ஸ்னேகாவின் கோபம்

 

 

 

சங்கர் ரொம்ப கோபமாக அசோசியேஷன் தலைவரை பார்ப்பதற்காக போனாரு.

ஷங்கரை பார்த்ததும் அவரு அவாய்ட் பண்ற விதமா,
“இங்க பாருங்க சங்கர் சார், நான் வெளியே கிளம்பிட்டு இருக்கேன். எதுவா இருந்தாலும் சண்டே மீட்டிங்ல பேசிக்கங்க”ன்னு அவர் ஒரே வார்த்தையா சொல்ல,

“நான் உங்ககிட்ட பேசவே இல்ல. அதுக்குள்ளே நீங்க இப்படி என்ன அவாய்ட் பண்றீங்களா?…
நானும் இந்த அசோசியேஷன்ல தான் இருக்கேன். அது என்ன உங்களுக்கு மட்டும் ஒரு நியாயம், எனக்குன்னு வந்தா எல்லாரும் ஓடுறீங்க?…

நான் கம்ப்ளைன்ட் வேற யார் கிட்ட சொல்ல முடியும்?..
நீங்கதானே தலைவரு…”

இப்படி பயங்கர கோபமாக பேச,

“இங்க பாருங்க சங்கர், நீங்க ஒரு தடவை பேசி முடிச்சிட்டா பரவாயில்லை.

உங்களுக்கு ஏற்கனவே ஹை பிரஷர் இருக்கு. எதையும் காதில் வாங்க மாட்டீங்க…

நானும் என்ன பண்றது?..
நீங்க பண்ற கம்ப்ளைன்ட் நான் என்னன்னு கேட்டு, ரெண்டு பக்கமும் விசாரிக்கணும். ஆனா நீங்க உங்க பக்கம் மட்டும் தான் விசாரிக்க வைப்பீங்க. உங்களுக்கு ஆப்போசிட்டா யார் இருக்காங்களோ அவங்க பேச விடாம பிரச்சனையை பெருசாக்கிடுவீங்க…

இன்னைக்கு பேச எனக்கு தெம்பு இல்ல. ஏற்கனவே நிறைய வேலை இருக்கு. அது மட்டும் இல்லாம ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கு. அது எல்லாத்தையும் நான் சரி பண்ணனும். கம்ப்ளைன்ட் நோட்டுல இருக்கிற எல்லாத்தையுமே நான் செக் பண்ணி அதுக்கு ஆக்ஷன் எடுக்கணும். அது மட்டும் இல்லாம எனக்கும் பர்சனல் வொர்க் இருக்கும் சார்.

நீங்க யார்கிட்டயாவது வம்பு இழுத்துட்டு வருவீங்க. அதுக்கு நாங்க பொறுப்பாக முடியுமா?..?”

இப்படி அவர் டைரக்டாகவே எல்லா விஷயத்தையும் சொன்னதும், சங்கருக்கு பயங்கர கோபம் வந்தது.

“எல்லாரையும் நான் பார்த்துக்கிறேன். என்னோட எதிர்த்த வீட்டுக்காரன் குடிச்சிட்டு ஒரு பொம்பளையோட கூத்தடிக்கிறான். அதை சொல்ல வந்தா அது காதில் கூட வாங்காம இப்படி என்னை அனுப்புறீங்க.

ஞாயிற்றுக்கிழமை வரட்டும். அன்னைக்கு நான் பேசிக்கிறேன். அன்னைக்கு வந்து சங்கர், சங்கரா பேச மாட்டான். பாத்துக்கங்க. முதல்ல உங்களை இந்த தலைவர் பதவியில் இருந்து தூக்கிட்டு, அதுக்கப்புறம் நான் பாத்துக்குறேன்…”

ன்னு அவர் கோபமாக அங்கிருந்து போக,

“இந்த ஆளுக்கு வேற வேலை இல்ல. அவன் வீட்டுக்குள்ள அவன் என்ன வேணாலும் பண்ணிட்டு போறான். இவரோட பொண்ணு கூட தினமும் வீட்டு வாசல் முன்னாடி கோலம் என்ற பெயரில் மண்ணை போட்டு வைக்குது. இதனால பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் கம்ப்ளைன்ட் பண்றாங்க. நடக்கும் போது ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கு. அதை மிதிச்சு மிதிச்சு நடந்து எங்களுடைய வீட்டுக்குள்ளேயுமே அந்த கலர் கோலப்பொடியோட தான் நாங்க வருகிறோம். அவங்கள சொல்லி நிப்பாட்ட சொல்லுங்கன்னு நிறைய பேர் கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க.

மாடர்னா இருக்கிற இப்படி ஒரு அபார்ட்மெண்ட்ல இவங்க மட்டும் பண்ற கூத்து எல்லாத்தையுமே நம்ம சொன்னோம்னா இவர் கேட்பாரா?..

அதையும் மீறி சொன்னா பயங்கரமா வாக்குவாதத்துக்கு வந்துருவாரு. அதை தாங்கிக்க கூட முடியாது. என்ன பேசணும்னு காதுல கூட வாங்காம சண்டக்கோழி மாதிரி வந்து ஹை பிரஷர்ல கத்திக்கிட்டு இருப்பாரு. அந்த பையன் என்ன செஞ்சாலும் அமைதியா அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்கான். யாரு தான் குடிக்கல?..

இந்த ஆளை போக சொல்லு…
ஆளும் மூஞ்சியும்…”

இப்படி அந்த அசோசியேஷன் தலைவரும் நினைச்சுக்கிட்டு அவர் வேலையை பார்க்க,

இங்கே சங்கருக்கு இன்னும் பயங்கர கோபம் வந்தது. அதனால அவரு அதை கண்ட்ரோல் பண்ணிக்க முடியாம வெளியில கிளம்பிட்டாரு.

இப்படி இருக்கிற நேரத்துல, விக்ரம் சினேகாவை பயங்கரமாக திட்ட ஆரம்பிச்சான்.

“நீ என்ன நினைச்சுட்டு இருக்க?..
நீ எல்லாம் ஒரு பொண்ணா?..
ரொம்ப சீப்பா நடந்துக்குற. ஒழுங்கு மரியாதையா வெளியில போயிடு. நான் உன்னை வீட்டுக்கு வான்னு சொல்லி கூப்பிட்டேனா?..

ரொம்ப கேவலமா நடந்துக்குற. நீ வரும்போது என்ன கோலத்தில் வந்தன்னு தெரியுமா?..

அந்த எதிர்த்த வீட்டு பொண்ணு மட்டும் இல்லைன்னு வை, ரொம்ப கஷ்டமா போயிருக்கும். இதுல ஹீல்ஸ் போட்டு குப்புற விழுந்து…

நீ போட்டு இருக்க டிரஸுக்கும், நீ கெடந்த கிடப்புக்கும் அவ்வளவு கேவலமா இருந்துச்சு. நான் உன்ன திரும்பி கூட பாக்கலையே…

என்னை மூணு மாசம் போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க?..”

இப்படி அவன் பயங்கரமா கோபத்தில் திட்டும் போது,

“என்ன சொன்ன?..
எதிர்த்த வீட்டு பொண்ணா?..

ஓ… எனக்கு இப்போதான் புரியுது. சார் என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு இப்போதான் புரியுது.

அந்த பேக் மாதிரி ஒருத்தி வந்தாலே அவளை பத்தி தான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கியா?..

சாருக்கு என்னை மாதிரி ஒரு செக்ஸியான, மாடர்ன் ஆன பொண்ணெல்லாம் பிடிக்காது.

அந்த பட்டிக்காடு தான் உனக்கு பிடிக்குதா?..

அதனாலதான் அவன் அப்பன் கிட்ட என்ன பேச கூடாதுன்னு ஓவரா பேசிட்டு இருந்தியா?..

இன்னைக்கு பாரு அவளை என்ன பண்றேன்னு…”

இப்படி சொல்லிக்கிட்டு வேகமாக வெளியில போக,

இத பார்த்த விக்ரம் அவள் கைய புடிச்சு மறுபடியும் வீட்டுக்குள்ள இழுத்து போட்டு கதவை அடைத்துக் கொண்டான்.

“எதுக்கு நீ இப்படி தப்பு தப்பா பேசிட்டு இருக்க?..
அவங்க வீட்டுக்கு சண்டைக்கு வர போய்கிட்டு இருக்கேன். நீ யாரடி முதல்ல?..

அக்கம் பக்கம் வீட்ல இருக்கிறவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க?..

அந்த பொண்ணு ஒரு அப்பாவி. உனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு. நீ அந்த பொண்ணு கூட சண்டை போட வேற போவியா?..

தயவு செஞ்சு எந்த பிரச்சனையும் பண்ணாம வெளியில போயிடு…”

இப்படி சொல்லும் போது,

“அவ மேல உனக்கு ஒரு கண்ணு இருக்குன்னு நினைக்கிறேன். அதனால தான் பயப்படுற.

அது உண்மையா இல்லையா என்று நான் கண்டுபிடிக்கிறேன். ஏய்… அரைவெட்டு வெளியில வாடி…”

இப்படி சொல்லிக்கிட்டு அவள் கதவை திறக்க போகும்போது, விக்ரம் அவனுடைய கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாம அவள் கன்னத்தில் “பளார்” என்று ஒரு அரை விட்டான்.

அவள் சுருண்டு கீழே விழ,

“உனக்கு அவ்வளவு தான் லிமிட். என்னோட லைப்ல நீ வந்தா கொன்னுடுவேன்.

நானும் பாத்துட்டே இருக்கேன். ரொம்ப சீப்பா பிஹேவ் பண்ற.

செக்ஸ்ன்ற பெயர்ல நீ ஆட்டம் போட்டுட்டு இருப்ப. வர்றவன் போறவன் எல்லாம் உன்னை பார்த்து மயங்கிடுவான் என்று நினைப்பா?..

எல்லாருக்குமே அந்த மாதிரி ஆசை இருக்காது. எனக்கு உன் மேல கொஞ்சம் கூட கிடையாது.

உன்னை பார்க்கும் போது, நீ பேசுற பேச்சு, இதெல்லாம் கேட்கும் போது, இப்படி ஒரு பொண்ணு வாழ்க்கையில் சந்திக்க கூடாது என்று தான் தோணுது.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீ என்னை பார்த்த. அதனால நீ என்கிட்ட இந்த மாதிரி நடந்து கொள்கிறாய்.

இதுக்கு முன்னாடி எத்தனை பேர் கிட்ட இப்படி நடந்துக்கிட்ட?..

அப்படித்தான் எனக்கு கேட்க தோணுது உன்ன பாத்தா.

ரவுடி கூட இப்படி நடந்துக்க மாட்டான். அவ்வளவு கேவலமா நடந்துக்குற.

அப்படி ஒரு ஆசை இருந்தா கல்யாணம் பண்ணி தொலைய வேண்டியது தானே. எவனையாவது இளிச்சவாயன் பாத்து…”

இப்படி சொன்னதுமே, அவள் பயங்கர கோபத்தோடு அவளோட ஹேண்ட் பேக் எடுத்துக்கிட்டு,

“என்னையே நீ இவ்வளவு கேவலமா, மட்டமா பேசிட்டல்ல… அனுபவிப்படா. கண்டிப்பா நீ அனுபவிப்ப.

இனிமேல் இந்த சினேகா யாருன்னு உனக்கு நான் புரிய வைக்காம விட மாட்டேன்…”

இப்படி சொல்லிக்கிட்டு அவள் கோபமாக அவளுடைய ஹேண்ட் பேக்யும் அவளுடைய ஹீல்ஸையும் கையில் எடுத்துக்கிட்டு அங்கிருந்து பயங்கர கோபமாக கிளம்பினாள்.

அதே நேரத்தில், நிலாவுடைய ஆபீஸ்ல அவளுடைய டீமுக்கு இப்ப மீட்டிங் நடந்துட்டு இருந்துச்சு.

அவள் மீட்டிங்கு போயிருக்க, அவள் கூட வேலை பாக்குற மத்த டீம் மேட்ஸ்,

“ஹேய் அர்ஜுன்…

அந்த பட்டிக்காடு இருக்குல்ல, அதுக்கு மேல ஏதோ ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கிற மாதிரி தெரியுது. உனக்கு அது மேல ஏதாவது இன்ட்ரஸ்ட் இருக்கா?..

நீ எதுக்கு அவள் கிட்ட போய் பேசிக்கிட்டே இருக்கியே?..

நீ பேச வரும்போது எல்லாம் அவள் பயங்கரமாக சிரிக்கிறா, வெட்கப்படுறா.

உங்களுக்குள்ள என்ன கதை?..

எங்களுக்கு தெரியாம ஏதாவது ஓடுதா என்ன?..

அப்படியே ஓடினாலும் அவளை மாதிரி ஒரு ஆளா உனக்கு கிடைக்கணும்?..

இந்த ஆபீஸ்ல ரொம்ப ஸ்மார்ட்டான ஆட்கள்ல நீயும் ஒருத்தன். பின்னாடி எத்தனை பேர் சுத்திட்டு இருக்காங்க. நீ என்னடா இந்த பட்டிக்காடு கூட பேசிட்டு இருக்க?..”

இப்படி சொல்லும் போது,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?..

என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?..

அப்படி எல்லாம் எதுவும் இல்லை. அவள் எல்லாம் ஒரு ஆளுன்னு…

எனக்கு ஓசிய வேலை பாக்குறதுக்கு ஒருத்தி வேணுமில்ல. அதற்காக தான் அவளை வச்சிருக்கேன்.

டவுட் என்ற பெயரில் அவள் கிட்ட போனா போதும், என்னென்ன விஷயம் இருக்கு எல்லாத்தையும் எனக்கு அவளே செஞ்சு கொடுத்துடுவா.

இங்க நான் சொல்லப்போனா, ஓசில தான் சம்பளம் வாங்கிட்டு இருக்கேன். 90% வேலையா அவ தான் பாத்துட்டு இருக்கா.

அவ்வளவுதான். எங்க ரெண்டு பேருக்கும் வேற எதுவும் இல்ல.

நீங்க யாரும் அவகிட்ட பேசுறது இல்ல. நான் மட்டும்தான் பேசுறேன்.

அதனால நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்.

நான் நினைச்சுட்டு இருக்கா…

அந்த மூஞ்சி எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல கூட வைக்க மாட்டேன்.

என்னோட வீட்டு வேலைக்காரியா கூட நினைச்சு பார்க்க மாட்டேன்.

எல்லார்கிட்டயும் அவன் பேசி சிரிச்சிட்டு இருக்க. அந்த நேரத்துல அப்படியா?..

ஆனா அந்த பட்டிக்காடுக்கு உன் மேல இன்ட்ரஸ்ட் இருக்கு தெரியுமா?..

அவ ஏதோ எழுதி எழுதி அவ டேபிளுக்கு கீழே ஒளிச்சு வைப்பா.

இரு… அதுல என்ன இருக்குன்னு பாக்கலாம்.

உன்ன பத்தி ஏதாவது இருக்கலாம்ல. ஏன்னா அவள் எழுதும்போது உன்னை பார்த்து பார்த்து எழுதுவா.

ஆனா அது ஒரு தடவை கூட வீட்டுக்கு எடுத்துட்டு போனது இல்ல.

இரு… நான் என்ன இருக்குன்னு பாக்குறேன்…”

ன்னு சொல்லிட்டு, அங்க இருக்கிற ஒரு பொண்ணு அவளுடைய டேபிளுக்கு கீழே இருக்கிற கபோர்டு திறந்து பார்க்கும் போது,

ஒரு டைரிக்குள்ள சின்ன சின்ன ஸ்டிக் நோட் மாதிரி எழுதி எழுதி, அந்தந்த டேட்டுக்கு பக்கத்துல அதை ஒட்டி வைக்கிறது அவளுடைய வழக்கம்.

அப்படி அவள் இந்த ஆபீஸுக்கு வந்ததுக்கு அப்புறம், கொஞ்ச நாள் அர்ஜுன் எப்படி அவளிடம் பேச ஆரம்பிச்சான் என்ற விஷயத்திலிருந்து,

அவள் மனசுக்குள்ள என்னென்ன இருக்கு, அவள் என்ன மாதிரியான உணர்வுகளை உணர்ந்தாள்,

இப்படிப்பட்ட விஷயங்களை ஒரு கவிதை போல எழுதி அவள் ஒட்டி வைத்திருக்க,

ஆனால் இது எல்லாத்தையும் ஒரு திருட்டு கும்பல், அவளுக்கு தெரியாம, அவளுடைய பர்மிஷன் இல்லாம, அவளை கிண்டல் பண்ற விதமா ஒவ்வொன்னா எடுத்து அதை படிச்சு படிச்சு சிரிச்சுட்டு இருந்தாங்க.

இது எதுவும் தெரியாம, மீட்டிங்க்ல உக்காந்து நோட்ஸ் எடுத்துட்டு இருந்தா பாவமாக…

இனி வெளியில் வந்தா தான் அவளுக்கு என்ன மாதிரியான சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்குன்னு தெரியல.

தன்னோட மனசுக்குள்ள மறைத்து வைத்திருந்த ஒருத்தனை பத்தின விஷயத்தை, அவனே எப்படி எடுத்துக்கிட்டான் என்பதை நாளைக்கு பாக்கலாம்…

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page