7. அவளை மறக்கத்தான்.

பாகம் 7

தினேஷ்  நினைத்து  கூட  பார்க்கவில்லை. இவ்வளவு சீக்கிரத்தில்  ஜெனிக்கு புரபோஸ் செய்வான் என்று.

அதை விட மகிழ்ச்சி, அவள் ஏற்றுக் கொண்டது தான். ‘

 

உற்சாகத்தில் மிதந்தான்.

 

தன்னுடைய ஆஸ்பிட்டலுக்கு ஒரு எமர்ஜென்ஸி கேஸ் வந்துள்ளது என்று சீனியர் சொன்னதால், திங்கட் கிழமை அதிகாலையிலே   கிளம்பிப்  போனான்.

அங்கு ‘’26 வயது இளைஞன். நெஞ்சு வலியோடு  வந்திருந்தான்.. மைல்ட் அட்டாக். 

இந்த வயதில் இவனுக்கு  அட்டாக் வந்து இருக்கே என்று  அவனிடம் பக்குவமாக பேசினான். அவனுக்கு  இதயத்தில்    இரண்டு இடத்தில் அடைப்பு இருந்தது.

அதற்கு ஸ்டன்ட் வைத்தால் போதும். 

அவனோ    அழுதான். 

“என்  காதலி பிரேக் அப் சொல்லி விட்டு போன அதிர்ச்சியை தாங்க முடியாததால் தான், எனக்கு   ஹார்ட் அட்டாக் வந்து இருக்கும். என் இதயத்தை   அவள் உடைத்து விட்டாள்”. என்ற  அரற்ற,

‘டேய் … அடைப்பு நீ சாப்பிட்ட பிரியாணியும், குடித்த சிகரெட்டும் தான்டா காரணம்’ என்று நினைத்து,

 

“ஏன் உன் காதலி போய்ட்டா” என்று 

 கேட்க,

மூன்று வேளையும் பிரியாணி சாப்பிடுவானாம் .அவளால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “உனக்கு பிரியாணி செய்து போட என்னால் முடியாது. “என்று பிரேக்கப் என்று சொல்லி  விட்டாளாம்.

அதைக் கேட்டதும்,  அங்கிருந்தோர் வாயை மூடிக் கொண்டு சிரித்தனர்.

“தம்பி…. நீங்க இனிமேல் பிரியாணியும், சிகரெட்டும் தொடவே கூடாது : அப்படி இருந்தீர்கள் என்றால் உன் காதலியும் வருவாள். உன் இதயமும் தப்பிக்கும்  “என்று சீனியர் சொல்ல, அவனுக்கு இதயத்தை பற்றி கவலை இல்லை .”

“என் மஞ்சு வருவாளா..என் காதல் எனக்கு திரும்ப கிடைக்குமா”    என்று கேட்க, டாக்டர் அதற்குள் ஸ்டன்ட்  வைப்பதை தினேஷை செய்யச் சொன்னார்.

அவனும் மிகவும் கவனமாக செய்து வெற்றியும் பெற்றான்.

 

சீனியர்  டாக்டர் தினேஷை வெகுவாக பாராட்டினார்.

 

“புரொசிஜர்  சரியாக செய்து  விட்டாய்.  வெல்டன்   மை டியர்  “என்று  வாழ்த்தி கைகுலுக்கி விட்டுச் சென்றார்.

 

ஜெனியை நினைத்துக் கொண்டான். 

அவளருகில் இருந்தால்,  தன் துறையில்  பிரகாசிக்கலாம் என்று நினைத்தான்,

 

தன் அறையில் அமர்ந்துக் கொண்டு  நேற்று அவள் கூப்பிட்டவுடன், ஹோட்டலுக்கு  சென்று அவளை தன் தன்  பைக்கில் அமர வைத்து , பாய் அத்தா கடையில் சாப்பிட்டது.  

சாப்பிட்டவுடன், வீட்டிற்கு போகாமல்  பீச் ரோடில் பைக்கில்  அப்படியே நெடுந் தூரம் போனது…இப்படி  மகிழ்ச்சியாக ஜெனியுடம் நேரம் செலவழித்ததை நினைத்து இதயத்திற்கு  வலு சேர்த்தான்.

 

அதற்குள் பேஷண்ட்ஸ் வர ஆரம்பிக்கவே,

தன் வேலையில் உற்சாகமானான்.

 

………………….…

 

ஜெனியால், திங்கட்கிழமை காலையில்  எழுந்திரிக்க வே முடியாமல் படுத்து இருந்தாள்.

தினேஷுடன் இருந்தது .பைக் ரைட் போனது எல்லாம்  உள்ளத்திற்கு மகிழ்ச்சி கொடுத்தாலும், உடம்பு அடித்து போட்டாற் போல் அசதியாக இருந்தது.

 

அமலாவும்  வரவில்லை. அவள் இல்லாமல் ஆபீசுக்கு போக பிடிக்கவில்லை.

ஒர்க்  ப்ரம்  ஹோம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, தன் லேப்டாப்பை எடுத்து ஒரு மீட்டிங்கை மட்டும் அட்டெண்ட் செய்தாள்.

 

இவள் முகத்தில் தெரிந்த அசதியை பார்த்து விட்டு  அவளின் மேலதிகாரி லீவில் போகச்  சொன்னார்.

 

அவ்வளவுதான். லேப்டாப்பை மூடி விட்டு, தினேஷ்க்கு மெஸேஜ்  செய்தாள்.

“. ஹாய் ஐ யம் நாட்வெல்.. ஆபீசுக்கு வரவில்லை.”

“ஈவினிங் அவன்,  இவள் ஆபீசிற்கு வருவதாக சொல்லி இருந்தான்.

அதனால் செய்தியை தெரிவித்தாள்.

உடனே  லைனில் வந்தான்.

அக்கறையாக என்னவென்று கேட்டு,  “நான் வந்து பார்க்கவா “ என்றான். 

 

“வேண்டாம் பா”…

 

“ஒரு டாக்டராக வருகிறேன். ப்ளீஸ். டா . உனக்கு உடம்பு சரியில்லை”. 

“சரி. வா .ஆனால் ஜாக்கிரதை . வீட்டில் நிலமை சரியில்லை. நீ டாக்டர். நான் பேஷண்ட். அந்த நினைப்பு மட்டும் இருக்கட்டும்.”

“ஓகே. ஒகே. என் புரபஷன்   அது.  நடிக்க  வேண்டிய  அவசியமில்லை. ஜஸ்ட் உன்னை பார்த்துவிட்டு,  ஒரு மருத்துவ முத்தம் கொடுத்து விட்டு போய்விடுகிறேன்.”

“டேய்….ய்”…..…

 

மாலை 6 மணிக்கு கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் வந்தான்.

 

ராஜம்மா கதவை திறந்தார்.

‘இந்த தம்பி தானே நேற்று  ஜெனிபாப்பாவை வீட்டில் பைக்கில் விட்டது.’

 

ஹாலில் மது ,சோபாவில் தலை சாய்த்து, கண்மூடி இருக்க பணிப்பெண் ஒருவர் அவளை  தலையை மசாஜ் செய்துக்கொண்டு  இருந்தாள். 

 

தினேஷ் உள்ளே வந்ததும்,,அங்கு இருந்த மதுவை பார்த்து  “நீங்கள் தானே  ஜெனி.  உடம்பு சுகமில்லை என்று எங்கள்   மருத்துவமனைக்கு போன் வந்தது. சீனியர் என்னை அனுப்பி வைத்தார். உங்களுக்கு என்ன உடம்புக்கு” என்று கேட்க,

“ நானில்லை. ஜெனி மேல இருக்கிறாள்.  போய் பாருங்கள் “ என்றதும்,

“ஓ.– ஸாரி.”.

 

படிக்கட்டில் மேலேறினான்.

 

கதவை தட்டி  உள்ளே நுழைந்ததும், அவள் படுக்கையில் முடியாமல் படுத்து இருந்தாள்.

 

அவளை பார்த்ததும் பதற்றத்துடன் கண்ணம்மா.  “என்னடா இப்படி இருக்க, நான்  இங்கு  வரும் வரை கூட இவ்வளவு முடியாமல் இருப்பாய் என்று 

நினைக்கவில்லை.”

மளமளவென்று ஸ்டெத் வைத்து டெஸ்ட் செய்து. வாயில்  தர்மமீட்டரை வைத்து பார்த்தான்  . கையோடு  எடுத்து போயிருந்த மாத்திரைகளை போட தண்ணீர்   தேடினான். இல்லையென்றதும் கீழே போய் ராஜம்மாவிடம் வாங்கி  மாத்திரைகளை  போடும் முன், “எதாவது சாப்பிட்டாயா” என்று கேட்க “இல்லை” யென்றாள்.

  

அதற்குள் ராஜம்மாவே  கஞ்சியுடன் மேலே வந்தாள்.

டாக்டர் தம்பி. பாப்பா எதுவும் சாப்பிட மாட்டேங்குது.

 

முதலில் கஞ்சிய கொடுங்கள். ஹைபீவராக இருக்கிறது. எதாவது சாப்பிட்டு தான் மெடிசன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

“நான் கொடுத்து  விடுகிறேன”என்றதும்,  ராஜம்மா கீழே இறங்கி போனாள்.

 

அவன் கைகளை இறுக பிடித்துக் கொண்டாள். திரும்ப படுத்து  அவன் கைகளை தன் கன்னத்தில்  மீது பதிந்து வைத்துக் கொண்டாள்.அவளின்  மிருதுவான கன்னம்  சுட்டது.

இவனுக்கு நெஞ்சம் சுட்டது.

 

மெல்ல அவளை  தூக்கி, தலையணையில் சாய்த்து  கொஞ்சம் கொஞ்சமாக கஞ்சியை புகட்டினான்.

 

மெடிசனையும் அவள் வாயில் போட்டு  தண்ணீரை குடிக்க வைத்தான்.

 

மெல்ல ஜெனியை படுக்க வைத்தான்.

 

“இந்த மெடிசன் நல்லா தூக்கம் வரும்”.

 

“சரி. நீ போ நான் தூங்கி விடுவேன்.”

 

“நான் இங்கேயே இருக்கேன். உன்னை கவனிக்க யாருமில்லை போல இருக்கே, 

“கீழே இருப்பது உன் அண்ணி . நான் வந்தும்  கூட,அவர் கூட மேலே வரவில்லை. அம்மாவையும் காணோம்.”

 

“ராஜம்மா இருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார்”  என்று  பலஹீனமான குரலில் சொல்லவே,

“எனக்கு உன்னை இப்படியே விட்டு போக மனசையில்லை..”

“போய் தானே ஆகவேண்டும்.”

 

“உன்  கையால் கஞ்சியையும், மெடிசனையும் கொடுத்து இருக்க.  சரியாகிவிடும். நீ வீட்டிற்கு போ”.

“ஏண்டா, என்னை போ போ என்கிறாய்.

“உனக்கு எதுவும் பிரச்சனை வரக்கூடாது.”அதனால் தான் சொல்கிறேன்.”

ராஜம்மாவை இண்டர் காம் மூலம் மேலே வருமாறு கூப்பிட்டாள்.

அவர் வந்ததும்,தினேஷ் அவரிடம், இரவு போடுவதற்காக மாத்திரைகளை கொடுத்தான்.

 

“வெறும் வயிற்றில் மட்டும் இதை  போடவே கூடாது.”

தர்மா மீட்டரையும் கொடுத்து, இரவு ஒரு முறை பார்த்து எனக்கு  சொல்லவேண்டும் என்று  சொல்லி  தன் நம்பரையும் கொடுத்து விட்டுச். சென்றான்.

 

அவளுக்கு எந்த டிஸ்டபென்ஸும் இருக்கக் கூடாது என்று ஜெனியின் போனை ஆப் செய்து விட்டுச் சென்றான்.

 

கீழே  போகும்போது, கூட மது அங்கேயே இருந்தாள்.

ஒரு வார்த்தை கூட  ஜெனிக்கு என்னவாயிற்று என்று கேட்கவில்லை.

 

இவன் வெளியே சென்ற போது, ஜெனியின் அண்ணன்  முரளியின்  கார் உள்ளே வந்தது.

 

“யார்  இவன்.  எதற்காக  வந்துள்ளான்.”’

 

உள்ளே போனதும்,மதுவிடம் கேட்க, 

 

“வந்தவன் டாக்டராம். உங்க தங்கச்சிக்கு உடம்பு சரியில்லை என்று  அவள்  ஆபீஸில்   அனுப்பி வைத்தார்கள்.

 

“என்னது”…….. 

 

“ஜெனிக்கு உடம்பு சரியில்லையா”…..?

 

அவனை ஏறிட்டு பார்த்தாள

 

“அப்படித்தான்  நினைக்கிறேன்” என்று  

அலட்சியமாக சொன்னாள்.

தட தடவென்று மேலே போனான்.

 

“ஜெனிமா”..என்று கூப்பிட ராஜம் வெளிப்பட்டு “இப்போது தான் மாத்திரை சாப்பிட்டு  பாப்பா தூங்குது.”

 

அவள் நெற்றியில் கைவைத்து பார்த்தான்.

 

நெருப்பாக சுட்டது.

 

தன் குடும்ப டாக்டரை வரவழைத்தான்.

 

அவர் வந்து  தினேஷ் கொடுத்த  மாத்திரைகளை பார்த்தார்.

 

“வெரிகுட்  நான் வந்தாலும் இதே இதேதான் கொடுத்து இருப்பேன். இதையே கன்டினியூ பண்ணச் சொல்லுங்கள்.”

 

“டோன்ட் ஒர்ரி. சரியாகி விடும். வைரல் பீவர் தான். ஜாக்கிரதையாக இருக்கணும்  இப்போது சென்னையில் பரவலாக காணப்படுகிறது’”.

 

ராஜம்மாவிடம்   “ஜெனியை கண்ணும் கருத்து மாக பார்த்து  கொள்ள வேண்டும். அவனை கவனித்தால் மட்டும் போதும். சமையலுக்கு நான் வேறு ஏற்பாடு செய்கிறேன்.” என்று சொல்லிவிட்டு சென்றான்.

 

……………………

அமலா நிலம் ரெஜிஸ்ட்ரேஷனுக்காக

தன் அம்மா ,அப்பத்தாவுடன் திருநெல் வேலி  சென்றாள்.

 

ஜங்ஷனில் ரயில் நின்றதும், அம்மா  ஆச்சியின் கையை . பிடித்துக் கொண்டு, பத்திரமாக இறக்கி விட்டார்.

அமலா  அவர்களின் பைகளை சுமந்துக் கொண்டு கீழறங்க,  ஒரு வலுவான கை  

அவள் பைகளை வாங்க நீட்டியது.

 

யாரென்று பார்க்க, அப்பாவின் அக்கா மகன்  கதிர்  மாமா.  

“ஹை சிங்கம் மாமா” என்று சொல்லவதற்குள் நாக்கை கடித்துக் கொண்டு  ‘கதிர் மாமா”.. என்றாள்.

அவரின் தலை முடியை சிங்கம் பிடரி போல்  வைத்து இருப்பார்.

ஆனால் ,அப்படி இல்லாமல் ஸ்டைலாக இருந்தார்.

 

அமலாவை விட நான்கு வயது மூத்தவன்.  

 

வா, போ  என்று மரியாதை யில்லாமல் கதிர் மாமாவை  கூப்பிட்டால்,அத்தை அப்படியே  இரத்தம் வர கிள்ளிவிடும்.

 

கார் எடுத்து வந்திருந்தார்.

 

திருநெல்வேலியிலிருந்து சுத்தமல்லி கிராமம் 10 கி.மீ தொலைவில் இருக்கும்.

எப்போது போனாலும் பஸ் பிடித்தே போவார்கள். கல்லூரி சேர்ந்த மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக போனாள்.

கடைசி வருடமும் IT வேலை யில் சேர்ந்த பிறகு போவதில்லை. 

கதிர் மாமாவிற்கு ஒரு அண்ணன்  முத்து இருக்கிறார். அவர் அமலாவை விட , 8 வயது மூத்தவர். அவரிடம் பேச பயம். அவருக்கு   ஆக்ஸிடென்ட் ஆனது என்று ஆச்சி போய் பார்த்துவிட்டு வந்தார்.

 

அங்கு ஒரு அணைக்கட்டு இருக்கும். சுத்தமல்லி  கிராமத்தில் ஒதுக்குப் புறத்தில் பச்சை பசேல் வயல் பகுதிகளுக்கு நடுவில்  கிராமத்திற்குள் இருப்பதால்   அந்த அணைக்கட்டில் அமைதியான சூழல்  நிலவுகிறது..

ஆற்றின்  நடுவே ஒரு சிறிய மலைக் குன்று உள்ளது. அந்த  குன்றின் மீது மலைக் கோவிலும் உள்ளது.

 

இவள் +2 படிக்கும் போது, நன்றாக பரீட்சை எழுத வேண்டும் என்று வேண்டிக் கொள்வதற்காக, கதிர் மாமாவின் சைக்கிளில்  அமர்ந்து சென்று இருக்கிறாள்.

அப்போது, யாருமில்லா அந்த தனிமையை பயன்படுத்தித் கொண்டு இவளை கதிர் முத்தமிட்டான்.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page