“டேய்!, ஆமா, ஆதி சார் இசை மேமும் லவ் பண்றாங்களா என்ன?.” அவளின் கேள்வியில் கண்கள் அகல விரிய, அவளின் வாயை தன் கைகளால் அவசரமாக மூடியவன், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான்.
மரணப் பீதி அவன் முகத்தில் தாண்டவமாடியது.…
“என்னடா?!.” அவன் வாயை மூடியதால் கண்களாலே அவள் வினவ, சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தவன் பேசத் தொடங்கினான்.
“செவுத்துக்கும் காது இருக்குனு நீ கேள்விப்பட்டதில்லை.” என்றவன் பல்லைக் கடித்து உறும, அவன் கையை அவசரமாகத் தட்டி விட்டவள்.
“கேள்விப்பட்ருக்கேன், ஆனா பாத்தது இல்லை. எங்க, இங்க எங்கயாவது இருக்கா காட்டு!.”என்றவள் சுற்றியும் எங்காவது உள்ளதா என்று தேட, கோபத்தில் புசுபுசுவென மூச்சுவிட்டவன், கொலைவெறியில் அவளை முறைத்துப் பார்த்தான்.
தப்பான ஆளுக்கு
பணிந்துவிடாதே
உன்னை நீ ஒருசாண் வயிற்றுக்கு
தொலைத்துவிடாதே
பத்தோடு நீ ஒன்றாய்
இருந்து விடாதே
கண்முன்னே அநியாயம் நீ கண்டால் ஒதுங்கி விடாதே
உயிர் தானே போகும்
போகட்டும் போடா
போனாலும் தப்பே இல்லை
கடவுள் உன்பக்கம்
உனக்கென்ன துக்கம்
போனது போச்சுது
ஆனது ஆச்சுது
போடு போடு தூக்கி போடு.
“அஹ்ஹ்…”.
தொலைபேசி அடிப்பது கூடக் காதில் கேளாதது போல், முறைத்துக் கொண்டிருந்தவனைத் தலையிலே தட்டியவள்,” போன் அடிக்குது எடுடா கேவலவாதி!. “என்றாள்.
தலையைக் கைகளால் தேய்த்துக் கொண்டே இவளை முறைத்துப் பார்த்தவன்,” இருடி, இதுக்கெல்லாம் சேத்து ஒரு நாள் உனக்கு இருக்கு.” என்றவனிடம்
“ம்ம்… அந்த நாள் வந்தா சொல்லு ரெண்டு பேரும் சேர்ந்தே பாக்கலாம். இப்போ, மொதல்ல போன அட்டென்ட் பண்ணி பேசுடா, மறுபடியும் அடிக்குது.” என்றவளின் பதிலில் தொலைபேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்தான்.
“ஹலோ!.” என்றவனிடம் எதிர் திசையில் என்ன சொல்லப்பட்டதோ கண்கள் ரெண்டும் கோவைப்பழமெனச் சிவக்க, “சரி, ஓகே நான் பாத்துக்கிறேன்.” என்றவன் தொலைபேசியை அணைத்துவிட்டுக் கோபத்தில் தரையை ஓங்கி உதைத்தான்.
” ஷிட், ஷிட், ஷிட், ஷிட்!. ” என்றவன் தலையில் வேகமாகத் தட்டிக் கொண்டே அங்கும் இங்கும் நடக்க, அவனின் செய்கையிலே ஏதோ முக்கியமான விஷயம் என்பதைப் புரிந்துகொண்டவள், விளையாட்டுத்தனத்தை விட்டுவிட்டு அவனிடம் என்னவென்று கேட்டாள்.
“ஷாதனா!, கம் குயிக் எமெர்ஜென்சி( come quick emergency).” என்றவன் வேகமாக ஸ்டேஷனின் உள்ளே ஓடினான்.
அவனின் பின்னாலே அவளும் ஓட, அவனோ டிப்டி கமிஷனர் என்ற பெயர் பொறிக்கப்பட்ட அறையினுள் நுழைய, இவளும் அவனுடனே உள்நுழைந்தாள்.
“சார்!, எமெர்ஜென்சி.” என்றவன் பதற்றத்தில் மூச்சு வாங்க அவனின் முன்னே நிற்க, கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவனோ இவர்களைக் கண்டுகொண்டான் இல்லை.
அவனின் முகப் பாவனையிலே, ஏதோ முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கிறான் என்று தெரிந்தாலும், இங்கே இவனால் அமைதியாக நிற்க முடியவில்லை.
ஏனெனில், அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தை அவனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க, ” சார்!.” என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தவன் பேசுவதற்குள்
” பைவ் மினிட்ஸ்(five minutes) செல்வா. டேக் யுவர் சீட் (take your seat). ” என்றவன் கணினியில் மீண்டும் மூழ்கிவிட, அந்த ஐந்து நிமிடமும் காத்திருப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தன் வேலை முடிந்ததை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தவன், நிதானமாக விழிகளை நிமிர்த்தி இவர்களைப் பார்த்தான்.
அவன் விழிகளிலே, என்ன விஷயம் என்ற கேள்வி தொக்கி நிற்க, “சார்!, நம்ப டிவிஷன்ல மட்டும்தான் இந்தக் கடத்தல் நடக்குதுன்னு நம்ம தப்பு கணக்கு போட்டுட்டோம் சார்!.” என்றவனின் பதிலில் கண்களை ஆச்சரியப்படுவதுபோல் உயர்த்தியவன், தலையைச் சற்றே சாய்த்து பார்த்தவனின் இதழ்களில் இருந்தது நக்கல் புன்னகை மட்டுமே.
” எப்படி இவ்வளவு கான்ஃபிடண்டா சொல்லறீங்க, மிஸ்டர் செல்வா?!.” என்றவன் எப்படி என்பது போலப் புருவத்தை உயர்த்தி இவர்களைப் பார்க்க,
“ சார்!, இப்ப தான் நம்ம ஸ்பைக் கிட்ட இருந்து மெசேஜ் வந்துச்சு. வேளச்சேரியிலும் இதே பேட்டன்ல கடத்தல் நடக்கப் போகுதுன்னு!. ”
” ஓஹ்!…” என்றவன் அவனிடம் எதையோ எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது, அவன் முகபாவனையிலே தெளிவாகத் தெரிந்தது.
தோள்களை அலட்சியமாகக் குலுக்கியவன்,”சரி ஓகே, அப்போ அடுத்து என்ன ப்ரொசிஜரோ அத பாருங்க. ” என்றவன் அவ்வளவுதான் என்பதுபோலக், கணினியில் மீண்டும் தன் கண்களைப் பதித்துவிட்டான்.
இவர்களுக்குத்தான், இதுக்கு இவ்வளவுதான் ரியாக்ஷனா என்பதுபோல இருக்க,”சார்!, இன்னும் ஹாஃபனவர்ல அடுத்த விக்டம கடத்த போறாங்க சார்!. ” என்றவனுக்குப் பதட்டத்தில் என்ன செய்வது என்றே புரியவில்லை.
பதட்டத்தில் நெற்றியை தேய்த்துக்கொண்டே நின்றிருந்தவனை, விழிகளை நிமிர்த்தி ஆழமாக அதே நேரம் நிதானமாகப் பார்த்தான்.
” டு வாட் ஐ சே(do what I say)!. “அவன் முகப் பாவனையே அந்தப் பதிலை சொல்லியிருக்க, அவனும் தனது வாயை திறந்து அதையேதான் சொன்னான்.
அடுத்து அவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமல், பேசுவதற்கும் தைரியம் வராமல், வெளியே வந்தவர்களுக்கு அதீத குழப்பமே மேலோங்கியது.
“இப்போ என்னடா பண்றது?.” என்றவளின் கேள்விக்கு
“நம்ப என்ன பண்ண முடியும்?, வேளச்சேரியில ஸ்டேஷன்ல இருக்குற இன்ஸ்பெக்டருக்கு கால் பண்ணி விஷயத்தைச் சொல்ல வேண்டியதுதான். ” என்றவன் அவருக்கு அழைப்பதற்காகத் தொலைபேசியை எடுக்க, அவர்களின் கவனத்தை அந்தத் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தி ஈர்த்தது.
சென்னையில் பயங்கரம்,
சென்னையை அடுத்த வேளச்சேரியில், பிரபல ரௌடி கொலைக் கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை.
என்ற செய்தியை பார்த்தவர்கள், ஒருவரை ஒருவர் அதிர்ச்சி மேலிட பார்த்துக்கொள்ள, உள்ளே அமர்ந்திருந்தவனின் முகமோ புன்னகையில் மலர்ந்தது.
மெல்ல கைகளை மேலே உயர்த்திச் சோம்பல் முறித்தவன், அப்படியே நாற்காலியில் தலை சாய்ந்தான்.
” நான் உன்ன நெருங்கிட்டேன் மிஸ்டர். பிளாக்(black). ஐ ஆம் கமிங் ஃபார் யூ வெரி சூன் ( I am comming for u very soon). ” என்றான்.
அதேநேரம்,
அங்கு எதிர் திசையில்…
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, அதே செய்தியை புன்னகை முகமாக, அந்தச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ஒரு வஞ்சம் ஒளிந்திருப்பதை, அவனைத் தவிர யாரும் அறிய வாய்ப்பில்லை.
“நாட் பேட் (Not bad) மிஸ்டர். ஆதித்த கரிகாலன்”என்று உதிர்த்தவனின் புன்னகை அரக்கனைப் போலவே இருந்தது.
ஆம், அவன் அரக்கன்தான். மனித உருவில் வாழும் அரக்கன்.
பொதுவாக மனிதனுக்கும், அரக்கனுக்கும், சிறு நுனி அளவு வித்தியாசம்தான், உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி…
ஒருவனுக்கு ஒருவன் கொடுத்து வாழ்பவன் மனிதன்…ஒருவனை ஒருவன் கொன்று வாழ்பவன் அரக்கன்..
அந்த விதத்தில் பார்த்தால், அவனை மனிதன் என்று எந்த விதத்திலும் சொல்லிவிட முடியாது…
அவன் அரக்கனை விடவும் மோசமானவன்…
அவனைப் பற்றி விவரித்தால் மொத்தத்தில் கெட்டவன் என்று, ஒரு மனிதனை இந்த உலகம் வரையறுக்கும், எல்லா வரைமுறையிலும் இவன் அடங்குவான்.
தீமைதான் வெல்லும்.…
என்ன நினைத்தாலும்
தீமைதான் வெல்லும்
எவன் தடுத்தாலும்…
மனித உருவத்தில்
அலைந்திடும் மிருகம் நான்…
மனித மிருகங்களுக்கு
ஒரு கடவுள் நான்…
தொடரும்..…
கதை எப்படி இருக்குனு உங்க கருத்துக்கள சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ். கமெண்ட் பண்ண முடியலனாலும் லைக்யாவது பண்ணிட்டு போங்க பிரண்ட்ஸ், நன்றி.
