காதல் இதுதானா ? – காதல் 9

காதலாகும் 9:

தனது தந்தை சக்ரவர்த்தியை சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு வந்திருந்தான் வேத வர்ஷன்.

“ஏ.சி.பி விஷயம் என்னாச்சு…?”,

“அந்த ரிப்போர்ட்டர் பொண்ணை போட்டுத் தள்ள ஆள் அனுப்பினேன்..எப்படியோ அந்த ஏ.சி.பி குறுக்கே புகுந்து அவளை காப்பாத்திட்டான்…!”,கடுப்புடன் கூறியவன் அன்று நடந்த சம்பவத்தை தனது தந்தைக்கு விளக்கினான்.

விஸ்வேஷ்வரன் கூறியது போல் அந்த சண்டையின் போதுதான் அவனது கைபேசி தவறியது.இவன் அந்த ரௌடிகளை அடித்துப் போட்டு விட்டு சென்றதும்..அந்தக் கும்பலின் தலைவன் வேத வர்ஷனுக்கு அழைத்தான்.

“சார்..நீங்க சொன்ன மாதிரி அந்தப் பொண்ணை கடத்திட்டோம்…ஆனால்,அந்த ஏ.சி.பி எங்களை அடிச்சு போட்டுட்டு அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு போயிட்டான்…”விஸ்வேஸ்வரனிடம் வாங்கிய அடி தந்த வலியில் முனகிக் கொண்டே பேசினான் அவன்.

“இடியட்ஸ்…ஒரு பொண்ணை போட துப்பில்லை… நீங்க எல்லாம் என்னடா ரௌடிங்க…உங்களை நான்தான் அனுப்பினேன்னு அவனுக்குத் தெரிஞ்சிடுச்சா…?”,சரமாரியாகத் திட்டியவன் அவர்களிடம் வினவினான்.

“இல்ல சார்…!அடிச்சுப் போட்டுட்டு போயிட்டார்…”,கூறிக் கொண்டிருக்கும் போதே அந்த ரௌடியின் பார்வை கீழே விழுந்து கிடந்த விஸ்வேஸ்வரனின் கைபேசி மீது பதிய,

“சார்..சார்…!ஏ.சி.பி யோட போன் இங்கே இருக்குது…சண்டை போடும் போது மிஸ்ஸாகிடுச்சு போல…”, என்று கத்தினான்.

“எரும..எரும…ஏ.சி.பி யை போடுன்னா..அவனோட போன் இங்கே இருக்குதுன்னு எதையோ சாதிச்ச மாதிரி கத்திக்கிட்டு இருக்க…”திட்டிக் கொண்டு இருந்த வேத வர்ஷனின் மனதில் அந்த விபரீத திட்டம் உருவானது.

“ஹே..வெயிட்..வெயிட்…! இப்போ நீங்க எங்கே இருக்கீங்க…?”,

“சிட்டியை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டோம் சார்…!”

“யெஸ்…இப்போ அந்த போலீசும் அந்தப் பொண்ணும் அந்த ஏரியாலதான் இருக்காங்க இல்லையா…?”,

“ஆமா சார்…!”,

“ஓகே…அந்த போனை எடுத்துட்டு உடனே ஏ.சி.பி வீட்டுக்கு வா…”, என்றவன் போனை துண்டித்து விட்டான்.

அவனுக்குத் தெரியும்.. விஸ்வேஷ்வரனையும் திவ்யாவையும் இணைத்து வந்த கிசுகிசுவை அவன் படித்துதான் இருந்தான்.அந்தப் பெண் திவ்யா அவர்களது நிறுவனத்தில் படிக்கிறாள் என்பதும் அவனது காதுக்கு வந்த செய்திதான். அப்பொழுது அவன் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால்,அந்த விஷயம் எவ்வளவு பெரிய காரியத்தை சாதிக்க உதவப் போகிறது என்று எண்ணிக் கொண்டான்.

அவனது மூளை விபரீதமான திட்டத்தை தீட்டியது.திவ்யா தங்கியிருக்கும் ஹாஸ்டலும் இவர்களது நிறுவனத்தை சேர்ந்ததுதான்.எனவே,அவளை வெளியே வரவழைப்பது ஒன்றும் அவர்களுக்கு அவ்வளவு பெரிய விஷயமாக இருக்கவில்லை. ஹாஸ்டல் வார்டன் மூலம் உதவி என்ற பெயரில் வெளியே வரவழைக்கப்பட்டு..வேத வர்ஷனால் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்த ஆட்களால் கொல்லப்பட்டு விஸ்வேஷ்வரனின் வீட்டில் உயிரற்ற உடலாய் வீசி எறியப்பட்டாள்.

விஸ்வேஷ்வரனின் மேல் கற்பழிப்பு கேசும் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் அவளை கற்பழித்து கொல்ல சொல்லியிருந்தான் அந்த சண்டாளன். கும்பலாக கற்பழித்தால் ம்பலாக கற்பழித்தால் வழக்கு வேறு திசையில் திரும்பி விடும் என்ற நினைவில் ஒருவனை மட்டும் அந்த மா பாதக செயலை செய்யச் சொன்னவன்… விஸ்வேஷ்வரனின் கைப்பேசியையும் அவளது உடலருகேயே வைத்து விட்டான்.

வேத வர்ஷனும் அந்த ரௌடிகளும் வந்த சுவடு தெரியாமல் விஸ்வேஷ்வரனின் வீட்டில் இருந்து திரும்பிச் சென்றனர். அனைத்தையும் அவன் யோசித்து கச்சிதமாகத்தான் செயல்படுத்தினான்.அதர்மம் வெல்லும் என்றால் நியாயம் எதற்கு..தர்மம் எதற்கு…?

இதில் அவனே எதிர்பார்க்காதது யாழ்வி தந்த வாக்குமூலம்.இறுதி நேரத்தில் வழக்கு இப்படி திசை மாறும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

அனைத்தையும் கூறி முடித்தான் வேத வர்ஷன்.கேட்டுக் கொண்டிருந்த சக்ரவர்த்திக்கு ஆத்திரமாக வந்தது.

“முட்டாள்..முட்டாள்…! இப்படி சொதப்பி வைச்சிருக்கிறாயே டா…!இப்போ கேஸ் அவன் கையில போயிடுச்சு… நிச்சயமா அடி ஆழம் வரை தோண்டாம அவன் விட மாட்டான்…!இது என்ன சின்னபிள்ளைங்க விளையாடற கண்ணாம்பூச்சி விளையாட்டுன்னு நினைத்தாயா…? நீ எதிர்க்கிறது விஸ்வேஷ்வரனை… எந்தளவுக்கு நீ கவனமா இருக்கனும்ன்னு தெரியுமா…?”,கோபமாக கத்தியவர் தலையைப் பிடித்துக் கொண்டார்.

எங்கே மகனும் தன்னுடன் ஜெயிலுக்கு வந்து விடுவானோ என்ற பயம் அவரைப் பிடித்து ஆட்டியது.

“இங்கே பார் வேத வர்ஷா…!நீ இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்…இதுல சம்பந்தப்பட்ட எல்லா ஆளுங்களையும் உடனே வெளியூருக்கு அனுப்பிடு… கொஞ்ச நாள் இங்கே தலை வைச்சுப் படுக்க வேண்டாம்ன்னு சொல்லு…!அந்த ஏ.சி.பி க்கு சின்ன சந்தேகம் வந்தாலும் போதும்…முழு வரலாறையும் அவன் கண்டுபிடிச்சிடுவான்…ஜாக்கிரதையா இரு…!”,மகனை எச்சரிக்கவும் தவறவில்லை.

“சரிப்பா…அப்புறம் இன்னொரு விஷயம்…அந்த போலீசும் அந்தப் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கப் போறதா நியூஸ் வந்துச்சு…!”,

“இது வேறயா…?ஆனாலும் நல்ல விஷயம்தான்…இதுநாள் வரைக்கும் குடும்பம் பாசம்ன்னு எதுவும் இல்லாம தனிக்கட்டையா இருந்திருப்பான்…!கல்யாணம் முடியட்டும்… பயம்ன்னா என்னன்னு அவனுக்கு காட்டலாம்…!இனி நம்மளோட துருப்புசீட்டு அந்த ரிப்போர்ட்டர் பொண்ணு தான்…! கொஞ்ச நாள் பொறுமையா இரு..எப்போ காய் நகர்த்தலாம்ன்னு நான் சொல்றேன்…!”,குரூரமாக சிரித்தார் அவர்.

நாட்கள் தங்கு தடையின்றி பறந்தன…!

ஊருக்குச் சென்று ஜோசியரிடம் கலந்தாலோசித்த ரகுவரன்.. விஸ்வேஷ்வரனுக்கு போன் செய்து இன்னும் இரண்டு மாதம் கழித்து வரும் முகூர்த்தத்தில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று சம்மதம் கேட்டார்.அவனும் ‘சரி’ என்று விட்டான்.மதுரை கிராமத்தில் திருமண ஏற்பாடுகள் பரபரவென்று நடந்து கொண்டிருந்தன.

அவனுக்கு அப்படி எந்த யோசனையும் இல்லை போலும். எப்பொழுதும் போல் கேஸ்..கோர்ட்.. குற்றவாளி என்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தான். சொல்லப் போனால் யாழ்வியைப் பற்றிய எண்ணம் கூட இருக்கவில்லை.

அன்றும் அப்படித்தான்.. கபிலனுடன் ஏதோ கேஸ் விஷயமாக பேசிக் கொண்டிருந்தவனை அவனது மொபைல் அலறி அவனது கவனத்தை தன் பக்கம் திருப்பியது.

‘யாழ்வி’ என்ற பெயர் திரையில் ஒளிர..அதைப் பார்த்த கபிலன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

‘இவ எதுக்கு கால் பண்றா…?’,மொபைலை உயிர்ப்பித்து காதில் வைத்தவன்,

“சொல்லு…”,என்றான்.

அவனது ஆளுமையான குரல் போனில் எதிரொலிக்க அவள் ஒரு நொடி அமைதி காத்தாள்.

“நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…”,

“ம்…”,கபிலன் அருகில் இருப்பதால் அவன் ‘ம்.’ மட்டும் கொட்டினான்.

‘வாயைத் திறந்து பேசினால  குறைந்தா போயிடுவார்..’,மனதிற்குள் அவனைத் தாளித்தவள், “நான் புடவை எடுக்கப் போகணும்… “,என்றாள் ஏதோ நினைப்பில்.

“வாட்…?”,முகத்தைச் சுருக்கி அவன் அதிர்வதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

‘அடியே யாழ்வி.. தெளிவா சொல்லித் தொலை டி.திடீர்ன்னு போனை போட்டு நான் புடவை எடுக்கப் போகணும்ன்னு சொன்னால்.. ஷாக் ஆகாம என்ன பண்ணுவாங்க..’தன் தலையில் கொட்டிக் கொண்டவள்,

“அது வந்து..முஹூர்த்தப் புடவை எடுக்கிறது.. தாலி வாங்கறது எல்லாம் மாப்பிள்ளை வீட்டு செலவுதான்…!உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு அம்மா அப்பா தயங்கிட்டு இருந்தாங்க…!அதனாலதான் நாமளே சொல்லிடலாம்ன்னு போன் பண்ணினேன்…”,என்று விளக்கமளித்தாள்.

“ஓ…”,ஒரு நொடி அமைதி காத்தவன், “சரி…என்னுடைய கார்ட் தர்றேன்..என்னென்ன வேணுமோ வாங்கிக்கோ…”, என்றான்.

அவளுக்கு வந்ததே கோபம்,”ஹலோ சார்…!நாங்க ஒன்னும் பணம் இல்லாம உங்ககிட்ட கேட்கல…எங்ககிட்டேயும் பணம் நிறையவே இருக்குது…!முகூர்த்த புடவை எடுக்கிறது எல்லாம் மாப்பிள்ளை வீட்டுல கடைபிடிக்கிற சம்பிரதாயம்…என்னமோ நான் பணம் கேட்ட மாதிரி கார்டு தர்றேன்னு சொல்றீங்க…”, அவள் படபடவென பொரிய,

‘ஷ்…’.இவன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டே நிமிர்ந்து பார்த்தான்.கபிலன் உதட்டுக்குள் சிரிப்பை அடக்கப் போராடுவது தெரிய,’அவுட்..’,என்று கண்காளாலேயே கட்டளையிட..அவன் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேறி விட்டான்.

“இப்போ என்னதான் டி வேணும் உனக்கு…?காலையிலேயே போன் பண்ணி நை நைன்னுட்டு இருக்க…”,வள்ளென்று எரிந்து விழுந்தான் அவன்.

அவள் பட்டென்று போனை வைத்து விட்டாள்.’ங்கொய்’ என்ற சத்தம் தான் அவன் காதில் கேட்டது.போனை காதிலிருந்து எடுத்து திரையை வெறித்தவனுக்கு கோபம் கோபமாய் வந்தது.

‘பேசிட்டு இருக்கும் போது போனை கட் பண்றா…என்னை என்னன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறாள்… ‘கோபத்துடன் அவளுக்கு அழைக்க,அவள் எடுத்தாள்தான் ஆனால் ஒன்றும் பேசவில்லை.

“உன் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க…போன் பேச பேச கட் பண்ற…?இந்த விஸ்வேஷ்வரனுக்குன்னு ஒரு மரியாதை இருக்குது…அதை கொடுத்துப் பழகு…!”,

“நான்தான் காலையிலேயே போன் பண்ணி உங்களை டிஸ்டர்ப் பண்றேனே.. இனி பண்ண மாட்டேன்.. நான் போனை வைக்கிறேன்…”,

அவனது சீறலான மூச்சுக்காற்று அவள் செவியில் வந்து மோதியது.

“இப்போ நான் என்ன பண்ணனும்…?”,முதல் முறையாக தழைந்து போனான்.அதுவும் ஒரு பெண்ணிற்காக.அவன் இப்படி யாரையும் வலிய சென்று சமாதானப்படுத்தியதில்லை.முதல் முறையாக அவளை சமாதானப்படுத்த முயல்கிறான்.

“புடவை தாலி வாங்க நீங்களும் கூட வரணும்…”,முணுமுணுப்பாக பதிலளித்தாள் அவள்.

“சரி..வர்றேன்…!இந்த வாரம் சண்டே போகலாம்…”,

“ம்…!”,

இருவரும் போனையும் அணைக்கவில்லை. எதுவும் பேசவும் இல்லை.சிறிது நேரம் கழித்து அவனே வினவினான்.

“இன்னும் என்ன…?”,

“நான் போனை வைக்கிறேன்…”,

“ம்…”,போனை அணைத்து திரையை பார்த்தவனின் உதடுகள் அவனையும் அறியாமல் மென் புன்னகையில் விரிந்தது.

“கபிலன்..கெட் இன்…!”,உள்ளே நுழைந்த கபிலனின் இதழ்கடையோராம் நமட்டு சிரிப்பு குடியேறியிருந்ததைப் போல ஒரு தோற்றம் விஸ்வேஷ்வரனுக்குள்.

தொடரும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
காதல் இதுதானா?
707 70 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page