காதல் – 4
அவள் உள்ளே நுழைந்ததும் கதவை தாழிட்ட இந்தர் அவளுக்கு முன் சென்று தன் மெத்தையில் அமர்ந்து கொண்டான்.
”ஹலோ.”என்று சொடக்கிட்டு அழைத்தவளை முறைத்தான் இந்தர்.
”என்ன முறைக்கிற? சொடக்கு போட்டு கூப்பிட்டதுக்கா? உனக்கு இவ்ளோ மரியாதை போதும்! நீ பண்ண வேலைக்கு இதுவே அதிகம்.”என்றவளுக்கு பதில் கூறாமல் பற்களை கடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தான் ஆடவன்.
”உனக்கு பழி வாங்கணும்னா என்ன பழிவாங்கிருக்கனும். அத விட்டுட்டு என் வாழ்கைய ஏன்டா கெடுத்த?’ என்று காலை முதல் அடக்கி வைத்திருந்த தன் ஆதங்கத்தை கொட்ட ஆரம்பித்தாள் ஆத்வி.
”உனக்கு தெரியுமா? இன்னிக்கு காலைல இந்த உலகத்திலயே யாரு ரொம்ப சந்தோசமா இருந்தான்னு கணக்கெடுத்தா அதுல நான் தான்டா ஃப்ர்ஸ்ட் இருந்துருப்பேன். பாவி! பாவி! இப்படி என் சந்தோஷம் மொத்தத்துலையும் மண்ணள்ளி போட்டுட்டியே. நல்லாருப்பியாடா நீயெல்லாம்?” என்று கண் கலங்க கத்தியவள் அவனுக்கு முன் அழக் கூடாது என்ற வைராக்கியத்தில் கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் பேசினாள்.
”எனக்கு தெரியும்! அன்னைக்கு உன்னோட அந்த ஃபாரின் ப்ராஜெக்ட் உன் கைக்கு கிடைக்காம போக காரணம் நான் தான். அந்த ஃபைல்ல டீ ஊத்தி நாசம் பண்ணிட்டேன்! ஆனா அதுக்காக நீ என்னதான பழி வாங்கணும்? என் விக்ரம் என்னடா பண்ணுனான்? அவன் வாழ்கைல ஏன்டா விளையாடுன?” என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள்.
அவள் பேசுவதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் இந்தர். அவன்முகத்தில் எந்த உணர்வையும் காட்டவே இல்லை.அதைக் கண்டு கோவம் தலைக்கு ஏறியதுஆத்விக்கு. இந்தரின் அருகில் சென்று அவன் சட்டையைப் பிடித்து கட்டிலை விட்டு இழுத்தாள். அவனால் வலு காட்ட முடியும், ஆனால் அவள் அதிகம் உடைந்து விடுவாள் என்பதற்காக இழுத்த இழுப்பிற்கு போனான்.
”நீயெல்லாம் மனுசனாடா? முதல்ல நீ ஆம்பள தானாடா? இவ்ளோ கேக்குறேன் கல்லு மாதிரி நின்னுட்டு இருக்க. நீ எனக்கு வலுக்கட்டாயமா தாலி கட்டிட்டா புருஷனாகிட மாட்ட. இப்போ சொல்றேன் இந்தர். நல்லா கேட்டுக்கோ, உன் முன்னாடியே சொல்றேன்… என் புருஷன் எப்போவும் விக்ரம் தான். விக்ரம் மட்டும் தான்! ஆண்டவனே நினைச்சாலும் என் மனச மாத்த முடியாது.”என்றாள் ஆத்விகா.
அதில் கண்கள் சிவக்க அவளைப் பார்த்தான் இந்தர். அதை அலட்சியம் செய்தவள் மேலும் தொடரந்தாள்.
”என்ன கோவம் வருதா? காலையில நம்ம தாலி கட்டுனவ நைட் இன்னொருத்தன புருஷன்னு சொல்லும் போதே உனக்கு இவ்ளோ எரியுதே. மூணு வருஷமா லவ் பண்ணவன ஆசையா கல்யாணம் பண்ணிக்க போகும் போது இடையில புகுந்து தாலி கட்டி என்ன அடிமை மாதிரி இழுத்துட்டு வந்து இருக்கீயே! எனக்கு எப்படி இருக்கும்? ஐயோ தாலி கட்டிட்டானே… இவன் கூட தான் வாழ்ந்து ஆகணும்ன்னு நினைக்கிற அந்த காலத்து பொண்ணு கிடையாது நான்! இப்போவே இந்த தாலிய கழட்டி போட்டுட்டு என் விக்ரம்கிட்டபோக போறேன். இன்னிக்கு நானும் என் விக்ரமும் அசிங்கப்பட்டு நின்னத விட அதிகமா உன்னை நான் அசிங்க படுத்தி காட்டுறேன்டா! உன்னால முடிஞ்சத நீ பார்த்துக்கோ.”என்று சவாலாக கூறியவள் தன் தாலியை கழட்ட போக அவ்வளவு தான் தன் பொறுமையை இழந்து விட்டான் இந்தர்.
ஆத்வியின் இரு கைகளை பிடித்து அவளின் முதுகின் பின் வைத்து தன் ஒரு கையால் அழுத்திப் பிடித்த இந்தர், அவளின் தாடையை தன் மற்றொரு கையால் பிடித்தான்.
”நான் பொறுமையா இருக்குறதாலநீ பேசுறதுலாம் சரின்னு அர்த்தம் கிடையாது டி! எவ்வளவு திமிரு உனக்கு? என்கிட்டயே அவன் கூட போறேன்னு சொல்ற.உன்ன… அப்படியே கொன்னு போட்றலாமான்னு தோணுது டி எனக்கு” என்று கூற அவளோ வலி தாங்க முடியாமல் திமிறினாள்.
அவனிடம் இருந்து விடுபடுவதற்காக முடிந்த அளவு போராடிய பின்னும்,அவளால் ஒரு இன்ச் அவனை விட்டு நகர முடியவில்லை.
”கொன்னுடு டா! ஒரு பொம்பளகிட்ட வீரத்த காட்ற நீயெல்லாம் ஆம்பிளையே இல்ல. உன்கூட இருக்குறதுக்கு நான் என் விக்ரம நெனச்சிட்டே செத்துடுறது எவ்ளோவோ மேல்” என்றவளின் வார்த்தைகள் அவனின் ஈகோவை வெகுவாக கிளறி விட்டது.
அவளை தன் பிடியில் இருந்து இந்தர் விட, அவள் முகத்தை திருப்பிக் கொண்டு ஓரடி தான் நகர்ந்து இருப்பாள். அவள் கட்டி இருந்த புடவைமொத்தமும் இந்தரின் கையில் இருந்தது.
ஆத்வி அதிர்ந்து திரும்பிய நொடி அவளின் மென் இதழ்கள் இந்தரின் அழுத்தமான இதழ்களுக்குள் சிறைப் பிடிக்கப்பட்டது. அதை ஏற்க முடியாமல் அவனைப் பிடித்து தள்ள அவள் செய்த முயற்சிகள் யாவும் வீணே. இதழை அவளிடம் இருந்து பிரிக்காமல் அவளை இழுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தான்.
அவளிடம் இருந்து தன் இதழ்களை பிரித்தவனை ஆத்வி ஆத்திரமும் அழுகையும் கலந்து முறைக்க அவனோ அவளை தலை முதல் கால் வரை பார்த்தான்.
”ச்சீ பொறுக்கி, நான் விக்ரமுக்கு சொந்தமானவ. என்கிட்ட அத்துமீற ட்ரைப் பண்ணாத டா. அதுக்கான எந்த உரிமையும் உனக்கு இல்ல” என்று கத்தியவளின் மீது படர்ந்தவன் அவள் நெஞ்சில் கிடந்த தாலியை எடுத்து அவளிடம் காட்டினான்.
”இத நான் உன் கழுத்துல கட்டி இருக்கேன். அப்புறம் எப்படி என் பொண்டாட்டி இன்னொருத்தனுக்கு சொந்தமாவா? அன்ட் உன்மேல எனக்குஎவ்ளோ உரிமை இருக்குன்னு இப்போ நான் காட்டுறேன்” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
அவன் கைகள் அருகே இருந்த நைட் லேம்பை அணைத்து விட அறை முழுவதும் இருள் சூழ்ந்தது.
ஆத்வியின் இரு கைகளையும் அவள் தலைக்கு மேல் சேர்த்து தன் ஒற்றைக் கையால் சிறை செய்தவன் அவளை மொத்தமாக ஆண்டான். அவள் வலியும் கதறலும் இந்தரின் இதழ்களுக்குள்ளேயே முடிந்து விட்டது.
கட்டில் போர் போதும் என்று தோன்றியதோ, அல்லது மோகத்தில் மூழ்கி இருந்தவன் நினைவுக்கு வந்தானோ! ஆத்வியை விட்டு விலகினான். அடுத்த நொடி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் ஆத்வி.
இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் ஆள் அரவமற்ற கடற்கரையில் தன் காரை நிறுத்தி விட்டு வெளியே இறங்கிய இந்தர் அங்கிருந்த மணலில் அமர்ந்தான். கடல் அலைகளுக்கும், தன் எண்ண அலைகளுக்கும் ஓய்வென்பதே கிடையாது என்று நினைத்தவன் பெரு மூச்சு ஒன்றை விடுவித்தான்.
கண்களை மூடினாலே ஆத்வி கதறி அழுதது தான் நினைவுக்கு வந்தது அவனுக்கு. அதை நினைக்க நினைக்க அவன் மீது அவனுக்கே வெறுப்பு சூழ்ந்தது. ஆனால் அதை அவன் வேண்டும் என்றே செய்யவில்லை. ஆத்வியின் வார்த்தைகள் தான் அவனை அப்படி செய்ய வைத்து விட்டது.
இருந்தாலும் தான் கட்டுப்பாட்டோடு இருந்து இருக்க வேண்டும் என்று காலம் கடந்து யோசித்தான் இந்தர். அவள் நிலையை காண முடியாது அர்த்த ராத்திரியில் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவனுக்கு அன்றைய நாள் முழுவதும் நடந்தேறிய நிகழ்வுகளால் மனமும், உடலும் மொத்தமாக சோர்ந்து விட்டது.கண்களை திரையிட்ட கண்ணீரால் அதற்கு மேல்காரை ஓட்ட முடியாது அருகே இருந்த கடற்கரையில் நிறுத்தி விட்டான். இப்போது அந்த கடற்கரையில் கவலையுடன் அமர்ந்து இருக்கிறான்.
அவனின் மனசாட்சி, என்ன காரியம் டா பண்ணி வச்சி இருக்க? எப்படி டா நாளைக்கு அவ மூஞ்சில முழிப்ப? என்று தன்னை தானே திட்டிக் கொண்டது.
சில நிமிடங்கள் கடற்கரையில் வீசிய அந்த குளிர்ந்த காற்றை அவன் உள்வாங்கி கொண்டு இருக்க, என்ன தான் அவ பேசி இருந்தாலும் நீ அவ கிட்ட நடந்துக்கிட்ட முறை ரொம்பதப்பு இந்தர்… என்று மறுபடியும் திட்ட ஆரம்பித்தது அவனின் மனசாட்சி.
சரி இப்போ என்ன தான் பண்ண சொல்ற என்ன? நானே தப்புன்னு ஏத்துகிட்டு தான் அந்த ரூம்ல நிக்க கூட முடியாம இவ்ளோ தூரம் வந்துருக்கேன்! இங்க வந்தும் என்ன ஏன் இவளோ டார்ச்சர் பண்ற? கொஞ்சம் அமைதியா இரு… என்று தன் மனசாட்சியிடம்கத்தினான்.
அதோடு அடங்கி விட்டது அவன் மனசாட்சி. எவ்வளவு நேரம் அப்படியே நகர்ந்தது என்று தெரியாமல்கிடந்தான். சூரிய உதயம் அவன் கண் முன் நடந்து கொண்டிருந்தது. அதைக்கூட உணராமல் கடலையே வெறித்து கொண்டிருந்தவனின் அலைபேசி அவன் சட்டை பையில் இருந்து கத்தி அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது.
அலைபேசியின் திரையில், ”கிரேனி…”என்று பெயர் காட்ட அதை அட்டென்ட் செய்து, ”சொல்லுங்க பாட்டி…” என்றான்.
”யப்பா ஈஷ்வரா! எங்கப்பா போன? இந்தபொண்ணுக்கு காய்ச்சல் அனலா கொதிக்குதுப்பா; புள்ள பேச்சி மூச்சில்லாம கெடக்குதுடா! கொஞ்சம் சீக்கிரம் வந்து என்னன்னு பாரு” என்று குரலில் பயத்துடன் கூறினார் காமாட்சி பாட்டி.
”இதோ உடனே வரேன் பாட்டி. இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்” என்று கூறி கொண்டே காரை நோக்கி வேகமாக ஓடினான் இந்தர்.
ஏற்கனவே அவனுள் எரியும் குற்ற உணர்வு என்னும் தீயில் பாட்டியின் வார்த்தைகள் பெட்ரோலை ஊத்தியது போல இருந்தது. எத்தனை வேகத்தில் காரை ஓட்டி வந்தோம் என்றே அவனுக்கே தெரியவில்லை. கூறியபடியே பத்தே நிமிடங்களில் தன் வீட்டிற்குள் நுழைந்தான்.
”பாட்டி! பாட்டி.”என்று கத்தினான்.
எந்த பதிலும் வரவில்லை என்பதால் முதல் தளத்தில் தனது அறை நோக்கி ஓடினான். அதுவும் இரண்டு, மூன்று படிகளாக தாவி சென்றான்.
தன் அறையில் இருந்து வெளியே வந்த பாட்டியிடம், ”என்னாச்சு பாட்டி?” என்றான் பதட்டத்துடன்.
”தெரியலப்பா, நான் எந்திச்சு வர்றப்போ உன் ரூம் கதவு திறந்து கிடந்தது. எப்போவும் இப்படி இருக்காதேன்னு வெளில நின்னு பாத்தேன். உன்னை காணும், இந்த புள்ள சுருண்டு படுத்து இருந்தது. சரி குளுருது போலன்னு பெட்ஷீட் போர்த்தி விடலாம்ன்னு உள்ள வந்தேன். கிட்ட வந்துப் பார்த்தா புள்ளைக்கு உடம்பு நெருப்பா கொதிக்குது. நானும் வெள்ளை துணிய தண்ணில நனச்சு ரெண்டு தடவ நெத்தில ஒத்தடம் குடுத்துட்டேன். அப்போவும் குறையல” என்றார் பாவமாய்.
அவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே தன் அறைக்குள் வந்திருந்தான் இந்தர்.
கட்டிலில் காய்ச்சலுடன் சுருண்டு படுத்து இருந்த ஆத்விகாவை உற்று நோக்கியவனுக்கு இரவெல்லாம் அவள் அழுதிருக்கிறாள் என்பதை அவளின் வீங்கிய கண்களே சாட்சி சொன்னது. நேற்று மலர்ந்த புத்தம் புதிய மலராய் இருந்தவள் இப்பொழுது வாடிய மலராய் கிடக்கிறாள். அவளின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் எண்ணும் குற்ற உணர்வே அவனை அணு அணுவாய் கொன்றது.
இந்நிலையில் அவளை மருத்துவ மனைக்கு அழைத்து செல்வது இயலாத காரியம். அதுமட்டுமில்லாமல் திருமணம் முடிந்த மறுநாளே தன் மகள் இந்நிலையில் இருப்பது ஆத்விகாவின் பெற்றோருக்கு தெரிந்தால் தேவை இல்லாத கேள்விகள், மனகுழப்பங்கள், சங்கடங்கள் வரும் என்று நினைத்தவன் தனது மருத்துவ நண்பனான பால கிருஷ்ணாவிற்கு அழைப்பு விடுத்தான்.
