கு யாரும் தாலி கட்டுறதில்ல. இப்ப நீ ஒழுங்கு மரியாதையா என் கூட வர்றியா இல்லையா?” என்றான்.
அவனுக்கு அவன் தந்தை ஞாபகம் வேறு அடிக்கடி வந்து போனது.
“அப்போ இதையும் நான் கழட்டி வைக்கனும்னு சொல்றீங்க?” என்றவள் தன் மார்பில் கிடந்த தாலியை தூக்கி காண்பிக்க,
“இங்கப்பாரு நடந்து முடிஞ்சது எதையும் இனி மாத்த முடியாது, அது நானே நினைச்சாலும். ஊரே உன்னை என் பொண்டாட்டினு ஏத்துகிட்டப் பின்னாடி நீ ஏன்டி இப்படி லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க?”
“ஆமாங்க ஊரு தான் என்னை ஏத்துக்கிச்சு. ஆனா, நீங்க ஏத்துக்கலையே. என்னை தினம் ஒரு வேசியா நினைச்சி தானே நீங்க தொடுறீங்க? இதைவிட ஒரு பொண்டாட்டியை புருஷன் அசிங்கப்படுத்திற முடியுமாங்க? நீங்க என்னை வப்பாட்டியா வச்சிக்க ஆசைப்பட்டீங்க. அதை நான் நல்ல பொண்டாட்டியா நிறைவேத்திட்டேன். தட்ஸால்!”
“ச…ர்ர்ர்ர்ரி நான் பேசினது அதிகப்படி தான். உன்கிட்ட அப்படி பேசினது எல்லாமே தப்பு தான். தயவுசெஞ்சு என்கூட வீட்டுக்கு வா” என்று கேட்க, அவள் மசியவில்லை.
இறுதியாக வேறு வழியின்றி பெரிய கும்பிடு போட்டவன்,
“அம்மாத்தாயே என்னை மன்னிச்சிரு.” என்றான்.
அவனின் பாவனையில் சிரித்தவள் அப்போதும் மனம் இறங்கவில்லை.
“நான் உங்கப் பொண்டாட்டி தான்னு ஒத்துக்கறீங்களா?” என்று அலட்டலாகக் கேட்டாள்.
“ஒத்துக்கறேன். அதை என் கைப்பட பத்திரம் வேணா எழுதித்தர்றேன். நீ என் கூட வா ப்ளீஸ்” என்றதும், பாவம் பார்த்து அவனுடன் வர சம்மதித்தாள்.
ஆனால், மனதிற்குள் ‘இப்ப என்னை உங்க பொண்டாட்டினு ஒத்துக்க வச்சிருக்கேன். கூடிய சீக்கிரமே உங்க காதலியும் நான் தான்னு ஒத்துக்க வைக்கிறேன்.’ என்று சபதமெடுத்தாள்.
அவன் மீண்டும் தனது சட்டையை அணிந்துக்கொண்டிருந்த போது, “எனக்கு பசிக்குது. ஸோ, நான் ஒரு வாய் சாப்பிட்டுட்டு தான் வருவேன்” என்று அவன் எதிரிலேயே ஒரு கிராப் டாப்பும், லாங் ஸ்கர்ட்டும் அணிந்தாள்.
அவன் கண்கள் தன் மேலேயே இருப்பதைக் கண்டு, “அதான் நீங்க பார்க்காத இடமே என் உடம்புல இல்லைனு ஆகிருச்சே. அப்பறம் ஏன் இப்படி வெறிச்சிப் பார்க்கறீங்க?” என்று அவன் அருகில் வந்து கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
அவள் குனிந்ததில் கழுத்து இறங்கிய கிராப் டாப் அவனை பித்துப் பிடிக்க வைக்க, அவள் அவன் மடியில் அவசர வீணையானாள்.
அவன் இதழ்களுக்கு நிகராக விரல்களும் அவளை வாசித்தபோது அவள் எழுப்பிய சிருங்கார ஒலிகள் திவ்யகீர்த்தனைகள்!
அவனை தள்ளிவிட்டு எழுந்தவள், “வயிறு பசிக்குது” என்று தனது சைஸ் ஜீரோ வயிற்றை தடவ,
“ஓகே, ஓகே, சீக்கிரம் சாப்பிடு” என்றான்.
“எங்க? நீங்க விட்டாத்தானே?” என்று சலித்தவள், பக்கத்தில் வாழை இலையை விரித்து சுடசுட சாதம், மீன்குழம்பு, மீன் வறுவல், சுறாப்புட்டு, இறால் தொக்கு என்று வகையாக வைத்து ரசித்துச் சாப்பிட்டாள்.
அவன் மீன் வறுவலைப் பார்த்து எச்சில் ஊறினான்.
கூடவே அவளிடம் இறாலைக் கண்டு, “இதெல்லாம் குறத்திங்க தான் சாப்பிடுவாங்க” என்றான்.
வசந்தி குணசீலனிடம் கூறிய அதே வார்த்தைகள்!
தொடரும்…
ஹார்ட்டின் போடுறதுக்கு லாகின் பண்ண தேவையில்ல தங்கோம்ஸ்.
ஆனா கமெண்ட் பண்ண லாகின் பண்ணனும்.
கமெண்ட் பண்ணினா உங்க AY_ 84 ஹாப்பி.
அது மூலமா உங்களுக்கு பரிசு கிடைச்சா நம்ம எல்லாருமே ஹாப்பி:)
