ஷாலினியின் தந்தை செல்வமும், செல்வாக்கும் மிக்கவர் . இவள் யாரையும் மதிக்காத தன்மையும், சுயநலமிக்கவளாக இருந்தாள். கண்களில் அலட்சிய பார்வையும், நடையில் செருக்கு தன்மையுடன் அழகில் கர்வமும் கொண்டவளாக காணப்பட்டாள்..
அவளை நான்கு பேர் சுற்றி சுற்றி வந்து காதலித்தார்கள். நால்வரையும் நிராகரித்தாள்.
முத்துவை காதலிக்கலாமா என்று யோசித்தாள்.. ஆனால் நல்லவேளையாக அவனை ‘ஏற்றுக் கொள்ளவில்லை என்று மனம் மகிழ்ச்சியடைந்தாள்..
கதிரை பார்த்தும் அவனை காதலிக்க ஆசைப்பட்டாள்…
அவளின் பெற்றோரும் அவளிடம், “சிங்கப்பூர் வாழ்க்கை போதும் . சொந்த மண்ணான தூத்துக்குடிக்கு போகப்போகிறோம். நீயும் உன் திருமண பொறுப்பை எங்களிடம் கொடுக்காமல், நானே பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாய். எங்களுக்கு இங்குஎன்ன வேலை இருக்கு.நாங்கள் போகிறோம்.”
என்று சொல்லி விட்டனர்.
அப்பாவிடம் கதிரை பற்றி சொல்லி, அவனுடன் கட்டாயம் என் திருமணம் நடக்கும்ப்பா. கவலைபட வேண்டாம். நீங்கள் போங்கள் .என் வேலைகளை முடித்து விட்டு நான் கதிருடன் வருகிறேன்.
சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.
முத்துவையும், கதிரையும் காப்பாற்ற முடியும்.ஆனால்,ஒரு நிபந்தனை. அதற்கு உட்பட்டால், வாக்குறுதி கொடுத்தால் நான் காப்பாற்றுகிறேன்.” என்று கதிரிடம் சொன்னாள்.
திக்குதெரியாத காட்டில்,கண்ணை கட்டி விட்டது போல,அந்நிய மண்ணில் செய்வதறியாது, முத்துவுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பை எண்ணி கலங்கிக் கொண்டுயிருந்த தருணத்தில் ஷாலினி “என்னால் காப்பாற்ற முடியும்” என்று சொன்னது. அவனுக்கு பெரிய விடுதலை உணர்வைத் தந்தது.
“என்ன நிபந்தனை இந்த சிங்கப்பூரை விட்டு போனால் போதும். ‘இன்னும் வீட்டில் அண்ணனுக்கு ஏற்பட்ட விபத்தை பற்றி சொல்லவில்லை. நாங்கள் மனம் அறிந்து செய்யவில்லை..எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன் “ என்று உணர்ச்சி வசப்பட்டு சொன்னான்.
அவன் கையை பிடித்து, “ ரிலாக்ஸாக இருங்கள். “ என்றாள்.
“எப்படி இருக்க முடியும். இந்த நாட்டில் தவறு செய்தால் கடும் தண்டனை உண்டு. எங்களை கோர்த்து உள்ளார்கள். யாரிடம் சொல்வது, யாரை கேட்பது,ஒன்றும் புரியவில்லை.”
“எதற்கும் கலங்க வேண்டாம். உங்களை இக்கட்டியிலிருந்து வெளியே கொண்டு வருவது என் கடமை” என்று சொல்லி, அவனை கட்டியணைத்தாள்.
கதிரும் குழப்பத்தில் இருந்ததால், இவளின் எண்ணத்தை, ஆசையை அறியவில்லை.
“என்ன நிபந்தனை என்று சொல்லுங்கள்.
செய்ய காத்து இருக்கிறேன்”.
“நல்லது. இப்போது சொல்ல மாட்டேன். உங்களை காப்பாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
போலீஸ்காரர் ஒருவர் முத்துவின் அறை வாசலில் நின்றுக் கொண்டு, டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
முத்துவுக்கு விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டியிருப்பதால் போலீசார்
அடுத்த குற்றவாளியான கதிரை கைது செய்தது.
ஷாலினி சிங்கப்பூர் பிரஜை. அவள் தந்தையை வைத்து ஜாமீனில் அவனை விடுவித்தாள். அது கதிருக்கும் தெரியாது.முத்துவின் நண்பர் தனக்கு ஜாமீன் கொடுத்ததாக நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.
ஷாலினி, தன் அறிவுத்திறமையாலும், இன்புளுயன்ஸ் மூலம், கதிரை விடுவிக்க போராடினாள்.
கடும் போராட்டத்திற்குப் பின், கதிரையும், முத்துவையும் சட்டரீதியாக அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்க தகுந்த ஆதாரத்தை கையில் வைத்து இருக்கிறாள்.
இப்போது உற்சாகமாக மருத்துவமனைக்கு விரைந்து, ஓடோடிச் சென்று கதிரை கட்டியணைத்து “நாம ஜெயிச்சிட்டோம். நீங்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கும் ஆதாரம் என்னிடம் உள்ளது.”
இவனும். உற்சாக மிகுதியால் அவளை இறுக அணைத்தான்.
“வா. போலீஸிடம் போவோம்.”
“இரு கதிர். நான் சொன்ன நிபந்தனையை
மறங்து விட்டாயே.”
“நான் தான் ஒப்புக் கொண்டேனே. முதலில் போலீசாரிடம் போவோம்.”
“இரு. நான் சொல்றேன். உனக்கு விருப்பம் இருந்தால் ஒப்புக் கொள்.”
அவனின் கைகளை பிடித்துக் கொண்டு, நேராக அவன் கண்களைப் பார்த்து, “நான் உன்னை காதலிக்கிறேன். நம் திருமணம் நடைபெற வேண்டும். அதற்கு முன் உன் அண்ணனின் திருமணமும் நடைபெற வேண்டும்.”
என்று பெரிய இடியாக அவன் தலையில் இறக்கினாள்.
ஹேய்… என்ன சொல்ற,…!!!!?
ஏற்கனவே அதிர்ச்சியிலும், விரக்தியில் சாப்பிடாமல் இருந்ததன் விளைவு, மற்றும் இவள் சொன்ன அதிர்ச்சியான நிபந்தனைகளை கேட்டும், இவன் தலை சுற்றி கீழே விழப் போனவனை தாங்கி பிடித்தாள்.
“என்ன கதிர். இரண்டில் எது உனக்கு தலை சுற்றி போகுமளவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.”
அமலாவை நினைத்து மனம் சங்கடப்பட்டான் . இத்தனை வருடங்கள் பேசாமல் இருந்தாலும், எனக்காக காத்து இருப்பாளே . இரண்டு வருடங்களாக அவன் போன் செய்ய வே இல்லை.
நல்ல நிலமைக்கு வந்து அவளை பிரமிக்க வைக்க வேண்டும். அவளும் தன் வளர்ச்சில் கவனம் செலுத்த வேண்டும் என்று யோசித்ததன் பலன், இது தானா எப்படி எல்லாம் அவளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதெல்லாம் கானல் நீராக போய்விட்டதே.”
ஷாலினியிடம்,” நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவளுக்கு துரோகம் செய்ய முடியாது. எனக்காக அவள் அங்கே கடந்த இரண்டு வருடங்களாக காத்துக் கொண்டு இருக்கிறாள்.”
என்று சொல்லிவிட்டு என்ன சொல்வாளோ என்று அவள் முகத்தை. பார்த்தான்.
“வேறு வழியில்லை கதிர். இந்த ஆதாரம் போலீஸுக்கு போக வில்லையென்றால், நீயும் உன் அண்ணனும் ஜெயிலுக்கு போக வேண்டும். உங்களின் M.K. கார்மெண்ட்ஸ் உங்கள் கையை விட்டு போய்விடும். தண்டனை எத்தனை காலமோ ……? அந்தப் பெண் எப்படி உன் வரவை நோக்கி காத்திருப்பாள்.”
“மேலும்,உன் வீட்டாருக்கும் உங்கள் நிலமை தெரியாது. இரண்டு மகன்களும் ஜெயிலில் இருந்தால், மானம் போனபின்பு உயிரோடு இருப்பர்களா . நல்லா யோசி. உன் ஜாமினும் ரத்தாகி விடும். அதுவும் என்னால் தான். உனக்கு கிடைத்தது.” என்று சொல்லிவிட்டு, தன் ஹை ஹீல்ஸ் ஷுவின் சத்தம் கேட்க விடுவிடுவென்று, நடந்து ரிஷப்ஷனில் அமர்ந்துக் கொண்டாள்.
இவனருகில் யாரோ ஒருவர் இறந்து, அவரின் குடும்பத்தூர் அழுதுக் கொண்டே போனார்கள்.
முத்து இவனை கூப்பிட்டு அனுப்பினான்.
நர்ஸ் இவனிடம் வந்து சொல்ல,உள்ளே சென்றான்.
அவனின் குரல் மிகவும் பலஹீனமாக”,கதிர்” என்று மெல்ல கூப்பிட்டான்.
“டாக்டர் என்ன சொல்கிறார்கள். இடுப்புக்கீழ் உணர்வு வருமா கால்கள் சரியாகுமா…மா…? நடக்க முடியுமா”….?
அவன் மெளனமாக இருக்கவே,
“டேய் சொல்லுடா . என் வாழ்நாள் முழுக்க இப்படியே போய் விடுமா .
ஷாலினி பயமுறுத்துகிறாள்.. டிஸ்சார்ஜ் ஆனதும், போலீஸ் பிடித்துக் கொண்டு போகுமாம். இந்த நிலமையில் நான் எப்படிடா
ஜெயிலுக்கு போக முடியும்”.
ஐயோ… கடவுளே அந்த விபத்தில் என் உயிர் போய் இருக்கக் கூடாதா. அல்லது இப்பவாவது என் உயிரை எடுத்துவிட சொல்லுடா.”
அண்ணா….
“என்னை மன்னித்து விடுடா. என்னால் தான். இவ்வளவும்.” என்று அழுதுக் கொண்ட சொல்ல,
அழாதே அண்ணா.. உன்னை நான் காப்பாற்றுவேன் . ஜெயிலுக்கு போக வேண்டாம். கடையை விற்று விட்டு. நம் ஊருக்கே போகலாம். “
“நிஜமாகவாடா. …?
“ஆமாம் அண்ணா . நீ எதையும் . மனதில் போட்டு அலட்டிக்காதே.”
தன் மனதை கல்லாக்கிவிட்டு, ஷாலினியிடம், அவளை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டான்.
“குட்பாய்” என்று அவன் கன்னத்தை தட்டிவிட்டு, யாருக்கோ போன் செய்து விட்டு, போலீஸாரிடம் சென்றாள்.
அங்கே தன் வக்கீலை வைத்து
அந்த ஆப்.ஐ இயக்கியது. முத்துவின் லேப்டாப்பில் இல்லை.கென்யா நாட்டில் இருந்த ஐ.பி. அட்ரஸ் என்பதை போலீஸுக்கு
ஆதாரத்துடன் நீருபித்தாள்.
போலீஸார் அவர்களை துருவி துருவி கேள்விகள் கேட்டார்கள். எல்லாவற்றிற்கும் தகுந்த ஆதாரத்துடன் பதில்களை கூறியதும் , போலீசார் முத்துவையும்,
கதிரையும் விடுவித்தார்கள்.
பாஸ்போர்ட்டும் கோர்ட்டில் வைத்து கொடுத்தார்கள்.
அவனது மனம் வெறுமையாக இருந்தது.
.புங்கோல் பீச்ல (punggol beach) அவன் காலாற நடந்தான். நம்மூர் கடற்கரை போன்று அலைகளின் ஆரவாரம் இல்லை. கரையில் ஆங்காங்கே திட்டு திட்டாக பெரிய கருப்புப் பாறைகள் இவன் மனதைப்போலவே எதோ சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து இறுகிக் கிடந்தது. அந்த பாறை மேல் கதிர் அமர்ந்தபடி , அலைகள் இல்லா கடலை வெறித்து பார்த்தபடி இருந்தான்.
அவன் கையில் இருந்த மணலை பார்த்தான். அதுகைவிரல் இடுக்கு வழியே கடலில் கரைந்துக் கொண்டியிருந்தது. அவன் வாழ்க்கையும் அப்படித்தானே கையை மீறிப் போய் கொண்டு இருக்கிறது.
யாரோ ஒருத்தி இவன் வாழ்க்கையை கைபட எழுதிக் கொண்டு இருக்கிறாள்.
‘அண்ணன் …. எப்பவும் கம்பீரமாக நடக்கிற மனுஷன். மற்றவர்களை கிடுகிடுக்க வைக்கின்ற அந்த கம்பீர குரலும், இப்போது காணாமல் போய்…….இப்போ, இடுப்புக்கீழே உணர்ச்சியே இல்லாமல் பெட்டில் கிடக்கிறாரே.’
,’எல்லாம் என்னால் வந்தது.:
‘அமலாவை திருமணம் செயது கொள்வதற்கு, அவளும் பணம் கொண்டவளாக இருக்க வேண்டும் அப்போது, தான் அம்மா அவளை தன மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள்.:
‘தான் சம்பாதித்த பணத்தை அவளிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து உழைத்தான்.’
சிங்கப்பூரை கனவு தேசம் என்பார்களே. இது எனக்கு நரக தேசமாக ஆகிவிட்டது.
தன் செல்போனை எடுத்தான்.
அதில் அமலாவும், இவனும் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இருந்தது .
கண்கொட்டாமல் பார்த்தான். உப்புக்காற்றில் கண் எரிந்தது. அதை விட அவன் மனம் எரிந்தது.
‘அவளுக்குத் தெரிந்தால் என்ன செய்வாள்.
பண மோசடியில் மாட்டிக் கொண்டோம். அண்ணனுக்கு விபத்து ஏற்பட்டது. ஷாலினி செய்த உதவிக்கு உபகாரமாக நம் காதலை பணயம் வைத்துள்ளேன். இதையெல்லாம்
எப்படி அவளிடம் சொல்வேன்.துடிதுடித்து போய் விட மாட்டாளா ‘..
கடலை பார்த்து ‘என்னை அப்படியே முழுங்கிவிடேன்”என்று கத்தினான். கடல் அலைகள் மெளனமாக அவனை தழுவிச் சென்றது.
கடலலைகள் நனைத்து சென்றதில் குளிர் நடுங்கியது. உள்ளுக்குள் அவன் அமலாவிற்கு செய்யப் போகும் துரோகம் குற்ற உணர்ச்சியாக தகித்துக் கொண்டியிருந்தது.
உறவுகள் இருந்ததும், தான் அனாதையாக இருப்பதாக நினைத்தான்..
முத்துவிற்கு சேர்ந்த விபத்து பற்றி, அம்மா அப்பாவிற்கு எப்படி சொல்லாமல் இந்தியா செல்வது..
ஷாலினி என்ன செய்ய போகிறாள்.
அண்ணனுக்கு இவள் போட்ட ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது..
மேலும், தான் குணமாகி விடுவோம். ஷாலினியை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.
டாக்டர்கள் “கடவுள் மேல் பாரத்தை போடுங்கள்” என்று சொல்லி கைகாண்பித்தது முத்துவிற்கு தெரியாது.
தன்னை திருமணம் செய்ய அவள் நிர்பந்திக்கலாம். அண்ணனுக்கு . திருமணம் நடந்த பிறகு தான் நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நிர்பந்திப்பது எந்த விதத்தில் நியாயம்.
இந்த நிலமையில் யார் முத்துவை திருமணம் செய்துக் கொள்வார்கள்.
முதலில் ஒரு பெண்ணிடம் முத்துவை திருமணம் செய்துக் கொள்வாயா என்று எப்படி கேட்பது.
முதலில் அம்மா அப்பாவிடம் விஷயத்தை சொல்வோம். தலைச்சன் ஆண்பிள்ளை என்பதால் முத்து மீது உயிரையே வைத்து இருக்கிறார்கள்.
இதைக் கேள்விபட்டதும் தாங்குவார்களா!!!.
வேறு வழியில்லை
சொல்வது என்று தீர்மானித்தான்.
தொடரும்.
.
