தூரிகை 1❤️

அந்தி மாலை மறைந்து மெல்ல இருள் சூழும் நேரம்,, சென்னை மாநகரம் பரபரப்பாக,, இயங்கிக் கொண்டிருந்த வேளையில், நான்கு பேர் ஒருவனை காரில் துரத்திக் கொண்டிருக்க… 

அவர்களால் துரத்தப்படுபவனோ?? தனது வாகனத்தை திருவல்லிக்கேணியில் இருக்கும் தனது இரண்டாவது மனைவியின் வீட்டின் முட்டுச் சந்தில் நுழைத்தான்..

காரில் வந்தவர்கள் எப்படி செல்வது என்றுத் தெரியாமல் தவித்துக் கொண்டே அப்படியே திரும்பினர்.

இதை அறியாத அவன் தனது வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு,, கதவுப் பூட்டியிருப்பதைக் கவனிக்காமல் வேர்க்க விறு விறுக்க தன் நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டு கதவைத் தட்டினான். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாமல் போகவும் கதவை எட்டி உதைத்து விட்டு திரும்பும் போது தான் கதவு பூட்டிருப்பதைக் கவனித்தான். 

உடனே தன்னிடம் உள்ள சாவியைக் கொண்டு, திறந்து மின்னல் வேகத்தில் உள்ளே நுழையும் போதும், தன்னை துரத்தியவர்கள் வருகிறார்களா?? என்றுப் பார்த்து விட்டு உள்ளே சென்று  உள் தாழ்ப்பாள் இட்டு விட்டு, 

“அப்பாடா தப்பிச்சோம்,” என்று சொல்லியப்படியே,, அங்கிருக்கும் சோபாவில் சாய்ந்து  ஓடி வந்த களைப்பிலும், இந்த வீடு யாருக்கும் தெரியாது, என்ற மிதப்பிலும், கண்களை மூடி சற்று இளைப்பாறினான்…. 

இவனைத் துரத்தி வந்தவர்களோ?? இவனை அக்கம் பக்கம் தேடி பார்த்து விட்டு, எங்கும் கிடைக்காமல் போக தன்னை அனுப்பியவனுக்கு அழைக்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டே அங்கே அமர்ந்திருக்க…. 

அவர்களில் ஒருவன் தன்னுடைய, போனை எடுத்து தன் முதலாளியின் எண்ணிற்கு அழைத்தான்.

இன்னொருவன் அதை தடுத்து, “டேய்… என்னடா பண்ணிட்டு இருக்க.” என்றுக் கேட்டான்.

“நம்மாள அவனைக் கண்டுப்பிடிக்க முடியல, அதை சார் கிட்ட சொல்லிட்டோம்னா, நல்லாயிருக்கும் சாரைப் பார்த்தால், கொஞ்சம் வயசு ஆனவர் மாதிரி தான் இருக்காரு, அதனால் நம்மளை மன்னிச்சி விட்டுடுவாரு அது தான்,” என்றான். அப்பாவியாக!!

“டேய்…. நீ புதுசு இல்லை,  அவர் வந்ததுக்கு அப்புறம் பாரு, அவருடைய வயசை அவர் ஆபீஸ்ல தான் இருப்பார்.  ஆனா, அவரோட கவனம் மொத்தமும் இங்க தான்டா இருக்கும். நீ வேணா ஒரு ஐந்து நிமிஷத்தில் பாரு, அவரே நமக்குக் கூப்பிட்டு நாம அவனை கண்டுபிடிக்கலைங்கறதை சரியா சொல்லிடுவாரு.. ” என்றுக் கூறிவிட்டு அவனின் அழைப்பிற்காகக் காத்திருந்தனர்.

அவர்களை அனுப்பி வைத்தவனோ , தன் அலுவலகத்தில் இருக்கும் பிரத்யேக அறைக்கு சென்று அங்கு குவித்திருக்கும்  பணக்கட்டுகளை கீழிருந்து மேலாக ஒரு முறை முகர்ந்து பார்த்து முத்தமிட்டு “ஐ லவ் யூ பார் எவர்,” என்றுக் கூறி தன்னுடைய கோட் சூட்டை கழட்டி வைத்துவிட்டு கருப்பு நிற வேஷடியும், கருப்பு நிற சட்டையும் அணிந்து, கண்ணாடியில் தன் சால்ட் அண்ட் பெப்பர், மீசையும், தாடியையும் ஒரு முறை சரி செய்து கொண்டான்.  எழிலமுதன்!! பாதி பெயருக்கேற்றார் போல், அழகாக இருப்பான்.. ஆனால், அமுதன் என்று பெயருக்கு எதிராக, வன்மம் குணம் கொண்ட அவனுக்கு, 

அந்த கருப்பு நிற உடை,, அவனுடைய மெருகேற்றிய உடலுக்கு பாந்தமாக பொருந்தியது. சால்ட், அண்ட் பெப்பர் முடி தானே என்று சாதாரணமாக நினைக்க முடியாது,,  அவனுடைய தோற்றம் வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல என்பது போலவே இருக்கும். ஆறடிக்கு சற்றும் குறையாமல், இந்த வயதிலும் தன்னுடைய உடலை உடற்பயிற்சி செய்து, கட்டுக்கோப்பாக வைத்திருப்பவன். 

அன்பு என்றுக் கூறினால், அது எந்தக் கடையில், எவ்வளவு கோடிக்கு கிடைக்கும் என்பான். பணத்தின் மேல் மட்டுமே தீராத காதல் கொண்டவன். 

அதன் மேல் இருக்கும் காதல்,  மனைவியிடமும், பிள்ளைகளிடமும் இல்லை… அவன் மனைவிக்கும் பணத்தின் மீதே காதல் இருந்ததால், அவள் இறந்த போதிலும், பணத்தைக் கொடுத்தால் எல்லாம் வந்து விட போகிறது என்றுக் கூறி விட்டு, இங்கு இருக்கும் நேரம் எனக்கு கோடி பணம் வரும் என்று தன் மனைவியின் இறுதி சடங்கில் கூட இல்லாமல், பணம் சம்பாதிக்க சென்று விட்டான்.

தன் சொத்துக்களை பெரிது படுத்த மட்டுமே போனால் போகட்டும் என்று  தன் இரண்டு பிள்ளைகளுக்கு, தொழிலை கற்றுக் கொடுத்தான்.

அது அவர்களுக்கு சரிவர வராததால்,  பணத்தை எடுத்து வீசி எரிந்து,  அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டான். அவர்களும், இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என நினைத்து தங்களுடைய வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிருக்கிறனர்.

இவனும் தன்னுடைய வாழ்க்கையை பணத்தை மட்டுமே கட்டிப் பிடித்தும், சேமித்தும், அதனுடன் நேரத்தை உல்லாசமாக செலவழித்து அந்த உல்லாசத்திற்குத் தடையாக யார் வந்தாலும் அவர்களை கொல்ல கூட தயங்காமல் சென்று கொண்டிருப்பவன் இப்போதும், அதை செய்யத் தான்

தன் உடைகளை மாற்றிக் கொண்டு அலுவலகத்தில் இருந்து இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக வேகமாக இறங்கி தன் போனை எடுத்து காதில் வைத்து தன் ஆட்களுக்கு அழைத்து, ” டேய் ஒருத்தன துரத்தி பிடிக்கறதுக்கு உங்களுக்கு எவ்வளவு நேரமடா, ” என்று கர்ஜித்தான்..

“இல்லை சார். அவனை துரத்திட்டே வந்தோம். எங்கயோ?? சந்தில் நுழைந்து போய்ட்டான். இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கோம் சார்,” என்றுக் கூறினான்..

“ஒரு வேலைக்கும் லாயிக்கு இல்லை டா நீங்க எல்லாம், ” என்றுக் கத்தினான்.

அவன் அமைதியாகவே இருக்க.. “சரி நான் இன்னும் 5 நிமிஷத்தில் வந்துடுவேன். நான் வர வரைக்கும், அந்த ஏறியாவில் ஒருத்தனும் உள்ள வரவும் கூடாது, வெளிய போகவும் கூடாது, என்றுக் கட்டளையிட்டு விட்டு, தனது கருப்பு நிற ஜிப்பை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

அமுதன், தனது ஜிப்பை எடுத்துக்கொண்டு வந்தவன்.  தனது ஆட்களிடம் ஜீப்பை நிறுத்தி, அவர்கள் நால்வரின் கன்னம் வீங்கும் வரை அடித்து விட்டு, “இனி, நானே பார்த்துக்கிறேன். நீங்க ஒரு நிமிஷம் கூட என் கண்ணு முன்னாடி இருக்கக் கூடாது..” என்றுக் கூறி, கண்கள் சிவக்க அவர்களிடம் சொன்னான்.

அவனுக்கு வயதாகிவிட்டது என்று கூறியவனுக்கோ இப்போது இவனிடம் இருந்து தப்பித்தால் போதும்! என்று இருந்தது. 

பின் அவர்களிடம், அவன் கடைசியாக எந்த பக்கம் சென்றான் என்றுக் கேட்டு அந்த பக்கம் செல்ல… அவர்களும், இவன் பின்னே வர அவர்களை அடித்து துரத்தி விட்டு, அந்த சந்தில் வந்தான்.

அங்கே இரண்டு மூன்று வீடுகள் மட்டுமே இருக்க… மீண்டும் சென்று தனது ஜிப்பை எடுத்துக் கொண்டு, அந்த தெருவை சுற்றி  வந்தான். அங்கு ஒரே ஒரு வாகனம் மட்டும் இருந்ததை கவனித்தவன். ஒரு மர்ம புன்னகை புரிந்து விட்டு, அந்த வீட்டு வாசப்படியில் தனது வாகனத்தில் நிறுத்தி குதித்து, அந்தக் கதவைத் தட்டினான்.

உள்ளிருந்தவனோ? தனது மனைவி தான் வந்திருக்கிறாள். என்ற ஆசையுடன் வந்து கதவை திறந்து, ஆசையுடன், தனது மனைவியைக் கட்டிப் பிடிக்க வந்தவன். 

அங்கு, ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய்,, கருப்பு நிற உடையில் நின்றிருந்தவனைக் கண்டதும், எமனை கண்டதுப் போல் பயந்து,  பின்னாடியே ஓட,, அங்கிருக்கும் சோபாவின் காலில் இடித்து அப்படியே சோபாவில் உட்கார்ந்தான்.

அமுதனும், அவனை நகர விடாமல்,  ஒரு காலை, சோபாவின் மேல் வைத்து அவன் முகத்திற்கு அருகே,, கத்தியைக் கொண்டு வர, அவன் காலைப் பிடித்து, ” சார் பணத்துக்கு ஆசைப்பட்டு, இப்படி பண்ணிட்டேன் சார் மன்னிச்சிடுங்க, ” என்று கேட்டான்.

அதைக் கேட்டு, “மணி ஆல்வேஸ் அல்ட்டிமேட்,” என்று அந்த வீடே அதிரும் படி சிரித்துவிட்டு, அவன் முன்பு இரண்டு கட்டுப் பணத்தை தூக்கி எரிந்தான்.

அவனுக்கு, ஒரு கண் பணத்தின் மேலேயும், மறுக்கண் அவன் பிடித்து இருக்கும் கத்தியின் மேலேயும் படர்ந்து என்ன செய்யப் போகிறான். என்று நினைத்து, அவன் இதயத் துடிப்பே அவன் காதுக்குக் கேட்டது..

ஆனால், எதிரில் இருந்தவனோ அதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல், “என்னடா அப்படி பாக்குற நீதானே சொன்ன, பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பண்ணனு சொல்லி அதனாலதான் பணத்தை கொடுத்தேன்..  பணத்துக்கு ஆசைப்படுறவன் எப்பவும் இப்படி பயப்படக் கூடாது, அகைன் ஐ அம் டெல் யு மணி ஆல்வேஸ் அல்ட்டிமேட், உனக்கு பணம் வேணும், உனக்கு தேவையானதை நான் கொடுத்துட்டேன். எனக்கு உன் உயிர் எனக்கு வேணும்… ” என்று சாதாரணமாக கூறினான்.

அவன், ” சார்… இனி இப்படி பண்ண மாட்டேன்.” என்றுக் கெஞ்சினான். 

“நோ, நோ… “ என்று தன் சுட்டு விரலை ஆட்டி, ” என்னைய எதிர்த்து நிற்கிறவங்களையே நான் அழிச்சிட்டு போயிடுவேன். நீ எனக்கு துரோகம் பண்ணி இருக்க உன்னை எப்படி நான்  மன்னிப்பேன். அதுவும் இல்லாமல், நான் தான் உன் உயிருக்கு பணம் கொடுத்துட்டேனே,  இனி அது எனக்கு தான் சொந்தம் உனக்கு இல்லை… ”  என்றுக் கூறி சிரித்தான்.

அதைக் கேட்டதும் அவனுக்கு,, மேலும் வியர்க்கத் தொடங்க… ” உங்களுக்கு சாட்சி யாரும் இல்லைனு நினைக்காதீங்க என்னோட இரண்டாவது பொண்டாட்டி,, இப்ப  வந்துடுவா?? பயத்தில் யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறினான். அதைக் கேட்டு   தனது சட்டைக் காலரை,, தூக்கி விட்டு, அவனை மேலும் நெருங்கி,  “அப்படியா சொல்ற,, ஐயோ!! எனக்கு ரொம்ப பயமா இருக்கே… அப்போ என்னை போலீஸ் புடிச்சிட்டு போய்டுவாங்களா!!” என்று பயந்தது போல் நடித்தான். 

அதைப் பார்த்து அவன் சிரித்த நேரம், “அப்பாடா! சிரிச்சிட்டியா எங்கடா உன்ன அழ வச்சு கொன்னுடுவேன்னு நினைச்சேன்…” என்றுக் கூறி சிரிக்க…

கத்தி முனையில் இருப்பவனுக்கு அரக்கனை பார்ப்பது போல் இருந்தது. அந்த, மயக்கத்தில் இருந்தவனிடம், “உன் பொண்டாட்டி தானே வருவா?? அதை நான் பார்த்துக்கிறேன்.”  என்று அவன் கையில் வைத்திருந்த கத்தியை அவனின் இடது பக்கம் கழுத்தில் சொருகி, வலது பக்கமாக இழுத்து,  அவன் முகத்தில் ரத்தம் தெறிக்கும் நேரம்,,

தன்னுடைய சித்தப்பா மகனை பார்க்க வந்த, சிவப்பு நிற சேலை அணிந்த பெண்மணி ஒருத்தி அந்த கதவு திறந்திருக்கவும், தனக்காகத் தான், தன் அண்ணன் கதவை திறந்துக் காத்திருக்கிறான். என அந்த வீட்டின் உள்ளே நுழைந்தவளின்,, கண்களில் கழுத்தின் உள்ளே கத்தி சொருகி இருந்தவனும், இவள் உள்ளே வரும் போது, அமுதன் திரும்பிய வேகத்தில் ரத்தம்  தெருத்திருந்த  கோர முகமும் தெரிய அதை பார்த்து,, “ஆஆ,” என்றுக் கத்தி விட்டாள்..

அமுதன், தான் செய்தக் கொலை செய்தைப் பார்த்த அந்த பெண்ணைத் துரத்தினான். அவனுக்கு பயந்து இவளும் ஓட்டம் பிடித்தாள்.

 

தொடரும்..…

கதையின் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க… அப்படியே உங்களின் விமர்சனத்தையும், மதிப்பீட்டையும் தந்து விட்டுச் செல்லுங்கள்.…

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
924 6 5
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page