பாகம் 9 அவளை மறக்கத்தான்.
நிலத்தில் எப்படியும் பணம் வரும். அதை வைத்து அம்மாவுக்கு சொந்தமாக பிளாட் வாங்க வேண்டும். ஆபீஸில் லோன் போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தாள்.
ஜெனியும், தன் அப்பாவிடம் சொல்லி “உனக்கு நல்ல இடத்தில் பிளாட் பார்க்கலாம்” என்றாள்.
‘இப்போது, அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
அத்தையோ அந்த நிலம் என் மருமகளுக்குத் சொந்தம் என்றாரே.
முத்து மாமாவிற்கு திருமணமாகிவிட்டதா.
திருமணம் என்றால் ஆச்சி சொல்லி இருப்பாரே. இவர்கள் கூப்பிட வாய்ப்பு இல்லை. ஆனாலும், அவரும் எங்கேயும் போகவில்லையே.
பின்னே யாராக இருக்கும்..’
அத்தை விசாலம், “என்ன மருமகளே யோசனை பலமாக இருக்கிறது.”
உமாராணி தன் நாத்தனாரிடம் யார் மருமகள். முத்து தம்பிக்கு திருமணமாகிவிட்டதா என்று வெகுளியாக கேட்க,
“யாரிடி இவளே. உங்களுக்கு தெரியாமல் என் புள்ளைக்கு கல்யாணமாம். அதெப்படி நடக்கும். என் தம்பி இல்லேனா,என்ன..நீங்கள் உறவு
இல்லையா “ என்று நல்லவிதமாக பேச,
பின் யார் என்பது போல பார்க்க,
“வா மருமகளே..” என்று அழுத்தம் கொடுத்து சொன்னாள்.
‘என்ன சொல்கிறார்’.
“உடைத்தே சொல்கிறேன்” என்று விசாலம் முன்வர, “நீ தான் மருமகள்” என்றும், இவளுக்கு வானத்தில் றெக்கை கட்டி பறப்பது போல் இருந்தது.
கதிர் மாமா வீட்டில் சொல்லி விட்டாரா!!”…
அதனால் தான் சஸ்பென்ஸ் வைத்து பேசாமல் இருந்தார் போலும். நான் ஒரு மக்கு. அதை புரிந்துக் கொள்ளவில்லை.மனதில் நினைத்த வரையே திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். என் மாமா என்னை பிடிக்கும் என்று சொன்னது உண்மை தான் போலும்: அதையும் அத்தையிடம் சொல்லி ஒப்புதலும் வாங்கி விட்டார்.
அதெப்படி அத்தை ஒப்புக் கொண்டார். அந்த ரகம் இல்லையே. என்று சந்தேக கண்ணோடு விசாலத்தை பார்க்க , முகமெல்லாம் சிரிப்பாக. வாடா என்று கை நீட்டி அழைத்தார்.
தலையில் பூ வைத்து விட்டார்.
தன்னையே கிள்ளிக் கொண்டாள்.
தம்பி மகள் என்று சிறுவயது முதல் தூக்கினதும் இல்லை. கொஞ்சினதும் இல்லை….
இது என்ன மேஜிக்.
வந்தலிருந்து முத்து மாமா,கதிர் மாமா இருவரையும் காணோம்.
கதிர் மாமாவிடம் பேச வேண்டும் போலிருந்தது.
மாமாவிற்காக அத்தையை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். அம்மாவையும கூடவே வைத்துக் கொள்ளலாம். ” என்று அவள் மனம் வேகமாக எண்ணியது.
“கதிர் மாமா எங்கே “…? என்று தரையை பார்த்து கேட்டாள்.
அமலா கேட்டதும், “கதிர் வாப்பா . உன் மாமி, அமலா வந்து இருக்காங்க “.
மேலிருந்து படிக்கட்டில் மெல்ல இறங்கி வந்தான்.
கருப்பு தங்கமாய் வெள்ளை வேட்டி,சட்டையில் இறங்கி வந்தான்.
முகத்தில் நாணமும்,இந்த வீட்டு மருமகள் என்ற அந்தஸ்து தந்த அதிர்ச்சியுமாய், அவன் இறங்கி வரும் அழகை .அவனை முழுவதுமாக பார்க்க முடியாமல், நாணம் தடுக்க , ஒருவருக்கும் தெரியாமல் தன் காதல் பார்வையை அவன் மேல் செலுத்தினாள்.
அவன் அருகே வர, வர, அமலாவின் நெஞ்சம் தடக்’தடக் என்று அடித்துக் கொண்டது.
“இதென்ன நெஞ்சே… காலையில் அவரை பார்க்கும் போது, கூட இப்படி துடியாய் துடிக்கவில்லையே. இப்போதுஎன்னவாயிற்று உனக்கு. திருமணம், அதுவும் எனக்கு ஆழ்ந்த முத்தத்தை கொடுத்து என்னுள் அவனை உணரச் செய்த கதிருடன் என்றதும், மகிழ்ச்சியில் தடதடக்கின்றாயா” என்று தன் இதயத்தை கேட்டுக் கொண்டாள்.
அமலா அவனை ஓரக்கண்ணால், வெட்கத்துடன் பார்த்தாள்.
“வாங்க மாமி,” என்றான்.
தன் கண்களை நேராக பார்ப்பான் என்று நினைத்தாள்.
ஏமாற்றமே மிஞ்சியது
அத்தை இருப்பதால், அடக்கி வாசிக்கிறான் என்று நினைத்தாள்.
இருக்கட்டும், இத்தனை வருடங்களாக பேசாமல இருந்தற்கும் இப்போது நடந்து கொள்வதற்கும் அவனிடம் திகட்ட திகட்ட காதல் புரிவேன் என்று மனதிற்குள் நினைத்த வுடனே,
“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டி”
என்று அன்று குன்றின் மேல் சொன்னது காதில்,மனதில் எதிரொலிக்க , கதிரை காதல் கொள்ளும் கண்களோடு பார்க்க ,
அத்தை “உன் அண்ணியை முத்துவிடம் அழைத்து போப்பா என்றதும்,
அதல பாதாளத்திற்குள் அத்தையும், கதிரும் சேர்ந்து தள்ளி விட்டது போல்,
அலறி மயக்கம் போட்டு விழ, பதறி ஓடிச் சென்று கதிர் அவளை கீழே விழாதவாறு தாங்க, உமா அவளை மடியில் இருத்திக் கொண்டாள்..
பணிப்பெண் கொண்டு வந்த தண்ணரை தெளித்தவுடன், மெல்ல கண் திறந்தாள்’.
“டிரெயினில் வந்த களைப்பு போலும்.
ஓய்வு எடுத்தால் சரியாகும். உமா அவளை அழைத்துக் கொண்டு அந்த அறைக்கு போ. அங்கே போய் ஓய்வு எடுங்கள்”
பணிப்பெண்ணிடம். “அவளுக்கு சூடாக பால் கொடு” என்று சொல்லிவிட்டு, அத்தையும்,கதிரும் போய் விட்டனர்.
அத்தை என்ன சொன்னார் . “அண்ணியா, ஐய்யோ. ……காதில் யாரோ திராவகத்தை ஊற்றுவது போல் இருக்கே, ஏன் கதிர் மாமா உனக்கு இது கஷ்டமா இல்லையா என்னை பிடிக்கும் டி என்று மூச்சுக்கு முந்துறு தடவை சொல்லுவியே.. அது மறந்து போச்சா அல்லது இப்போது பிடிக்கவில்லையா” என்று அவனை கேட்க வேண்டும் போல் இருந்தது.
அம்மாவின் அடக்குமுறைக்கு பயந்து விட்டான். அத்தை.மருமகளாக ஏற்றுக் கொள்ளும் மனது இருந்தால், கதிருக்கே எ ன்னை திருமணம் செய்து வைக்கட்டுமே என்று உள்மனம் கதறியது.
முடியாது. கதிரை காதலிப்பதை சொல்லி விட வேண்டும் .முத்து மாமாவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வாழ்க்கை முழுவதும், பயத்தில் வாழ முடியாது. மனது முழுக்க கதிர் இருக்கிறான் . அவன் அண்ணனுக்கு எப்படி மனவியாவது.
பணிப்பெண் பாலை கொடுக்கும் போது , நீ மிகவும் பாவம்” என்றார்.
“என்னது என்ன சொன்னீர்கள்” என்று கேட்க, திரும்பி பாராமல் போய்விட்டார்.
பாத்ரூமிலிருந்து வந்த அம்மாவிடம், உடனே கிளம்பு. நாம் சென்னை போய் விடலாம். இங்கே இருக்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”
“என்ன பயமா இருக்கு. இது காடா நாங்கள் எல்லோரும் மிருகங்களா” என்று கேட்டுக் கொண்டே அத்தை வந்தார்.
அம்மா,” “ஒன்றும் இல்லை அண்ணி. மயக்கம் வந்ததில் பயந்து விட்டாள். திங்கட் கிழமை அவள் அலுவலகத்திற்கு போக வேண்டும். அதான் அப்படி சொல்லி விட்டாள் என்று சொல்ல
அவள் சொல்வதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், நாளை உனக்கு முத்துவுடன் திருமணம்:.
“என்னால் முடியாது அத்தை எனக்கு விருப்பமில் லை”. என்று தைரியமாக சொன்னாள்.
விசாலம் எதையும் இலட்சியம் செய்யாமல் புடவை கடையிலிருந்து வந்த புடவைகளை வைத்து விட்டு, எது பிடிக்கிறது என்று பார்.”என்று புடவைகளை அங்கு வைத்து விட்டுச் சென்றார்.. சென்றார்.
“அம்மா.. இங்க என்ன நடக்குது. “
ஆச்சி எங்கே கண்ணில படவே இல்லை ..அவரை சாப்பிடும் போது பார்த்தேன்”.
பிறகு பார்க்க வில்லை.
அவர் தானே நிலம் விற்கப்போகிறோம் என்றுசொல்லி அழைத்து வந்தது.
இங்கு நம் ஒப்புதல் இல்லாமல் எதோதோ நடக்கின்றது.
முதலில் அப்பாவுக்கு பங்குள்ள நிலத்தை அத்தையிடம் அடமானம் வைத்து சித்தப்பா வே பணம் எடுத்துக் கொண்டார்.
இப்போது முத்து மாமாவுடன் திருமணம் என்கிறார்கள். அவரை கண்ணிலே காட்டவில்லை.” எதோ அசம்பாவிதம் நடக்கப் போகின்றது என்று அவளது
உள்ளுணர்வு சொல்லியது.
இந்த கதிர் மாமா இப்படி மாறி போய் விட்டாரே. அதை நினைக்கும் போது நெஞ்சம் அடைத்தது .இரத்தமெல்லாம் சுண்டியது போல் இருந்தது.
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள் .
வாம்மா.. நாம் வெளியே போவோம் .
கதவை திறந்துக் கொண்டு, வெளியே வர அடியாட்களை போல்இருவர் கதவருகிலே வழிமறித்தனர்.
மேடம். உள்ளே போங்கள். உங்களுக்கு வெளியே வர அனுமதியில்லை.
அம்மாவும் பெண்ணும் பயந்தார்கள்.
எதற்காக நம்மை கைதி போல் அடைத்து வைத்து இருக்கிறார்கள்.
ஒன்றும் புரியாமல், யாரிடம் சொல்வது என்றும் தெரியாமல் ஜெனிக்கு போன் செய்து சொல்வோம் என்று போனை தேடினாள். கிடைக்கவில்லை.
அம்மா.. உன் போன் தா . அவரோடதும் இல்லை.
ரயிலை விட்டு இறங்கி காரில் போகும் போது ரீச்சுடு என்று மெஸேஜ் மட்டும் போட்டதாக ஞாபகம். அதற்குப் பிறகு அத்தை வீட்டிற்கு வரும் போது கையில் தானே போன் இருந்தது. இப்பொழுது எப்படி, எங்கே போய் இருக்கும்.
நேரம் போனது.
இரவு வந்தது.
இரவு உணவும், அறைக்கே வந்தது.
கதிர் மாமா.. உன் வீட்டிலே நாங்கள் கைதி போல இருக்கிறோம். உன் காதல் எங்கே போச்சு. என்று மனம் கதறியது.
இரயிலில் தூங்காமல் வந்த களைப்பா அல்லது இங்கு நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியா என்று தெரியாமல், தன்னையறியாமல் நன்றாக தூங்கினாள்.
தூக்கத்தில் நடந்தது அப்படியே ரீவைண்ட் ஆக வந்தது.
கடவுளிடம் தான் கேட்க நினைத்த வரத்தை , கேட்காமல் போனாலும் அந்த அம்மன் அருளியது.
ஆம்.. சென்னையில் அண்ணா தொழிற்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்தது.
அப்பா இவள் 10வது படிக்கும் போதே இறந்து விட்டார்.
உமாராணி தன் நகையை விற்றும்,அடகு வைத்தும் ,திருநெல்வேலி துணி கடையில் வேலை செய்தும் பெண்ணை படிக்க வைத்தார்.
மகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வதில் தந்தைக்கு நிகராக இருந்தார்.
சென்னைக்கு படிக்க போவதை எதிர்த்த சித்தப்பா,” என்னது எதற்காக சென்னையில் போய் படிக்க வேண்டும். திருநெல் வேலியிலே நல்ல கல்லூரிகள் இ ருக்கே. அங்கேயே படிக்கலாம்.
தினம் பஸ்ஸிலே போகலாம். அவருக்கு அம்மாவை யார் பார்த்துக் கொள்வது என்ற கவலை..
இல்லத்தம்பி, உங்கண்ணன் ஆசையும் அது தான். மகள் விருப்பத்தை தடை பண்ண மாட்டார். இவரும் படிக்க கூடியவள். அங்கு சீட் சாதாரணமாக கிடைக்காதாமே இவளுக்கு கிடைத்து இருக்கு.”
“அப்ப செலவுக்கு என்ன செய்வீர்கள்”.
“இப்ப இருக்கிற துணிக்கடை முதலாளி அம்மா சென்னையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார் .அப்படி இல்லையென்றால் அவர்களுக்கு நகை கடை, ஜவுளி கடை . சென்னையில் இருக்கு. அங்கே வேலை பார்ப்பேன்.”
“எதோ… சொல்கிறீர்கள். சரி. ஒப்புக் கொள்கிறேன்.இருவரும் பெண்கள் தனியாக இருக்க வேண்டாம். அம்மாவையும் துணைக்கு அழைத்துக் செல்லுங்கள்.”என்றதும் ஒப்புக்கொண்டாள்.
மகளுடன், தன் மாமியாரையும் அழைத்துக் கொண்டு பயணமானார்.
சித்தி சாப்பாடு நிறைவாக போட மாட்டாள்,பிஸ்கட் பழம் எல்லாவற்றையும் அவர் பிரிட்ஜில் வைத்து பூட்டிக் கொள்வாள். வயதானவரால் பசியை தாங்கிக் கொள்ள முடியவில. அதை நினைத்து பெரிய மருமகளுடனே
இருந்து விட்டார்.
அம்மாவுக்கும் பேங்கில் அட்டெண்டர் வேலை கிடைத்தது.
தொடரும்.
.
ர்
.
