Epi -6 – ஜான் இன்ட்ரோ

இதுவரை.. 

  செல்வன் உடனான விவாகரத்திற்கு பிறகு வீர்-ன் தாய் ரத்னா தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்டார்.  இருப்பினும் வீர-ன் மீது இருக்கும் பாசத்தினால் அவனைப் பின்தொடர்கிறார். தங்களைப் பற்றிய அடையாளம் தெரியாமலே வீர்-ம் அவனின் தங்கை சைந்தவியும் முதல் முறையாய் சந்தித்துக் கொண்டனர். 

இனி… 

  ரம்யாவிற்கு ஆதரவாய் பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசிய வீர் அடுத்ததாக தன் தங்கை சைந்தவியை முதல் முறையாக சந்தித்தான்.

  அந்த சந்திப்பு நினைவுகளாக அவனுக்குள் பதிய, தொடர்ந்து அடுத்த வேலையை கவனிக்க தன்னுடைய அலுவலகத்திற்கு கிளம்பினான். 

  வீர் உள்ளே நுழைந்த சமயம் ஆபீஸ் ஊழியர்கள் அவனுக்கு புன்னகையோடு காலை வணக்கம் கூறினர். 

  மற்றவர்களை காட்டிலும் விஷ்ணு முந்திக்கொண்டு முன்னால் வந்து நின்று உரைத்தான். விட்டால் இடித்து விடுவான் போல..

  “குட் மார்னிங் சார்…”

  “ஹேய் விஷ்ணு, பார்த்து என்னை இடிச்சு தான் குட் மார்னிங் சொல்லனுமா..”

  “சாரி சார், உங்களை பார்த்ததும் ஒரு உற்சாகத்தில் வந்தேன்..”

  “ஓகே குட் மார்னிங்… ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு நாம ஒரு ஷூட்டிங்காக வெளியே போக வேண்டியது இருக்கு ..”

 ” ஓகே சார் ..”என ஆர்வமாக ஏற்றுக்கொண்டான் விஷ்ணு 

   வீர்- ன்  கேபினின் அருகிலேயே வைஷ்ணவிக்கும் கேபின் கொடுத்திருந்தனர். 

    இதற்கு முன் வேலை செய்த இடத்தில் ஓனர் வந்ததுமே பிஏ அவரின் அறைக்குள் நுழைவதை பார்த்திருக்கிறாள் வைஷ்ணவி. அனுபவம் இல்லாத வேலை என்றாலும் தனக்குத் தெரிந்ததை போல் நடந்து கொண்டாள். 

   வீர் தனது கேபினுக்குள் நுழைந்த சில வினாடிகளிலேயே வைஷ்ணவியும் பின்தொடர்ந்து சென்றாள். 

  “குட் மார்னிங் சார்..”

    மங்களகரமான அவளின் தோற்றத்தில் காலை வணக்கம் பெற்றதில் ஒரு போல் நல்லா ஆரம்பமாய் நினைத்தான். 

  “குட் மார்னிங் வைஷு..”

  தன் பெயரை சுருக்கி அழைத்ததும் வீர்-ன் முகத்தை கவனித்தாள் . எதார்த்தமாகத்தான் அழைத்தார் என புரிந்து கொண்டாள். 

   “ஓகே இன்னைக்கு என்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க..” 

  அவள் தன்னுடைய மொபைலில் நோட்பேடை ஓபன் செய்தாள்.

   “இன்னைக்கு காலை பத்து மணிக்கு ஒரு விளம்பரம் ஷூட்டிங் இருக்கு அதுக்கு போகணும், எப்படியும் ஈவ்னிங் ஆகிடும். அதுக்கு நடுவுல டைம் கிடைக்கும் போது அந்த விளம்பர பொருளோட ஓனரை மீட் பண்ண வேண்டியது இருக்கு, கிளைண்டோட காண்டாக்ட் நம்பர் தரேன். நோட் பண்ணிக்கோங்க..”

  அதன் பிறகு தொடர்ந்து சில வேலைகளை நினைவுபடுத்துமாறு அவளுக்கு கூறினான். 

  வைஷ்ணவிக்கு லேசாக தலை சுற்றலே வந்துவிட்டது. 

    ‘தன்னுடைய வேலைகளை நினைவில் வைத்துக் கொள்வதே பெரும் சங்கடம். இதில் இத்துனை வேலைகளை நினைவுகள் வைத்துக் கொள்ள வேண்டுமா… எப்படி தான் இந்த பிஏ எல்லாம் சரியாக வேலை செய்கிறார்களோ..’

  “ஓகே ஷூட்டிங்க்கு டைம் ஆச்சு கிளம்பலாம் வாங்க…”

  வீர் கிளம்பும் போதே அவனுடன் வைஷு வெளியே வந்தாள். உடன் விஷ்ணுவும் இணைந்து கொண்டான். அவர்கள் மூவரும் வீர்-ன் காரில் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றனர். 

  விஷ்ணுவிற்கும் ஏற்கனவே வேலை செய்த அனுபவம் இருக்கிறது. ஆனால் இந்தத் துறையில் பெறும் அனுபவம் வித்தியாசமாக இருந்தது. 

  அலுவலகத்தைப் போலவே இங்கும் வீர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் மரியாதை கொடுத்தனர். 

   அங்கே வேலை செய்து கொண்டிருந்த தன் ஊழியன் ஒருவரிடம் விசாரித்தான் வீர். 

  “ஜான் அங்கிள் எங்க இருக்காரு..?”

  “குட் மார்னிங் சார்..

   ஜான் சார் காஸ்டியூம் ரூம்ல இருக்காரு..”

  வீர் வைஷூவையும் விஷ்ணுவையும் அழைத்துக் கொண்டு காஸ்டியூம் அறைக்கு சென்றான் . அங்கே தான் விளம்பரத்தில் நடிப்பவர்கள் அணிய வேண்டிய ஆடைகள் பிரித்து வைத்திருப்பர். 

   “அங்கிள்..?”

  “வா வீர் , உனக்காக தான் காத்துட்டு இருந்தேன்..” 

  வீர்-ன் அருகே இருந்த இரண்டு நபர்கள் யார் என பார்வை நோக்கினார் ஜான். 

ஜான் கிட்டத்தட்ட 55 வயதை கடந்த திடமான நபர். தனக்குள் இருக்கும் உடல் சோர்வை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். குரலில் இருக்கும் கணீர் சத்தம் வேலையில் இருப்போரை ஆட வைத்து விடும். 

   “கைஸ்.. இவரு என்னோட ஜான் அங்கிள், நான் கம்பெனி ஆரம்பிச்ச சமயத்தில் இருந்தே எனக்கு ஒரு வழிகாட்டியா இருக்கார்..”

   “வணக்கம் சார்…” என வணங்கினாள் வைஷ்ணவி. விஷ்ணுவும் மரியாதை கொடுத்தான். 

   “அங்கிள் இவங்க இரண்டு பேரும் நம்ம கம்பெனியில புதுசா ஜாய்ன் பண்ணிருக்காங்க.. இவங்க வைஷ்ணவி, அப்புறம் இவர் விஷ்ணு..”

  “விஷ்ணு, இனிமே ஜான் அங்கிள் கூட தான் நீங்க வேலை செய்யணும். அவர் சொல்றதை முடிக்கிறது தான் உங்களுடைய டியூட்டி..”

   “அப்புறம் வைஷ்ணவி என்னுடைய பிஏ வா அப்பாயிண்ட்மெண்ட் செஞ்சிருக்கேன் அங்கிள்..”

   “உங்க இரண்டு பேருக்குமே என் வாழ்த்துக்கள். வீர் உடைய கம்பெனியில் வேலை செய்ய நீங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். நியாயமா இருந்தீங்கன்னா ஒரு பாஸ் என்கிற இடத்தை தாண்டி நல்ல நண்பனா இருப்பான்..”

  வேலைக்கு சேர்ந்ததிலிருந்து அனைவரும் வீர்-ஐ  புகழ்ந்து கொண்டே இருந்தனர். வைஷ்ணவி வீர்-ஐ  ஓரக்கண்ணால் பார்த்தாள். ‘அவ்வளவு நல்லவரா..’ என தோன்றியது. 

  அங்கே வேலை செய்யும் ஒரு பையனை அழைத்து வைஷ்ணவியையும் விஷ்ணுவையும் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க கூறினான் வீர். 

   வைஷ்ணவியும் விஷ்ணுவும் அங்கே வேலை செய்பவர்களிடம் எதார்த்தமாய் பேசிக் கொண்டிருக்க, அப்போது காஸ்டியூம் அறையில் இருந்து ஜான் கத்தும் சத்தம் கேட்டது. 

   “என்ன ஆச்சு ஜான் சார் இவ்வளவு கோவமா பேசுறார். எப்பவுமே வீர் சார் கிட்ட சத்தம் போட மாட்டாரே..?”

  அருகில் இருந்தோர்கள் அதிசயமாக பேசியது கேட்டு வைஷ்ணவி என்னவாக இருக்குமோ என எதிர்பார்த்தாள்.

  ஜான் கோபத்தோடு அறையில் இருந்து வெளியே வந்தார். அவரை பின்தொடர்ந்து வீர்-ம் வந்தான். 

   “அங்கிள் நீங்க இந்த விஷயத்தை இவ்வளவு பெருசா எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்படி உங்களுக்கு உடம்பு சரியில்லாத சமயம், ஷூட்டிங் நான் டைரக்ட் பண்றனோ அது மாதிரி தான் இந்த பொண்ணு உங்களுக்கு உதவியா இருப்பாங்க…”

    “புரியுது வீர் எனக்கு வயசாகிடுச்சு வேலையை விட்டு நின்னுகோனு நேரடியா சொல்ல முடியாம இப்படி ஒரு ஆளை வேலைக்கு வைத்து எதிர்மறையா சொல்ற …”

   “அங்கிள் ப்ளீஸ், உங்க திறமைக்கு முன்னாடி நாங்க யாருமே நிற்க முடியாது உங்களை மாதிரி ஒரு ஆளை இழக்கிறது  கம்பெனிக்கு தான் நஷ்டம். நீங்க நினைக்கற வகையில் நான் யோசிக்கலை.  உங்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு பார்த்தேன்..”

   “எனக்கு குடும்பம்னு ஒன்னு இல்லாவிட்டாலும், இந்த வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து இந்த கம்பெனியை தான் என் குடும்பமா நினைக்கிறேன்.  ஆனா நீ என்னை உன்கிட்ட வேலை செய்ற ஆளா தான் பார்த்திருக்க.. இப்பவாவது எனக்கு எல்லாம் புரிஞ்சுது நான் கிளம்புறேன். அந்த பெண்ணை வச்சே நீ டைரக்ட் பண்ணிக்கோ…”

  “அங்கிள் ப்ளீஸ் நில்லுங்க…”

  வீர் தடுத்தும் ஜான் நிற்காமல் சென்று விட்டார். இருந்தும் வீர் வாசல் வரை சென்றான்.  அவரின் கார் அங்கிருந்து கடந்த பிறகு தான் தோல்வியோடு உள்ளே நுழைந்தான்.  அவரின் கோபத்தை வெல்வது அவ்வளவு  எளிதல்ல என அவனுக்கும் தெரியும். 

  வீர்-ம் ஜானும் பேசிக் கொண்டதை வைத்து என்ன விஷயமாக இருக்கும் என ஒரு அளவுக்கு யூகித்துக் கொண்டனர் . இப்போது ஷூட்டிங்கை தொடங்கலாமா என்ற குழப்பத்தில் இருந்தனர் வேலையாட்கள். 

  நெற்றியை பிடித்தவாறு டென்ஷனோடு அமர்ந்திருந்தான் வீர். ஷூட்டிங்கிற்க்கு தேவையான அனைத்தும் தயாராக இருந்ததால், இப்போது என்ன செய்யலாம் என கேட்பதற்காக முன்னால் சென்றான் விஷ்ணு. 

   “சார் எல்லாம் தயாரா தான் இருக்கு செக் பண்ணிட்டேன். ஷூட்டிங் ஆரம்பிக்கணும்னு சொல்றாங்க இப்போ யாரு இயக்குனர்..”

     “ வைஷ்ணவி..”

  வீர்-ன் குரலுக்கு முன்னால் வந்து நின்றாள் அவள்.

  “நேத்து உங்களை இன்டர்வியூ பண்ணும் போது எனக்கு ஒரு கான்செப்ட் சொன்னீங்கல்ல, குடிக்கிற கூல்டிரிங்சை வாங்குறது சாதாரண பாமர மக்கள்னு அந்த கான்செப்ட்ல இந்த விளம்பரத்தை எடுத்து முடிங்க…”

  “சார் நானா..”

  “ஆமா நீங்க தான்.. ஒரு பெண்ணுக்கு தகுதி இல்லைனு சொல்லி உங்களோட வாய்ப்பை தட்டி கழிச்சாங்கன்னு சொன்னீங்களே, இது நிரூபிக்குறதுக்கான வாய்ப்பு, உங்களுக்கு  என்ன திறமை இருக்குன்னு நான் பார்க்கணும்… Do it…”

  தன்னை நம்பி இயக்குனராக முதல் வாய்ப்பை அளித்த வீர்-க்கு நன்றி கூறினாள்.

  “தேங்க்யூ சார்.. ”

  அதன் பிறகு அரை மணி நேரத்திற்கு இடைவெளி எடுத்துக் கொண்ட வீர் வைஷூவின் விளம்பர இயக்கத்தை பார்ப்பதற்காக அவ்விடம் சென்றான். 

  அவனை கண்டதும் புன்னகையோடு வேலையை தொடங்கினாள். 

  அவளின் கருத்துப்படி ஒவ்வொரு காட்சியும் நுணுக்கமாக கவனித்து எடுத்தாள் . அவளின் ரசனையை கூர்ந்து கவனித்தவன் எதார்ச்சையாய் அங்கிருந்த தன்னுடைய வேலையாள் ஒருவனை கவனிக்க, அவனோ விலகி இருந்த வைஷ்ணவியின் புடவையை நோட்டமிட்டான். 

     வீர்-க்கு இது போன்ற அநாகரீக செயல்கள் எல்லாம் சுத்தமாக பிடிக்காது அந்த வேலையாளை முறைத்துப் பார்த்தவாறு அவன் நிற்க, தன் ஓனரின் பார்வை தன்னை தாக்குவதை உணர்ந்து தடுமாறினான் அந்த வேலையாள். 

  கண்களால் அவனை தனியாக அழைத்தான் வீர்.

  “சார், மன்னிச்சிடுங்க சார் ..தெரியாம பார்த்துட்டேன். இனிமே இந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்..”

   “உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பார்வையை நான் எதிர்பார்க்கலை. உங்களுக்கு கல்யாணம் ஆகி அன்பான மனைவி இருக்காங்க, இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க, எப்படி இன்னொரு பெண்ணை இப்படி தப்பா பார்க்க மனசு வந்துச்சு..”

   “தப்புதான் சார் நான் கண்ணியமான ஆள் தான் . ஆனால் அந்த பொண்ணு அழகா இருக்காங்க ,என்னையும் மீறி என்னோட கண்ணு…”

  அதற்கு மேல் தன்னுடைய நிலையைப் பற்றி விவரிக்க சங்கடம் கொண்டார் அந்த வேலையாள்.

   “இங்க பாருங்க கடைசி தடவையா எச்சரிக்கிறேன். நம்ம கூட வேலை செய்ற பொண்ணுங்களோட கண்ணை பார்த்து பேசணும் . நம்மளை நம்பி தானே அவங்க வேலைக்கு வறாங்க, அதை ஞாபகம் வச்சிக்கோங்க.. ”

   “தேங்க்யூ சார் … இனிமே ஒழுங்கா இருப்பேன்..”

  வீர் இடம் இருந்து மன்னிப்பு கிடைத்ததே பெரும் விஷயம் என ஓடிவிட்டார் அந்த வேலையாள்.

    சூட்டிங்கின் சில காட்சிகளை செட்டுக்கு வெளியே பொது இடத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இருந்தது அவற்றையெல்லாம் வீர் இடம் வைஷு எடுத்துரைக்க, அவனும் ஒப்புக்கொண்டான் அந்த நாளின் இறுதியில் விளம்பரம் முழுதாக எடுத்து முடிக்கப்பட்டது. 

   தன் வேலைகளை முடித்து ஓய்வெடுப்பதற்காக அவள் அமர்ந்திருக்க அப்போதுதான் கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள்.

  உடனே வீர்-ஐ சந்திப்பதற்காக உள்ளே சென்றாள். 

  “விஷ்ணு, வீர் சார் எங்க இருக்காரு..”

  “அந்த காஸ்டியூம் ரூமுக்குள் போறதை பார்த்தேன்..”

  “ஓகே…” என்றாள்.

  வைஷூ அந்த அறைக்குள் இருந்த வீர்-ஐ சந்திக்க விரைந்து வந்தாள். சரியாக அவள் நுழைந்த சமயம் வீர்-ம் நாற்காலியில் இருந்து எழ, அவனின் அசைவை கவனிக்காதவள் அவன் மீது மோதினாள். 

  இருவரும் நிலை தடுமிறி கீழே விழுந்தனர். 

                                   😉

  

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page