காதல் – 10

அவனிடம் பேசும் நேரம் மட்டும் இந்தருக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. அது அந்த உறவிற்கே உரிய உரிமையா? இல்லை ராகவனின் சுட்டி தனமா? இல்லை மாமா மாமா என்று உரிமையாய் அழைக்கும் அவனின் இயல்பா என்று இந்தருக்கே தெரியவில்லை.

 

அவன் சென்றதும் சிறிது நேரம் தோட்டத்தில் உலா வந்தவன் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் சாய்ந்து அமர்ந்தான். இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்து வானத்தை அண்ணாந்து பார்த்தபடி அந்த சூழலையும், குளிர்ந்த காற்றையும் ரசித்து கொண்டிருந்தான்‌. அவன் மனதிற்கு சற்றே ஆறுதலாய் அமைந்தது அச்சூழல்.

 

அவனது அலைபேசி அழைக்கும் ஒலியில் அச்சூழலை ரசிப்பதை விடுத்தவன் தனது உதவியாளனும் உற்ற நண்பனுமான ப்ரதீப்புடன் அலைபேசியில் பேசிக் கொண்டே வீட்டில் ஒதுக்க பட்டிருக்கும் தன்னுடைய அலுவலக அறைக்கு சென்றான்.

 

ஹாலில் அமர்ந்து இருந்த ஆத்வி, “அங்க என்ன பாட்டி இருக்கு? அவன் எங்க போறான்?” என்று கேட்டாள் பாட்டியிடம்.

 

“அதுவா, அது அவனோட ஆபிஸ் ரூம்! ஆபீஸ்க்கு போக முடியாத நேரத்தில இங்க இருந்து தான் வேலை பார்ப்பான்.”

 

“அப்படியா?” என்றவளின் மூளையில், ‘இத வச்சி அவன ஏதாவது பழி வாங்க முடியுமான்னு பிளான் பண்ணுவோம்’ என்ற தீப்பொறி விழுந்தது.

 

“நீங்களாம் அங்க போக மாட்டீங்களா பாட்டி?” 

 

“அங்க சுத்தம் செய்ய போவேன்மா. மத்தபடி எனக்கு என்ன வேல இருக்கு அங்க?”

 

“கபோர்டு சாவிலாம் பத்திரமா வச்சுப்பானா உங்க பேரன்?” 

 

“சாவிலாம் வெளி ஆளுங்க வர்ற வீட்டுக்கு தானம்மா தேவைப்படும்? நம்ம வீட்ல நம்ம மட்டும் தான. அதுக்கு எதுக்கு சாவி?”

 

“ஓஹோ இது போதுமே எனக்கு.” என்று மனதில் நினைத்தவள், ‘நாளைக்கு முதல் வேலையா அந்த ரூம்குள்ள நுழஞ்சி ஏதாவது பண்ண முடியுதான்னு பாக்கணும்’ என தனது மூளையை தவறான பாதைக்கு வழி நடத்திக் கொண்டிருந்தாள்.

 

இரவு உணவை மூவரும் ஒன்றாகவே முடித்தனர். இப்போது ஆத்விகா பழி வாங்குகிறேன் என்று எதுவும் செய்யாமல் சமத்து பிள்ளையாக சாப்பிட்டு கொண்டிருந்தாள். அதைக் கண்ட இந்தருக்கு தான் மூளை எச்சரிக்கை விடுத்தது. 

 

‘இது சரி இல்லயே. இவ ஏதோ பெருசா பண்ண காத்திருக்குற மாதிரியே தோணுதே! சரி விடு இந்தர், பாத்துக்கலாம்’ என்று நினைத்தவாறே சாப்பிட்டு எழுந்தான் அவன்.

 

டிவியில் நியூஸ் பார்த்து கொண்டிருந்த இந்தரிடம், “நீ தூங்கலையாப்பா? இப்படி ரொம்ப நேரம் முழிச்சிருந்து உடம்ப கெடுத்துக்காத” என்றார் பாட்டி.

 

“இதோ போறேன் பாட்டி” என்றவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆத்வி. 

 

தனதறைக்கு செல்வதை தவிர்க்கவே இவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை புரிந்து கொண்டவள், வஞ்ச புன்னகையோடு வேண்டுமென்றே தங்கள் அறையிலேயே படுத்து கொள்வதாய் கூறிவிட்டாள் பாட்டியிடம். அவளை திரும்பி பார்த்த இந்தருக்கு பழிப்பு காட்டி விட்டு சென்று விட்டாள் ஆத்வி. 

 

இந்தருக்கு தான் இரவானாலே தன்னவளிடம் தான் முறை தவறிநடந்து கொண்ட நினைவு வந்து கொல்லாமல் கொன்றது. அவள் அதைப் பற்றி அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவன் சட்டையை பிடித்து பளார் பளார் என்று ஆத்வி நான்கு அறைகள் அவன் கன்னத்தில் கொடுத்தால் கூட நிம்மதியாக வாங்கி கொள்வான் போலும். ஆனால் அவளோ அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி அல்லவா இருக்கிறாள்! 

 

அவன் மனம் இப்படி யோசிக்க அவன் உடலோ அதற்கு நேர் மாறாக ஒரு முறை அனுபவித்த ஆத்வியின் அருகாமையையும் வாசத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டு அவனை இம்சை செய்தது. இரண்டோடும் போராட்டம் நடத்தியே இரவை ஒரு வழியாக முடித்தவன் விடிந்ததும் கதிரவனுக்கு முன்னமே எழுந்து தன் உணர்வுகளை அடக்க ஜாகிங் செல்ல கிளம்பினான். 

 

தன்னறைக்குள் ஆத்வி கதவை தாழிடாமல் படுத்திருப்பதை கவனித்தவன், ‘ஏதோ சரி இல்லை! தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள நடிக்கிறாள்’ என்பதை புரிந்து கொண்டு வெளியே சென்றான்.

 

“என்னவாக இருக்கும்?” என பலவாறு யோசித்தவனுக்கு எதுவும் பிடிபடாமல் போக ஜாகிங் முடித்து வீட்டுக்கு வந்தான். குளித்து கிளம்பி உணவருந்தி விட்டு அலுவலகம் நோக்கி சென்றான் தன் மனையாளை காண முடியவில்லையே என்ற ஏக்கத்தோடே. 

 

இங்கு ஆத்வியோ அவன் கிளம்பிய பின் கீழிறங்கி வந்தவள், நேராக வீட்டின் அலுவலக அறைக்குள் சென்றாள். அங்கு இருந்த லேப்டாப்பிற்கு உயிர் கொடுத்தவள் அது பாஸ்வர்ட் கேட்கவும் கடுப்பாகிவிட்டாள். அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகும், அது அவளுக்கு ஒத்துழைப்பு தராமல் போக, அதை தூக்கி ஓரமாக வைத்து விட்டாள். 

 

வேறு ஏதாவது வழி கிடைக்கிறதா என்று அந்த அறையை சுற்றி நோட்டமிட்டவள், அங்கே எதையும் உருப்படியாக செய்ய முடியாது என வெகு தாமதமாகவே புரிந்து கொண்டாள். அவள் திட்டம் இதுதான் என்று தெரியாவிட்டாலும், ஓரளவுக்கு தன் பொருள்களை பாதுகாப்பாக வைத்திருந்தான் இந்தர்.

 

சூடாக ஒரு டம்ளர் காபியை உள்ளே ஊற்றிவிட்டு பாட்டியிடம் மெதுவாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.

 

“பாட்டி எனக்கு ரொம்ப போர் அடிக்குது. வீட்டுக்குள்ளயே அடஞ்சி கெடக்குற மாதிரி இருக்கு. நானும் அவனோட ஆபீஸ்க்கு போய் அவனுக்கு ஹெல்ப் பண்ணவா? இப்போ போய்ட்டு அவன் மதியம் வர்றப்போ அவன் கூடவே வந்துடுவேன்.”

 

“ஐயோ, அவன் உன்ன தனியா அனுப்பி வச்சா திட்டுவான்மா. இந்தர் இருக்கும் போதே அவன் கிட்ட கேட்டுட்டு அவன் கூடவே போயிருக்கலாம்லடா?” 

 

“கேட்டா வர வேண்டாம்ன்னு தான் சொல்லுவான். அதான் நேர்ல போய்ட்டேன்னா ஒன்னும் சொல்ல முடியாதுல்ல. அவன் உங்கள எதுவும் சொல்லாம நான் பாத்துக்கிறேன் பாட்டி.” 

 

“அதுக்கில்லமா, பொம்பள பிள்ளைய தனியா எப்டி அனுப்புறதுன்னு யோசிக்கிறேன்.” 

 

“என்ன பாட்டி என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா? எத்தனை இடத்துக்கு தனியா போவேன் வருவேன். இவன் ஆபீஸ்க்கே எத்தனை தடவ போயிருப்பேன்? அப்படி இருக்கப்போ இப்போ ஏன் இதெல்லாம் யோசிக்கிறீங்க பாட்டி?”

 

அது என்னவோ உண்மைதான். ஆத்வி அவள் வீட்டில் இருந்த நாட்களை விட ஊர் சுற்றிக் கொண்டு இருந்த நாட்கள் தான் அதிகம்.

 

“சரிமா, இவ்ளோ கேட்கிறதால அனுப்புறேன். பத்திரமா பார்த்து போய்ட்டு வா” என்று பல அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தார் பாட்டி. 

 

வீட்டை விட்டு வெளியில் வந்தவளுக்கு கூட்டில் அடைப்பட்டிருந்த கிளி ஒன்று, தப்பி செல்வது போன்ற உணர்வு தோன்றியது. ஆட்டோ ஒன்றை பிடித்து நேராக இந்தரின் அலுவலகம் சென்றாள். அங்கிருக்கும் M.D அறையை நோக்கி செல்ல இடையே ஒரு பெண் வந்து வழி மறித்தாள். 

 

“ஹலோ எக்ஸ்கியூஸ்மீ மேடம். யார் நீங்க? எம்டி சாருக்கு ரூமுக்கு நீங்க பாட்டுக்கு போறீங்க. இங்கல்லாம் வெளி ஆளுங்க அலோவ்டு கிடையாது. சார பார்க்க ஏதாச்சும் அப்பொய்ன்மெண்ட் வச்சிருக்கீங்களா?”

 

“அப்பாயின்மென்ட்டா? அதுவும் எனக்கா? நான் யார் தெரியுமா? ஐ அம் மிஸ்ஸஸ் இந்தரேஷ்வரன்” என்றாள் ஆத்வி திமிராக.

 

அதில் அதிர்ந்த பணிப்பெண்,“ரியலி சாரி மேம்.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று கூறி இந்தரின் அறை நோக்கி சென்றாள். 

 

“எக்ஸ்கியூஸ்மீ சார், உங்க ஒயிஃப்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு வந்துருக்காங்க. உங்க ரூமுக்கு நேரா வந்தாங்க. நான் தான் உங்க கிட்ட கேட்டுட்டு அனுப்பலாம்ன்னு ரிசப்ஷன்ல வெயிட் பண்ண சொல்லிருக்கேன்” என்றாள் பணிவாய். 

 

ரிஷப்ஷனில் யார் இருக்கிறார் என்பதை சிசிடிவி கேமராவில் பார்த்த இந்தர் தன் மனையாள் அங்கு அமர்ந்து இருப்பதை கண்டு, ‘இந்த பைத்தியம் ஏன் இங்க வந்து இருக்கு?’ என்று நினைத்தவாறே, “எஸ்! இவங்க என்னோட மிஸஸ் தான்! உள்ள அனுப்புங்க” என்றான்.

 

“மேம், உங்கள சார் உள்ள வர சொன்னாங்க” என்று சொல்லிக் கொண்டே வந்த அந்தப் பணிப்பெண்ணிடம், “என் மேல நம்பிக்கை இல்லயோ?” என கோவமாக கேட்டாள் ஆத்வி.

 

“சாரி மேம் அப்படி இல்ல. அவரோட அனுமதி இல்லாம அவர பாக்க யாரையும் அனுப்ப கூடாதுன்னு அவர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருக்காரு” என்றவளை துளியும் மதிக்காமல், ‘பெரிய பிரைம் மினிஸ்டர் இவன்’ என்று நினைத்தவாறே கடுப்பாக சென்றாள் ஆத்வி.

 

வேகமாக கதவை திறந்து கொண்டு தன்னறைக்குள் நுழைந்தவளை வித்தியாசமாக பார்த்தான் இந்தர். 

 

“என்ன அப்படி பாக்குற? நீ பாக்குறத பாத்தா உனக்கு நான் இங்க வந்ததுல சுத்தமா விருப்பம் இல்ல போல” என்றாள் குத்தலாக. 

 

“அப்படிலாம் ஒன்னும் இல்லடி ஆவி. என்ன திடீர்னு இங்கல்லாம் வந்துருக்க? என்ன பார்க்காம இருக்க முடியலையா என்ன?” 

 

“ஆசதான்! வீட்டுல சும்மா போர் அடிக்குதுன்னு வந்தேன். ஏன் நான் இங்கெல்லாம் வர கூடாதா?” 

 

“மார்னிங் நான் வீட்ல இருந்து தான கிளம்பி வந்தேன்? ஒரு வார்த்தை சொல்லிருந்தா நானே வெயிட் பண்ணி உன்ன அழச்சுட்டு வந்து இருப்பேன். இப்படி தனியா வந்துருக்கியேன்னு தான் கேட்டேன். வேற எந்த உள் அர்த்தமும் இல்ல. அன்ட் நீ வர்றது எனக்கு பிடிக்காமலும் இல்ல” என பொறுமையாக அதே நேரம் அழுத்தமாகவும் கூறினான்.

 

அதே நேரம் கதவை திறந்து கொண்டு, “நண்பா! நிறைய ஆர்டர்ஸ் எக்ஸ்போர்ட் பண்ணி அனுப்ப வேண்டி இருக்குடா. ஒர்க்கர்ஸ் எல்லாரையும் பின்னாடி பேக்கிங்க்கு அனுப்பலாம்ன்னு இருக்கேன். இங்க ரெண்டு பேர மட்டும் நிறுத்தினா போதும்லடா? கேரளாக்கு அரிசி, பலசரக்குன்னு எல்லாமே கேட்ருக்காங்கடா. இன்னிக்கு நைட் அங்க ரீச்சாகுற மாதிரி அனுப்பி வைக்க சொல்றாங்க. ஓகேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்” என்று கையில் உள்ள ஆர்டர் பேப்பர்களையே பார்த்து பேசி கொண்டு வந்தான் பிரதீப். 

 

இந்தரின் டேபிள் அருகில் வந்ததும் நிமிர்ந்து தனக்கு அருகே நின்றவளை பார்த்து அதிர்ச்சியானவன் உடனே தன்னை சமாளித்து கொண்டான்.

 

“வெல்கம் சிஸ்டர்! ஏதாவது சாப்பிடறீங்களா? ஜூஸ் ஏதாவது சொல்லட்டுமா?” என்று கேட்டான் தன்மையாக.

 

“ஹான் மாதுளை ஜூஸ் சொல்லுங்களேன். நல்லா சுகர் தூக்கலா போட்டு” என்றவள் திமிராக இந்தரை பார்த்தாள். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
247 40 0
இராவணின் வீணையவள்
47 0 0
ஆரெழில் தூரிகை
310 15 1
வேண்டினேன் நானுன்னை
541 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
463 12 0
கற்றது காதல்
218 1 0
நிழலென தொடர்கிறேன்
214 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page