வெந்து தணிந்த இதயம்-24
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-24
மகளின் செய்கையில் பொன்னிக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
“இதை எடுத்துட்டு வரக்கூட சத்தில்லையாடி உனக்கு? ஆட்டிக்கிட்டே கொண்டு வர்றது. ஒரு வேலைல உருப்படி இல்ல ரெண்டும். சிரிக்க சொல்லுங்க கெக்கபுக்கேனு மணிக்கணக்கா சிரிக்கும்ங்க” என்று இரு மகள்களையுமே வறுத்தெடுத்தார்.
ஆனால், காதம்பரியின் கண்களில் தெரிந்த பதற்றம் யாழினியின் மை விழிகளில் விழாமல் இல்லை.
கவிதாம்பரி யாழினியை சுற்றி சுற்றி வந்தவள், “நீங்க மட்டும் எப்படிக்கா சாதா புடவையைக்கூட கரெண்ட் ட்ரெண்ட்ல ஸ்டைல் பண்றீங்க? இந்த சிவப்பு கலர் கல்யாணி காட்டன் புடவைக்கு சின்னதா பஃப் கைவச்சு பெப்சி ப்ளூ கலர்ல வெல்வெட் ப்ளவுஸ் போட்டிருக்கீங்க பாருங்க. மிரட்டலோ மிரட்டல்! ஆமா இந்த முத்து வச்ச அடுக்கு ஜிமிக்கி எங்க வாங்குனீங்க? இந்த கர்லி ஹேர் ஸ்டைலுக்குனு ஷாம்பு, கன்டிஷனர், ஹேர் ட்ரையர்லாம் இருக்கே. அது தான் யூஸ் பண்ணீங்களா? யூ ஆர் வெரி வெரி ப்ரிட்டிக்கா. பத்ரி மாமா வெரி லக்கி” என்று கண்ணடித்தாள்.
உடனே கன்னம் சிவந்தாள் யாழினி.
“அய்யோ வேணாம்க்கா! இன்னும் அழகு அதிகமாகிட்டேப் போகுது. அப்பறம் வெளிய பொறாமைத்தீயில எல்லாரும் பத்தி எரிஞ்சிருவாங்க” என்றதும், முத்துப்பற்கள் மின்ன சிரித்தாள் யாழினி.
“சொன்னா கேட்க மாட்டீங்க” என்று சலித்தாள் கவி.
சாவித்ரிக்கும் கவியின் புகழ்ச்சி அதிகமாய் படவில்லை. அவளின் ஆச்சர்யத்திற்கு பொருள் சேர்க்கும் வகையில் தானே யாழினியின் அழகு, நளினம் இருந்தது!
அப்போதே அவர் அவளுக்கு திருஷ்டி கழித்திருக்கலாமோ?
வெளியே கட்சி கூட்டத்தில் நின்றிருந்த பத்ரியை சாவித்ரி அலைபேசியில் அழைத்ததும் உடனே வீட்டிற்கு வந்தான். அவனைக் கண்டதும் காதுவுக்கும் கவிக்கும் சிரிப்பு பீறிட்டது.
அவன் புரியாமல் விழிக்க, “பத்ரி மாமா மருதாணி உங்க மூஞ்சில இந்தளவுக்கு ஒட்டியிருக்கும்னு நாங்க எதிர்பார்க்கல. யாழினிக்கா இதெல்லாம் ரொம்ப தப்பு” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.
அவர்களின் பேச்சில் சுற்றியிருந்த பெண்கள் இடி இடியென சிரிக்க, சங்கோஜமானது பத்ரிக்கு.
அதில் திடீரென ஒருவர், “பத்ரி உன் பொண்டாட்டியை நான் இன்னைக்கு தான் பார்க்கறேன். அப்படியே பன்னீர் சிலையாட்டம் இருக்கா. நம்ம சுத்து வட்டாரத்துல இப்படியொரு அழகியை நான் பார்த்ததேயில்ல.” என்று சிலாகிக்க, ரத்னவேல் பாண்டியனின் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்தது.
ஜெயந்திக்கோ தன் மகளின் தாலிப்பெருக்கிற்கு வந்துவிட்டு யாழினியை அவர்கள் புகழ்வது பிடிக்காமல், “யாழினி உங்க ஆளுங்கல்லாம் இப்படி பண்ற வழக்கம் இருக்காம்மா? எங்க உங்களுக்கு ஊர் ஊராப்போய் நாடகம் போட்டு கஞ்சி காய்ச்சிக் குடிக்கவே நேரம் இருக்காது. இதுக்கெல்லாம் எங்க கொடுப்பினை இருக்கப்போகுது? ஆமா உன் அப்பா உனக்கு சின்ன வயசுலயே இறந்துட்டார்னு சொன்ன இல்ல? அப்போ உன் அம்மாவுக்கு தாலி போட்டுக்கற பாக்கியமும் இருந்திருக்காது. ஒருவேளை அவங்க இங்க இருந்திருந்தா இந்த சடங்குகளைப் பார்த்து சந்தோசப் பட்டிருப்பாங்கல்ல, சமையலறையில நின்னு?” என்று குத்திக்காட்டிப் பேசியதும், தன் அன்னை பற்றிய பேச்சில் மழுக்கென்று அவளின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
எழுந்து நின்ற பத்ரி சமையலறையில் நின்றிருந்த பொன்னியை கரம் பிடித்து சுபகாரியம் நடக்குமிடத்திற்கு அழைத்து வந்தான். அக்கணம் ஜெயந்தியின் முகம் அஷ்டக்கோணலாவதை ரசித்துக்கொண்டே தாலிக்கொடியில் தாலிச்சரடை இணைக்கச் சொன்னான்.
பொன்னி தயங்கி மறுத்ததும், “நான் சொல்றேன்ல?” என்று உறுமினான்.
அந்த உறுமல் ரத்னவேல் பாண்டியனின் மறுபதிப்பாக அவனை அவருக்கு காண்பிக்க, மளமளவென அவன் சொன்னதை செய்தார்.
தாலிப்பெருக்கு வைபவமும் சுமூகமாய் நடந்தேறியது.
கடைசி நேரத்தில் தன்னை மீறி யாழினிக்கு கண்கள் கலங்க, அவளை அழக்கூடாது என்று கண்களால் மிரட்டினான் பத்ரி. பயந்து கப்சிப்பானாள் யாழினி.
ஆனால், ரத்னவேல் பாண்டியன் சாவித்ரியுடன் இணைந்து அவர்களை ஆசிர்வதிக்க வந்தபோது அருகில் இருந்த அகல்விளக்கு ஒன்றை முக்காலியில் உட்கார்ந்திருந்த யாழினியின் புடவையில் படும்படி காலால் நகர்த்திவிட்டார்.
அதில் சிறிது நேரத்திலேயே அவளின் புடவையில் நெருப்பு பற்ற, அலறித் துடித்தாள்.
பத்ரி அவளின் அலறலில் என்னதான் நெருப்பை விரைந்து அணைத்து விட்டாலும், அவளை சமாதானப்படுத்தும் முயற்சிகள் எதிலும் இறங்கவில்லை.
ஏனெனில், அவன் தனது தந்தை அகல்விளக்கை அவளருகில் நகர்த்தி வைத்ததை ஓரக்கண்ணால் பார்த்திருந்தான்.
தான் யாழினியிடம் அதிகப்படியாய் நெருங்குவதை அவர் விரும்பாத காரணத்தினாலேயே இவ்வாறு அவளின் அழகை அழிக்கும் முயற்சிகளில் இறங்குகிறார் என்று சரியாய் கணித்து, இனி யாழினியை அவரின் முன் நாடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தான்.
சுற்றி வேடிக்கைப் பார்த்தவர்களில் சிலர், “இவ ஒரு துரதிர்ஷ்டம் நிறைஞ்ச பொண்ணு போலயே? எல்லா நல்ல காரியமும் இவ இருக்கும்போது இப்படி தான் திருஷ்டி பட்டாப்பல கெட்டுப்போகுது. பார்வதி மதினி எங்களை மன்னிச்சிருங்க. உங்கப்புள்ளைக்கு நடந்துட்டு இருந்த நல்லக் காரியத்துல நிறைகுடத்துல ஓட்டை விழுந்த மாதிரி இந்தப் பொண்ணை உள்ள கொண்டு வந்து உங்க சந்தோசத்தை நாசம் பண்ணிட்டோம்.” என்று யாழினியின் அழகின் மீது ஏற்பட்ட வயிற்றெரிச்சலை இவ்வகையில் தணித்துக் கொண்டனர்.
யாழினியோ மிதமிஞ்சிய பயத்திலும், அவமானத்திலும் தனது அறைக்கு ஓடிவிட்டாள்.
மற்றவர்கள் உண்டான கலவரத்தில் ஸ்தம்பித்துப் போயிருந்தாலும், யாழினிக்கு காயம் ஏதும் ஏற்படாததால் பெருமூச்சு விட்டார்கள். வந்திருந்தவர்களை திருப்திகரமாக அனுப்ப வேண்டிய பொறுப்பு வேறு அனைவருக்கும் இருந்ததால், ரத்னவேல் பாண்டியனின் கட்டளையில் யாழினியை தேற்றக்கூடச் செல்லாமல் அங்கேயே சுழன்றுக் கொண்டிருந்தனர்.
தன்னறைக்குள் வந்த யாழினியோ முந்தானை கருகிப்போயிருந்த சேலையை மாற்றக்கூட தோன்றாமல் அப்படியே சமைந்துபோய் இருந்தாள். ஏனோ பற்றியெறிந்த அந்த நெருப்பிலிருந்து அவளால் மீள முடியவில்லை. முன்பு தாலிகளை அவள் திருடிக்கொண்டு வந்த சம்பவத்திலும் இப்படித்தான் ஆலமரத்தின் பின்னால் போய் ஒளிந்திருந்தாள். அதற்கும் முன்னால் தசராவிழா இராவண பொம்மை எரிப்பு.
அவளுக்கு நெருப்பினால் எங்காவது கொடூந்துயரம் நிகழும்போது போபியா வந்தது போல் மூளை எங்கேயாவது சென்று அவளை ஒளிந்துக்கொள்ளச் சொல்லும். அதற்கு காரணம் என்னவென்று இன்றுவரை அவள் அறிய முற்பட்டதில்லை.
அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்த பத்ரி, யாழினி இன்னும் ஒரு மூலையை வெறித்தபடி உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அவளின் மடியில் வந்து விழுந்தான்.
அவள் அதில் அவனை நோக்கி குனிய, “என்ன கனவு கண்டுக்கிட்டு இருக்கியா? அதுக்கெல்லாம் இங்க உனக்கு சுதந்திரம் கொடுக்கப்படல மேடம். ஒருவேளை அந்தக் கனவுல கூட நான் தான் வர்றேன்னா நீ கனவு கண்டுக்கலாம். தப்பில்ல.” என்று அவளின் கழுத்தை வளைத்து இதழில் முத்தம் பதித்தான்.
யாழினி, இவனுக்கு தேவை என் உடல் மட்டும் தானா? என் மனம் இல்லையா? என்று வேதனை கொண்டாள்.
தாங்கமாட்டாமல், “என்னை… வெளிய எங்கேயாவது கூட்டிட்டு போறீங்களா ப்ளீஸ்? எனக்கு இங்க மூச்சு முட்டிடும் போல இருக்கு.” என்று பரிதாபமாகச் சொல்ல,
“மூச்சு முட்டுதா? முட்டட்டும். என்ன முறைக்கற? ஏன்டா என்னை கல்யாணம் பண்ணோம்னு இருக்கா? நான் அவ்ளோ சொல்லியும் திரும்ப வந்த உனக்கு தண்டனை இதான். இந்த ஊரைவிட்டு எங்கேயும் வெளியப்போக முடியாது. உனக்கு இன்னுமே மூச்சுமுட்ட வைக்க நான் ஏற்பாடு பண்ணவா?” என்று அவளின் இதழை யானை விழுங்கும் ஹல்வாவாக அவன் விழுங்க, மனதை திடப்படுத்தினாள் யாழினி.
ஆவேசமாய் அவன் தலைமுடியை பிய்த்துஎறிவது போல தானும் இதழுள் மூழ்கினாள். அவள் அவனுள் மூச்சிழுக்கும் வித்தையை கற்றுக்கொண்டாள். அதனைத் தொடர்ந்து அவளின் காது மடலில் இருந்த கொப்பு அவனின் பற்களில் மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டது.
கூச்சத்தில் கண்கள் செருகியவள் அவன் தாடி தன் கன்னத்தில் குத்தும் சுகத்தை உவந்து ஏற்றாள்.
அதன்பின் அவளின் அழகை பத்ரி ஆண்ட விதம் பாம்பும் பாம்பும் கூடும் ரகம்.
கட்டில் யுத்தத்தில் அவனின் ஆசைகளுக்கு ஈடுகொடுத்தவள், ‘இரவில் தான் திகட்ட திகட்ட பெண்டாளுகிறான் என்றால் பகலில் சிறு இடைவேளையையும் விட்டு வைக்க மாட்டேன் என்கிறானே’ என்று மனதிற்குள் அலுக்க, பத்ரியின் நினைப்போ வேறு மாதிரி இருந்தது.
“ஏன் எவ்வளவு கூடினாலும் இன்னும் வேணும் வேணும்னே தோனிட்டு இருக்கு? ஏதோ மாயம் போட்டுட்டா இந்த மாயாஜாலக்காரி” என்று அவளை திட்டினானா? இல்லை பாராட்டினானா? என்று அவனுக்கே தெரியவில்லை.
கலவி முடிந்தபின்னும் யாழினி தனது அச்சத்திலிருந்து வெளிவராதவளாய் அவன் மடியில் முகத்தைப் புதைத்தாள். அதை அவன் உணர்ந்தானோ என்னவோ மெதுவாக அவளை திரும்பிப் படுக்க வைத்து தாலாட்டு பாடினான்.
“பச்ச மலப் பூவு! நீ உச்சி மலத் தேனு!
குத்தங்கொற ஏது? நீ நந்தவனத் தேரு!
அழகே பொன்னுமணி! சிரிச்சா வெள்ளிமணி!
கிளியே கண்ணுரங்கு! தூரி! தூரி! ஹோய்!”
அவனின் இந்த தாய் அவதாரத்தில் சற்று முன் இருந்த மனச்சுணக்கம் தீர்ந்து தன்னையே அவனிடம் மொத்தமாக அடிமை சாசனம் எழுதி நீட்டினாள் யாழினி.
கண்கள் கலங்க, “ஐ லைக் யூ மாமா” என்று அவள் முனுமுனுத்தது அவன் கண்களில் பட்டுவிட்டது.
“ஹேய் என்னடி சொன்ன?” என்று தன் காதை அவள் வாயில் வைத்தான்.
நறுக்கென கடித்தவள், “இன்னொரு ரவுண்ட் போகலாமானு கேட்டேன்” என்று கிறக்கமாய் சொன்னாள்.
அவனுக்கு தெரியும். அவள் அதை தாங்கமாட்டாள் என்று.
“போய் சேர்ந்துருவடி” என்று சொல்லிக்கொண்டே, “எதுக்கு அழற?” என்று உறுமினான்.
அவள், “என் அம்மா ஞாபகம் வந்துருச்சி” என்றாள்.
“ஓ! நீ உன் அம்மாவுக்காக இவ்ளோ ஏங்கற இல்ல? அவங்களுக்கு போன் போடு. நான் பேசறேன். அவங்கக்கிட்ட பேசி அவங்களை சமாதானப்படுத்துறேன். அவங்களை இங்க வரச் சொல்றேன்.” என்றதும், சுகமாய் அவன் மடியில் கிடந்தவள் தடாலடியாய் எழுந்தாள்.
“அதுவந்து நானே அம்மாவை சமாதானப்படுத்தி இங்க வரச்சொல்றேன். நீங்க அவங்கக்கிட்ட பேச வேண்டாம்” என்று பதறவும்,
அவன் புருவங்களை இடுக்கி, “ஏன்?” என்றான்.
“அம்மாவுக்கு உங்களை பத்தி எதுவும் தெரியாதுல்ல? தப்பா நினைச்சிட்டா? அதான்.” என்று ஏதேதோ சொல்லி சமாளித்தவள், இப்போது தான் தன் அன்னை வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார் என்றால், அவனே காரியத்தை கையிலெடுக்கக்கூடும் என்பதால் பயத்தில் வேறொரு முடிவுக்கு வந்தாள்.
அது ஒன்றுமில்லை. சுலேக்கா பாட்டியை தனது அன்னையாக அவ்வீட்டிற்கு நடிக்க வரச்சொன்னாள்.
ஏற்கனவே நடிப்பில் பிளந்து கட்டும் சுலேக்கா பாட்டிக்கு இதையெல்லாம் சொல்லியாத் தர வேண்டும்? உடனே வருவதாய் ஒப்புக்கொண்டார்.
பத்ரியின் எண்ணமோ வேறு மாதிரி இருந்தது. ஒருவேளை அவளின் அன்னையை இங்கே வரவழைத்தால் அவளின் ரகசியங்கள் புலனாகுமோ என்று!
தொடரும்…
லைக் கரோ,
கமெண்ட் கரோ,
ஷேர் கரோ தங்கோம்ஸ்:)
