இதுவரை..
வீர் வைஷ்ணவியையும் விஷ்ணுவையும் ஜான் அங்கிளுக்கு அறிமுகப்படுத்தினான். வைஷ்ணவியை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொள் இனி நான் உன்னிடம் வேலை செய்யப் போவது கிடையாது என கோபித்துக் கொண்டு கிளம்பினார் ஜான் அங்கிள்.
இனி..
தன்னை நம்பி முதல் முறையாக இயக்குனராக வாய்ப்பளித்த வீர்-ன் நம்பிக்கையை காப்பாற்ற முழு மனதோடு உழைத்தாள் வைஷூ.
அன்றைய நாளின் இறுதிக்குள் விளம்பரப் படத்திற்கான சூட்டிங்கை முடித்திருக்க, நிம்மதி மூச்சை விட்டவாறு நாற்காலியில் அமர்ந்தாள். அப்போதுதான் விஷயம் ஒன்று நினைவிற்கு வர உடனே வீர்-ஐ சந்திக்க சென்றாள்.
காஸ்ட்யூம் அறையில் அமர்ந்திருந்த வீர், அவள் வருவதைக் கவனிக்காது திடீரென்று எழுந்து நடக்கத் துவங்க அதில் நிலை தடுமாறி ஒருவருக்கொருவர் மோதி ஒன்றாய் கீழே விழுந்தனர்.
வீர்-ன் முதுகுப்புறம் தரையில் படிந்தவாறு அவன் முதலில் விழுந்திருக்க, அவன் மீது விழுந்தாள் வைஷு.
திடீரென்று தன் மீது மோதியது வைஷு என அவன் அறியவில்லை. தன் முகத்தை மறைத்திருந்த அவளின் முந்தானையை விலக்கிப் பார்த்தான்.
‘ஏன் தான் இந்தக் கடவுள் மீண்டும் மீண்டும் இவ்வளவு நெருக்கத்தைக் கொண்டு வருகிறாரோ..’ என அவளின் கண்களை பார்த்து அமைதியாகினான்.
“அச்சச்சோ sorry சார் , தெரியாம இடிச்சிட்டேன். நீங்க எழுந்ததை நான் கவனிக்கலை..”
விழுந்த வேகத்தில் அவளின் நீண்ட கூந்தலின் பின்னல் அவன் மீதுதான் தஞ்சம் அடைந்திருந்தது.
படபடவென மன்னிப்பு கேட்டவள், உடனே எழுந்தாள். அப்போது தலையில் லேசாய் வலியை உணர்ந்தாள் . அவளின் முடி எதிலோ மாட்டிக் கொண்டது.
வீர்-ம் எழுந்து நின்று தன் உடையில் தூசுகளை தட்டி விட்டான்.
“Sorry சார் ஏதாவது அடிபட்டுருச்சா ..”
“இல்ல, உங்களுக்கு ஏதாவது அடிபட்டுருச்சா …”என அவன் கேட்க
“நான் உங்க மேல தானே விழுந்தேன் எனக்கென்ன அடிபட போகுது..”
சங்கடமாய் அவள் உரைத்த வார்த்தையை கேட்டு மெல்ல இதழ் விரித்தான்
“சரி எதுக்காக இவ்வளவு வேகமா வந்தீங்க ..”
“சார் எனக்கு கொஞ்சம் முக்கிய வேலை இருக்கு, நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா எனக்கு பர்மிஷன் தருவீங்களா, நாளைக்கு மார்னிங் ஷார்ப்பா வேலைக்கு வந்துடுவேன்..”
“இட்ஸ் ஓகே வைஷூ, ஷூட்டிங் தான் ஃபுல்லா முடிஞ்சிச்சாச்சே, நீங்க தாராளமா கிளம்பலாம். இதுக்கு மேல எடிட்டிங் டிபார்ட்மெண்டுக்கு தான் வேலை இருக்கு ..”
“தேங்க்யூ சார், போயிட்டு வரேன் ..”
“ஒரு நிமிஷம் நானும் இப்போ வெளியே தான் கிளம்புறேன் எங்க போகணும் சொல்லுங்க, ட்ராப் பண்றேன் ..”
“பரவால்ல சார் நான் பஸ்ல போய்க்குவேன்..”
“ஹோ கம் ஆன் வைஷு, இவ்வளவு ஃபார்மல்லா இருக்க அவசியம் இல்லை. எங்கன்னு சொல்லுங்க நானே ட்ராப் பண்றேன்..”
பிறகு வீர் மற்றும் வைஷூ இருவரும் சூட்டிங் நடக்கும் இடத்திலிருந்து கிளம்பினர். வைஷு உரைத்த வழிகாட்டுதலின் படி காரை நகரத்தினான் . ஒரு ஆசிரமத்தின் வாசலில் கார் நின்றது.
அண்ணா ஆதரவற்றோர் இல்லம்.. என பெயர் பலகை அங்கே வைக்கப்பட்டிருந்தது.
“நீங்க இங்கேயா இறங்கனும் ..”
“ஆமா சார் , எனக்கு தெரிஞ்ச பாட்டி இங்க இருக்காங்க ,இன்னைக்கு அவங்களுக்கு பிறந்தநாள் காலையிலேயே பார்க்க வரதா சொல்லியிருந்தேன் . ஆனால் இன்னைக்கு முதல் நாள் வேலையா போச்சா, லேட்டா போனா நல்லா இருக்காதுன்னு வேலைக்கு வந்துட்டேன். பாட்டி எனக்காக காத்துட்டு இருப்பாங்க…
ஓகே சார் நான் போயிட்டு வரேன் …”
“ ஒரு நிமிஷம் நாளைக்கு நீங்க ஆபீஸ் வர வேண்டாம் ..”
“சார் ஏதோ பர்சனல் வேலை இருந்ததுனால தான் உங்ககிட்ட அனுமதி கேட்டேன். இதுக்கு போய் என்னை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்கிறீர்களே …”
அஞ்சிய அவளின் கண்பார்வையில் சிரித்து விட்டான்.
“வைஷு உங்களை வேலைக்கு வர வேண்டாம்னு சொல்லலை. உங்களுடைய போன் நம்பர்க்கு ஒரு அட்ரஸ் அனுப்புறேன். நாளைக்கு காலையில் அங்க வந்துருங்க அசோசியேஷன் மீட்டிங் இருக்கு ..”
“ஓ… அப்படியா, நான் பயந்துட்டேன் ஓகே சார் கரெக்டா வந்துருவேன்..”
வீர்-இடம் பேசிவிட்டு அவள் காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றாள். அச்சமயம் வாசல் நோக்கி வந்தார் அவளுக்கு அறிமுகமான பாட்டி.
‘இது தான் வரும் சமயமா..’ என தன் கைகள் இரண்டையும் இடுப்பின் பக்கவாட்டில் வைத்து முறைத்தவாறு நின்றார் பாட்டி.
“Sorry பாட்டி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ..” தன் கைகளை காதில் வைத்து மன்னிப்பு கேட்டு மன்னிப்பாய் பேசினாள் பாட்டியிடம்.
அவளின் பாவனைகளை ரசிப்பதிலிருந்து கண் பார்வையை விலக்க முடியாது தவித்தான் வீர்.
அவள் பாட்டியுடன் உள்ளே சென்ற பிறகுதான் காரை அங்கிருந்து நகர்த்தினான்.
மீண்டும் ஆபீஸிற்க்கு சென்று மீதமிருந்த அலுவல் வேலைகளை கவனித்த பிறகு வீர் இல்லம் திரும்பினான். இன்றைய நாள் அவனுக்கு நிம்மதியாய் கடந்தது . தன்னுடைய பிளாட்டினுள் நுழைந்தவன் கண்ணாடி முன்னே இருந்த டேபிளில் தன்னுடைய கைக்கடிகாரத்தை கழட்டி வைத்தான் .
அப்போது அவனின் கோட்டில் முடி சிக்கி இருந்ததை கவனித்தான்.
அந்த முடி உடையாதவாறு அழுங்காமல் தன் சட்டை பட்டனிலிருந்து எடுத்தான் . இது எவ்வாறு தன் ஆடை மீது வந்தது என யோசித்தவனுக்கு வைஷ்ணவியோடு இணைந்து கீழே விழுந்த சம்பவம் நினைவிற்கு வந்தது.
அந்த கூந்தலை குப்பையில் போட மனம் வரவில்லை. அங்கிருந்த தன்னுடைய டைரியில் குத்துமதிப்பாக பக்கத்தை திருப்ப, அதில் அந்த கூந்தலை வைத்தான் . அதன் பக்க எண்ணையும் கவனித்துக் கொண்டான்.
பிறகு எதிரே இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தான்.
‘டேய் வீர், உனக்கு என்னடா ஆச்சு ,ஏன் இப்படி தனியா சிரிக்கிற ..? அந்த பொண்ணோட முடியை பத்திரமா வைக்கிற …? இதெல்லாம் சரியில்லை…’
அவனின் உள்ளம் அவனுக்குள் கேள்வியை எழுப்பியது.
அதற்கான விடையை தேடுவதை விட இந்த உணர்வை அனுபவிப்பதில் தான் ஆர்வம் அதிகம் கொண்டான். நிம்மதியான உறக்கமும் வந்தது.
காலை விடியல் :
எப்போதும் போல் தன்னுடைய நேரத்திற்குள் தயாராகிய வீர் இன்று நிமிடங்கள் கடந்த பிறகும், கண்ணாடியில் தன்னையும் தன்னுடைய கேஷ அலங்காரத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
நேரம் கடந்ததை கவனிக்காதவனுக்கு அழைப்பில் வந்து ஞாபகம் கொள்ள வைத்தாள் வைஷூ..
அவளின் எண்ணைக் கண்டதும் உடனே அட்டென்ட் செய்தான் .
“ஹலோ குட் மார்னிங் சார் ..நீங்க சொன்ன அட்ரஸ்க்கு நான் வந்துட்டேன் ..”
அவளின் வருகையை அறிந்த பிறகு தான் தன்னுடைய அறையில் இருந்த கடிகாரத்தை கவனித்தான். நெற்றியை பிடித்தான். ‘தன்னால் தான் தாமதம்…’
“அங்கேயே வெயிட் பண்ணுங்க ஒரு பத்து நிமிசத்துல நான் வந்துருவேன்..”
அவசரமாய் வார்த்தையை முடித்தவன் உடனே வீட்டில் இருந்து கிளம்பினான்.
லிப்டில் இருந்து இறங்கி தன் காரை நோக்கி ஓடினான் .எதற்கு இவ்வளவு வேகம் எடுக்கிறான் என மற்றவர்கள் பார்த்தனர்.
வேலை விஷயமாக தான் அங்கே செல்கிறான். ஆனால் மனம் எல்லாம் அவளை காணும் ஆசையில் ஏக்கம் கொண்டது. கூறியது போலவே 10 நிமிடத்தில் அந்த விலாசத்தை அடைந்தான்.
“என்ன வைஷூ, லேட்டா வந்துட்டானா..”
“இல்ல சார், நீங்க பாஸ் எவ்வளவு லேட்டா வேணா வரலாம் . காத்துட்டு இருக்கிறது தான் என்னுடைய வேலை..”
பக்குவமாக பேசினாள் வைஷு.
மீட்டிங் ஆரம்பிப்பதற்கு இன்னும் பத்து நிமிடம் இருந்தது. அங்கிருந்தவர்களுடன் வீர் பேசிக் கொண்டிருக்க அப்போது வைஷ்ணவியையும் அறிமுகம் செய்து வைத்தான்.
அந்நேரம் தன்னை கடந்து சென்ற சித்தார்த்தின் மீது பார்வை விழுந்தது வீர்- க்கு…
“ சித்து..?”
வீர்-ன் குரல் கேட்டு தன் முகத்தை திருப்பாமல் அப்படியே நின்றான் சித்தார்த்.
“என்னடா பார்த்தும் பார்க்காத மாதிரி போற, எப்படி இருக்க ..” என வீர் கேட்க,
“நீ சரிய போற நாளை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கேன் ..”
நண்பன் என்ற பாசத்தோடு வீர் அவனிடம் பேச ,எதிரி என்ற நோக்கத்தோடு பதில் கூறினான் சித்து.
“டேய் இப்பவும் என்னை எதிரியா தான் பார்க்கிறியா? நாம எப்படியெல்லாம் இருந்தோம். கொஞ்சம் ஞாபகம் படுத்தி பாருடா ..”
“எனக்கு எதுவும் மறக்கலை வீர் ,நாம எப்படி இருந்தோம், நீ எனக்கு என்ன கொடுத்த, எல்லாம் ஞாபகத்தில் இருக்கு … இன்னும் மூணு மாசம் தான். அதுக்குள்ள நமக்குள்ள யாருக்கு முதல் வெற்றி வருதுன்னு தெரியும்.
அன்னைக்கு நானே உன்னை தேடி வந்து பேசுவேன்..”
தன் மனதில் இருந்ததை கூறிவிட்டு சித்து அங்கிருந்து நகர்ந்தான் .இவர்கள் இருவரும் பேசியதை கேட்ட வைஷு வீர்-ன் அருகே வந்து விசாரித்தாள்.
“அவர் யாரு.. நீங்க இவ்வளவு அன்பா விசாரிக்கிறீங்க, உங்களை ஒரு எதிரியா நினைச்சு பேசிட்டு போறாரு..”
“அவன் என்னோட நெருங்கிய நண்பன். நாங்க ஒன்னா தான் கல்லூரி படிப்பை முடிச்சோம். எங்களுக்குள்ள நட்பும் நல்லாதான் இருந்தது .காதல்னு ஒரு விஷயம் வர வரைக்கும்..”
“நீங்க காதலிச்சீங்களா சார்..”
“நான் இல்லை ,சித்து தான் எங்களோட நெருங்கிய தோழி ஸ்வேதாவை காதலிச்சான். ஆனால் ஸ்வேதாவுக்கு சித்து மேல காதல் இல்லை. அவள் பலமுறை சொல்லிட்டாள். இருந்தும் சித்து விடவே இல்லை . எங்க கல்லூரி வாழ்க்கையுடைய கடைசி நாளில் நடந்த ஒரு விஷயத்தினால் சித்து என்னை சுத்தமா வெறுக்க ஆரம்பிச்சுட்டான்..”
வீர் அந்த கசப்பான சம்பவத்தை சுருக்கமாக வைஷூவிற்கு உரைத்தான்.
கல்லூரி வாழ்க்கையின் இறுதி நாளில் நடந்தது :
ஆடலும் பாடலுமாக மொத்த கல்லூரியும் மின்னிக் கொண்டிருந்தது . இத்தனை வருட கால நட்பை பிரியும் பாசப் போராட்டத்தில் அனைவரும் மூழ்கி இருந்தனர்.
வீர் தன்னுடைய நண்பன் சித்துவை தேடிக் கொண்டிருந்தான். ஆனால் சித்து, ஸ்வேதா இன்னமும் தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லையே என்ற வேதனையில் குடித்துக் கொண்டிருந்தான்.
போதை தலைக்கேறிய நிலையில் தன் காதலில் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது கோபம் கொண்டான்.
அப்போது ஸ்வேதா தனியாய் நடந்து செல்வதை கண்டான். இருள் சூழ்ந்த அந்த வேலையில் அருகில் எவரும் இல்லாது இருந்ததும் காலில் விழுந்தாவது அவளை சம்மதிக்க வைக்க வேண்டும் என ஓடினான் சித்து.
ஆனால் நடந்தது என்னவோ…
😉
