வெந்து தணிந்த இதயம்-22

நான் உங்கள் AY_84

 

வெந்து தணிந்த இதயம்-22

 

“நீ இவ்வளவு புத்திசாலியா இருக்கும்போது தாத்தா தான் ஒரு முட்டாள்தனம் பண்ணிட்டேன் தெய்வானை. அன்னைக்கு கல்யாணத்துக்கு கார்ல போகும்போது அந்த சஷ்டி உன்னை தனக்கு கல்யாணம் பண்ணித்தரச் சொல்லி கேட்டான். அப்பவே நான்‌ சுதாரிச்சு அவனை கோவிலுக்கு‌‌ வரவிடாம பண்ணியிருக்கனும். கோவில் வாசல்லயும் இதுக்கு மேல யாரையும் மணமேடைக்கிட்ட அனுப்பாதனு சொல்லி‌ ஆளுங்களை நிற்பாட்டி வச்சிருக்கனும். தப்பு பண்ணிட்டேன்” என்றதும், 

 

‘என்ன? சஷ்டி தாத்தாக்கிட்ட என்னை கட்டிக் கொடுக்கச் சொல்லி கேட்டானா? அவனுக்கு அவ்வளவு தைரியம் எங்கயிருந்து வந்தது? அவன் தன் கோழைத்தனத்தையெல்லாம் மூட்டைக்கட்டி வச்சிட்டு எனக்கே எனக்காக தைரியமா தாத்தாக்கிட்ட என்னை பொண்ணு கேட்டிருக்கான். நான் அவனை லூசுத்தனமா தள்ளி வச்சிருக்கேன். எனக்கு இப்பவே சஷ்டியோட முகம் பூரா முத்தம் கொடுக்கனும். ஐ லவ் யூ, ஐ லவ் யூனு அவன் காது வலிக்கற வரை கத்தனும்.’ என்று மனதிற்குள் குதூகலித்தாள் தெய்வானை.

 

அது தெரியாத ரத்னவேல் பாண்டியனோ, “உன் விருப்படி நீ உன் ப்ரெண்டை போய் பார்த்துட்டு வா” என்றதும், 

 

“இல்ல தாத்தா நான் அவளை இன்னொரு நாள் போய் பார்த்துக்கறேன்” என்று அங்கிருந்து புறப்பட்டாள்.

 

மாற்றி மாற்றி பேசுபவளை புரியாமல் பார்த்து விழி பிதுங்கி நின்றார் ரத்னவேல் பாண்டியன்.

 

நேரே சஷ்டியின் அறைக்குச் சென்ற தெய்வானையோ தன் நண்பனை சந்திக்க வெளியூர் சென்றிருப்பவன் வீட்டிற்கு திரும்ப வெகுநேரம் பிடிக்கும் என்பதால் பொழுதுபோகாமல் அவனின் அறையை சுத்தப்படுத்தி அழகு பார்த்தாள். 

 

முதலிரவில் அவனுடன் கழித்த நிமிடங்களை இப்போது நினைத்துப் பார்த்து முகம் சிவந்தவள் இன்றும் அவனுக்கு தன்னை மொத்தமாக வழங்க நினைத்தாள். அதற்காக அவள் தனதறைக்குச் சென்று அலமாரியில் நல்ல புடவையாக தேடி அணிந்தாள். ஆனால், அதற்கு பயனில்லாமல் மறுநாள் இரவு தான் சஷ்டி வீட்டிற்கு வந்தான்.

 

மறுபக்கம் பத்ரியின் அறையிலோ யாழினி பரிதவித்துக் கொண்டிருந்தாள். 

 

திடீரென்று ஏற்பட்ட குளிர்காய்ச்சலால் பத்ரியின் உடல் அனலாக கொதிக்க, “அய்யோ! இப்ப நான் என்ன பண்ணுவேன்? இவருக்கு உடம்பு வேற இப்படி கொதிக்குதே?” என்று வெளியேப்போய் தனது மாமியாரின் அறைக்கதவை தட்டினாள்.

 

அவர் திறந்ததும் பதட்டத்துடன் நிற்பவளைக் கண்டு விசயத்தைக் கேட்க, கடகடவென்று பத்ரியின் நிலையை எடுத்துரைத்தவள், அவர் பத்ரியின் நெற்றியை தொட்டுப் பார்த்து காய்ச்சலின் வீரியத்தை அறியவும், “டாக்டரை கூப்பிடலாம்” என்றாள்.

 

சாவித்ரி சரியென்று விசயத்தை ரத்னவேல் பாண்டியனிடம் சென்று தெரிவிக்க, தங்களது குடும்ப மருத்துவரை அந்நேரம் வீட்டீற்கே வரவழைத்தார் அவர்.

 

மருத்துவர் பத்ரியை சோதித்துப் பார்த்து ஒரு ஊசியை செலுத்தியவர், அவனின் மனைவியென்று அறிந்து யாழினியிடம், அவனுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என்று மூன்றுமுறை கொடுக்கச் சொல்லி டானிக் ஒன்றை கொடுத்துவிட்டுப் போனார்.

 

பத்ரியோ காய்ச்சலின் வீரியத்தில் கனா கண்டவன் போல் புலம்பிக் கொண்டிருந்தான். அவனின் புலம்பலை உற்றுக்கேட்ட ரத்னவேல் பாண்டியன் தன் மீசையை முறுக்கிவிட்டார் என்றால், யாழினி முகம் தொங்கிப்போனாள். 

 

காரணம் பத்ரி, “என்னை மன்னிச்சிடுங்கப்பா. என்னை மன்னிச்சிடுங்கப்பா. தப்பு என் மேல தான். நான் ஏல நேரத்துக்கு கரெக்ட்டா பணம் கொண்டு வராம போயிட்டேன்.” என்றே உருப்போட்டுக் கொண்டிருந்தான்.

 

தனது தந்தையின் மீது அவன் வைத்திருக்கும் பயபக்தி அவளை கொதிப்படைய வைத்தது. 

 

இம்முறை அவளை தான் வெற்றிப் புன்னகையுடன் கடந்து சென்றார் ரத்னவேல் பாண்டியன்.

 

“டாக்டர் சொன்னதை மறந்துடாத யாழினி” என்றுவிட்டு சாவித்ரி தனது கணவரின் பின்னேயே வெளியேறியதும், கதவை தாழ் போட்டு விட்டு வந்தவள் தனது கணவனை கட்டியணைத்தவாறு படுத்துக்கொண்டாள். 

 

அவனின் புலம்பலும் கொஞ்ச நேரத்தில் நின்றது. 

 

மருத்துவர் அறிவுறுத்தியபடி அவனுக்கு காய்ச்சல் மருந்தை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என கொடுத்தபோது இரண்டாம் தடவை பத்ரி அவள் மீதே வாந்தி எடுத்து வைத்தான். 

 

அது ஊசியில் செலுத்தப்பட்ட மருந்தின் வீரியத்தால் அவனுக்கு சற்று புலனாக, “சாரி யாழினி” என்று பலவீனமாக முனகினான்.

 

“ஒன்னுமில்ல மாமா, ஒன்னுமில்ல” என்று மீண்டும் அவனுக்கு ஒரு மூடியை குடிக்கக் கொடுத்தவள் அவன் குடித்ததும் அவனை தன்னை அணைத்தவாறு வைத்து முதுகை தடவி கொடுத்தாள்.

 

அப்போது சுயநினைவுடனே அவளை இறுக அணைத்துக் கொண்டான் பத்ரி. 

 

அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தவளும் அவனின் இறுகிய அணைப்பை முழுமனதோடு ஏற்றுக்கொண்டாள். காமமில்லாத முதல் அணைப்பு என்றுகூட அதனை சொல்லலாம்‌.

 

மருந்து உள்ளே இறங்கியிருக்கும் என்று தானாகவே அவதானித்துக்கொண்டு அவனை தலையணையில் படுக்கச் செய்தவள், தனது மடியில் அவன் எடுத்திருந்த வாந்தியை சுத்தம் செய்து விட்டு வேறு புடவை மாற்றிக்கொண்டு வந்து படுத்தாள்.

 

அடுத்து மூன்றாம் முறை அவள் அவனுக்கு மருந்தை குடிக்கக் கொடுத்தபோது அவனது காய்ச்சல் சுத்தமாக குறைந்து போயிருந்தது. 

 

அவள் அப்போது அடைந்த நிம்மதியிருக்கிறதே? 

 

ஆனால், ‘நான் ஏன் இந்த அளவுக்கு இவருக்காக பதறுறேன்? முழுக்க முழுக்க எனக்கு வலிகளையும் வேதனைகளையும் கொடுத்தவருக்காக நான் எப்படி பாவப்பட முடியும்? ஒருவேளை இதுதான் மஞ்சள் கயிறு மேஜிக்கா?’ என்று குழம்பிப்போனாள்.

 

பின், ஒருவேளை இது காதலாக இருக்குமோ? என்று வேறு சந்தேகம். 

 

ஆனால், அந்த சந்தேகத்தை தெளிவடையச் செய்ய அன்றைய காலையில் ஒரு சம்பவம் நடந்தது.

 

காய்ச்சல் சரியாகி படுக்கையைவிட்டு எழுந்த பத்ரி கடிகாரத்தைப் பார்க்க அது செங்கோணத்தை காட்டியது. 

 

பல் துலக்கி கிளம்பியவன் வெளியே வந்தபோது வரவேற்பறையில் தரகர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார் ரத்னவேல் பாண்டியன்.

 

பூஜையறையிலிருந்து வெளிப்பட்ட யாழினி அவனின் நெற்றியில் திருநீற்றை பூச, அவளை வித்தியாசமாய் பார்த்தான். அதுவரை இல்லாத அவளிற்கு அவளை பாசமாய் வருடிக்கொண்டிருந்தன அவனது விழிகள்.

 

ஆனால், யாழினியை அந்த  பாசமழையில் நனைய விடாமல் தடுத்தார் ரத்னவேல் பாண்டியன்.

 

அவர் தன் மகனைக் கண்டதும் உற்சாகமாக, “வா பத்ரி! வா! இதுல உனக்கு பிடிச்சப்பொண்ணு எதுனு சொல்லு. இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்தைப் பேசி முடிச்சிரலாம். ஜெயந்தி தரகர் தந்த போட்டோவையெல்லாம் அவன்கிட்ட காமி!” என்றதும், அவனின் கையில் புகைப்படங்களைத் திணித்தார் ஜெயந்தி.

 

பக்கத்தில் நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்த யாழினிக்கு கேட்கும் விதமாக, “எல்லாம் பெரிய பெரிய கோடீஸ்வரன் வீட்டு வாரிசுக.‌ நல்ல‌ பேர் போன குடும்பம். அழகுலயும், அடக்கத்துலயும் இவங்களுக்கு ஈடு இணை கிடையாது. குறிப்பா எல்லாம் நம்ம இனம்” என்றதும், தாழமாட்டாமல் யாழினி அங்கிருந்து சென்றுவிட்டாள். 

 

பத்ரியோ, “இதுக்கு இப்ப என்ன அவசியம் வந்ததுனு இவ்ளோ அவசரமா பண்றீங்க?” என்று ஆற்றமாட்டாமல் கேட்டான்.

 

“இது எங்க கடமை பத்ரி. உனக்கு ஒரு நல்ல குடும்பத்துல இருந்து பொண்ணெடுக்கனும்னு எங்க எல்லாருக்கும் ஆசை.” என்று முழக்கினார் ஜெயந்தி.

 

ரத்னவேல் பாண்டியன் நினைத்ததென்னவோ பத்ரியை யாழினி தன் உடல் சுகத்தால் மயக்கி வைத்திருக்கிறாள்; அதனால் அதற்கு போட்டியாகத் தான் களத்தில் இன்னொரு பெண்ணை இறக்கினால் யாழினியை ஓரம் கட்டிவிடலாம் என்று. 

 

ஆனால், யாழினிக்கு பதிலாக முதலில் பத்ரியே இப்படி எதிர்வினையாற்றுவான் என்றவர் யூகிக்கவில்லை.

 

ஜெயந்தி மீண்டும் அவனை மூளைச்சலவை செய்ய முயன்றார்.

 

“உனக்கு ஒன்னு தெரியுமா பத்ரி? உன் முதல் பொண்டாட்டி குடும்பம் ஒரு நாடோடி குடும்பமாம். குறிப்பா நாடகக் குடும்பம். அவளுக்கு சொந்தம்னு சொல்லிக்க இருக்கது அவ பாட்டியும் அம்மாவும் தானாம். ஆனா, அவங்களே இப்ப எங்க இருக்காங்கனு தெரியலையாம். ட்ராமா கம்பெனிக்கு இப்பல்லாம் வர்றதில்லையாம். இப்படி ஒரு வரலாறு இருக்கறவ உனக்கு தேவை தானா பத்ரி? அதான் நீ பெருமையா வெளிய சொல்லிக்கற மாதிரி உனக்கு ஒரு துணை ஏற்பாடு பண்றோம். ரெண்டு கல்யாணம் பண்ணிக்கறதொன்னும் நம்ம குடும்பத்துக்கு புதுசு கிடையாதே.” என்று தன் தந்தைக்கு ஜால்ரா போடவும்,

 

“அப்ப உன்னோட வீட்டுக்காரரும் ஃபாரின்ல ஒரு பொண்ணுக்கூட குடும்பம் நடத்தினா உனக்கு சம்மதம் தானாக்கா?” என்று அவரை விளக்கெண்ணெய் குடிக்கவைத்தான் பத்ரி.

 

ஜெயந்தி அவன் இவ்வாறு கேட்டதும் வெகுண்டெழுந்துவிட்டார். 

 

“பத்ரி உன் மாமா ஏகபத்தினி விரதன். உன்னை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடியே கண்ட பொண்ணுக்கிட்டல்லாம் எல்லை மீறினவர் கிடையாது.” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறவும்,

 

“பாரு! நீயே என்னை தப்பா தான் நினைக்கிற? இதுல நான் இன்னும் என் பேரை ரெண்டாம் கல்யாணம் செஞ்சு வேற கெடுத்துக்கனுமா? அப்பாவே அவர் ரெண்டாம் கல்யாணம் செஞ்சிக்கிட்டதுக்காக இப்ப ரொம்ப வருத்தப்படுவாருனு நினைக்கிறேன். இப்ப நானும் அதே தப்பை செய்ய விரும்பல.” என்று தன் முடிவில் உறுதியாக நின்றான்.

 

“ஏன்டா அப்ப ஊர் பேர் தெரியாதவ கூடயா நீ காலம் முழுமைக்கும் வாழப்போற?” என்றதும்,

 

“என் தலைவிதி அந்த மாதிரி இருந்தா என்னக்கா பண்றது?” என்றவன் அத்தோடு உள்ளே சென்றுவிட்டான்.

 

யாழினியோ விசயமறியாமல், “வாங்க புது மாப்பிள்ளை சார். பொண்ணெல்லாம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ணியாச்சா? கல்யாணம் எப்போ?” என்று எகத்தாளமாகக் கேட்க, அவன் பதில் பேசாமல் அவளை உற்றுப் பார்த்தான். 

 

அவள் நுனிமூக்கு கோபத்தில் சிவந்திருந்தது. 

 

“இந்த ஜென்மம் முழுசும் எனக்கு உன்னை கொடுமை படுத்தவே நேரம் பத்தாது. இதுல எங்க நானு ரெண்டாம் தாரம் கட்டி அவளை மேய்க்கறது? அதான் எங்கப்பாக்கிட்ட வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று மிடுக்காகச் சொல்ல, மனதுக்குள் லட்சம் பூ பூத்தது யாழினிக்கு.

 

அவன் தன்னை மட்டுமே மனைவியாக ஏற்றுக்கொண்டது அவன் தலையில் தன்னை கிரீடமாக வைத்துக்கொண்டது போன்ற உவகையைத் தந்தது அவளுக்கு.

 

அது அவள் முகத்தில் தெரிந்ததோ என்னவோ, உடனே அவளை மட்டம் தட்ட தலைப்பட்டான் பத்ரி.

 

“நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னது உனக்காகத்தான்னு ரொம்ப சந்தோசப்பட்டுக்காத. நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். நான் ஒரு விசயம் பண்றேன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்னு. இதுவும் அந்த மாதிரி தான். எலெக்சன்ல நின்னு ஜெயிக்கற வரைக்கும், என் பேருக்கு எந்த கலங்கமும் நான் வர விடமாட்டேன்” என்றதும் அவள் முகம் கூம்பியது.

 

இப்போது தான் அவனுக்கு திருப்தி.

 

அக்கணம் தலை குனிந்திருந்தவளின் முன்னம்கழுத்து மச்சம் அவனை சுண்டியிழுக்க, அவளை அதிரடியாய் அணுகி கழுத்தை முத்தங்களால் நிறைத்தான். 

 

பிறகு, இதழில்‌ தாவி இளைப்பாற, அவனை முரண்டி முரண்டி மூச்சு வாங்கினாள் யாழினி.

 

அவனுக்கு ஒரு பழாச்சுளை மட்டுமே போதவில்லை. அவளே மொத்தமாக தேவைப்பட்டதால் அவளை தனது சிறுசிறு குறும்புகளால் துடிக்க வைத்து துடிக்க வைத்து தனது வேட்டைக்காக தயார் செய்தான். 

 

முடிவில் பொங்கி வழியும் பாலாய் அவள் கொதித்து நின்றபோது, பாலாடையை நீக்கியவன் அவளை மிச்சம் வைக்காமல் குடிக்கும் கன்றுக்குட்டியானான்.

தொடரும்…

ஹார்ட்டீன் கொடுக்கவும், கமெண்ட் பண்ணவும் மறந்துடாதீங்க தங்கோம்ஸ்:)

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
வெந்து தணிந்த இதயம்
20,812 902 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page