“நீர், நிச்சயம் மறுபிறவி எடுப்பாய். காதலின் வலியை உன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் உணர்வதற்காகவே நீர் நிச்சயம் மறுபிறவி எடுப்பாய்!”, கண்களில் கண்ணீர் திரையிட, தன்னை நோக்கி வந்த சாபத்தை வரம் போல ஏற்றுக்கொண்டான் அவன்.
ஆம், உண்மையில் அவனைப் பொறுத்தவரை அது அவனுக்குக் கிடைத்த வரம்தான்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அது வரம் மட்டுமல்ல அவன் செய்த தவறுக்கு அவனுக்குக் கிடைத்த தண்டனை. அவன் செய்த தவறை அவனே திருத்திக்கொள்வதற்கு அவனுக்குக் கிடைத்த மறுவாய்ப்பு அல்ல இறுதி வாய்ப்பு.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
‘ நான் சிறிதளவு கூட நினைத்துப் பார்க்காத அந்தச் சம்பவம் என் வாழ்வில் நிகழ்ந்து விட்டது. வாழ்க்கை சில நேரங்களில் சிலருக்கு மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமானதாக இருக்கிறது?
இந்த உலகத்தில் மனிதனாய் பிறந்ததைத் தவிர நான் ஒன்றும் அவ்வளவு பெரிய பாவம் செய்துவிடவில்லையே. பிறகு, ஏன் எனக்கு மட்டும் இந்தத் தண்டனை? ‘.
மனம் வெம்பித் தவிக்க உயிரை வெறுத்துக் கற்சிலையாக அமர்ந்திருந்தவளின் பார்வை வெறித்திருந்தது அந்த இடத்தை…
இல்லை இல்லை அவனை. ஆம், அவனைத்தான் வெறித்துப் பார்த்திருந்தாள். இன்னும் தெளிவாகச் சொன்னால் அவனின் உயிரற்ற உடலை.
மனிதனை மரணிக்கச் செய்வது எது, மனிதனை உண்மையில் மரணிக்கச் செய்வது, உண்மையில் மரணம் என்றால் என்ன, உண்மையான மரணம் என்றால் என்ன?.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
“ஹலோ!”.
“…………”.
“ஹலோ!, யா….ழா. யாழா நான் பேசுறது கேக்குதா?”.
“…………”.
“யாழா இருக்கியா?!”
“ச்ப்… இப்போ எதுக்குக் கால்(call) பண்ண?”.
“யாழா நான் வந்து…. அது “.
“இங்க பாரு மகிழ். நீ எதுவும் சொல்றதுக்கு முன்னாடி நானே பேசிடுறேன் “.
“…………”.
“நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ண ஆரம்பிச்சு கிட்டத்தட்ட மூணு வருஷம் முழுசா முடிஞ்சு போச்சு. ஆனாலும் நீ என்ன இன்னும் முழுசா நம்பல, அப்படித்தானே?”.
” அப்படி இல்லை யாழா…. நான் என்ன சொல்ல வரேன்னா? “.
“ நீ எதுவும் சொல்ல வேணாம் மகிழ். நானா வந்து உன்னை ஒன்னும் லவ் பண்றேன்னு சொல்லலையே. நீயாதானே வந்த?.என்ன பிடிச்சிருக்குனும் ரொம்ப நேசிக்குறதாவும் சொன்னே. ”
“…………”.
” என்னை அளவுக்கு அதிகமாகக் காதலிக்குறதாவும் கூடச் சொன்ன. ஆனா எனக்கு என்னமோ நீ சொன்னது எல்லாமே பொய்யா இருக்குமோனு சந்தேகமா இருக்கு !”.
“யாழா!, ஏன் இப்படி எல்லாம் பேசுற?. நான் ஏன் இந்த விஷயத்தில் பொய் சொல்ல போறேன்?”.
” அதுதான் அதுதான் மகிழ் எனக்கும் சத்தியமா புரியல. என்னை நீ காதலிக்குறதா சொல்லுற இந்தப் பொய் எதுக்கு?”.
“யாழா!, திரும்பத் திரும்ப என்னோட காதலைப் பொய்யின்னு சொல்லாதே. நான் உன்னைக் காதலிக்கிறேன். அதுவும் மனசாரக் காதலிக்கிறேன்னு உனக்கும் நல்லாவே தெரியும் யூ டேமிட்(you dammit )!”.
” எஸ்(yes), நான் டேமிட் தான் மகிழ். நீ என்னைக் காதலிக்குற, அதுவும் மனசாரக் காதலிக்குற, உயிருக்குயிரா காதலிக்குற. நான் இல்லனா நீ செத்துருவே.அப்படின்னு நீ சொல்ற பொய் எல்லாம் நம்புறேன் பாரு நான் டேமிட் தான்”.
“உஃப்… யாழா உனக்கு இப்போ என்னதான் பிரச்சனை?”. என்று அவள் கேட்பதற்குள் அந்த அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
இன்றைய முக்கியச் செய்திகள்…
சென்னையில் பயங்கரம்…
பிரபல ரௌடி கொலைக்கும்பலை சேர்ந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை…
என்ற செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட, புன்னகை முகமாக அந்தச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ஒரு வஞ்சம் ஒளிந்திருப்பதை அவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை.
“நாட் பேட் (Not bad) மிஸ்டர். ஆதித்த கரிகாலன்”என்று உதிர்த்தவனின் புன்னகை அரக்கனைப் போலவே இருந்தது.
ஆம் அவன் அரக்கன்தான். மனித உருவில் வாழும் அரக்கன்.
பொதுவாக மனிதனுக்கும் அரக்கனுக்கும் சிறு நுனி அளவு வித்தியாசம்தான் உடலளவிலும் சரி மனதளவிலும் சரி…
ஒருவனுக்கு ஒருவன் கொடுத்து வாழ்பவன் மனிதன்…ஒருவனை ஒருவன் கொன்று வாழ்பவன் அரக்கன்…
அந்த விதத்தில் பார்த்தால் அவனை மனிதன் என்று எந்த விதத்திலும் சொல்லிவிட முடியாது…
அவன் அரக்கனை விடவும் மோசமானவன்…
அவனைப் பற்றி விவரித்தால் மொத்தத்தில் கெட்டவன் என்று ஒரு மனிதனை இந்த உலகம் வரையறுக்கும் எல்லா வரைமுறையிலும் இவன் அடங்குவான்.
தீமைதான் வெல்லும்.…
என்ன நினைத்தாலும்
தீமைதான் வெல்லும்
எவன் தடுத்தாலும்…
மனித உருவத்தில்
அலைந்திடும் மிருகம் நான்…
மனிதன் மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான்…
.
.
.
.
.
.
இது முன்னோட்டம்தான் நண்பர்களே எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க.…
தொடரும்..…
