பாகம் 8
8..அவளை மறக்கத்தான்.
குன்றின் மேலிருக்கும் கோவிலுக்கு அமலாவும்,கதிரும் சென்றார்கள். இவர்கள் போன நேரம் ஒருவரும் இல்லை.
இரட்டை ஜடை, முன்னால் இருக்க, பட்டு பாவாடை, தாவணியுடன் அம்சமாய் இருப்பவளை பார்த்தான்.
“மாமா.”.
“சொல்லுடி”……
“எக்ஸாம் நல்லா எழுதணும். 98% வாங்கணும். சென்னையில் நல்ல கல்லூரியில் சேர வேண்டும். “ இதெல்லாம் நான் கடவுளிடம் வேண்டப் போகிறேன்.”
“இது சக்தி வாய்ந்த கோவில் என்று நமக்கே தெரியுமே” என்று அவள் வாயை குவித்து பேசுவதையே கண் கொட்டாமல் பார்த்தான்.
என்ன நினைத்தானோ, தீடீரென்று அவளை கட்டியணைத்து முத்தம் கொடுத்து விட்டான்.
எதிர்பாரா முதல் முத்தத்தில் அதிர்ச்சியானாள்.
நெகிழ்ந்தாள் .
“விடுமாமா.”. என்று சொல்ல கூட முடியாமல், அவனின் செயல் இருந்தது.
பிறகு விடுவித்தான்.
“ஸாரிடி. உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும்.”
மேலேறி போகாமல், தடதடவென்று கீழறங்கி ஓடினாள்.
கார் அந்த குன்றை தாண்டி போகும் போது , அவளைப் பார்த்தான்.
இவளுக்கும் அவனைப் பிடிக்கும். அன்று நடந்ததை வீட்டில் ஒருவருக்கும் சொல்லவில்லை
சாமிக்கிட்ட வேண்டிக்காமல் பரீட்சை
எழுதினாள். அது மட்டும் அவள் மனதை உறுத்தியது.
அவள் கேட்ட வரத்தை கடவுளும் கொடுத்தார்.
இவள் சென்னையில் படிக்க வந்துவிட்டாள்.
இரண்டு வருடங்கள் இவளை காண, ஆச்சியை அழைத்து போக சென்னை வருவான்.
. அவனும், அவன் அண்ணனும் சிங்கப்பூரில் வியாபாரம் செய்ய சென்றார்கள். அதன் பிறகு அமலா அவனை பார்க்கவில்லை.
அப்பா இல்லாமல் இவர்களின் வாழ்வாதாரம் மோசமாக இருந்தது. அத்தை விசாலம் செல்வ செழிப்புடன் இருந்தார்.
இவளும், கதிரைப் மனதில் வைத்து இருந்தாள். ஆனால், . அத்தை யின் குணம் தெரியும். பெயர் தான் விசாலம். குணம் விசாலமாக இருக்காது. பணம் இருந்தால் தன் வீட்டுக்கு வந்தங்களுக்கு தண்ணீரே கொடுப்பார்.
கதிர் மாமா கண்டிப்பாக என்னை விடமாட்டார்., அப்போது பார்த்துக் கொள்வோம் என்று தன் மனதை அடக்கி வைத்து இருந்தாள்.
ஆச்சியும், அம்மாவும் அவனிடம் பேசிக் கொண்டே வந்தார்கள்.
இவளும் பேசவில்லை. அவனும் இவளை எதுவும் கேட்கவில்லை.
கார் நேராக சித்தப்பா வீட்டிற்கு சென்றது.
அவர்களை இறக்கிவிட்டு, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றுவிட்டான்.
அம்மாவிடம் “நிலம். பதிவு இன்றே முடிந்து விடும்மா. நாம் நாளை சென்னை போகலாம்” என்று சொல்வதை சித்தப்பா கேட்டு விட்டார்.
“என்னம்மா அமலா உனக்கு இந்த ஊர் பிடிக்க வில்லையா. இங்கு தானே பிறந்து வளர்ந்தாய். சென்னை போனதும், எல்லாவற்றையும் மறந்து விட்டாயா.”
‘ஐய்யோ.. சித்தப்பா. எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிக்கும். அதைவிட உங்களை, சித்தியை ரொம்ப பிடிக்கும்.
என்ன செய்வது. வேலை ஒன்று இருக்கே. லீவு கிடையாது” அப்படி சொல்லும் போதே சித்தி, கழுத்தை ஒரு வித முகசுளிப்புடன் வெட்டிக் கொண்டு போனாள்.
சித்தப்பா ஒன்றும் அவ்வளவு நல்லவரில்லை. அப்பா இருக்கும் போதே அவரை உதாசீன படுத்தியவர். அப்பாவின் வெகுளித்தனமே ஏளனமாக பார்க்கப்பட்டது.
காலை உணவாக இட்லியை எண்ணி மூன்று வீதம் சித்தி வைத்தாள். மறுபடியும் கேட்காதே என்பது போல் இட்லி இருந்த பாத்திரத்தை உள்ளே எடுத்து சென்று விட்டார். மறுபடியும் வெளியே வரவே யில்லை.
அம்மாவை ஒரு பார்வை பார்த்தாள்.
அம்மா பரிதாபமாக முழித்தார்.
அமலா அதைப் பற்றி பெரிதாக நினைக்கவில்லை.
கதிர் மாமா முகம் கொடுத்து பேசாமல் போனது என்னவோ மாதிரி இருந்தது.
அவர் கொடுத்த முத்தத்தின் ஈரம் காயாமல் மனதின் ஓரமாக இருந்தது.
அவர் வாங்கி கொடுத்த ரிப்பன் க்ளிப், கோலாபூரி செருப்புகள் என்று இன்றும் அவளிடம் பத்திரமாக இருக்கு.
ஆனால்,அவள் அத்தையை நினைத்து, தன் நினைப்பை மனதிலே இருத்தி இருக்கிறாள்.
‘கதிருக்கு இப்பவும் என்னை பிடிக்குமா’ என்று கேள்வி அவளிடம் இருந்தது.. அவன் பாரா முகத்தை பார்த்தால், அவள் மனது சங்கடப்பட்டது.
அவன் நினைப்பை ஒதுக்கி விட்டு, சித்தப்பாவிடம் எப்போது ரெஜிஸ்டிரேஷனுக்கு போக வேண்டும்”. என்று கேட்க, அவளை பார்த்து எதுவும் சொல்லாமல் தன் அண்ணியிடம், “அண்ணி , அக்கா வீட்டுக்கு போகிறோம். அங்கு வைத்து சில விஷயங்கள் பேசிவிட்டு, பத்திரபதிவு
அலுவலகத்திற்கு போவோம்.”
‘இது என்ன புதுகதை.’.
அவர்கள் வீட்டுக்கு ஏன் போக வேண்டும். ரொம்ப தூரத்தில் இல்லை. ஒரே கிராமத்தில் வாக்கப்பட்டவர் தான்.
போய் பார்ப்பது தப்பில்லை. அவமான படுத்துவார். ஏளனமாக பேசுவார். அப்போது, சகித்துக் கொண்டோம். அத்தை என்ற மரியாதையும், பயமும் இருந்தது…அதுவும் ஒரு அளவுக்குத்தானே…
அம்மாவும், தன் நாத்தனாரைக் கண்டால், பயந்து நடுங்குவார்.
எப்போதும் 50,60 பவுனுடன் தான் வலம் வருவார்.
இந்த சித்தப்பா மனைவி, கொஞ்சம் பெரிய இடம். அதனால், இருவரும் ஒட்டிக் கொண்டார்கள்.அம்மா வீட்டில் பணவசதி இல்லை. அதனால் அவர் களுக்கு கிள்ளு கீரையாக இருந்தோம்.
எவ்வளவு தான் ஆச்சியை கண்ணும் கருத்துமாக அம்மா பார்த்துக் கொண்டாலும்,ஆச்சி தன் பெண் பேச்சை தட்ட மாட்டார்.
சித்தப்பா சொல்லிவிட்டு,சித்தியை , அதைத்துக் கொண்டு போய் விட்டார்.
அம்மாவிடம் ரகசியமாக “எதற்கு அம்மா அத்தை வீடு போக வேண்டும். நேரமாகாத. நிலத்தை வாங்குற பார்ட்டி பணம் கொடுத்தால் பேங்கில் போட வேண்டும். கையில் எடுத்துக் கொண்டு போக முடியாது. நம் பங்கு எவ்வளவு வரும்.”
அம்மா கையை பிசைந்தாள். “தெரியலடி. உன் கையெழுத்தும், என்னோடதும் இல்லாமல் விற்க முடியாது அல்லவா. அதற்காகவது கொடுப்பார்கள்.”
“என்னம்மா… இப்படி இருக்கிற. நம் உரிமை தானே அது. “
“இவர்களிடம் இந்த குடும்பத்தில் அதெல்லாம் செல்லுபடியாகாது. எப்படியோ, நம்மை நிம்மதியா இருக்க விட்டா போதும். “ என்று சொல்லி பெருமூச்சு விட்டாள்.
அமலாவிற்கு அத்தை வீடு என்றதும் உதறல் எடுத்தது.
சித்தப்பா மறுபடியும் வந்து எல்லோரையும் கிளம்பச் சொன்னார்.
கிளம்பினார்கள்.
முன்ன இருந்த மச்சு போடல்லாம் இப்போது கான்கிரீட் வீடாக மாறி இருந்தது.
ஆற்றின்ஓடும் நீரின் சலசலப்பு கேட்டுக் கொண்டே இருந்தது. குளிர்ச்சியாகவும் இருந்தது.
நான்கு தெருவை கடந்து., நீளமான மைதானத்தை சுற்றி போனால் அத்தை வீடு வரும்.
ஆச்சியை சித்தப்பா தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார்.
அமலா தன் அம்மாவுடன் நடந்தாள்.
அம்மாவை பார்க்க பாவமாக இருந்தது –
தெருக்களில் நடக்கும் போது சில பரீட்சயமான முகங்கள் தென்பட்டது.
யாரு… என்று புருவத்தை உயர்த்தினார்கள்.
நான்கு ஐந்து வருடத்தில் மறந்தா போயிருப்பார்கள்.
என்ன ஆச்சி, செளக்கியா, என்று சிலரையும்,அண்ணி, அக்கா என்று உறவு முறையில் பலரையும் விசாரித்தப்படியே அம்மாவுடன் நடந்தாள்.
பார்ரேன். மெட்ராஸுக்கு போய் பளபளப்பா வந்து இருக்கு. ன்று பின்னால் பேசினார்கள்’
எட்டி நடையை போட்டார்கள்.
அத்தை வீடு தூரத்திலிருந்து பார்த்தாலே, புதுசா பெயிண்ட் அடித்து பளபளவென்று தெரிந்தது.
இவர்கள் போகும் போது ஒரு மாடியுடன் இருந்த வீடு, இப்போது மூன்றவது அடுக்குடன் காணப்பட்டது.
பக்கத்திலே மாட்டு தொழுவம் இருந்தது.
அது இப்போது இல்லாமல், அத்தை வீடுடன் சேர்க்கப்பட்டு அழகான பசுமை லானாக மாற்றப்பட்டு இருந்தது.
வீட்டிற்குள் போனதும், அத்தையே.
“வா உமா..வா மருமகளே” என்று வரவேற்றார்.
அதிசயமாக இருந்தது.
அதைவிட அதிசயம் மோர் பணிப்பெண் மூலம் கொடுத்தார்கள்.
“அண்ணிசெளக்யமா” என்று அம்மா கேட்க,” எதோ இருக்கேன்மா.தம்பி போன இடத்துக்கே நான் போய் சேர நாள் ரொம்ப தூரத்தில் இல்லை.”
“ஐய்யோ அண்ணி, ஏன் இப்படி பேசுகிறீர்கள்” என்று அம்மா சொல்ல,
“ உட்கார் “என்றார்.
அமலாவின் கண்கள் கதிரை தேடியது..
சுவற்றில் கதிரின் போட்டே இருந்தது.
சிங்கம் பிடரி முடியெல்லாம் மழித்து அண்டர் கட்டிங் தலையுடன் அழகாக காட்சி யளித்தான்.
ஒரு முறை தன் கண்களை அதில் பதித்து விட்டு கண்களை தாழ்த்திக் கொண்டாள்.
மாமா வந்தார்.
எழுந்து நின்றோம்.
“வாம்மா “
என்று அம்மாவையும், அமலாவையும் பார்த்து கூப்பிட்டார். இதுவும் அதிசயமே
அவரும் ஜாடிக்ககேற்ற முடி .
எதோதோ பேசினார்கள்.
மதிய உணவு தடபுடலாக இருந்தது. இருந்தது.
யாராவது அத்தையை மந்திரித்து விட்டார்களா.. அசத்தி விட்டாரே. சரியான கவனிப்பு இன்னும் வைத்துக் கொள். இந்த வயதில் சாப்பிடாமல் எப்போது சாப்பிடுவது என்று சொல்லி சொல்ல உணவு பதார்த்தங்களை வைத்தார்.
நடுவில் சித்தியை ஒரு முறை பார்த்தாள்.
சாப்பிட்டு முடித்தவுடன் சித்தப்பாவிடம் “பத்திரம் கொடுங்கள். . கையெழுத்து போட்டு விடுகிறோம். நாங்கள் இன்றிரவே சென்னை கிளம்ப வேண்டும்.”
“எந்த பத்திரம்.”
“நிலத்தை விற்று எங்கள் பங்கை தரப்போகிறீர்கள்” அன்று ஆச்சி சொன்னாரே.
“ஓ…அதுவாi”என்று அலட்சியமாக சொல்ல,
அதிர்ந்தாள்.
“பின் ஏன் எங்களை வரச் சொன்னீர்கள்”.
“காரணம் இருக்கு.”
“என்ன”?. என்று புரியாமல் விழித்தாள்.
“என்ன முழிக்கற ,எல்லாம் உன் அத்தையே சொல்வார்.”
அத்தை கூடுதல் எடையுள்ள தங்க நகைகளுடன் அசைந்தபடி வந்தார்.
“என்ன கேட்கிறாள் என் மருமகள்.”
“நீயே கேளுக்கா” என்று சித்தப்பா சொல்ல,
அமலாவை ஏறிட்டு பார்த்தார்.
அப்படி பார்த்ததும் பயத்தில் நா எழவில்லை.
“பயப்படாமல் சொல்லு”.
“அத்தை… நிலம் விற்று பணம்” என்று கோர்வையாக இல்லாமல் தயங்கியபடி, திக்கித் திணறி வார்த்தைகள் வர,
“புரியுது மருமகளே.”
இதன்ன வாய்க்கு வாய் மருமகளே என்கிறார்.
“இப்போ அந்த நிலம் என் கஸ்டடியில் இருக்கிறது.”
‘இதென்ன வம்பா இருக்கு’ என்று உமா வாயின் மேல் கை வைத்தார்.
“இருக்கட்டும் அத்தை. அதை விற்று பணம் தருவதாக சித்தப்பா சொன்னார்”.
“அவன் எப்படி விற்க முடியும். அந்த பத்திரத்தை என்னிடம் அடமானம் வைத்து, பணம் வாங்கிக் கொண்டு அவன் ஒரே பெண்ணை வெளிநாட்டில் படிக்க அனுப்பி இருக்கானே.”
‘அதெப்படி, எங்கள் கையெழுத்து இல்லாமல் அடமானம் வைத்து, அவர் மட்டும் பணம் வாங்க முடியும் “என்று தைரியமான கேட்க,
மேலும்,” அதில் வந்த வருமானத்தை இதுவரை எங்களுக்கு கொடுத்தது இல்லை. அதையும் நாங்கள் கேட்கவில்லை. இப்போது நிலமும் இல்லை. இருந்து விட்டு போகட்டும்.”
.அத்தை சித்தப்பாவை பார்த்து
படித்த பெண் இப்படித்தான் கேட்கணும்.
அமலாவை பார்த்து ,”இங்க எல்லாமே சாத்தியம் “.
“சரிங்க அத்தை நாங்க கிளம்புகிறோம்.”
தன் அம்மா உமாராணியிடம்,அம்மா இதுவரை நாம் எப்படி பிழைத்தோமோ அப்படியே வாழலாம். இவர்களே அந்த நிலத்தையும் வைத்துக் கொள்ளட்டும்.
நீங்கள் கூப்பிட்டதால் வந்தோம். உங்களையெல்லாம் பார்த்ததில் மகிழ்ச்சி.” என்று கை கூப்பினாள்
“இரும்மா’…
‘இப்படி அவசரப்பட்டால் எப்படி.”
“அந்த நிலம் முழுவதும் என் மருமகளுக்குத் தான் சொந்தம்.”
தொடரும்.
.
