Epi – 11 – மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே

இதுவரை..

    வீர் வைஷூவியின் மீது கொண்ட காதலுக்கு, துணை நின்றார் ஜான். விஷ்ணுவின் சதிச் செயலால் தவறுதலாய் வைஷூ மது அருந்த அதில் அவளும் போதை ஏறினாள்.

இனி…

   வீர்-ன் தாய் ரத்னா உனக்கு பெண் பார்த்திருப்பதாக அவனிடம் கூறினார். எனக்கு திருமணம் செய்ய உங்களிடம் என்ன பொறுப்பு இருக்கிறது என கேட்டு அவர்களை விலக்கி வைத்தான் வீர்.

   அவ்வேளையில் தான் ஜான் வந்து விசயம் உரைத்தார். 

   “வீர் அந்த பொண்ணு வைஷூ குடிச்சிருக்காள். ரொம்ப அடம் பிடிக்குறாள் போய் என்னன்னு பாரேன்..”

  “வாட்..!  வைஷூ குடிச்சிருக்காளா… ? ”

  வீர் அதிர்ச்சியோடு அவளை பார்க்க சென்றான்.

  “வாவ் சூப்பர்…💃🏻 கம்மான் ஆடுங்க..

ஏன் நின்னுட்டிங்க… ஹேய் ஹேய்…”

  அங்கே சென்று கவனித்த சமயம் வைஷூ நன்கு சத்தமிட்டு ஆடிக் கொண்டிருந்தாள். 

  “வைஷூ என்ன ஆச்சு… ஏன் இப்படி சத்தம் போடுற..”

  “பார்ட்டி சார்… இந்த அளவுக்கு கூட சத்தம் இல்லைனா எப்படி ? எனக்கு டான்ஸ் ஆடுனா தான் பார்ட்டி பண்ண மாதிரி இருக்கும். வாங்க நீங்களும் ஆடுங்க.. ஹேய்… ஹேய்…”

   ஆபிஸில் உடன் வேலை செய்பவர்கள், மேலும் அந்த ரிசார்ட்டில் இருக்கும் மற்ற ஆட்களும் வைஷூவை தான் பார்த்தனர்.

சத்தம் தாங்க முடியாமல் ரிசார்ட் மேனேஜர் வந்தார்.

   “சார் சத்தம் ஜாஸ்தியா இருக்கு மத்தவங்களுக்கு டிஸ்டர்ப் ஆகுது.. ”

  “ஓ… Sorry இப்போ கிளம்பிடுவோம்..”

   “வைஷூ பார்ட்டி முடிஞ்சிடுச்சு நாம போலாம் வா..” என வீர் அழைக்க 

   “அதுக்குள்ளையா..? இன்னும் கொஞ்ச நேரம் ஆடலாம்..”

   “இல்லை டைம் ஓவர் நாம கிளம்பியே ஆகனும்…”

  பேசிக்கொண்டே அவளின் கை பிடித்து அழைத்தான்.

   “ஆன்.. அங்கிள் நீங்களும் வாங்க உங்களை முதல்ல டிராப் செய்யறேன்..”

  “பரவால வீர், நான் வாடகை கார் புக் செஞ்சு போய்க்குவேன். முதல்ல அந்த பொண்ணை டிராப் பண்ணு… ”

   வீர் அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான். நன்கு மழை பெய்ய துவங்கியது.  விஷ்ணு அவளின் ஆட்டத்தை ரசித்துப் பார்த்தான். அவளின் பெயர் கெட்டால் போதும் என நினைத்தான்.

   வீர் அவளை காரினுள் ஏற்றும் சமயம் ரத்னா கவனித்தார். 

  ‘யார் இந்த பெண், போதையில் இருக்கிறாள் போல… வீர் ஏன் அவளை அழைத்து செல்கிறான்..?’

  “வைஷூ ப்ளீஸ் கத்தாத, அப்றம் நான் உன்னை கிட்னாப் பண்றதா தப்பா நினைச்சிடுவாங்க. மழை வேற வருது சீக்கிரம் உள்ள போ…” 

  ஒருவழியாய் அவளை காரில் அமர வைத்து சீட் பெல்ட் அணிந்து விட அருகில் சென்றான்.. 

  “என்ன பண்றிங்க… ”

  “சீட் பெல்ட் போடுறேன்…” என்றான்.

 “ உங்களுக்கும் பாதுகாப்பு வேணும்ல நீங்களும் சீட் பெல்ட் போடுங்க… ”

  அவள் உடனே அவன் போட்டு விட்ட பெல்ட்டை இழுத்து அவனின் தலை தாண்டி இழுத்து விட்டாள்.  

  என்ன செய்து விட்டாள் இவள்.. !! செய்த காரியத்தில் அவன் இவள் நெஞ்சோடு இடித்துக் கொண்டான்.  பிறகு உடனே விலகிக் கொண்டான். 

  “வைஷூ என்ன பண்ற…?”

  “ஏன் சார் கோவப் போடுறீங்க…. நீங்க பாதுகாப்பா இருக்கனும்னு தான் சீட் பெல்ட் போட்டேன்..”

  அவள் செய்த காரியத்தில் இருந்து விடுபட முயன்றான். முதல் நெருக்கம் என்றாலும் இவள் தான், முதல் மோதல் என்றாலும் இவள் தான்.. அதுவும் நெஞ்சோடு மோதியதை நினைத்து நினைத்து பார்த்தான்.

  அவனின் உள்ளுணர்வு கேள்வியும் கேட்டது.

  ‘டேய் வீர் என்னடா பண்ற, அவள் போதையில் இருக்காள். தெரியாம நடந்திருச்சு, அதை பற்றி இவ்வளவு நேரம் யோசிக்கற..’ 

  “Sorry வைஷூ, உன் ஹாஸ்டல் எங்கன்னு சொல்லு நான் டிராப் பண்றேன்..”

 “ நீங்க ஏன் sorry கேட்கறீங்க..”

  “அது ஒன்னுமில்லை. சும்மா தான்..

உன் ஹாஸ்டல் எங்கேன்னு சொல்லு..”

   “ம்… ஒரு பெரிய ரோடு வரும், அப்றம் ஒரு பிள்ளையார் கோவில் அதுக்கு பக்கத்தில் தான் ஹாஸ்டல் ….” என்றாள்.

  “சுத்தம் இந்த அடையாளத்தை வச்சு ராத்திரி முழுக்க தேடினாலும், உன் ஹாஸ்டல் கிடைக்காது..”

  யோசித்தவன் அவனின் பிளாட்டிற்கே காரை செலுத்தினான். 

  காரினுள் அமர்ந்திருந்த சைந்தவி அப்போது தான் தன் தாய் தந்தையினர் பார்க்கிங் ஏரியாவிற்கு வந்ததை கவனித்தாள்.

   “அம்மா அப்பா, நீங்க இரண்டு பேரும் இவ்வளவு நேரம் உள்ள என்ன பண்ணிங்க நான் ரொம்ப நேரமா பார்க்கிங்கிள் காத்திருக்கேன்..”

   “என்னமோ நீ மட்டும் அதிர்ஷ்டசாலியா இருக்க, ஒவ்வொரு முறையும் அந்த வீர் இருக்கும் போது நாங்க மாட்டிக்கிறோம்..”  என்றார் ஹரிஹரன். 

  “அப்போ அந்த வீர் உள்ள இருந்தானா..”

   “சைந்து உன்கிட்ட பலமுறை சொல்லிட்டேன். வீர் உனக்கு அண்ணன் அதை ஞாபகம் வச்சுக்கோ..”

  சைந்து வாயை சுழித்துக் கொண்டாள்.

“ அண்ணனாம் அண்ணன்..”

  வைஷூவை அழைத்துக் கொண்டு தன் அப்பார்ட்மெண்டிற்கு சென்ற வீர், அவளை லிஃப்ட்டினுள் ஏற்றினான். 

  “வைஷு நான் சொல்றதை நல்லா கேளு லிப்டில் இருந்து வெளியே வந்து என் பிளாட்டுக்குள் போற வரைக்கும் எதுவும் பேசக்கூடாது அமைதியா வரணும் சரியா..”

  “ஏன் சார்..”

  “கேள்வி கேட்காத சொன்னதை மட்டும் செய்..” என்றான்.

   ஐந்தாவது மாடி வந்ததும் கதவு திறக்கப்பட லிப்டில் இருந்து வெளியே வந்தவள் உடனே கத்த ஆரம்பித்தாள்.

   “ஹாய் ஹலோ, ஐ அம் வைஷ்ணவி உங்க பேர் என்ன…”

   “அட வைஷு, என்ன பண்ற… ”

    வீர் உடனே அவளின் வாயை கைகளால் வைத்து அழுத்தி சத்தம் போடாது தன் பிளாட்டிற்கு அழைத்துச் சென்றான் . சாவியை போட்டு கதவை திறப்பதற்குள் எதிர் பிளாட்டில் இருந்த  ஒரு  நடுவயதை தாண்டிய பெண் ஒருவர் பார்த்து விட்டார் . ஆச்சரியத்தில் கண்கள் விரித்தார். 

   “ஆ… ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கான். அதுவும் இந்த நேரத்தில்..”

  வைஷ்ணவியை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற வீர் கதவை சாத்தும் முன் யாரேனும் பார்த்தார்களா என எட்டிப் பார்த்தான். அச்சமயம் சரியாக எதிர் வீட்டு  பெண்மணி கதவை மூடிக்கொண்டார். 

  எதிர்வீட்டு  பெண்மணி உடனே வீர்-ன் அத்தை நீலாவதிக்கு அழைப்பு விடுத்தார். 

 “ ஹலோ நீலாவதி, உன் மருமகன் என்ன பண்றான் தெரியுமா.?”

  “ம், தெரியும்.. ஆபீஸ் பார்ட்டிக்காக வெளிய போயிருக்கான்..”

   “அது தான் இல்லை. வீட்டுக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கான். கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாம சத்தம் போட்டுகிட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் கட்டிப்பிடிச்சுகிட்டே வீட்டுக்குள்ள போனாங்க..”

 “ என்ன சொல்ற நல்லா பார்த்தியா என் மருமகன் தானா ..”

  “சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்துட்டு தான் சொல்றேன்..” என்றார் அந்த பெண்மணி 

  “நான் உடனே வரேன்..” என்றார் நீலாவதி 

   போட்டுக் கொடுத்த பிறகு தான் அந்த பெண்மணிக்கு நிம்மதியாக இருந்தது.  வைஷ்ணவியை வீட்டினுள் அழைத்து சென்ற வீர் அவளுக்கு துவட்டிக் கொள்வதற்காக டவலை கொடுத்தான். 

  “வாவ் சார்… இதுதான் உங்க வீடா ரொம்ப பெருசா அழகா இருக்கு.. ”

  “தேங்க்யூ வைஷு, இந்தா டவலை வாங்கிக்கோ உன் தலையை துவட்டு..”

  “ம்ஹூ…  எனக்கு இப்படியே ஈரத்தோடு இருக்க தான் பிடிச்சிருக்கு..”

  இவள் பேச்சைக் கேட்க மாட்டாள் போல..

    தன் தலையை துவட்டிக் கொண்டிருந்த  டவலை ஓரம் வைத்தான்.  நின்றிருந்தவளின் பின்பக்கம் வந்து அவளின் ஹேர்பேண்டை விலக்கினான். 

அவளின் கூந்தல் பின்னலை அவிழ்க்க, பட்டில் இருந்த மென்மையும் அந்த கூந்தலின் நீளமும் ஆசையை தூண்டியது. 

  ஆசை என்றால் அவள் உடல் மீது வந்த ஆசை அல்ல, கூந்தல் மீது வந்த ஆசை, அந்தப் பட்டு முடியை தடவிப் பார்த்தான். 

இந்த நீளத்தில் முடியை வளர்ப்பதற்கு எவ்வளவு பொறுமை வேண்டும். டவல் கொண்டு அவளின் கூந்தல் ஈரத்தை துடைத்து விட்டான். 

   “அச்சச்சோ சார், உங்க முடியும் தானே ஈரமா இருக்கும். நீங்க உட்காருங்க நான் துவட்டி விடுறேன்..”

  அவன் அவளின் கூந்தலில் மென்மையாய் ஈரம் தட்டி விட , அவளோ போதையில் நானும் உதவி செய்கிறேன் என இழுத்து சோஃபாவில் அமர வைத்தாள். 

  அருகில் இருந்த டவலை எடுத்து அவன் மீது போட்டு தலையை கண்டபடி  ஆட்டினாள்.

  “ வைஷு என்ன பண்ற, எனக்கு கழுத்து வலி வந்துடும் போதும் விடு…”

  அவள் கையைப் பிடித்து போதும் என்றான். 

  எழுந்து சென்று தன் பால்கனியில் நின்றான். மழை இன்னும் நின்ற பாடில்லை. 

   ‘திடீர்னு ஏன் இப்படி மழை பெய்யுது..’ 

    ஹாலுக்கு வந்தவன் வைஷூவை கவனித்தான்.  ஈர உடையில் அப்படியே சோஃபா மீது அமர்ந்திருந்தாள்.  அவன் வீட்டில் ரம்யாவின் உடைகள் தான் இருக்கும் அவை இவளுக்கு போதுமானதாக இருக்காது. அதனால் இவனின் டி-ஷர்ட் மற்றும்  நைட் பேண்ட்டை எடுத்துக் கொடுத்தான். 

  “வைஷு அந்த ரூமுக்கு போய் இந்த டிரஸ்ஸை மாத்திக்கோ.. ”

   “மாட்டேன் எனக்கு இந்த ஈரத்தோடு இருக்க தான் பிடிச்சிருக்கு..”

  “அடம் பிடிக்காத வைஷூ, இதே ஈரத்தில் இருந்தால் உடம்பு சரி இல்லாம போகும், என் பேச்சை கேள் போய் மாத்திக்கோ..”

  உப்பிய வாயுடன் குழந்தை போல் ஆடையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள். 

  இவனும் மற்றொரு அறைக்குள் சென்று தன் உடையை மாற்றிக் கொண்டான். வெளியே வந்தவன் அவள் இன்னும் வராததை கவனித்தான். திடீரென்று எப்படி இவ்வளவு போதை ஏறினாள். நான் அருகில் இருந்த சமயம் மது அருந்தியது போலவே தெரியவில்லையே என யோசனையாகவே இருந்தது. 

  அச்சமயம் வீர்-க்கு நினைவில் வந்தது விஷ்ணு உணவு ஊட்டியதும் அதன் காரம் தாங்காமல் அருகில் இருந்த ஜூசை அவள் வேகமாக அருந்தியதும் தான்.  

   அவ்வேளை அறைக்கதவு திறக்கப்பட, அவளை நிமிர்ந்து பார்த்தான். 

   இவனின் டி-ஷர்ட் அவளுக்கு தாராளமாக இருந்தது . தன் நீள கூந்தலை ஒரு புறமாக எடுத்து போட்டு தொங்கலிட்டவள் அரைபோதையில் வெளியே வந்தாள்.

   “சரி நீ இங்க உக்காரு நான் உனக்கு காஃபி போட்டு கொண்டு வரேன்..” 

   “ம்ஹூ… எனக்கு காஃபி வேண்டாம் .பாட்டு தான் வேணும் டான்ஸ் ஆடணும் ஹேய் ஹேய்… ஹேய்…”

  “வைஷூ கத்தாத வெளியே சத்தம் கேட்டுடப் போகுது. இதுவரைக்கும் என்னுடைய பிளாட்டுக்குள் எந்த பொண்ணும் வந்தது இல்லை..”

  “நிஜமாவா சார், ஏன் நீங்க எந்த பொண்ணையும் கூட்டிட்டு வந்ததில்லை..”

   “என்ன கேள்வி இது. சம்பந்தம் இல்லாம எதுக்காக ஒரு பொண்ணை பிளாட்டுக்கு கூட்டிட்டு வரணும்..” என அவனும் கேட்டான். 

  “அப்போ என்னை மட்டும் ஏன் கூட்டிட்டு வந்தீங்க , உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..”

  பதில் உரைக்க தான் உதடுகள் துடித்தது.  ஆனால் இப்போது கூறினால் அவளுக்கு நினைவில் தாங்காது. இப்படியா தன் காதலை உரைக்க வேண்டும் என புன்னகையோடு திரும்பிச் சென்றான். 

    “என்ன சார் பதில் சொல்லாம போறீங்க..”

   “அலெக்சா பிளே  மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே சாங்…”

   …….. உடனே அமேசான் அலெக்சா  இசையை துவங்கியது. 

  “உனக்கு டான்ஸ் ஆடணும்னு சொன்னல்ல வா ஆடலாம்..”

  “நிஜமாவா…!!”

  புன்னகையோடு அவளும் எழுந்து வந்தாள். 

மேகம் கருக்காதா

பெண்ணே பெண்ணே

சாரால் அடிக்காதா

பெண்ணே பெண்ணே

தேகம் நனையாதா

பெண்ணே பெண்ணே

தீயும் அணையாதா

பெண்ணே பெண்ணே..

கண் பாஷை பேசினால்

நான் என்ன செய்வேன்

கன்ப்யூசன் ஆகிறேன்

உள்ளுக்குள்ளே…  

   அலெக்சா தொடர்ந்து பாடலை இசைக்க, வைஷ்ணவி வீர்-உடன் பொறுமையாக நடனம் ஆடினாள். ஒரு கட்டத்தில் அவன் ஆட்டத்தை நிறுத்த இவள் மட்டும் தனியாய் அவனை சுற்றி நடனம் தொடர்ந்தாள். 

   உலகமே தன்னை சுற்றுவது போல் அவளைப் பார்த்தான். தன் துணைவியாளாய் இதே போல் தன்னை சுற்றி நடனமாடினால் நன்றாக இருக்கும் என எண்ணிணான். 

    பாடலின் நடுவில் அவள் தடுமாறி கீழே விழ இவன் விரைந்து தாங்கி பிடித்தான். 

  

  கீழே விழும் அச்சத்தில் தன்னை தாங்கிப் பிடித்த வீர்-ன் சட்டையை இறுக்கி அச்சம் வெளிப்படுத்தினாள்.

  வானவில்லாய் இருவரும் வளைந்து நிற்க , மூச்சுக்காற்று மோதும் தூரத்தில் முகங்கள் இரண்டும் அருகே இருந்தது. 

அவனின் இடது கை அவளின் தலையை தாங்கிப் பிடித்திருக்க, வலது கரம் இடையை வளைத்து தொட்டிருந்தது. 

  அவள் போதையில் இருந்ததால் உடனே எழுந்து நிற்க வேண்டும் என தோன்றவில்லை.  ஏதோ அழகாய் தொங்கிக் கொண்டு ஊஞ்சலாடுவது போல் அனுபவித்தாள். அருகில் கண்ட இந்த வதனத்தை அவ்வளவு விரைவில் விடுவிக்க மனம் இல்லாமல் இவனும் அப்படியே இருந்தான். 

  கண்களில் குடி கொண்ட அவனின் பார்வை பேச்சைக் கேட்காமல் உதட்டை கவனிக்க, இயற்கையாகவும் கொடி போல் வளைந்த இதழ் வடிவமும் இதுவரை காணாத அழகை பிரதிபலிக்க, எழுந்த உணர்வில் எச்சில் விழுங்கினான். இணக்கம் தவிர்த்து இதழ் சுவை பருக நெருங்கினான். 

   தூரம் குறைந்து அவனின் உதடுகள் பேச்சைக் கேட்க மறுத்தது.  

  முத்தம் வைக்க நொடி நேரமே இருக்க, நொடிக்குள் வீட்டின் காலிங் பெல் அடித்தது. 

  திடீரென்று தன் போதை கலைந்தவன் அவளை நிற்க வைத்தான். 

  தன் கேஷம் கோதி ‘என்ன காரியம் செய்ய துணிந்தேன்..’ என தலையில் அடித்துக் கொண்டான்.  

  காலிங் பெல் சத்தம் மீண்டும் ஒழிக்க வந்தது யார் என பார்ப்பதற்காக கதவை நெருங்கியவன் லென்ஸ் வழியே நோக்கினான்.

  அவனின் அத்தை நீலாவதி நின்றிருப்பது தெரிந்தது. இதயம் அப்படியே தூக்கி வாரி போட்டது.  ‘இந்நேரத்தில் ஏன் வந்திருக்கிறார் உள்ளே வைஷூ வேறு இருக்கிறாளே.. ’

                               😉

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page