4.. மௌனத்தின் கடைசி எல்லை

4.. மௌனத்தின் கடைசி எல்லை

 போன பகுதியில்  :இவன் ஒத்துக்கொண்டது போல் மத்த மூவரும் ஒத்துக் கொண்டார்கள் அதன் பின் மித்ரன் அங்கிருந்து கிளம்பி விட யூதிகாவும் தனக்கு வேலை இருக்கிறது என்று அங்கு இருந்து கிளம்பி விட்டால் அதன் பின் கல்யாண வேலைகளை நான்கு பேரும் தொடர்ந்தார்கள்..

இனி..

இரண்டு நாட்கள் கழித்து திருமண நாள்…

 சத்யாவின் வீடு..

 வீட்டிற்கு வெளியே எப்பொழுதும் இருப்பது போல் இருந்தாலும் வீட்டுக்குள் விழாக்கோலம் பூட்டி இருந்தது அந்த மாளிகை.. வீட்டில் வெளிப்புறத்தில் இருந்து யார் பார்த்தாலும் இதை நம்ப மாட்டார்கள் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தால் அவர்கள் கண்கள் பிரகாசிக்கும் அளவிற்கு அலங்காரம் அலங்கரித்து இருந்தது தான் பார்ப்பது உண்மையா பொய்யா என்று வெளிப்புறத்தையும் உள்புறத்தையும் ஒரு நிமிடம் சென்று சென்று பார்த்து வரக்கூடும்.. பார்ப்பவர்கள் கண்கள் பிரகாசிக்கும் அளவிற்கு அந்த முழு வீடும் அலங்கரித்து இருந்தது.. என்ன தான் மிக பிரம்மாண்டமாக அலங்கரித்து இருந்தாலும் அந்த அழகை பார்க்க அங்கு யாரும் இல்லை ஒரு சிலர் இருந்தார்கள் வேலைகளை பார்க்க அதுவும் பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு.. அந்த வீட்டிற்கு நடுநாயகமாக சில மேடை போல் அமைத்து அதில் ஐயர் அமர்ந்து மந்திர ஓதி கொண்டு இருந்தார். அவர் பக்கத்தில் சத்யா மீரா நாதன் சுதா என்று நான்கு பேரும் நின்று இருந்தனர் அப்பொழுது ஐயர்.

“ மாப்பிள்ளையை வர சொல்லுங்க.” என்றார்.

 

“ இதோ கூப்பிடுற..மனவ் போய் அண்ணனை கூட்டிட்டு வா.” என்றார் மீரா.

“ ஓகே மா.” சொல்லியவன்.

 இரண்டாவது மாடிக்கு வந்து ஒரு அறையின் கதவை தட்டினான் இவன் தட்டியவுடன் அந்த அறைக்கதவு திறக்க.

“ அண்ணா அம்மா உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க.” இன்முகத்துடன் சொன்னான் மனவ்.

 தல அசைவை மட்டும் கொடுத்தவன் அவனைத் தாண்டி படிக்கட்டுகளில் இறங்கத் தொடங்கினான் அவன் பின்னால் மனவ் சிரித்தபடியே…

“ என்ன ண்ணா அதுக்குள்ள கல்யாணத்துக்காக அவசரமா இன்னும் முகூர்த்தத்துக்கு டைம் இருக்கு  பொறுமையா போ.” என்றான் மனவ்.

 இவனின் பேச்சைக் கேட்கவும் ஒரு நிமிடம் நின்ற மித்ரன் திரும்பி ஒரு முறைமுறை தான். அதில் தன் வாயை மனவ் மூடிக் கொண்டு அமைதியாக வர இருவரும் மனமேடை வந்து சேர்ந்தார்கள்..

“ மாப்பிள்ளை தம்பி உட்காருங்கோ.” என்றார் ஐயர்.

 இவர் சொன்னவுடன் மணமேடையில் அமர மீண்டும் ஐயர் மந்திரம் ஓத தொடங்கினார் அங்கு இருக்கும் அனைவர் முகத்திலும் புன்னகை ஆனால் மித்ரன் முகத்தில் மட்டும் புன்னகை இல்லை ஏன் அவன் முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை மிகவும் அமைதியாக இருந்தது அவன் எப்பொழுதும் எப்படி தான் இருப்பான் என்று பெரியவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தார்கள்.. சிறிது நேரம் மந்திரம் ஓதிய ஐயர்..

“ பொண்ணு அழைச்சிட்டு வாங்கோ.” என்றார்.

“ஷனா அக்காவ கூட்டிட்டு வா.” என்றார் சுதா.

 அவளும் சரி என்பது போல் தலையாட்டியவள்.. மன மேடையில் இருந்து சில அடி தூரத்தில் ஒரு அறை இருக்க அங்கு வந்தவள்.

“ அக்கா உன்ன கூப்பிடறாங்க.” சொன்னாள் சஷனா.

 ஆனால் யூதிகா இவளிடம் எந்த பதிலும் சொல்லவில்லை அமைதியாக எழுந்து மெல்ல வெளியே வந்தால்.. இப்படி அவள் எதுவுமே சொல்லாமல் அவள் பாட்டுக்கு எழுந்து போவதை பார்த்த  சஷனாக்கு மிகவும் கோபம் வந்தது ஆனால் அதை தனக்குள்ளவே வைத்துக் கொண்டவள் எதையும் வெளி காட்டாமல் அவள் பின்னால் அமைதியாக வந்தால்.. யூதிகா வருவதை பார்த்த மீரா அவள் அருகே வந்தவர்.

“ வா டா.” சொன்ன மீரா.

 அவளை அழைத்து வந்து மணமேடையில் மித்ரன் பக்கத்தில் அமர வைத்தார்.. மணப்பெண் வந்து அமர்ந்ததும்.

“ பொண்ணு மாப்பிள்ளையும் நான் சொல்ற மந்திரத்தை திருப்பி சொல்லுங்க.” சொன்ன ஐயர்.

 ஒரு சில மந்திரங்களை சொல்லி முடித்தவர்.

“ மாப்பிளையோட அம்மா அப்பா பொண்ணுக்கு முகூர்த்த புடவை குடுங்கோ. முகூர்த்த புடவை மாத்திகிட்டு வரட்டும் ” என்றார் ஐயர்..

“ ஏங்க வாங்க.” சொன்ன மீரா.

 தன் கணவருடன் சேர்ந்து யூதிகாக்கு முகூர்த்த புடவையை கொடுக்க.. அதை இன் முகத்தோடு வாங்கிக் கொண்டால்..

“ யூதி போய் புடவை மாத்திட்டு வாம்மா.” சொன்னார் சுதா..

 சரி என்பதற்கு தலை ஆசித்தவள் மீண்டும் அறைக்குச் சென்று புடவையை மாற்றிக் கொண்டு வர இப்பொழுது வாசலிலே காத்துக் கொண்டிருந்த மீரா அவளை மெல்ல அழைத்து வந்து மண மேடையில் அமர்த்த.. ஐயர் மந்திரம் ஓதிக் கொண்டிருக்க இவள் அமர்ந்ததும் இவளுக்கும் சில மந்திரங்களை சொல்ல இப்பொழுது இரண்டு பேரும் சேர்ந்து சொல்லத் தொடங்கினார்கள் ஐந்து நிமிடங்கள் சென்றிருக்க தாலியை கையில் எடுத்த ஐயர்.. கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்ல அதுவரை ஓரமாக அமர்ந்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது வேகமாக வாசிக்க தொடங்கினார்கள்.. மித்ரன் கையில் மாங்கல்யத்தை கொடுத்த ஐயர்..

“ தம்பி உங்க வாழ்க்கை சீரும் சிறப்புமா இருக்கணும்னு சொல்லி மனசுல நினைச்சுகிட்டு தாலி கட்டுங்கோ.” ஐயர் சொல்ல.

 அதுவரை தன் பக்கத்தில் இருப்பவளின் முகத்தை கூட பார்க்காதவன் அந்த நொடி திரும்பி பார்க்க அவள் முகத்தில் புன்னகை பூத்திருந்தது ஆனால் அந்த புன்னகை அவன் கண்களுக்கு தெரியவில்லை அதற்கு மாறாக அவள் மீது கோபமே பிரதிபலிக்க.. தன் மனதில் இருக்கும் கோபத்துடனே அவள் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன்னவளாக ஆக்கிக் கொண்டான் யூதிகாவை மித்ரன்.. அதன் பின் சில சம்பாதாயங்கள் அனைத்தையும் முடித்து அனைவரும் அமர..

“ என்னங்க என்ன அப்படியே ஒக்காந்துட்டீங்க சாப்பிட்டு நம்ம உடனே வீட்டுக்கு கிளம்பலாம் அடுத்து எவ்வளவு வேலை இருக்கு.” சொன்னார் சுதா.

“ அம்மா அதுக்குள்ள என்னம்மா அவசரம் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாமே.” என்றால் சஷனா.

“ஷனா கொஞ்சம் அமைதியா இரு நாங்க பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல.” சொன்னார் சுதா.

“ இப்பஷனா வா எதுக்கு திட்டுற வா சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்.. அத ஒர்க்கர்ஸ் கிட்ட சொல்லிட்ட இல்ல அவங்க பாத்துக்க மாட்டாங்களா..” என்றார் நாதன்.

“ என்னாச்சு நான் தான்.. சுதாவனையும் அப்படி என்ன பேசுகிறீர்கள்? எங்களுக்கு கேட்காத அளவுக்கு.. அதுவும் ஷனா ஏதோ கேட்டதுக்கு வேற சுதாமா திட்டுறாங்க.” கேட்டாள் சத்யா.

“ அது ஒன்னும் இல்ல சத்யா அடுத்து நடக்க வேண்டிய சமுதாயத்துக்கு வீட்டுக்கு போய் வேலை பாக்கணும் சுதா சொன்னா. அதுக்கு ஷனா கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம்னு சொல்ற அதுதான் வேற ஒன்னும் இல்ல.” சொன்னார் நாதன்.

“ அதுக்குள்ள என்னம்மா இப்ப தானே கல்யாணம் முடிஞ்சு இருக்கு பொறுமையாவே பாத்துக்கலாமே..” சொன்னார் சத்யா..

“ எதுனாலும் நம்ம போய் ஒவ்வொன்னா பார்த்து செஞ்சா தானே நான் நல்லா இருக்கும் அதனால தான் யோசிக்கிறேன்.” சொன்னார் சுதா.

“ சுதா மொத சாப்பிடலாம் அதுக்கு அப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மத்த வேலையை பார்த்துக்கலாம் இன்னும் டைம் இருக்கு.” என்றார் மீரா..

 மீரா சொல்லியதற்கு சுதா ஏதோ சொல்ல வர அதற்குள் இடையில் புகுந்த மனவ்.

“ எப்படி இப்படியே பேசிட்டே உட்கார்ந்து இருக்க போறீங்களா வாங்க மொத நம்ம டிபன் சாப்பிடலாம் அதுக்கு அப்புறம் மத்ததெல்லாம் பேசுங்க பசி உயிர் போது.” சொன்னான் மனவ். 

 

“ சரி வாங்க மொத போய் சாப்பிடு மத்ததெல்லாம் அப்புறமா பேசலாம்.” சொன்னார் சத்யா.

 அதன்பின் அனைவரும் சாப்பிட்டு வந்து அமர மீண்டும் பேச்சுக்கள் தொடங்கியது அதுவரை அமைதியாக இருந்த மித்ரன்.

“ எல்லாரும் என்ன பேசிட்டு இருக்கீங்க..” என்றான் மித்ரன்..

“ என்னடா இப்படி கேட்டுட்ட இதுக்கு அப்புறம் நடக்க வேண்டிய சம்பிரதாயம் பற்றி தான் பேசிட்டு இருக்கோம்..” என்றார் சத்யா.

“ அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சு இதுக்கு அப்புறம் என்ன இருக்கு.” என்றான் கேள்விகளாக மித்ரன்.

“ டேய் எல்லாம் தெரிஞ்சு தான் கேக்குறியா தெரியாம கேக்குறியா. கல்யாணம் மட்டும் தான் முடிஞ்சிருக்கு இதுக்கு அப்புறம் நீ யூதிகா வீட்டுக்கு போகணும் நைட் அங்க தான் நீ ஸ்டே பண்ணனும்..” என்றார் சத்யா…

“ அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சு இதுக்கு அப்புறம் என்ன இருக்கு.” என்றான் கேள்விகளாக மித்ரன்.

“ டேய் எல்லாம் தெரிஞ்சு தான் கேக்குறியா தெரியாம கேக்குறியா. கல்யாணம் மட்டும் தான் முடிஞ்சிருக்கு இதுக்கு அப்புறம் நீ யூதிகா வீட்டுக்கு போகணும் நைட் அங்க தான் நீ ஸ்டே பண்ணனும்..” என்றார் சத்யா…

“ என்ன டேட்  இப்படி சொல்றீங்க இதுக்கு முன்னாடி இதெல்லாம் நீங்க சொல்லவே இல்லையே.. அதுவும் இல்லாம இன்னைக்கு நைட் ஒரு சூட் இருக்கு..” சொன்னான் மித்ரன்.

“ மித்ரன் என்ன சொல்ற இன்னைக்கு தான் உனக்கு கல்யாணம் ஆயிருக்கு அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா.. அதுக்குள்ள ஷூட்டிங் போகணும்னு சொல்ற.. இன்னும் ரெண்டு நாளைக்கு நீ எங்கேயும் போகக்கூடாது யூதிகா வீட்ல தான் இருக்கணும்..” சற்று கோபத்துடனே சொன்னார் மீரா..

“ம்மா என்னம்மா இப்படி சொல்றீங்க ரொம்ப அர்ஜென்ட் ஆன ஷூட்டிங் இது முடிய போகுது ஒரு சின்ன சீன் மட்டும் தான் நீங்க வேணா யூதிகா கிட்ட கூட கேளுங்க.” என்றான் மித்ரன்… 

மித்ரன் என் பேச்சைக் கேட்ட நாதன் சுதா இருவருக்கும் முகம் கொஞ்சம் வாடிவிட்டது.. என்ன சொல்வதென்று இருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை யூதிகா வேறு அமைதியாக இருக்க அதில் இன்னும் பதற்றம் அடைந்த சுதா..

“ யூதி மாப்பிள்ளை உன்னை கேட்க சொல்றாரு உனக்கு ஷூட்டிங் இருக்கிறது தெரியுமா நீ ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லல..” என்றார் சுதா கவலையாக..

“ ஒரு ஷாட் இருக்குமா அது முக்கியமான சூட் அது.. அது அவருக்கு தான் மெயின் சூட் எனக்கு இல்ல அதனால நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன்னு சொல்லிட்டேன்.” என்றால் யூதிகா.

 அதைக் கேட்ட அனைவருக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை தயக்கமாக நாதன் சுதா இருவரும் சத்யா மீராவை பார்த்தனர் இவன் சொல்லியதை கேட்டு அவர்களுக்கும் என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தனர்..

 

 

 இனி என்ன நடக்கும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..

 இப்படிக்கு உங்கள் அன்பு தோழி 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page