வெந்து தணிந்த இதயம்-27
நான் உங்கள் AY_84
வெந்து தணிந்த இதயம்-27
மறுநாள் காலை மிகப்பெரிய இழுபெட்டியுடன் அங்கே வருகை புரிந்திருந்தார் சுலேக்கா.
கண்களில் கறுப்பு நிற கூலிங்கிளாஸ், உதட்டில் கறுஞ்சிவப்பு நிறச்சாயம், வான நீலத்தில் மல்மல் காட்டன் புடவை, கழுத்தில் ஒரு ருத்ராட்ச மாலை என்று ஒரு கலவையான தோற்றத்தில் வந்திருந்தார்.
அவரைக் கண்டதும் ஓடிச்சென்று ஆரத்தழுவிக் கொண்டாள் யாழினி.
அவர், “ஐயோ என் கண்ணே! உன்னை இத்தனை நாளாப் பார்க்காம அம்மா உடம்பு மெலிஞ்சு போயிட்டேன்டி” என்று சொன்னதும், அவரின் உருண்டு திரண்ட தோற்றத்தில் அவரை நம்பாத பார்வை பார்த்தார் ஜெயந்தி.
“அச்சோ! என் பொண்ணும் எப்படி துரும்பா இளைச்சுப் போயிருச்சி” என்று வருந்தினார்.
“ஆமா மூனு வேலையும் நல்லா கொட்டிகிறா. இவ இளைச்சிட்டாளாம்” என்று சடைத்தார் ஜெயந்தி.
அவரை தனது தாயார் என்று யாழினி அனைவருக்கும் அறிமுகப்படுத்தியபோது, “யார் யாரோ வந்து தங்குறதுக்கு இது ஒன்னும் சத்திரம் இல்ல” என்று பார்வதியும், ஜெயந்தியும் ஒன்று சேர்ந்து போர்க்கொடி தூக்கினர்.
யாழினி அதில் விதிர்த்து நிற்க, “உன் அம்மாவை கெஸ்ட் ரூம்ல ரெஸ்ட் எடுக்கச் சொல்லு” என்றார் ரத்னவேல் பாண்டியன்.
அனைவரும் திகைத்துப் போயினர்.
பத்ரியோ அசட்டுப் புன்னகை சிந்தினான். பின்னே அவன் தானே முன்பே சுலேக்காவின் வருகையைப் பற்றி அவரிடம் தெரிவித்து அனுமதி பெற்றிருந்தது!
அவன் யாழினியின் காதில் குனிந்து, “இவங்களைப் பார்த்தா உன் அம்மா மாதிரியே தெரியலையே. பாட்டி மாதிரியில்ல இருக்கு?” என்று சந்தேகமாக வினவவும்,
‘நம்ம புருசன் ஓவரா யோசிக்கிறானே’ என்று நொந்துகொண்டவள், “ஏன் உங்க அப்பா மட்டும் என்ன உங்களுக்கு தாத்தா மாதிரி தானே இருக்காரு? இனிமே நான் அவரை தாத்தானு தான் கூப்பிடப் போறேன். அப்பறம் நீங்க எனக்கு மாமா. மாமோய்!” என்று கேலியாக அழைத்ததும்,
“படுத்தறாளே” என்று சூடானான் பத்ரி.
வெற்றிகொண்ட யாழினியோ யாருக்கும் தெரியாமல் சுலேக்காவிற்கு கண் ஜாடை காட்ட, ரத்னவேல் பாண்டியனிடம் சென்றவர் தன் கைகள் இரண்டையும் கூப்பி, “ஐயா என் பொண்ணு விவரமில்லாதவ. அவ என்ன தப்பு செஞ்சாலும் பெரியவங்க நீங்க தான் மன்னிக்கனும்” என்று யாழினி சொல்லிக்கொடுத்தபடி நடித்தார்.
“அதெல்லாம் ஒரு பாதகமும் இல்ல. உங்களுக்கு பயணமெல்லாம் சௌக்கியம் தானே? சாவித்ரி இவங்களுக்கு நம்ம கெஸ்ட் ரூமை ஒதுக்கிக் கொடு” என்றதும், அவரும் வந்தரிடம் நலம் விசாரித்துக்கொண்டே போய் அறையைக் காண்பித்தார்.
நல்ல விசாலமான படுக்கைகள் கொண்ட, சூர்ய வெளிச்சம் தாராளமாய் உலா வரும் சாளரங்கள் கொண்ட அறை அது.
அவர் சுலேக்காவிற்கு காபி தயாரிக்கச் சென்றதும், அறைக்குள் நுழைந்த யாழினியை கட்டியணைத்துக்கொண்ட சுலேக்கா, “உண்மையாவே இளைச்சிப் போயிட்ட யாழினி. ரொம்ப வாந்தி எடுக்கறியா? உன் அம்மாவுக்கும் நீ பொறக்கற வரை இப்படி தான் இருந்தது. நான் உனக்காக என்னல்லாம் கொண்டு வந்திருக்கேன் தெரியுமா? சிறுதானிய உருண்டைங்க, மாம்பழ வடகம், புளிப்பு மிட்டாய், மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய்னு எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கேன்” என்று தனது பெட்டியைத் திறந்து கடைபரப்பிய போது சரியாக அவ்வறைக்குள் நுழைந்தார் ஜெயந்தி.
“வாங்கிக்கோ யாழினி. உன் அம்மா வைரமும் தங்கமுமா இல்ல உனக்கு சீரு கொண்டு வந்திருக்காங்க? வாங்கிக்கோ. ச்சீ! வெட்கமே இல்லாம இதை எடுத்துட்டு வந்திருக்கீங்களே?” என்று அவமரியாதை செய்ததும், யாழினி ஆத்திரத்தில் திருப்பி பேசினாள்.
“இதெல்லாம் என் அம்மா எனக்காக கொண்டு வந்தது. அதை ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் என் பிரச்சனை. இதுல உங்களுக்கென்னங்க வந்தது? மூக்கை இஷ்டத்துக்கு நுழைக்கிறீங்க. முதல்ல விருந்தாளிங்கக்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு கத்துக்கோங்க. அடுத்தவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி பேசுறது தான் உங்க விருந்தோம்பலா? தயவுசெஞ்சு என்னையும் என் அம்மாவையும் தனியா விடுங்க” என்று கைக்கூப்பினாள்.
“ரொம்பத் தான் பண்றா” என்றபடியே அவ்வறையை விட்டு வெளியேறினார் ஜெயந்தி.
அவர் சென்றதும் தனது அன்னையைப் பற்றி விசாரித்த யாழினி, சாவித்ரி தந்த காபியை அவருக்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டு தனதறைக்குச் சென்றாள்.
பத்ரியோ அவளைக் கண்டதும், “இவ்வளவு நாள் உன் அம்மாவைப் பார்க்காத ஏக்கத்துல தான் உன் முகம் கலையே இல்லாம இருக்கோனு நினைச்சேன். ஆனா, அவங்களை நேர்ல பார்த்த பின்னாடியும் இல்ல எதையோ பறிகொடுத்தவ கணக்கா இருக்க?” என்று வினவியதும்,
“இல்லையே. நான் நல்லா தான் இருக்கேன்.” என்று சமாளித்தாள்.
அவன் மேற்கொண்டு துருவாமல், “சரி கிளம்பு ஹாஸ்பிடல் போயிட்டு வந்திரலாம்.” என்றான்.
“அம்மா வந்திருக்க இந்த நேரத்துலயா?” என்றவள் தயங்கவும்,
“உனக்கு மார்னிங் சிக்னஸ் இருக்குல்ல? வா சீக்கிரம் போயிட்டு வந்திரலாம்” என்றதும், சுலேக்காவிடம் சொல்லிவிட்டு அவனுடன் கிளம்பினாள்.
அவள் அவன் ஊருக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு தான் தன்னை அழைத்துச்செல்வான் என்று நினைத்திருக்க, அவனோ மதுரைக்கு அழைத்துச் சென்றான்.
பரவசமாக வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள் யாழினி.
மருத்துவமனையை அடைந்ததும் மகப்பேறு மருத்துவர் ஒருவர் அவளை சோதித்துவிட்டு, அடுத்த மாதம் ஒன்றாம் தேதி குழந்தையின் இதயத்துடிப்பு பரிசோதனைக்காக அவளை வரச்சொல்லிவிட்டு, இரும்புச்சத்து மாத்திரைகளையும், வாந்தியை மட்டுபடுத்தும் மாத்திரைகளையும் எழுதிக்கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு காரிலேறிய யாழினி, “இப்ப என்ன வீட்டுக்கு போறோமா?” என்று அலுப்பாகக் கேட்க,
இல்லையென்று தலையசைத்தவன், “என் குழந்தையை சுமக்கறதுக்காக நான் உனக்கு ஒரு பரிசு கொடுக்கப்போறேன். இன்னைக்கு ஒருநாள் உனக்கு எங்கெங்க போகனுமோ, என்னென்ன வாங்கனுமோ, என்னென்ன சாப்பிடனுமோ, எல்லாம் செய்யலாம்.” என்றான்.
அவனுக்கு சர்ப்ரைஸே செய்யத்தெரியாது, அவன் ஒரு முசுடு என்று நினைத்துக் கொண்டிருந்தவள் அவனது இந்த காதல்மன்னன் அவதாரத்தில் மலைத்துப்போய் நின்றாள்.
அன்று சேலை தீப்பற்றியபோது வலிய தன்னை வெளியே அழைத்துச்செல்லும்படி கேட்டதற்கு திண்ணமாக மறுத்தவன், இன்று இந்தளவிற்கு இறங்கி வந்திருப்பது அவளுக்கு பேரானந்தத்தை தந்தது.
“என்ன போலாமா?” என்றவன் குரலின் ஸ்ருதியை ஏற்ற, சிறுபிள்ளை போல் தலையை ஆட்டினாள் யாழினி.
உடனே கார் விஷால்டி மாலை நோக்கி விரைந்தது. அங்கு அவள் அவன் கையைக் கோர்த்துக்கொண்டு சுற்றித் திரிய, அவளை இடிப்பது போல் வந்தர்களையெல்லாம் வலக்கை மூலம் தள்ளிக்கொண்டு நடந்தான் பத்ரி. அவனின் இந்த பரிவைக்கண்டு அவன் தோள் மேல் சாய்ந்துகொண்டாள் மாது.
அங்கிருந்த திரையரங்கிற்குள் அவனோடு இணைந்து ‘தலைவன் தலைவி’ படம் பார்த்தவள், அவன் திரையைக்காண, தான் அவனை அடிக்கடி திரும்பிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
சிறிதுநேரத்தில் அவன் காலை தன் காலால் உரசினாள்.
அதில் மோகத்தீ பிடித்தவன் அவள் பக்கம் சாய்ந்து, “என்னை தூண்டாதடி. பப்ளிக் ப்ளேஸ். முடியல” என்று பரிதாபமாக சொன்னான்.
வாயைப்பொத்தி சிரித்தவள் போனால்போகிறதென பாவம் பார்த்துவிட்டாள்.
இடைவேளையின் போது பாப்கார்ன், தேநீர், நாச்சோஸ், சமோசா என்று அவளுக்கு வேண்டியதை கேட்டுக்கேட்டு வாங்கிக் கொடுத்தவன் அவளை சாப்பிட வைத்து அழகு பார்த்தான்.
படம் முடிந்து வெளியே வரும்போது அவளுக்கு மாலில் எதுவும் வாங்க விருப்பமில்லையென்றாலும், ஒன்றிரண்டு உடைகளை எடுத்துக்கொண்டு உடைமாற்றும் அறைக்குச் சென்றாள்.
அவளுக்காக வெளியில் காத்திருந்தவன் அவள் மார்பிலிருந்து தொடையளவேயான கவுன் ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டு வாயைப் பிளந்தான்.
அவன் தன்னை நெருங்குவதற்குள் உள்ளே நுழைந்தவள் அடுத்து கழுத்திறங்கிய வெள்ளை பனியன், டெனிம் சட்டை, டெனிம் ஷார்ட்ஸென அணிந்து வந்து அவன் தோளில் தட்ட, முதலில் யாரோ என்று நினைத்து திரும்பியவன் அது தனது மனைவி என்ற பிரக்ஞை அடைந்தபோது, எல்லா விதமான ஆடைகளுக்கும் அவளின் முகம் பொருந்திப்போவதை நினைத்து பிரமித்தான்.
அவள் அந்த உடையை கழற்ற உள்ளே நுழைந்தபோது தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தானும் உடன் நுழைந்து கொண்டவன், அவள் தனது சட்டையைக் கழற்றியதும் தான் தாமதம் இதழை தன்வசப்படுத்தினான்.
அவன் விரல்கள் அவளை கணினியாக்கி இஷ்டத்திற்கு அவளின் வசீகர அங்கங்களையெல்லாம் தொட்டும் அழுத்தியும் மீள, இன்பச்சுழலுக்குள் சுழற்றியடிக்கப்பட்டாள் யாழினி.
அவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்து பால் ஐஸாய் அவளை வருடி உறிஞ்சியபோதோ அன்னார்ந்து கண்கள் செருகினாள்.
இருவரின் தாபங்களும் நிமிடத்துளிகளை சக்கரவாகமாய் விழுங்கிக்கொண்டே செல்ல வெளியே காத்திருந்த பெண் ஒருவர் சலித்து கதவை ஓங்கித் தட்டினார்.
இருவரும் பிரிந்து நின்று மூச்சு வாங்கினர்.
பத்ரி வெளியே, “ஒரு நிமிசம்” என்று குரல் கொடுத்தவன், அவரின் பொறுமையை மேற்கொண்டு சோதிக்காமல் யாழினியுடன் வெளியே வந்தான்.
அப்பெண் அரண்டு நிற்க, வழிசலாக சிரித்தபடியே யாழினியை அழைத்துச்சென்றான்.
அவளுக்கோ முகத்தில் ஒரு டன் வெட்கம்.
அங்கிருந்து வெளியேறியதும் நல்லதொரு உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுவிட்டு இருவரும் வீட்டிற்கு திரும்ப, யாழினி அவன் சற்றுமுன் வாங்கித் தந்த மல்லிகையை மூக்கில் வைத்து முகர்ந்துகொண்டே வந்தாள்.
அவனுக்கும் காரினுள் பரவிய மணம் ஏதோ செய்தது. அடிக்கடி காரை ஓரமாக நிறுத்தி அவளின் இதழை பசுவின் காம்பாக்கி தன் இதழை கன்றுக்குட்டியாக்கினான்.
யாழினியும் சளைக்கவில்லை. அவனின் ஒவ்வொரு விருப்பத்திற்கும் இசைந்தாள். அவனால் அவள் அன்றைய நாள் சொர்க்கத்திற்கும் பூமிக்கும் அலைமோதினாள்.
அப்போது அவளின் உதடுகள் மனப்பூர்வமாக, “ஐ லவ் யூ மாமா” என்று சொல்லிக்கொண்டன.
அன்று மாலை யாழினி வீட்டிற்கு திரும்பியதும் வெளியே அழகுற வெட்டப்பட்ட புல் தரையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த சுலேக்காவைக் கண்டு, அவருடன் இணைந்துகொண்டாள்.
அவள் தன் மூளைக்குள் புகுந்து அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும் ஒரு சந்தேகத்தை அவரிடம் பகிர்ந்தாள். அது காதம்பரி பற்றியது.
எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் அவளை குற்றம் சாட்டுவது தனக்கே வினையாக முடிந்துவிடும் என்பதால் ஆதாரம் சேகரிக்க சுலேக்காவின் உதவியை நாடினாள்.
அவரிடம் காதம்பரி மீது தனக்குள்ள சந்தேகத்தைச் சொல்லி அவள் அறையை ஒருமுறை சோதனையிடும்படி அவள் தெரிவிக்க, தனக்கு அது கை வந்த கலையென்பதால் உடனே ஒத்துக்கொண்டார் சுலேக்கா.
அன்றிரவு காதம்பரி, கவிதாம்பரி அறைக்குச் சென்றவர், “எனக்கு புது இடங்கறனால இன்னைக்கு தனியா தூங்க ஒரு மாதிரி இருக்குமா. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் உங்கக்கூட தூங்கட்டுமா?” என்று கேட்டதும், அவர் தங்களின் மனதிற்கு நெருக்கமான யாழினி அக்காவின் தாயார் என்பதால் உடனே சம்மதித்தனர் காதும், கவியும்.
கவிதாம்பரி அவரிடம், “ஆமா யாழினிக்கா ஏன் பெரியம்மா டின்னர் சாப்பிடும்போது நடுநடுவுல உங்களை கிழவினு கூப்பிட்டு நாக்கை கடிச்சாங்க?” என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டதும், சுலேக்கா சாதூர்யமாய் அவளை சமாளித்தார்.
“அது வந்து அவ எப்பவுமே என்னை தாய் கிழவினு தான் கூப்பிடுவா. அதுவே உங்க முன்னாடியும் வாயில வந்ததும் அப்படி பண்ணியிருப்பா” என்றதும், இரட்டையர் சிரித்தனர்.
அவர்களோடு ஒரு சிநேகத்தை வளர்த்துக்கொண்டு அவ்வறையில் தங்கியவருக்கு, அவர்களின் அறையை சோதனையிட ஒரு மணிநேரம் போதுமானதாக இருந்தது.
ஆனால், அதன்பின் அவர் செய்த ஒரு வேலை…
யாழினி தனது கணவனை அணைத்துக்கொண்டு தூங்கும்போது, “திருடன்! திருடன்!” என்று சத்தம் கேட்க, தன் கணவனுடனே படுக்கையிலிருந்து எழுந்து ஓடிவந்துப் பார்த்தாள்.
அங்கு தலை குனிந்தபடி நின்றிருந்தது சுலேக்கா.
“என்னாச்சு?” என்றவள் விசாரிக்க,
பார்வதி, “நான் சொல்றேன்” என்று முன்னே வந்தவர், “உன் அருமை அம்மா எல்லாரும் தூங்குன நேரமா பார்த்து பூஜை ரூம்ல இருந்த தங்க குத்துவிளக்கை திருட முயற்சி பண்ணியிருக்காங்க.” என்றதும்,
“அப்படியா?” என்பது போல் பார்த்தாள் யாழினி.
சுலேக்கா குனிந்த தலை நிமிரவில்லை.
“இவங்களே இவ்வளவு பெரிய திருடியா இருந்தா உன்னை என்ன லட்சணத்துல வளர்த்திருப்பாங்களோ? எனக்கு அந்த பரம்பரை நகைகளை திருடினது நீதானோனு சந்தேகமா இருக்கு. இங்கப்பாரு, உனக்கு சேர வேண்டியதை நீயே ஒளிச்சு வைக்க அவசியமில்ல.” என்று தன் மகன் சஷ்டி வீட்டை விட்டுப்போன கோபத்தையும் அவள் மேல் காண்பிக்க,
“நான் எதையும் எடுக்கல. என் மேல வீண் பழி போடாதீங்க.” என்றாள் யாழினி.
ரத்னவேல் பாண்டியனோ கடுமையாகப் பேசினார்.
“போதும் நிறுத்துங்க! இந்த வீட்டுல திருடற எல்லாருக்கும் ஒரே தண்டனை தான், வீட்டைவிட்டு வெளியேறுறது. இந்த வீட்டு சம்பந்தியா போயிட்டீங்களேனு இதை இத்தோட விடறேன். இல்ல பஞ்சாயத்துல நிறுத்தி பதில் சொல்ல வச்சிருப்பேன். நாளைக்கு காலைல நீங்க வீட்டைவிட்டு கிளம்பலாம். அதுவரைக்கும் நீங்க இங்க தங்கறது ஸ்டோர் ரூமா இருக்கட்டும்” என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
யாழினிக்கு தான் மனம் தாளவே இல்லை.
அனைவரும் அதிர்ச்சியோடு கலைந்து சென்றபின் ஸ்டோர் ரூமிற்குச் சென்று, என்ன நடந்தது? என்று தாங்கலாய் விசாரித்தாள்.
அவர் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பரம்பரை நகைகளை ஒரு துணியில் கட்டி பரிசு போல் அவளிடம் ஒப்படைத்தார்.
அதைப் பார்த்ததும் அளப்பரிய சந்தோசத்தில் மிதந்த யாழினி சற்று நேரத்தில் ராட்டினத்திலிருந்து இறங்கியவள் போலானாள்.
அப்படியானால் காதம்பரி தான் இதனை எடுத்தாளா? ஆனால், எதற்காக? என்று குழம்பினாள்.
சுலேக்காவோ பாவமாகப் பேசினார்.
“இதை உன்கிட்ட கொடுக்கத்தான் கீழ வந்தேன் யாழினி. ஆனா அந்த பார்வதி என்னை பார்த்துட்டா. அதான் பயந்து பூஜை ரூமுக்குள்ள நுழையப்போய்.. என்னை குத்துவிளக்கு திருட வந்தவன்னு நினைச்சிட்டா” என்று வருந்தினார்.
யாழினிக்குமே தன்னால் தானே அவருக்கு இந்த அவப்பெயர் என்று உறுத்தலாக இருந்தது.
அச்சமயம் தனது இன்னொரு கண்டுபிடிப்பை காட்டினார் சுலேக்கா.
அது ஒரு ஓவியம். அதுவும் ஒரு ஆடவனுடையது. அவன் முகத்தை வரைந்து இதய குறிக்குள் அடைத்திருந்தாள் காதம்பரி. யாரிவன் என்று குழம்பினாள் யாழினி.
அவள் தனது அறைக்கு வந்து வெகுநேரமாகியும் அதைப்பற்றியே யோசித்திருக்க, வாஷ்ரூம் சென்று திரும்பிய பத்ரி, “இருந்தாலும் உன் அம்மா செஞ்சது தப்பு தான்.” என்றான்.
“என் அம்மா எந்த தப்பும் செய்ய மாட்டாங்க.” என்றவள் துடுக்காகச் சொல்ல,
“இப்ப கையும் களவுமா மாட்டினது உன் அம்மா தானே? ச்சே! யாராவது பொண்ணை கட்டிக் கொடுத்த வீட்டிலேயே திருடுவாங்களா? சுயக்கட்டுப்பாடே இல்லாம. இங்கப்பாரு செல்லம், உன் அம்மா வீட்டு சைடு எல்லாரும் ஒரே திருடங்க. அதனால நீ அப்பா வீட்டு சைடு ரத்தமா மட்டும் வா” என்றான் அவளின் வயிற்றை ஆசையாக தடவிக் கொடுத்து.
“ஆமா அப்ப தான் ஜாதிக்கு கொடி பிடிக்க வசதியா இருக்கும்” என்று முகத்தை நொடித்தாள் யாழினி.
அவன் அதை காதில் வாங்காதவனாக அவளின் மணிவயிற்றில் முத்தம் பதித்தான்.
சுலேக்காவை நினைத்து வெகுநேரம் விழித்திருந்த யாழினி அசந்து கண்ணுறங்கியபோது அவசரமாக பத்ரியின் அறைக்கதவைக் தட்டினார் ரத்னவேல் பாண்டியன்.
தொடரும்…
இதுவொரு போட்டிக்கதை என்பதால் உங்க கமெண்ட் தான் என்னோட வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் தங்கோம்ஸ். நிறைய பேருக்கிட்ட என் கதையை கொண்டு போய் சேர்க்கும். நீங்க பேஸ்புக்லயும் கமெண்ட்ஸ், ரிவீவ்ஸ் கொடுக்கலாம். கொஞ்சம் பார்த்து பண்ணுங்க தங்கோம்ஸ்;)
