15. அவளை மறக்கத்தான்

சுத்தமல்லி கிராமம். திருநெல்வேலி.

 

எங்கோ  மாடு  ஒன்று   மா…. மா…மா….என்று ஓயாமல் தன் நிலையை  மற்றவர்களுக்கு புரிய வைக்க பிராயதனப்பட்டுக் கொண்டியிருந்தது.

 

அது தன் வயிற்றில் எழும் குரலாக அமலா உணர்ந்தாள்.

 

முன்பெல்லாம் முத்துமாமாவைப் பார்த்தால்  அவரின் ஆஜானுபான உருவமும், கரகர குரலும் பயமுறுத்தும்.

இப்பொழுது  வீல் சேரில் அமர்ந்திருக்கும் முத்துமாமாவை பார்க்கையில்  பரிதாபம் மேலிட்டது.

ஒருவரை திருமணம் செய்ய பரிதாபம் போதாதே. யாராவது ஒருவரை பரிதாப்பட்டு திருமணம் .செய்வார்களா”!!!.

 

“என்  வாழ்க்கையை எப்படி இவர்கள் முடிவு செய்கிறார்கள். இது என்ன அராஜகம்.  இது என்ன ஒரு சுயநலமா…சைக்கோ தனமா“ என்றெல்லாம் யோசித்தாள்’

 

முத்துவும், அமலாலை திருமணம் செய்துக் கொள்வோம்   என்று  கனவிலும் நினைவில்லை. சே… அந்த விபத்து நடந்து இப்படி நான் முடமாகி போய் இருக்க வேண்டாம். என் அழகுக்கும், கம்பீரத்திற்கும், அறிவிற்கும்   சிங்கப்பூர் சீமாட்டியை 

 திருமணம் செய்து இருப்பேன். ஒன்றும் இல்லாத  மாமாப் பெண் அமலாவை திருமணம் செய்ய  வேண்டியது இல்லையே.” 

இந்த நிலையிலும்   ஒரு சிறிய பெண்ணின் வாழ்க்கை பறிபோவதை நினைக்காமல், பணத்தையே நினைத்தது   என்ன ஒரு கயமைத்தனம்.

 

விசாலம், அமலா, உமாராணியிடம்,  

“இவனைப் பார்த்து பரிதாபப்பட்டு நின்னது போதும். உள்ளே போங்கள்” என்று உத்திரவு போட்டாள்.

 

உமாராணி கதறினார்.

“அமலா சின்னப் பெண் . அவளை விட்டு விடு ..இவனை பார்த்துக்க ஒருவர் வேண்டுமென்றால், நாம்  ஒரு அம்மாவைப் போல் பார்த்துக் கொள்கிறேன். அவ வாழ்க்கையை நாசமாக்கிடாத” என்று  கதறியும்  விசாலம் மனம் இரங்காமல். தன் அடியாட்களுக்கு ஜாடை காண்பித்தாள்.

அவர்கள் அவர்களை இழுத்துக் கொண்டு போய் அறையில் தள்ளினர்.

“அம்மா.. அழாதே.’

“நீ ஏண்டி எனக்கு பிறந்தே. எனக்கு நிச்சயித்த கலியாணம் நின்று போய் அப்பா,  அம்மாவை ஊரார் முன்பு தலைகுனிய வைத்தேன். தெய்வமா உங்கப்பா வந்தார். அந்த வாழ்க்கையும் எனக்கு நிலைக்கல. நான் ஒரு  துரதிஷ்டசாலி .அது தான் உன்னையும் படுத்துகின்றது.”

அம்மாவை கட்டியணைத்து அவள் அழுகையை  நிறுத்தச் செய்து , எப்படியோ தூங்க வைத்தாள்.

கதிரை  நினைத்தாள்.

“ஏண்டா இப்படி மாறி போனே. சிங்கப்பூருக்கு போனதிலிருந்து உன்னிடம் பேசாத தவிப்பும் காணாத நெஞ்சமும் எப்படி பதறியது. உன்னை கண்டவுடன் நெஞ்சுக்குள்ள மகிழ்ச்சி பந்து ஒன்று மேலேறி வந்ததே.’

 

ஒரு முறை சரக்கு பொருட்கள் வாங்க மும்பைக்குச் செல்வதாக இருந்தான்.

திருநெல்வேலியிலிருந்து சென்னை வந்து,அங்கு இரண்டு மணி நேரம் காத்திருப்புக்குப்  பின்  மும்பை ரயில் ஏறினான்.

அமலாவை  இரயில்வே ஸ்டேஷனுக்கு வரச்  சொல்லியிருந்தான்.

“உன்னை  பார்க்க இரண்டு  .மணி நேரம் இருக்கு. என்னால் வர முடியாது. நீ வாடி” என்றான்.

இவளும் அவரச அவசரமாக பிரியாணி செய்தாள்.

 

இவள் பேக் செய்வதை பார்த்து அப்பத்ததா, அம்மாவிடம்   பிரண்டு விட்டுக்கு போய் ஒன்றாக சாப்பிடுவோம்  என்று சொல்லி எடுத்துக் கொண்டு  ஒட்டமாக ஓடி   ஸ்டேஷனுக்கு போனாள்.

சென்டரலில்   அவ்வளவு கூட்டம் இருந்தும், இவர்கள் மட்டும், ஒருவரையும் கவனியாமல்,சுற்று சூழலை மறந்து ஒருவரை ஒருவர் கண் இமைக்காமல் பார்த்தபடியும் பேசியபடியும் அமர்ந்து இருந்தனர்.

 

மும்பை ரயில் வந்ததும், மட்டன் பிரியாணியை  அவனிடம் கொடுத்து விட்டு கண் கலங்க வீட்டுக்கு வந்தாள்.

 

“ஏன்மாமா.. இரண்டு மணி நேரம்  இடையில் என்னை பார்க்காமல் இருக்க முடியாதா” 

 

“இதே ஊரில் இருந்து விட்டு, உன் நினைப்புடன் எப்படி பார்க்காமல் போக முடியும்.”

இதை நினைத்தவுடன் கண்களிலிருந்து தாரை தாரையாக    கண்ணீர் வர, சத்தமில்லாமல் விசும்பினாள்.

 

‘இங்க உன் வீட்டிலேயே  அடைப்பட்டு இருக்கிறேன். என்னிடம் பேசவோ,  முகம்  பார்க்கவோ தோணலியா மாமா ‘ என்று   மனதிற்குள் அரற்றினாள்.

 

கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

 

யாரென்று தலை தூக்கி பார்க்க, உணவு எடுத்துக் கொண்டு சமையல் செய்யும் வனஜா வந்தாள்.

 

“இந்தாம்மா இரண்டு பேரும் சாப்பிடுங்க.’

“அக்கா’….  என்று அமலா கூப்பிட  என்னவென்று பார்த்தாள். 

“என்னை உங்க கூட பிறந்த தங்கச்சி மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். .எனக்கு உங்க போன் ஒரு முறை  தர்றீங்களா”.

 

“அடி ஆத்தி… என்ன   கேட்கிற. நான் உயிரோடு இருக்கிறது உனக்கு பிடிக்கலயா .நீ  நினைக்காத அளவுக்கு இவங்க மோசமானவர்கள் .. கொலைக்கும்  அஞ்சமாட்டாரகள். உனக்கு முன்னாடி தன் சாதிசனத்திலே ஒரு பெண்ணை தன் பையனுக்கு கட்டி வைக்க பார்த்தார்கள். அந்த பெண் மறுக்கவே,  அது தாமிரபரணி ஆத்துல மிதந்தது. உயிர் முக்கியம்.  பார்த்து  சூதனமா நடந்துக்க. உன் சித்தப்பனால் வந்தது உனக்கு வினை.இங்கு வேலை செய்யும் யாருமே வெளியே போக  முடியாது. எங்களுக்கும் சிறைதான்”.

“சாப்பிடு.உயிர் முக்கியம் “என்று  சொல்லிவிட்டு  அறையை விட்டு வெளியே போனாள்.

 

வெளியே நின்றிருந்த இருவர்.அவளிடம் “என்னம்மா இவ்வளவு நேரம் உள்ளே என்ன பண்ண .” 

“தூங்கிட்டு இருந்தார்கள்,எழுப்பி  சாப்பிட சொல்லி விட்டு வந்தேன். “ என்று சொல்லிவிட்டு  அவர்கள்  முகத்தை பார்க்காமல் விடுவிடு வென்று போய் விட்டாள்.

 

உள்ளே அமலா, நமக்கு உதவ யாருமே இல்லையே..

 

கதிரிடம் எப்படியாவது பேச வேண்டும்.

 

எப்படியெல்லாம் என்னிடம் பேசினான்.

 

கல்லூரியில் வகுப்பு நடக்கும்போது, போன் பண்ணிட்டே இருந்தான். 

 

“ஏய் என்னடா.’.

‘நான் கிளாஸில் இருக்கிறேன்.”

‘any important ‘..என்று மெஸேஜ் போட

‘yesss என்று வந்தது.”

“சொல்லுடா.”

‘Misssss u…”

“Rombaaaa…  என்றான்.

 

 ‘“இதானா ‘…

 

‘இதை விட இம்பார்டென்ட் வேற என்ன இருக்கு.” 

 

‘“ஆஹான். “

‘’இல்லையா’……

“ Love u  di.’

“அப்ப  அப்ப தான் என் ஞாபகம் வருமா”…என்று அமலா டைப் பண்ண,

‘எப்பவும் இருக்கு. நீ  தான் கொல்ற’…

 

“மாமா… மேடம் பார்த்தால் அவ்வளவுதான்.”

“நான் அப்புறம் பேசுறேன்” என்று வைத்து விட்டாள்.

இது போல் அடிக்கடி போன் மெஸேஜ்பண்ணுவான்.

 இதல்லாம்  அவள்   நெஞ்சில்  நினைவில் மாறாத காதலாக இருக்க,அவனுக்கு மட்டும் எப்படி இல்லாமல் இருக்கும்.

அவன் உண்மையாகத்தான் அவளை காதலித்தான் ..அதில்  அவள் ஏமாறவில்லை.  சிங்கப்பூர்  போன போது ஏன் மாறிப் போனான்” என்று  அம்மாவையும் சாப்பிட எழுப்பாமல் தானும் சாப்பிடாமல் இதையெல்லாம் யோசித்துக் கொண்டியிருந்தாள்.

 

யோசிக்க யோசிக்க அவளுக்கு ஒரு விடையும் கிடைக்க வில்லை.

 பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தால், ஊரார் முன்பு எல்லோரிடமும் இது கட்டாய திருமணம் என்று சொல்லிவிட வேண்டும். அது ஒன்று தான் வழி..ஊர் மக்களில் யாராவது ஒருவர் நம்மை காப்பாற்ற மாட்டாங்களா. என்று எண்ணினாள்.

சாப்பாடு வைத்து விட்டு போன பின்பு கதவு அடைக்க வில்லை. லேசாக திறந்திருந்த கதவின் இடுக்கு வழியாக பார்த்தாள்.

கதிர் மாமா சோபாவில் இருப்பது  தெரிந்தது.

அருகில் ஒருவரும் இல்லை.

படாரென்று கதவை தள்ளிவிட்டு வெளியே ஓடினாள்.

…………………………..…

ஆர் – எ.  புரம். சென்னை.

 

ஆஸ்பிட்டலிருந்து  அழைத்து வர பிரசாத் போனான்.

ஜெனியும்  அவனுடன் வீட்டிற்கு போக காரில் ஏறினாள்.

திரும்பி வீட்டிற்கு ஜெனி ஆட்டோவில் வந்தாள்.

அம்மாவும், அண்ணியும் அதிர்ச்சியடைந்தார்கள்.

எங்கே என் அண்ணன்  என்று மதி கேட்க,

.

“அண்ணனாம் அண்ணன்.”

“சொல்லுடி. என்ன நடந்தது.”

“என்ன சொல்ல சொல்ற . இதே மாதிரி மூன்றாவது மனிதர்களால் எனக்கு  மெண்டல் அஃபூஸ் நடந்தால், நான் ஹாஸ்டல் போய் விடுவேன். இது தான் கடைசி தடவை. மேலும், மேலும் பொறுத்துக்க மாட்டேன்.என்னால் நீங்களும், அண்ணனும் பிரிந்தால் கூட“

என்று படபடவென்று சொல்ல,

 

“இதென்ன இவ்வளவு கோவமாக இருக்கா. அப்படியென்ன பண்ணி  தொலைத்தானோ”…என்று சுதா கலக்கமடைய,

 

“நீ இவ்வளவு கோபப்படும் படி அப்படி என்ன நடந்தது.”என்று  மதியும் விடாமல் கேட்க,

 

““ஏம்மா.. நானே மனதாலும்,உடலாலும் எவ்வளவு வீக்காக இருக்கிறேன். உங்கள் தொல்லை தாங்காமல் தான் நானே அட்மிஷனுக்கு ஒப்புக் கொண்டேன்.”

 

“ஆமாம். அதற்குத் தான் உன்னை காரில் வரவழைத்தேன்.”

 

“நல்லா அழைத்தே போ. நான் ஆட்டோவில் வரும்படி ஆகி விட்டது.”

 

“உங்கள் தொல்லை தாங்காமல் தான் நானே அட்மிஷனுக்கு ஒப்புக் கொண்டேன்.”

 

“பிரசாத் ரேஷ் டிரைவிங்  வேறு. .அதுவே எனக்கு பயமா இருந்து . B.P. எகிறி விட்டது.”

“இதில் அவருக்கு மூட் சரியில்லையாம்.”

“அதனால் பஃபுக்கு போயே ஆக  வேண்டுமாம். “

“சரி. போ நான் இறங்கிக் கொள்கிறேன். கேப் பிடித்து போய்விடுவேன் என்று சொன்னாலும் ஒப்புக் கொள்ளவில்லை.”

“சொல்ல சொல்ல நிறுத்தாமல் அவன் வழக்கமாக போகும்  5 ஸ்டார் பஃபுக்கு.  நோக்கி  கார் போய்க் கொண்டே இருந்தது.”

 

“எனக்கு டென்ஷன் எகிறி விட்டது. நான் கத்த,பதிலுக்கு அவர் கத்த, காரில் ஏக ரகளையாகி  விட்டது.’

சுதாவை  பார்த்து, ‘லூஸாம்மா.. நீ உடம்பு   சரியில்லாத பெண்ணை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாது.. “

“சரி. சொல்லு’”

“கதை கேட்கிறியா”

 

“சிக்னலில்  கார் நின்றவுடன் காரை விட்டு இறங்க,.  பக்கத்தில் இருந்த ஆட்டோவில் ஏறி விட்டேன்.”

“அப்பா அண்ணன் வரட்டும் – நான் தனியே போய் விடுகிறேன். எனக்கு இங்க வீட்டில் நிம்மதியே இல்லை.”

என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று மாடியிலுள் தன் அறையில் தஞ்சம் புகுந்தாள்.’

 

“என்னம்மா உன் அண்ணன்  இப்படி இருக்கான் .ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று

கூடவா தெரியாது. இது சரியா வராது. மதி உங்கம்மாவை அவனுக்கு பெரிய இடமாகவே பார்க்கச் சொல். என் பெண் வேண்டாம்.”

 

இப்படி சொல்லிவிட்டு அவர் போய் விட்டார்.

 

மதி தன்னையே  நொந்துக் கொண்டாள்.

 

‘சே.. இந்த அண்ணானால்  நமக்கு எவ்வளவு அவமானம். நம்மை எப்படி மதிப்பார்கள்.. இவன் சுத்த வேஸ்ட்டு ‘

பிரசாத்தே போன் செய்தான். 

“அந்த அடங்கா பிடாரி   வீட்டுக்கு வந்து விட்டாளா..?  ரொம்ப எகுற, எல்லாம் அந்த தினேஷ் கூட இருக்கிற திமிர்.’

 

‘பேசாத அண்ணா.உனக்கு அவளை எப்படி தன் வழிக்கு கொண்டு   வருவது என்று தெரியவில்லை. இனிமேல் இங்கே வராத. எனக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மானமும் போய்விடும்.”

“போதும்டி. ரொம்ப   குதிக்காத..

எனக்குத் தெரியும் .அவளை எப்படி அடைவது என்று .ஒரு நாள் தூக்கிடுவேன்.  இந்த ஜென்மத்தில் அவள் தான் எனக்கு . இது ஆண்டவன் போட்ட முடிச்சு”.. என்று போட்ட சரக்கு  உடனே வேலை செய்தது.

 

கிணறு வெட்ட பூதம்  கிளம்பிடிச்சே என்று  பயந்தாள்.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
அவளை மறக்கத்தான்
278 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page