Epi – 10 – காதல் கொண்டான்

இதுவரை… 

   வீர்-ன் அத்தை நீலாவதி தன் ஸ்கூட்டியை விபத்துக்கு உள்ளாக்கிய மது பிரியர்களை காவல் துறையிடம் பிடித்துக் கொடுத்தார். ஜான் அங்கிளை சந்திக்க சென்ற வீர், உடன் வைஷ்ணவியையும் அழைத்துச் செல்ல, அடுத்து நடப்பது..?

இனி… 

  ஜான் அங்கிள் தனக்காக சமைத்த உணவை வீர் சுவைத்துக் கொண்டிருக்க வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. 

   ஜான் கதவை திறந்த சமயம் வெளியே வைஷ்ணவி வீர்-ன் மொபைலை கையில் ஏந்தியவாறு நின்றிருந்தாள்.

  ஜானின் கண்களில் கோபம் கொந்தளிக்க எதிரே நின்றிருந்த வைஷ்ணவியின் கண்கள் அச்சத்தில் திறந்து மூடி தத்தளித்தது. 

  “நீ எதுக்கு இங்க வந்த ..”

   “என்ன அங்கிள் வீட்டுக்கு வந்தவங்களை போய் இப்படி கேக்குறீங்க நகருங்க ,வைஷு நீ உள்ள வா..”

  “ம்ஹூ… ” 

  அவள் பயத்தில் மறுத்து தலையசைத்தாள்.

  “அட நம்ம அங்கிள் தான் ஒன்னும் பண்ண மாட்டாரு, உள்ள வா..”

  “டேய் நான் இங்க ஒருத்தன் சொல்லிட்டே இருக்கேன், எதுக்கு அவளை உள்ளே அழைச்சிட்டு போற, இங்க வர வேண்டிய அவசியம் என்ன இருக்கு..?”

 “ அங்கிள் எனக்கு இந்த வீட்டில் உரிமை இருக்கா இல்லையா ..”

  “இருக்கு வீர் ..”

   “அப்போ எனக்கு இருக்க உரிமை இந்த பொண்ணுக்கும் இருக்கு, அவள் உள்ளே வருவாள்…”

    வீர் வைஷுவின் கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தான். 

“ம்… உட்காரு வைஷூ ..”

   அவன் அமரச் சொன்ன பிறகு, பின்னால் நின்றிருந்த ஜான் அங்கிளை கவனித்தாள். அவரின் முறைப்பில் அச்சம் கொண்டு அப்படியே நின்றாள். 

   “அட உட்காருன்னு சொல்றேன்ல..”

   அவளின் கையைப் பிடித்து அமர வைத்தான். 

   “அங்கிள் எனக்காக, எனக்கு பிடிச்ச சமையலை செஞ்சிருக்காரு ரிசார்ட்ல சாப்பிடுறதுக்கு முன்னாடி அதை கொஞ்சம் டேஸ்ட் பார்க்கலாம் கொண்டு வரேன்…”

    “சார், எனக்கு அதெல்லாம் வேண்டாம் உங்க போன் ரொம்ப நேரமா ரிங் அடிச்சது கொடுக்கலாம்னு தான் வந்தேன் நான் வெளியே காரில் வெயிட் பண்றேன்…”

  அவள் கொடுத்த போனை கையில் வாங்கிக் கொண்ட வீர், அவளை எழ விடாது அருகிலேயே நின்றிருந்தான். 

   “அட ஒன்னும் பயப்படாத, அங்கிள் முகம் தான் பார்க்க டெரர்ரா தெரியும். ஆனா பச்சை புள்ள அவரு, நீ உட்காரு..”

  வீர் கிச்சனுக்கு சென்று ஒரு சிறிய தட்டில் உணவை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான். 

   ‘தனியாய் விட்டு விட்டு சென்று விட்டாரே என்ற பீதியில் மெல்ல தலை நிமிர்ந்து ஜான் அங்கிளை பார்த்தாள். அவர் முறைப்பது கண்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டாள். 

  நடப்பதை எல்லாம் கவனித்த ஜான் கிச்சனில் இருந்த வீர் இடம் பேசினார். 

   “வீர் உண்மையை சொல்லு, அந்த பொண்ணை நீ காதலிக்கிறாயா…”

   “அட அங்கிள் நீங்க ரொம்ப ஷார்ப்பு உடனே கண்டுபிடிச்சிட்டீங்க..”

  இரட்டை அர்த்தமாய் அங்கிளை கிண்டல் செய்தான் வீர். 

  “அடப்பாவி அந்த பொண்ணை நீ பார்த்தே மூணு நாள் தான் இருக்கும் அதுக்குள்ள என்னடா காதல்…”

   “மெதுவா பேசுங்க அங்கிள் அவள் கிட்ட இன்னும் என்னுடைய காதலை சொல்லலை. அதுவும் உங்க மூலமா தெரிய வந்தா உங்க மேல இருக்க பயத்தினால் வேண்டாம்னு சொல்லிடுவாள். 

   அப்புறம் என்ன கேட்டீங்க மூனே நாளில் எப்படி காதல்னா..?”

   “அவனவன் பார்த்ததுமே காதல் வந்து விருப்பத்தை சொல்றான்.  நானாவது மூன்று நாளா காத்துட்டு இருக்கேன்.  எங்களுக்குள்ள எக்குதப்பா மோதலே நடந்திருக்கு, இதுல எனக்குள்ள காதல் வந்தது தான் அதிசயமா என்ன ..?”

   “டேய் உன்னை கண்ணியமான ஆம்பளையா நினைச்சேனடா, அதுல மண்ணள்ளி போட்டுடியே, இரண்டு பேரும் என்னடா தப்பு செஞ்சு தொலைச்சீங்க..”

   “அட அங்கிள் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. வயசான காலத்தில் புத்தி எப்படி போகுது பாரு.. ”

   அதன் பிறகு வீர் முதன் முதலாக அவளை ATM – ல் சந்தித்த நாளிலிருந்து இன்று வரை தன் மனதில் எழுந்த உணர்வுகளை பகிர்ந்து கொண்டான்.  

  “ஒரு நிமிஷம் இருங்க,  இந்த சாப்பாட்டை வைஷுக்கு குடுத்துட்டு வரேன்..”

  “இதுல செல்லப் பேரு வேறயா..”  என அங்கிள் அவனை கிண்டலாக கேட்டார். 

   ஹாலில் இருந்த வைஷூவிற்க்கு சிறிய தட்டில் உணவையும் ஒரு ஸ்பூனையும் கொடுத்தான். 

   “ம்… டேஸ்ட் செஞ்சு பாரு ரொம்ப நல்லா இருக்கும்..”

    “ம்… ” என்றாள் 

   வெகுலியாய் தலையசைத்தவள் தட்டை கையில் வாங்கிக் கொண்டாள். 

  “இப்போ என்ன சொன்ன.. ” என அவன் கேட்க 

  “ம்… னு சொன்னேன்..”

  அவளின் குரலில் கேட்கும் சின்ன சத்தம் கூட மீண்டும் கேட்க தோன்றியது. 

  “ஏன் சார் சிரிக்கிறீங்க..”

  “ஒன்னும் இல்ல நீ சாப்பிடு நான் வரேன்..”

  மீண்டும் வீர் கிச்சனுக்குள் நுழைய ஜான் யோசனையில் இருந்தார். 

   “அப்போ உன் காதலைப் பற்றி என்கிட்ட சொல்ல தான் இன்னைக்கு இங்க வந்திருக்க, என்னை சமாதானப்படுத்த வரலை..”

   “இல்லை அங்கிள் நீங்க கேட்டதுனால் காதலைப் பற்றி சொன்னேன். மற்றபடி நான் வந்தது உங்களை பார்க்க தான்…”

   “சரி அந்த பொண்ணோட அப்பா அம்மா எங்க இருக்காங்க..”

  “இதுவரைக்கும் அதைப் பற்றி நான் கேட்டதில்லையே..”

   “சுத்தம் நகரு நானே போய் கேட்கிறேன்..” 

   “அங்கிள் வேண்டாம் திடீர்னு கேட்டா அவள் சந்தேகம் கொள்வாள்..”

  இவன் தடுத்தும் ஜான் அவளின் எதிரே சென்று அமர்ந்தார். உடனே மரியாதையில் அவள் கையில் இருந்த தட்டுடன் எழுந்து நின்றாள். 

   “பரவால்ல உட்காரு சாப்பிடும் போது யாருக்காகவும் எந்திரிக்கணும்னு அவசியம் இல்லை..” 

  உட்கார மறுத்தால் கோபம் கொள்வாரோ என்ற அச்சத்தில் அமர்ந்தாள் வைஷு. 

  “சாப்பாடு நல்லா இருக்கா ..”

   “ம்…”

   “உன் அப்பா அம்மா எங்கே இருக்காங்க..” 

  திடீரென்று இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறார் என அவள் தடுமாறினாள்.

   “அது ஒன்னும் இல்லை வைஷு, சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்கிறார்…”  

    அருகில் இருந்த வீர் அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தான்.

   “வீர் நீ அமைதியா இரு, நான் பேசிட்டு இருக்கேன்ல..”

  ஜான் அங்கிள் மிரட்டலாய் கூற சரி என்று அமைதி கொண்டான் வீர். 

  “எனக்கு இப்போ அம்மா அப்பா யாரும் கிடையாது…”

  “இப்போ கிடையாதுனா..?” 

  தன் கேள்வியை தொடர்ந்தார் ஜான். 

   “நான் சின்ன பிள்ளையா இருக்கும் போதே என்  அம்மா, அப்பாவை விட்டுட்டு வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.. ஆனால் எனக்கு என் அப்பானா பிடிக்கும் . அவர் தான் என்னை பார்த்துகிட்டார்.  நான் காலேஜ் படிக்கும் போது அவரும் காலமாகிட்டார்.

      அப்புறம் காலேஜ்ல என்னுடைய ப்ரொபசர் மேம் ஒருத்தவங்க தான் என்னுடைய செலவுக்குலாம் ஸ்பான்சர் பண்ணாங்க, படிப்பு முடிஞ்ச பிறகு வேலைக்கு சேர்ந்துட்டேன். மத்தபடி உறவென சொல்லிக்க எனக்கு யாரும் கிடையாது… என்றாள்.

  ஏனோ அவளின் கடந்த கால வாழ்க்கை வீர்-உடன் ஒத்துப்போக அவன் மேலும் வருந்தினான்.  இவன் பட்ட துன்பம் எல்லாம் இவளும் அனுபவித்து இருப்பாளே என..

  அதன் பிறகு அமைதி நிலவியது. 

   “ஓகே அங்கிள் மீதி எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் . வைஷ்ணவி எடுத்த விளம்பர படம் ஓகே ஆகிருச்சு, அது போக வாடிக்கையாளர்கிட்ட இருந்து எக்ஸ்ட்ரா இரண்டு ப்ராஜெக்ட்டும் வந்திருக்கு, கோவத்தை விட்டுட்டு பொறுப்பான சீனியரா வந்து வேலையை பாருங்க..

       இந்த சந்தோஷத்தை கொண்டாட தான் ரிசார்ட்டில் பார்ட்டி அரேஞ்ச் பண்ணிருக்கேன் உங்களை அழைச்சிட்டு போக தான் நாங்க வந்தோம்..”

   “என்னை மன்னிச்சுடும்மா நான் ரொம்ப கோபப்பட்டுட்டேன்.. ” என்றார் ஜான் 

  “இல்ல சார் பெரியவங்க நீங்க, மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க ..”

   “என்னுடைய இடத்துக்கு வேற ஒருத்தர் வராங்கன்னு தெரிஞ்சதும் மனசு ஏத்துக்கலை. ஆனா உண்மை என்னன்னா, நானே வேற ஏதாவது ஒரு நல்ல டைரக்டரா பார்த்து வீர் உடைய கம்பெனியில் சேர்த்து விடனும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள்…”

  பிறகு மூவருமே சமைத்த உணவை மேலோட்டமாய் வாயில் வைத்து சுவைத்து விட்டு பார்ட்டிக்கு கிளம்பினர். 

   ரிசார்ட்டில் வீர்-ரின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது வீர் , வைஷ்ணவி, ஜான் மூவருமே  உள்ளே நுழைந்ததை ஆச்சரியமாக பார்த்தனர்.  எவரும் ஜான் ஐ எதிர்பார்க்கவில்லை. 

  தனது டீமில் அனைவரும் வந்திருக்க,  வீர் அவர்களுக்கு வாழ்த்து கூறி அவர்களின் தரமான வேலையை பாராட்டினான்.  பிறகு பார்ட்டியும் துவங்கியது.  

  வைஷு உணவு எதையும் உட்கொள்ளாமல், அமர்ந்து ஒரு ஜூஸை மட்டும் அருந்திக் கொண்டிருந்தாள்.

   தனியாய் அமர்ந்திருந்த வைஷூவிடம் பேசுவதற்காக சென்றான் வீர். 

  “என்ன வைஷு சாப்பிடலையா..” 

  “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே ஜான் சார் வீட்டில் சாப்பிட்டேன் அதனால பசிக்கலை…”

  அவள் விவரம் உரைத்த பிறகு அவளுடனே அமர்ந்து வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தான். 

  அப்போது தான் இடையில் வைஷ்ணவி ஒரு விஷயம்  உரைத்தாள். 

   “ஜான் சார் இவ்வளவு சீக்கிரம் மனசு மாறுவாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.  என்னால உங்க இரண்டு பேருக்குள்ள சண்டை வந்துடுச்சுன்னு வருத்தமாவே இருந்தது இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு… ” என்றாள். 

   “ஜான் அங்கிள் ரொம்ப எதார்த்தமானவர்.  சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மனசை சமாதானப்படுத்திகிறதில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. இப்ப கூட அங்க பாரு வீட்டில் கோவமா பேசிட்டு இங்க மியூசிக் போட்டு டான்ஸ் ஆடிட்டு இருக்கார்..”

   வீர் கண்காட்டிய திசையில் கவனித்தாள் வைஷு, ஜான் அங்கிள் தன் டீமுடன் ஆனந்தமாய் ஆடிக்கொண்டிருந்தார். அதை கவனித்த நிலையில் இவர்கள் இருக்க, பின்புறமாக வந்த விஷ்ணு வைஷூவின் ஜுஸை மாற்றி அதே நிறத்தில் இருந்த வேறொரு மதுபானத்தை வைத்தான். 

  அவள் அதை அருந்துகிறாளா எனப் பார்ப்பதற்காக வெகு நேரமாய் காத்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. பிறகு என்ன செய்யலாம் என யோசித்தவன்,  தட்டில் காரமான ஒரு உணவு வகையை எடுத்துச் சென்றான். 

   “ஹாய் வைஷு, என்ன எதுவும் சாப்பிடாம அமைதியா உட்கார்ந்திருக்க இதை டேஸ்ட் பண்ணி பாரு நல்லா இருக்கு..”

  “இல்ல விஷ்ணு எனக்கு இப்போ சாப்பாடு வேண்டாம்..”

  ” கம் ஆன் வைஷு நான் தான் சொல்றேன்ல இது நல்லா இருக்கும் சாப்பிட்டு பாரு..”  என அவனே ஸ்பூன் 🥄 நிறைய உணவை எடுத்து வலுக்கட்டாயமாய் அவளின் வாயில் திணித்தான். 

  “விஷ்ணு வேண்டாம்…” 

    வைஷூ குரல் கொடுக்க..

  வீர் விஷ்ணுவின் நடவடிக்கைகளை கவனித்தான். தன்னவளுக்கு அவன் ஊட்டி விடுவதை வெறுத்தான்.  இருப்பினும் தடுப்பதற்கு தயக்கம் கொண்டு கோபத்தில் தன் கைவிரல்களை இறுக்கியவாறு அமர்ந்தான். 

   “ம்…ஹ…. இது ரொம்ப காரமா இருக்கு இதையா நல்லா இருக்குன்னு சொன்ன…”

  காரம் தாங்காமல் காற்றை ஊதி சரி செய்ய முயற்சித்தாள். அருகில் தண்ணீர் கூட எதுவும் இல்லை. விஷ்ணு மாற்றி வைத்த மதுபானம் தான் இருந்தது. உடனே அதை எடுத்து அருந்தினாள். இருந்த காரத்திற்கு முழுமையாக குடித்து விட்டு தான் வைத்தாள்.

   “Sorry வைஷு, இந்த காரம் எனக்கு ஓகேவா தான் இருந்தது அதனால தான் உனக்கும் கொடுத்தேன்…”

  “விஷ்ணு இட்ஸ் ஓகே, நீ இங்க இருந்து போ அவள் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகட்டும்..”  என வீர் உரைக்க 

 “ ஓகே சார்..”

  அங்கிருந்து நகர்ந்த விஷ்ணு தன் திட்டம் நிறைவேறியதில் ஆனந்தம் கொண்டான். 

   இருவரும் ஒன்றாக தான் வேலைக்கு சேர்ந்தனர், ஆனால் வைஷூ மட்டும் மூன்றே நாளில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தது விஷ்ணுவிற்கு பிடிக்கவில்லை. 

  “வைஷு இப்ப உனக்கு ஓகேவா..”

  “ ஓகே தான் சார்… ஆனா ஒரு மாதிரி டயர்டா ஃபீல் ஆகுது…”

  இவர்கள் பேசிக் கொண்டிருந்த சமயம் வீர்-ஐ சந்திக்க அவன் எதிர்பாராத ஒருவர் வருகை தந்தார்.

  “ஹாய் விஜய் அண்ணா..”

  குரல் கேட்டு வீர் திரும்ப அங்கே சைந்தவி நின்றிருந்தாள். 

  “சைந்தவி, நீ எப்படி இங்க…”

   “நான் என்னுடைய அப்பா அம்மா கூட இங்க வந்தேன். இவங்க யாரு உங்க வைஃபா..?”

     சைந்தவி கேட்ட கேள்வி பிடித்திருந்ததால் தாமதமாக தான் மறுப்பு கூறினான் வீர்.

   “இல்லை, இவங்க பேரு வைஷ்ணவி என்னுடைய PA..”

  “ஹாய் அக்கா..”

  சைந்தவியின் முகம் வைஷ்ணவிக்கு மெல்ல மங்கலாய் தெரிந்தது. 

  “ஹாய்….”

  குத்து மதிப்பாய் பதில் கூறினாள் வைஷூ.

  வைஷ்ணவியை பார்த்த சைந்தவி, வீர்-ஐ கண்ணடித்து அருகில் அழைத்தாள். 

  “என்ன சொல்ல போற கண்ணடிச்சு கூப்பிடுற.. ” என அவன் கேட்க

  “இந்த அக்கா ரொம்ப அழகா இருக்காங்க, உங்க ஜோடி பொருத்தம் கூட சூப்பரா இருக்கு..”

  “நிஜமாவா… ? ”

  “ம்..ம்.. ”

  சைந்தவி தலையசைத்து ஒப்புக்கொண்டாள்.

  “ சரி, பாய் அண்ணா.. 👋🏻 அம்மாவும் அப்பாவும் தேடுவாங்க நான் போயிட்டு வரேன்…”

  “பார்த்துப் போ சைந்து… ”

  சைந்தவியிடம் பேசி விட்டு வீர் திரும்பிப் பார்க்க, அங்கே அமர்ந்திருந்த வைஷ்ணவியை காணவில்லை. 

   ‘எங்கே அவள்..’ என அவனின் பார்வை தேட அப்போது ஜான் அங்கிளுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். 

   ‘இவளுக்கு நடனம் எல்லம் ஆட வருமா..’ என புன்னகையோடு பார்த்தான். 

  “வீர்..?”

  அச்சமயம் அவனுக்கு நன்கு பரிச்சயமான வெறுக்கக்கூடிய ஒரு குரல் கேட்டது. 

  அவனின் தாய் ரத்னா தான் அழைத்தது.   உடன் அவரின் கணவர் ஹரிஹரன் இருந்தார்.

  “எப்படி இருக்க வீர், உன்னை நேரில் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்,சு இந்த ரிசார்ட்டுக்கு அடிக்கடி வருவியா..”

  ரத்னாவையும் அருகில் இருந்த அவரின் கணவரையும் கண்ட வீர் முகத்தை திருப்பிக் கொண்டான். 

  தன் மகன் இவ்வாறு நடந்து கொள்வது சங்கடமாக இருந்தது ரத்னாவிற்கு. 

  “நான் தான் அப்பவே சொன்னேன்ல, நீ போய் பேசினாலும் இவன் கண்டுக்க மாட்டான்னு வா போலாம்..” என அவளின் கணவர் கைபிடித்து அழைத்தார். 

  “ஹரி, ஒரு நிமிஷம் இருங்க…” என்றார் ரத்னா.

   “வீர் என்கிட்ட நீ பேச மாட்டேன்னு தெரியும்.  ஆனால் நான் உனக்கு அம்மா என்கிற விஷயம் மாறாது.  உன்னுடைய வாழ்க்கையில் எனக்கு அக்கறை இருக்கு.  நம்மளுடைய சொந்தத்தில் ஒருத்தவங்க அவர் பொண்ணை உனக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கிறதா என்கிட்ட வந்து பேசினாங்க..”

  

   அதுவரை அமைதியாக இருந்த வீர் அவரின் வார்த்தையில் கோபம் கொண்டான். 

  “யார் அந்த அறிவாளி? என் வாழ்க்கையை பற்றி உங்க கிட்ட பேசுறதுக்கு, என்னை சேர்ந்த பொறுப்புகள் எதுவும் உங்க கிட்ட இல்லைனு போய் அவங்க கிட்ட சொல்லுங்க..”

    “என் மேல இருக்க கோபத்தில் இந்த சம்பந்தத்தை மறுக்காத, அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு, படிச்சிருக்காள்,  கண்டிப்பா உன்னுடைய பிசினஸில் உறுதுணையா இருப்பாள்…”

  “போதும்பா சாமி, உங்க கிட்ட இருந்து எனக்கு கிடைச்ச அன்பு அரவணைப்பு.. கடைசியில் நீங்க பார்த்த பொண்ணை நான் கல்யாணம் செஞ்சு, அவளும் பாதியில் என்னை அத்து விட்டுப் போக வேண்டாம்…”

  அவன் உரைத்த வார்த்தைகள், ரத்னா செய்த தவறை குத்தி காமித்து பேச, அமைதியாகினார் ரத்னா. 

   “ரத்னா, கண் கலங்குன எனக்கு கோபம் தான் வரும்.  இவன்கிட்ட பேசாதன்னு அப்பவே சொன்னேன். வா போலாம்..”

  ரத்னாவின் கணவர் அவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். 

  “ஆமா இவங்களை வந்து பேசுன்னு கூப்பிட்டாங்க..”

  சென்றவர்களை பார்த்து கடிந்து கொண்டான் வீர். 

  அச்சமயம் ஜான் அங்கிள் வீர்-ஐ பார்த்து விரைந்து வந்தார். 

  “வீர் அந்த பொண்ணு வைஷூ குடிச்சிருக்காள். கொஞ்சம் அதிகமா அடம் பிடிக்கிறாள். போய் என்னன்னு பாரேன்..”

  “வாட்..! வைஷு குடிச்சிருக்காளா..?” 

                                😉

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page