முதல் அறிவிப்பு
வணக்கம் நட்பூக்களே!
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வரும் புத்தம் புது ஆண்டில், உங்கள் ட்ரீம்ஸ் நாவல் (Dreamz Novels) தளம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்போடு உங்களைச் சந்திக்க வந்து இருக்கிறோம்!
🔥அக்ஷர யுத்தம்🔥
காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்!
உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு!
அக்ஷர யுத்தம் – காதல் நாவல் போட்டி விதிமுறைகள்.
- கதைக்கரு (Theme):
கதை முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
அது முதல் காதலாகவோ, முதிர்ந்த காதலாகவோ, பிரிந்து சேர்ந்த காதலாகவோ அல்லது ஒருதலைக் காதலாகவோ இருக்கலாம். ஆனால், கதையின் உயிர்நாடி காதலாக மட்டுமே இருக்க வேண்டும்.
- கண்ணியம் (Decency):
காதல் கதைகள் என்பதால் கண்ணியம் மீறாத எழுத்து நடை அவசியம்.
ஆரோக்கியமான காதல் மற்றும் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் முன்னுரிமை பெறும்.
- கதை அமைப்பு (Plot Structure):
கதையில் தெளிவான ஆரம்பம், திருப்பம் மற்றும் ஒரு நிறைவான முடிவு இருக்க வேண்டும்.
வாசகர்களைக் கதையோடு ஒன்றச் செய்யும் உணர்ச்சிகரமான (Emotional) காட்சிகள் இடம் பெற வேண்டும்.
- அசல் தன்மை (Originality):
கதை எழுத்தாளரின் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும்.
வேறு எங்கும் பிரசுரிக்கப்படாத அல்லது மற்ற கதைகளின் தழுவலாக இல்லாத புதிய கதையாக இருக்க வேண்டும். AI மூலமாக எழுதப்படும் கதைகள் அனுமதி இல்லை.
- எழுத்து நடை:
வாசிப்பதற்கு எளிமையாகவும், பிழைகளற்ற தமிழ் நடையிலும் இருக்க வேண்டும்.
கதையின் மாந்தர்கள் (Characters) வாசகர்களின் மனதில் பதியும் வண்ணம் செதுக்கப்பட வேண்டும்.
- நாவலின் சொற்கள்:
குறைந்தபட்சம் 30,000 முதல் அதிகபட்சம் 40,000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
- பதிவு செய்ய (Registration):
டிசம்பர் 25 முதல் ஜனவரி 11 வரை. - போட்டி காலம்:
ஜனவரி 14 முதல் ஏப்ரல் 30 வரை.
முடிவுகள் அறிவிப்பு: ஜூன் மாதம். (கால அவகாசம் கிடையாது)
- சிறப்பு ஊக்கத்தொகை:
கதையை வெற்றிகரமாக முடிக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் தலா ₹500 வழங்கப்படும்!
- வெற்றிப் பரிசுகள்:
முதற்பரிசு: 7,000 + மெடல் + ஷீல்டு + சான்றிதழ்
இரண்டாம் பரிசு: 5,000 + மெடல் + ஷீல்டு + சான்றிதழ்
மூன்றாம் பரிசு: 3,000 + மெடல் + ஷீல்டு + சான்றிதழ்
போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இணையதள சான்றிதழ் வழங்கப்படும்.
முக்கிய அறிவிப்பு.
வாசகர்களுக்கான (Readers) கௌரவம்:
எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும் சிறப்பான பரிசுகள் உண்டு!
- சிறந்த வாசகர்:
டாப் 5 வாசகர்களுக்கு தலா 500 பரிசு. (குறைந்தபட்சம் 300 வார்த்தைகளில் கருத்துப் பதிவிட வேண்டும்). - விவாதப் பரிசு:
கதைகளைப் படித்து ஆரோக்கியமான முறையில் விவாதம் செய்பவர்களுக்குத் தனிப் பரிசுகள் உண்டு!
பதிவு செய்ய கடைசி நாள் : 11.01.2026.
முதல் மூன்று இடத்தை பிடிக்கும் நாவல்கள் DN BOOK PUBLICATION பதிப்பகத்தினால் புத்தகமாக வெளியிடப்படும்.
கெஸ்ட் ரைட்டராக எழுத விருப்பம் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
எழுத்தாளரின் பெயரை மறைத்து எழுதும் போட்டி என்பதால் போட்டியாளர்கள் தங்களின் பெயரையும் தங்களது கதை எது என்பதையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.மீறினால் தங்களது நாவல்கள் தளத்திலிருந்து நீக்கப்படும்.
பங்கேற்பது எப்படி?
நீங்களும் இந்த எழுத்துப் போரில் இணைய, உடனே எங்களைத்
தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பெயர் :
புனைப்பெயர் :
கதையின் தலைப்பு :
தொலைப்பேசி எண் :
dreamznovels.writer@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மேற்கண்ட விபரங்களை அனுப்புங்கள்.
இணையதளம்: [Dreamz Novles]
மின்னஞ்சல்: [dreamznovels.writer@gmail.com]
“வாருங்கள் எழுத்தாளர்களே! உங்கள் அக்ஷரங்களால் இந்த அகிலத்தை அன்பால் வெல்லுங்கள்!”
என்றும் அன்புடன்,
ட்ரீம்ஸ் நாவல்ஸ்.
(Dreamz Novel’s).
