11. அவளை மறக்கத்தான்

பாகம் 11

R.A.Puram. சென்னை. 

 

எங்கோ தெரு நாய்களின் காதைக் கிழிக்கிற சத்தம் கேட்டு  தூக்கம் கலைந்தது.

ஜெனி  திடுக்கிட்டு விழித்து பார்த்தாள்.

கழுத்து பகுதி நசநசவென்று இருந்தது. 

வேர்த்து போய் இருந்தது.

 

‘ஏ.ஸி. போடவில்லையா’…ரிமோட் எடுத்து ஏஸியை ஆன் செய்தாள்.

 

சில்லென்ற காற்று வீசியதும்,அவளுக்கு  கொஞ்சம் தேவல போல இருந்தது.

அந்த குளிர்ச்சியில் தரையில் இவளுக்கு துணையாக  படுத்து இருந்த 

ராஜம்மா கண்ணை விழித்து, படக்கென்று எழுந்துக் கொண்டார்.

“பாப்பா.. எழுந்துட்டியா.’

‘ஏன் ஏஸி போடல’……..?

‘உனக்கு காய்ச்சலில் குளிரில் நடுங்கிட்டு இருந்த டாக்டர் தம்பி  ஏஸி வேண்டாம் என்று சொல்லி விட்டு  கதவை திறக்கச் சொன்னார்”…..

“எதாவது குடிக்க கொண்டு வர’…

“தாங்க.ராஜம்மா ரொம்ப பசிக்குது.”

“மணி   மூன்று ஆகிவிட்டது. ஆர்லிக்ஸ் கரைச்சி எடுத்து  விட்டு  வருகிறேன்.”

ஆர்லிக்ஸ் சூடா குடித்ததும், பசி அடங்கி மறுபடியும் படுத்துக் கொண்டாள்.

“ ஏன் ராஜம்மா விடாமல் நாய்கள்  குரைத்துக்  கொண்டியிருக்கின்றன.”

“அச்சச்சோ….ஏஸியை  அணைத்து விட்டு  கதவை திறந்து வைத்தேன். இதோ மூடி விடுகிறேன்  “ என்று அறை கதவையும், பால்கனி கதவையும்  சாத்தினாள்.

 

“இப்போ, நாய் குரைப்பு சத்தம் கேட்காது. பாப்பா நிம்மதியா தூங்கு.”

 

ஞாபகம் வந்தவராய், “பாப்பா ஒரு நிமிஷம் “என்று தர்மாமீட்டரை கொண்டு வந்து. வாயை திறக்கச் சொன்னாள்

“என்ன இந்த நேரத்தில”…?

“டாக்டர் தம்பி   பார்க்கச் சொன்னது.”

வாயை திறந்து தர்மாமீட்டரை வைத்தாள்.

“நல்லவேளை  ஜூரம் இல்லை. காலையில் டாக்டர் தம்பி வந்துவிடுவார்.”

 

போனை எடுத்தாள்.

அதுவும்  அணைத்து  இருந்தது.

ஆன் செய்தாள்.

 

அமலாவிடம் ரீச்டு என்று மெஸேஜ் வந்து இருந்தது. ஏன் அவள் போன் செய்ய வில்லை என்ற  நினைப்பும் கூடவே வந்தது. 

 

சரியாக தூங்க முடியாமல் விடிந்தது.

 

ராஜம்மா பல்விளக்க உதவி செய்தார். 

“ஒரே நாளில் உடம்பு அலண்டு  விட்டது.”

 

“ஆமாம் பாப்பா  நேற்று முழுகக  சாப்பிடவில்லை”.

 

மணி 6 அடித்ததும், தினேஷ் வந்து விட்டான்.

 

அண்ணனும், அப்பாவும் கூடவே வந்தனர்.

 

தினேஷை பார்த்ததும் ,”ஜெனி குட் மார்னிங் டாக்டர்: என்றாள்.

 

அவனும் “குட்மார்னிங் “சொல்லிவிட்டு, “இப்ப எப்படி இருக்கீங்க ஜெனி”

 

“பெட்டர்”

“குட்”

 

முரளி தினேஷிடம் “ஐயாம் முரளி” என்று கை கொடுத்தான். 

இவனும்  “ஐயாம் தினேஷ்” என்று ,கை குலுக்கி  விட்டு அப்பாவிடம்  கை நீட்டினான்.

 

“என்ன இவ்வளவு காலையில் என்று “சுதா கேட்க,

“வணக்கம்மா என்று சொல்லி, எனக்கு ஏழு மணிக்கு அப்பாயின்மென்ட் இருக்கு. போகணும். வருவதற்கு லேட்டாகும். ‘இவருக்கு சரியாக வில்லை யென்றால். மெடிசன் மாத்தலாம் என்று நினைத்தேன்.”

சரியாகி விட்டது. ஜெனியை பார்த்து, “நீங்கள் தொடர்ந்து அந்த மெடிசனை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரேக் பண்ணக்கூடாது “ என்றான்.

 

“உங்க பீஸ்”……. என்று முரளி கேட்க,

 

“நோ தேங்க்ஸ்  . எனக்கு  கம்பெனியே பேமண்ட் கொடுத்து விடும்.”

ஜெனியை பார்த்து, “இரண்டு நாள் ரெஸ்டில்  இருங்கள். “ என்று வேறு எதுவும் பேச  வழியில்லாமல்  விடைபெற்றுக்கொண்டான்.

 

‘அப்பாடா… தப்பித்தோம். எந்த ஹாஸ்பிடல், எங்கே என்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை.’

‘கம்பெனியில் ஹார்ட்  ஸ்பெஷலிஸ்டை அனுப்பு வார்களா  என்ற கேள்வியில்லாமல் போய்விட்டது.

ஜெனியை வேறு இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டேன்.எப்படி பார்க்காமல் இருப்பது. இனி அவள் வீட்டிற்கு போகக் . கூடாது.  மாட்டிப்போம். ‘

 

பைக்கை எடுத்துக் கொண்டு  வெளியேபோகும் போது, இடிப்பது போல்  போர்ஷே கார் வர, தினேஷ் தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழ பார்த்தான்.

வாட்ச்மேன், தோட்டக்காரர்  “ஐயோ- டாக்டர் தம்பி” என்று அலறினார்கள்.

 

காரிலிருந்து பிரசாத் இறங்கி,” டேய் நான் தான் அவசரமா வர்றேன்ல. நீ

பார்த்து வர மாட்டியா “ என்று தன் மீது தப்பை வைத்துக் கொண்டு அவன் மீது பழியை போட,

தடுமாறிய தினேஷ் , நிமிர்ந்து பைக்கை நிறுத்தி  “டேய்… யா மரியாதை தெரியாதவன் நீ யாரடா…”. 

.

“ஹலோ.. மிஸ்டர் பார்த்து வர  மாட்டியா”.

 

“சொல்லிட்டே இருக்கேன்.  நீதான் மிஸ்டர் பார்த்து வரணும். யார் வருகிறார்கள் என்று தெரியாமல் காரை வேகமாக ஓட்டியது  நீ : ஒரு ஸாரி கூட கிடையாது.”

 

அதற்குள் வாட்ச்மேன்” டாக்டர், அவர் இந்த வீட்டு சின்னம்மாவின் அண்ணன் .

தயவு செய்துவிட்டு விடுங்கள்.”

 

வாட்மேனை பிரசாத் பளரென்று . அறைந்தான். “நீ யாருடா  என்னை விட்டு விட சொல்வது. ஆப்டர் ஆல் ஒரு பைக்கில் வர்ற சேல்ஸ் ரெப்பிடம் எனக்காக  பரிந்து பேசுவியா “:

வாட்ச்மேனை அடித்ததை பார்த்ததும்  தினேஷ்,  அவன் வாயிலே குத்த போனான்.  அதற்கே பிரசாத் பயந்து பின் வாங்கி விட்டான்.

அவன் வாயில் குத்தி இருந்தால் பற்கள் உடைந்து இருக்கும். அவ்வளவு பவராக வந்தது.

எச்சரித்து விட்டான். “இன்னொருமுறை .

அப்பாவிகளை அடிப்பதை பார்த்தேன் நீ இருக்க மாட்ட. “

 

அதற்குள் இங்கு நடப்பதை தெரிந்துக் கொண்டு முரளி வர, பிரசாத்திடம் “டாக்டரிடம் மன்னிப்பு கேள். மேலும், எங்கள் வீட்டில் பல வருடங்களாக வாட்ச்மேனாக இருப்பவரை அடித்தற்காக  அவரிடமும் மன்னிப்பு கேள்.” என்றதும்,

 

“என்ன மாமா. நான் யார் என்று தெரியும்ல. என்னை போய் மன்னிப்பு கேட்க சொல் கிறீர்கள். தினேஷ காண்பித்து,   இவன் டாக்டரா. “

 

“பிரசாத் உனக்கு அவ்வளவு தான் மரியாதை.”

மதி வதனியும் வர, “என்ன முரளி, என்அண்ணனை  போய், மன்னிப்பு கேட்க சொல்கிறீர்கள். என் அண்ணனுக்கு   இங்கு மரியாதையே இல்லையா”… என்று விசும்ப,

“உள்ளே போ . அவன் கேட்கலானா நீயும் வெளியே போ” 

 

நிலமை விபரீதமாக போவதை உணர்ந்து, தினேஷ்  முரளியை பார்த்து, “ஸாரி ஸார்  .என்னால் உங்கள் வீட்டில் பிரச்சனை வேண்டாம். என்னிடம் இவர் ஸாரி கேட்க வேண்டியதில்லை. இந்த பெரியவரை அடித்தது தாங்காமல் தான் நானும் கொஞ்சம் டென்ஷனையிட்டேன். நான் கிளம்புகிறேன். எனக்கு நேரமாச்சு.”

என்று பைக்கை உதைத்து போய் விட்டான்.

 

“பார்த்தியா . அவர் ஜெனியை பார்க்க வந்த  டாக்டர்  . அவளை குணப்படுத்தியவர்.”

 

“என்னது இவன்  தான் ஜெனிக்கு டாக்டரா…!!!

என்னிடம் சொல்லி இருந்தால்   வெளி நாட்டு டாக்டரையே வரவழைத்து இருப்பேன். பைக்கில்  வருபவன் எல்லாம் டாக்டர்”…..என்று  ஏளனமாக  பேசி, உள்ளே வர பார்க்க முரளி தடுத்தான்.

 

“வாட்ச்மேனை அடித்தற்காக மன்னிப்பு கேள்.”

மதி அவனிடம் கண்களால் கெஞ்ச, வேறு வழியில்லாமல்,” ஐயா பெரியவரே… என்னை மன்னித்து  விடுங்கள். நானே என் கன்னத்தில்  அறைந்து கொள்கிறேன்” என்று தன்  கைகளால் தன்னைத் தானே அறைந்துக்  கொண்டான்.

வாட்மேன் பதறி ஐயா..

“வேறு என்ன செய்வது.. பெண்ணை  கொடுத்து விட்டோமே”…

“உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்” என்று முரளி சொல்லிவிட்டு போய் விட்டான்.

 

மதி தன் அண்ணனிடம், “என்ன அண்ணா எதாவது பிரச்சனை பண்ணிட்டுத்தான் இருப்பியா”..

 

‘நான் என்னம்மா செய்வது. ஜெனிக்கு 

உடம்பு சரியில்லை என்று சொன்னாய்.

நான் கட்டிக்க போற பெண்ணாச்சே  என்று   கொஞ்சம் பதட்டமா வந்தேன். அந்த இடியட் டாக்டர் குறுக்க வருவான் என்று   எனக்கு எப்படித்தெரியும்.”

“உன் மேல தானே   தப்பு. பேசாமல்

உள்ளே வந்து இருக்க வேண்டியது தானே.. இப்ப பாரு . உன்னால் எனக்கு எனக்குஅவமானம். என்னையும் வெளியே போகச் சொல்கிறார் “-

 

“என்னம்மா..   நீயும் திட்டற”

“சரி. வா.. ஜெனி மேலே இருக்கா. .போய் ஒழுங்கா பேசு அல்லது நடி எதையாவது உருப்படியா செய்.”

 

“இந்தா get well soon என்று போட்டு பொக்கே வாங்கி வைத்து  இருக்கிறேன். அதை அவளிடம் கொடு” என்று   தன் அறையில் ஒளித்து வைத்திருந்த  பொக்கேவை கொடுத்தாள்.

 

“தாங்ஸ்  மதி”  என்று அவள் கன்னத்தை தட்டி  விட்டு, தடதடவென்று மேலேறி போனான்.

 

“ஜெனிமா”….என்று  வருத்தம் தோய்ந்த குரலை வரவழைத்துக் கொண்டு அவள் அறை  கதவை தட்டாமல், உள்ளே நுழைய., அப்போது தான் உடை மாற்றுவதற்காக தன் உடையை கழற்ற போகும் சமயம், இவன் உள்ளே நுழைந்ததை பார்த்ததும்  அலறிய அலறலில்   அனைவரும் ஓடி வந்தார்கள்..

 

முரளி ., மதி, சுதா,ராஜம்மா என்று அனைவரும் ஓடிவர ராஜம் “பாப்பா என்னவாயிற்றுநீ உடை மாற்ற போவதால் நான் கதவை சாற்றி விட்டு போனேன்.” .

 

பிரசாத்தை கை காட்டி பேச நாஎழாமல், இவன் வந்த அதிர்ச்சியில அதிர்ச்சியில்தொப்பென்று கட்டிலில் 

விழுந்தாள்.

 

முரளி அவன் சட்டையை பிடித்து நானும் பார்த்துக் கொண்டே இருக்கேன் .உன் அட்டகாசம் எல்லை மீறுகிறது.

சுதா.. அவனிடம் “என்ன முரளி இது. சட்டை யெல்லாம் பிடிக்கிற விடு.”

ஒரு பெண்ணின் அறைக்குள் போவதற்கு முன் கதவை தட்ட   வேண்டும் என்ற  நாகரீகம் கூட  வா இல்லை உன் அண்ணனுக்கு” “ என்று மதியிடம் எகுற,

அவள் தன் அண்ணனை பார்த்தாள்.

 

“எனக்கு என்ன தெரியும். உடம்பு சரியில்லை என்றால்.  படுத்துக் கொண்டு இருப்பாள் என்று நினைத்தேன்.”

 

“இன்னைக்கு என்ன எல்லாம்  எனக்கு எதிராவே  நடக்குது”.

 

“நேரம். “

 

காலண்டரில்  இன்று சந்திராஷ்டமம்.என்று போட்டு இருந்தது.

 

“அதுதான் இருக்கும்.”

 

உடையை கழட்ட போகும் சமயம். அதுக்கே   இவ்வளவு அலட்டலா எ ன்று நினைத்துக் காண்டான். 

சே… நம்ம நேரம்.. இன்னும் ஒரு நிமிடம் கழித்து போய் இருக்கக் கூடாதா”என்று மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து………… முணுமுணுக்க,

 

“மதி   “அண்ணா ப்ளீஸ்… உன் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டது. நல்லவேளை அவருக்கு கேட்கல.” 

 

“முதலில் இந்த இடத்தை விட்டு கிளம்பு”.

 

“போறேன்”. கையிலிருந்த பொக்கே வை ஜெனியிடம் கொடுக்க ஆத்திரத்தில் அதை தூக்கி எறிந்தாள்.

 

“வெளியே போங்கள்” என்று கத்த, அனைவரும் அறையை.விட்டு வெளியே வந்தார்கள்.

 

கதவை அறைந்து சாத்தினாள்..

 

தினேஷ் அந்த சமயத்தில் போன் செய்ய,  அவனிடம்

“என்னால் இங்கு நிம்மதியா இருக்க முடியாது. நான்  ஆபீஸிற்கு போகிறேன்.”

“என்னது. இந்த கன்டிஷன்லயா.”

 

“வேண்டாம். உன்னால் முடியாது. மறுபடியும்  டெம்பரேச்சர் வரும். “

 

“என்னை என்ன  பண்ண சொல்ற”.

“நான் ஒரு ஐடியா சொல்றேன்:”

 

“ஆம்புலன்ஸ் அனுப்பறேன். இந்த ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகிவிடு.  நான் பார்த்துக் கொள்கிறேன். நிம்மதியா இருக்கலாம். என்ன   சொல்ற. என்னாலேயும் இனிமேல் அங்கு வர முடியாது.”

சரி என்றாள்.

 

ஆம்புலன்ஸ் வந்தது.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page