16. அவளை மறக்கத்தான்.
அமலாவிற்கு கதிரின் பாராமுகம் நெஞ்சை அறுத்தது. அவனைப் பார்த்து பேசியே ஆகவேண்டும் என்ற முடிவோடு, இடுக்கு வழியே ஹாலைப் பார்த்தாள் .
அவன் ஹாலில் தனியே அமர்ந்து இருக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டு, கதவருகே இரண்டு முரடர்கள் காவலுக்கு இருப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியே பாய்ந்தாள்.
இரண்டு முரடர்களும் இவள் புயலை போல வெளியேறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.
சாவசகாம தரையில் அமர்ந்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர்.
“ஏய்”…….என்று பிடிப்பதற்குள் அமலா கதிரை எட்டி இருந்தாள்.
அவன் தன் போனில், கில்லி படத்தில் வரும், “ஐய்யையோ ஐய்யையோ பிடிச்சிருக்கு எனக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்ற பாடலை கேட்டுக் கொண்டு இருந்தான்.
அவன் கண்களில் நீர் வருவதை கணநேரம் பார்த்தாள்.
அதற்குள் அந்த முரடர்கள் அவளை எட்டி இருந்தனர்.
ஐயா.. மன்னித்து விடுங்கள். இந்தப் பெண் அசந்தர்ப்பமான நேரத்தில் வெளியே வந்து விட்டாள்.
கதிர் அமலாவை பார்த்த பார்வையில்
இயலாமை தெரிந்தது. அவன் கண்கள் மன்னிப்பு கோரும் பாவனையை வெளிப்படுத்தியது.
அவன் எந்த வீடியோவை பார்க்கிறான் என்று தெரிந்ததும், ஒன்றும் பேசாமல் அறைக்குள் போய் விட்டாள்.
தன் காதல் தோற்கவில்லை என்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
கல்லூரி முதல்வருடம் படிக்கும் போது, ஊரில் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது.,
இவளே தன் அப்பத்தாவை அழைத்துக் கொண்டு சென்றாள். அம்மாவிற்கு லீவு கிடைப்பது கஷ்டம். அவர் வரவில்லை.. மேலும், அப்பா இல்லாததால் எதிலும் அவரை முன்னிலைபடுத்த மாட்டார்கள். அதனாலே அவருக்கு அங்கு வருவதில்
விருப்பமில்லை.
விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.. பெரும்பாலும் பெரியவர்கள் இருக்க மாட்டார்கள்.
“பிடிச்சிருக்கு” பாடலை அந்த ஊர் இளைஞர்கள் மேடையில் நடனமாடினார்கள்.
அதில் கதிர் நடுவில் நின்றுக் கொண்டு ஆடிக் கொண்டுயிருந்தான். வித்யாசமான நடன அசைவுகள்.
ஒவ்வொரு பிடிச்சிருக்கு என்ற வரிகள் வரும் போதெல்லாம் அவன் கைகள் இவளை சுட்டிக் காட்டியது. அவன் கண்களும் இவளையே வட்டமடித்தது.
கண் இமைக்காமல் அவனை மட்டுமே பார்த்தாள்.
துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம் தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு.”
உள்ளுக்குள் ஜிவ் ஜிவ் என்று எதோ பறப்பது தெரிந்தது. உடம்பு சிலிர்த்தது .
இரவின் ஓசையும், சித்திரை பெளர்ணமியின் பால் வெளிச்சமும்,
இவனின் காதலும் அவளை என்னவோ செய்தது.
அவளுக்கு அழுவதை தவிர வேறு எதுவும் செய்யத் தெரியவில்லை.
உறவுகளிடத்தில் பெரிய மரியாதை இல்லை.
பிடிச்சிருக்கு என்று சொல்வாரும் இல்லை.
மறுநாள் இருவரும் அத்தைக்கு சொந்தமான மாந்தோப்பில் சந்தித்தார்கள்.
தோப்பில் ஒருவருமில்லை.
மரத்தின் நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டியிருந்தார்கள்.
அவனின் சிங்க பிடரி முடியை தன் கைகளால் அளந்தவாரே “மாமா பிடிச்சிருக்கு பாடலுக்கு நாம் ஆடுவோமா . உன்னுடன் ஆட ஆசையா இருக்கு மாமா “
“சரிடி. தோப்பில் ஒருவரும் இல்லை.”
பாட்டை இவள் போனில் ஒலிக்க விட்டு அவன் போனில் ரிகார்ட் செய்தான்.
ஆட தொடங்கினார்கள்.
இவள் ஆடுவதை பார்த்து பிரமித்தான்.
ஆடி முடித்ததும் மூச்சு வாங்க அமர்ந்தார்கள்.
“என்னடி இந்த ஆட்டம் ஆடுற. எங்கே கத்துக்கிட்ட “…?
“டிவியில் பார்த்து தான். பாட்டு வரும்போது, கூடவே ஆடுவேன்.”
“டைரக்டர் உன் ஆட்டத்தை பார்த்து இருந்தால், திரிஷாவிற்கு பதில் உன்னைய நடிக்க வைத்து இருப்பார். சும்மா சொல்லல. அந்தளவுக்கு ஆடற”.
அவளை இழுத்து அணைத்தான்.
“நல்ல வேளை டைரக்டர் பார்க்கவில்லை.”
“பார்த்தால மட்டும் போய் விடுவேனா”…..?
என்று கோபமாக கேட்டாள்.
“ஏன்.. விஜய் கூட நடிக்க கூப்பிட்டா போக மாட்டியா”……?
“விஜய்யா என்னை பிடிச்சிருக்கு என்று சொன்னான்.உன்னை ரொம்ப
பிடிக்கும்டி என்று சொன்னது நீ தானே மாமா சொன்னே.”
“உன்னை ரொம்ப பிடிக்கும்டி என்றுசொன்னது எனக்குள்ள எவ்வளவு மாற்றத்தை உண்டு பண்ணியது தெரியுமா.”
“என் அம்மா,அப்பாவைத் தவிர வேறு யார் என்னை பிடிக்குது என்று சொல்லி இருக்கிறார்கள். . பணம் இல்லாத காரணத்தினால் எல்லோருக்கும் மரியாதை இல்லை. என்னை பிடிக்க வாய்ப்பே இல்லை. பணம் சம்பாதிக்க எனக்கு தெரிந்த ஒரே வழி நல்லா படிப்பது தான். கண்டிப்பா நான் முன்னுக்கு வந்து விடுவேன் மாமா .என் அம்மா தைரியமா அத்தையிடம் நம் திருமணத்தை பற்றி பேசுவார்கள்.உனக்காகவே என் தகுதிய வளர்த்துக் கொள்வேன்”
“ரொம்ப யோசிக்காத. நல்லா படி. உனக்கு எல்லா உதவியும் செய்யறேன். நம் திருமணம் நடைபெறும். என்று அவள் கையை பிடித்துக் கொண்டு சொன்னான்.
அவர்கள் ஆடிய அந்த வீடியோவைத் தன் பார்த்துக் கொண்டியிருந்தான்.
அமலா அறைக்குள் போனதும், கதவை வெளியே பூட்டினர்.
வெளியே தொடர்ந்து எதோதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
இவள் எதைப் பற்றியும் இலட்சியம் செய்யாமல், எதோ ஒரு வித மனநிறைவுடன் இருந்தாள்.
முத்து மாமா ஒரு ஜடத்தைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். போகட்டும்.
கதிர் அமலாவை நேருக்கு நேர் பார்த்ததும் வெலவெலத்து போய், எதுவும் செய்ய முடியாத கையாலாகத தனத்துடன், வெளிறி போன முகத்துடன் மாடியிலுள் தன் அறைக்கு ஓடினான்.
ஐய்யோ…ஐய்யோ….என்று சுவத்தில் முட்டிக் கொண்டான். ஒரு சிறு பெண்ணை அப்பாவி யான அவளை ஆசை ஆசை காட்டி மோசம் செய்து விட்டேன் ..
அவளை திருமணம் செய்து கொள்ளவில்லை யென்றாலும் பரவாயில்லை. இப்போது அண்ணனுக்கு அல்லவா கட்டாய திருமணம் செய்ய போகிறார்கள்.
முதலில் அவளை இழுத்துக் கொண்டு ஓடி விடலாமா என்று கூட யோசித்தான்.
கண்டிப்பா மூன்று கொலைகள் விழும். மாமி பாவம். எந்த சந்தோஷத்தையும் பூரணமாக அனுபவிக்காதவர். அவர் உயிருடனாவது இருக்கட்டும்’
‘சே…சே….நாங்கள் வியபாரம் செய்ய சிங்கப்பூர் போயே இருக்கக்கூடாது’.
‘அது தான் இவ்வளவு விபரீதத்தை அளித்து இருக்கிறது’.
இவர்கள் எக்ஸ்போர்ட்- இம்போர்ட் தொழில் செய்ய சிங்கப்பூர் சென்றார்கள்.அவர்களை நண்பன் என்ற போர்வையில் ஓர் கயவன் ஷெல் கம்பெனியில் இயக்குனராக சேர்த்துக் விட்டான்.
ஷெல் நிறுவனங்கள் வணிகச் செயல் பாட்டிற்காக அல்லாமல் நிதி மேலாண்மை மற்றும் ரகசிய பண பரிமாற்றங்களுக்காகவே அதிகம் உருவாக்கப் படுகின்றது.
அந்த கம்பெனி சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்டு இருந்தது.
இது தெரியாமல், இதைப் பற்றி ஞானம் கூட இல்லாமல் அவர்கள் வீசிய வலையில் சிக்கிக் கொண்டார்கள். முத்துவின் பெயரில் ஒரு போலியான ‘ லாஜிஸ்டிக்ஸ் ஆப்’ உருவாக்கப்பட்டு, அதன் மூலம்
பல கோடி ரூபாய்கள் கை மாறியது.
சிங்கப்பூர் போலீஸ் இந்த மோசடியை கண்டு பிடித்தது. அனைத்து ஆதாரஙகளும் முத்துவுக்கும், கதிருக்கு எதிராகவும் இருந்தது..
முத்துவின் ஏமாற்று பேர்வழி நண்பனும், மற்றவர்கள் தப்பித்து விட்டார்கள்.
முத்து வாயை திறந்தால் மாட்டிப்போம் என்று ஜூராங் பகுதியில் ஒரு கண்டெய்னர் லாரியை வைத்து, அவன் மீது மோதச் செய்தார்கள்.
அந்த விபத்தில் முத்துவின் முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்டு, இடுப்புக் கீழ் உணர்ச்சி யற்றுப் போனது..
இதற்கிடையில் முத்து, ஷாலினி என்ற அழகானப் பெண்ணை காதலித்தான்.. அவள் சாப்ட்வேர் இன்ஜினியர்.முத்துவை ஒரு மாலில் பார்த்திருந்தாள். அவனுடைய ஆளுமையும் ஆஜானுபாவ உடலமைப்பும், அந்த கரகரத் குரலும் அவனிடம் பேச வைத்தது
அவளும் அவன் காதலை ஏற்றுக் கொள்ளும் தருவாயில், இவனுக்கு விபத்து ஏற்பட்டதும் பின் வாங்கினாள்.
அவள் கதிரை பார்த்ததும் அவன் மீது காதல் வந்தது. முத்துவை திருமணம் செய்துக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை. வாழ்க்கை நரகமாகி விடும்.
நான்கு நாட்கள் மயக்கத்திலிருந்து கண் விழித்தான் .
தன் நிலை கண்டு ஆஸ்பத்திரியே அதிரும் அளவுக்கு அழுதான்.
அவனை பார்க்க ஷாலினி வராமலே இருந்தாள்.
எப்படியோ யார் யாரிடமோ சொல்லி வரவழைத்தான்.
அவளிடம் மன்றாடினான்.
“எனக்கு குணமாகி விடும்.என்னைவிட்டு போகாதே.”
“இதோ பார்.. உன் மீது எனக்கு காதல் வரவில்லை இப்படிப்பட்ட நிலையில் நான் எப்படி உன்னை உன்னை திருமணம் செய்ய முடியும். அல்லது நீ குணமாவாய் என்று காத்துக் கொண்டு தான் இருக்க முடியுமா”……?
“ விபத்து ஏற்பட்டதால் தப்பித்து விட்டாய் என்று நினைக்காதே. நீ ஜெயிலுக்கு போவது உறுதி. சிங்கப்பூர் கவர்மெண்ட் உன்னை விடாது.”
“ஆஸ்பிட்டலிருந்து வெளியேறியவுடன் கைது செய்யப்படுவாய் “என்று எச்சரித்து போய் விட்டாள்.
ஷாலினிக்கு கதிரை பார்த்த மாத்திரத்தில் பிடித்து போனது.
அண்ணனுக்கு விபத்து நடந்ததில் கதறி அழுதான். ஒரு பக்கம் போலீஸ் நடவடிக்கை. எந் நேரமும் கைது செய்யப்படலாம். அண்ணனோட வாழ்க்கையும், தன்னோட வாழ்க்கையும் சிங்கப்பூர் ஜெயிலே கழிய வேண்டுமா , என்ன செய்வது என்று தெரியாமல் பித்து பிடித்தது போல் இருந்தான்.
அப்போது தான் ஷாலினி ஒரு உபயம் சொன்னாள்.
இவளை அண்ணனோடு பார்த்து இருக்கிறான். அண்ணன் இவளைத்தான காதலிப்பதாக சொன்னார்.
அவள், அவனருகில் வந்ததும். அண்ணி என்று கூப்பிட வாயெடுத்தான்.
“ஸ்டாப் இட்” என்றாள் .
“கால் மீ ஷாலினி ஆர் ஷாலு” என்றாள்.
விபத்து ஏற்படாமல் இருந்தால் ஒரு பிரச்னையும் அவளுக்கு இல்லை.
சரி.அண்ணனுக்கு இப்படிஆனதற்கு கவலைப்படவேண்டாம்.எவ்வளவு பணம் செலவானாலும் சரி பண்ணி விடலாம்.” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
ஒன்றும் புரியாதவளாக, “ எனக்கு எதற்கு ஆறுதல் சொல்கிறாய்.”
“நீங்க… என் அண்ணனை”….. என்று இழுக்க
“அது உன் அண்ணன் அபிப்பிராயம். எனக்கு அப்படியேதும் எண்ணமில்லை.”
கதிருக்கு அதிர்ச்சியாகவும். குழப்பமாகவும் இருந்தது.
முத்து சொல்லி இருக்கிறான். ஷாலு என்னை லவ் செய்கிறாள். அவளது நடவடிக்கையை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. இன்று நல்ல பதிலாக சொல்கிறேன் என்..று சொல்லி இருக்கிறாள். அன்று முத்து அப்படி சொல்லும் போது, அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. மிகவும் மகிழ்ச்சியாக போனான்.
நண்பன் ஏமாற்றி, போலீஸிடமும் மாட்டி விட்டான் என்பதையே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விபத்து வேறு நடந்து விட்டது.
குற்றுயிரும், கொலையுருமாக ஆஸ்பிட்டலுக்கு அழைத்து வந்தர்கள்.
தகவல் அறிந்து, கதிரும். ஷாலினியும் வந்தார்கள்.
இவனைப் இப்படி பார்த்ததும், டாக்டரிடம் பேசி தெரிந்துக் கொண்டாள்.
சரியாக வராது என்று முடிவு செய்து விட்டாள்.
கதிரின் மீது மையல் கொண்டாள்.
அவனிடம், “நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்.
அதனால் உன் அண்ணனையும், உன்னையும்
ஜெயிலுக்கு போகாமல் காப்பாற்ற முடியும்”.
ஆர்வமாக “எப்படி” என்றான்.
“ நிபந்தனை இருக்கு. அதற்கு நீ ஒப்புக் கொண்டால் செய்கிறேன்” என்றாள்.
தொடரும்.
“
