Epi – 15 – மாமன் முறை

இதுவரை… 

   வைஷ்ணவியின் பேச்சை கேட்டு அந்த ரவுடிகளை அடிக்கும் எண்ணத்தை கைவிட்டான் வீர். பிடித்த உணவை கண்டதும் தாயின் நினைவில் ஊட்டி விடுமாறு வைஷூவிடம் கேட்டான் வீர்.

இனி…

  தனக்கு உணவை ஊட்டி விட கேட்ட வீர்-ன் கண்களை கவனித்தவள் ஏதோ ஒரு அன்பின் ஏக்கம் தெரிந்ததால் அமைதியாய் ஊட்டி விட்டாள். 

  ” சார் ,நான் ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டீங்களே.. நீங்க ஏன் உங்க அம்மாவை மன்னிக்க கூடாது.  உங்க அப்பாவும் இப்போ உயிரோடு இல்லை.  

ரத்த சம்பந்தம் யாரவது கூட இருக்கிறது நல்லது தானே.. “

  அவள் கூறிய விஷயம் கேட்டு பார்வை நோக்கினான். அந்த அர்த்தத்தில் அஞ்சி விட்டாள்.

   “Sorry சார் , கோச்சுக்காதிங்க மனசுல பட்டதை சொன்னேன்..”

  “நீ சொன்னதுல தப்பில்லை. ஆனா நான் அந்த அளவுக்கு நல்லவன் கிடையாது.  ஒருத்தவங்க மேல நம்பிக்கை வச்சுட்டா கண்மூடித்தனமா இருப்பேன்.  அந்த நம்பிக்கைக்கு அவன் துரோகம் செஞ்சுட்டா ஆயுசுக்கும் மன்னிக்க மனசு வராது..”

  “அப்படின்னா நீங்க உங்க ஃப்ரண்டு சித்து வை தேடி போய் பேசினீங்க… ஆனா அவர் உங்களை வெறுக்கிறார்.  நீங்க துரோகம் பண்ணதா அவர் நினைக்கிறாரா.. அன்னைக்கு காலேஜ்ஜில் ஸ்வேதா சித்துவை சும்மா விடமாட்டேன்னு கோச்சிட்டு போனாங்களே, அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு….”  என அவள் கேட்க 

 “ என்னை பார்த்தா நட்புக்கு துரோகம் பண்ற ஆளா தெரியுதா..?”

  “ச்சே ச்சே.. உங்ககிட்ட வேலை செய்ற ஒரு ஸ்டாஃப் கிட்ட கூட நீங்க உண்மையா தான் இருக்கீங்க.  ஆனா எந்த காரணத்துக்காக சித்து உங்களை வெறுக்கிறார். அன்னைக்கு நீங்களா பேசும் போது கூட உங்க முகத்தை அவர் பார்க்கலை.. ”

   வைஷு வேண்டுமென்றே தான் வீர் இடம் இதை பற்றி கேட்கத் துவங்கினாள். 

அவனின் கண்களில் இருந்து துளிர்  விடும் கண்ணீர் அவளுக்கு பிடிக்கவில்லை . வேறு விஷயமாக பேசினால் நேரடியாகவே பேச்சை மாற்றுவது போல் தெரியும் . அதனால் தான் நட்பிற்குள் அழைத்துச் சென்றாள். 

  அவளின் எண்ணத்தை அறியாத வீர் அவள் கேட்டதும் தன் நட்பின் கதையை உரைக்கத் துவங்கினான்.  இதற்கிடையில் அவள் ஊட்டி விடுவதும் , அவளும் உண்பதுமாய் உணவை கரைத்துக் கொண்டிருந்தனர். 

  “அன்னைக்கு காலேஜ்ஜில் கடைசி நாள் சமயத்தில், சித்து ஸ்வேதாவை வற்புறுத்த நினைச்சதில் கோபப்பட்டு போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாள்.  நானும் சித்து உடைய அப்பாவும் தான் ஸ்வேதா கிட்ட போய் பேசி சமாதானப்படுத்தி கேஸை வாபஸ் வாங்க வச்சோம் .

     அதுக்கப்புறம் ஸ்வேதா எங்க யார்கிட்டயும் பேசலை.  ஒரு வாரத்தில் ஃபாரின் கிளம்பிட்டாள். எப்பயாவது ஒரு தடவை எனக்கு கால் பண்ணுவாள்.

     ஆனால் சித்து ஸ்வேதாவை நினைச்சு ரொம்ப குடிக்க ஆரம்பிச்சான்.  ஒரு நாள் அவனுடைய எல்லை தாண்டி போச்சு…” 

  “டேய் சித்து, என்னடா இதெல்லாம் முன்னையாவது, வெளியே தான் குடிச்சிட்டு வந்த இப்போ வீட்டுக்குள்ளேயே குடிக்க ஆரம்பிச்சிட்டியா.. ”

   அறைக்குள் முழு போதையில் இருந்த சித்து வை கேள்வி கேட்டான் வீர். அருகில் வீட்டு வேலைக்காரன் நின்றிருந்தான்.  அவனை முறைத்தான் சித்து. 

 “ வீட்டில் நான் இல்லைன்னு தானே சொல்லி அனுப்ப சொன்னேன்..”

  “அவரை ஏண்டா திட்டுற நீ வீட்டுக்குள்ள தான் இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும்.  அண்ணா நீங்க வெளிய போங்க இவன்கிட்ட நான் பேசிக்கிறேன்..”

  வீர் கூறிய பிறகு வீட்டு வேலைக்காரன் பம்பிக் கொண்டே அச்சத்துடன் வெளியேறினான். 

  “டேய் போதும்டா ஸ்வேதா இப்ப கூட கால் பண்ணாள். உன் மேல கோவம் இருந்தாலும் நீ எப்படி இருக்கேன்னு விசாரிச்சாள். உன் காதலை தாண்டி முதல்ல உனக்கும் அவளுக்கும் நட்பு தானே உருவாச்சு,  அந்த நட்புக்கு மரியாதை கொடுத்தாவது ஸ்வேதா கிட்ட ஒரு தடவை பேசு, அவள் கிட்ட மன்னிப்பு கேளு உன் மனசு தானா சாந்தமடையும்…”

  “அப்போ நீயும் நான் பண்ணது தப்புன்னு சொல்ற.. ”

  ” ஆமாடா தப்பு தான் ஒரு பொண்ணை வற்புறுத்துறது தப்பு இல்லையா, நீ இன்னமும் அதை நியாயப்படுத்துறியா..” என வீர் கோவம் கொள்ள..

  “உனக்கு ஏன்டா கோபம் வருது கேட்கும் போதெல்லாம் அவளை ஃபிரண்டா மட்டும் தான் பார்க்கிறேன்னு சொன்ன நான் அவளை தொட்டால் உனக்கு ஏன் கோபம் வருது. எனக்கு தெரியும் டா நீயும் அவளை காதலிக்கிறேன்னு… எங்க என்கிட்ட ஒத்துக்கிட்டா உன்னுடைய வேஷம் வெளியே தெரிஞ்சிடுமேன்னு நடிக்கிற..”

  “ஏன்டா என்கிட்ட இப்படி எல்லாம் பேசுற உன்னையும் ஸ்வேதாவையும் ஒரே நட்பா தாண்டா நான் பார்க்கிறேன்.  நீங்க இரண்டு பேருமே சந்தோஷமா இருக்கணும் . ஒருவேளை ஸ்வேதா மனசு மாறி உன் காதலை ஏத்துக்கிட்டா எனக்கு அதில் ரொம்ப சந்தோசம் டா..” 

  “அட அட என்னமா நடிக்கிறான்.. உன்னோட இந்த நடிப்புல தாண்டா காலேஜ்ஜில் எல்லா பொண்ணுங்களும் விழுந்துடுறாங்க… ”

  “சித்து…?”

  இவர்களின் பேச்சு வார்த்தைக்கு இடையில் கதவை திறந்த சத்தம் கேட்க, சித்துவின் தந்தை நுழைந்திருந்தார். 

   “யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற ,வீர் நடிக்கிறானா.. அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல நீ இருந்தப்ப உனக்காக ஸ்வேதா கிட்ட போய் கெஞ்சி பேசினது வீர் தான். இப்படிப்பட்ட பிள்ளையை பெற்றதுக்கு அவன் இல்லாமலே இருக்கலாம்னு நான் கூட கண்டுக்காம தான் இருந்தேன்.  உன்னுடைய எதிர்காலம் வீணா போயிடும்னு அவன் தான் பேசி வெளியே எடுத்தான்..”

  “அப்போ இவன் தான் எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டான்னு சொல்றீங்களா..?

இவன் போட்ட பிச்சையில் நான் வாழனும்னு அவசியம் இல்லை..”

  தன் கையில் இருந்த மது பாட்டிலை அருகில் இருந்த டேபிளில் ஓங்கி உடைத்த சித்து, கையில் இருந்த பாட்டில் கண்ணாடியை தன் கழுத்தை நோக்கி ஏற்றினான். 

  பதறிப்போன வீர் முன்னால் சென்று அவனின் கையை தடுத்து பிடிக்க ,சித்துவின் தந்தையும் விரைந்து வந்தார். 

  “சித்து என்னடா பண்ற அந்த பாட்டிலை கொடு…”

  வீர் அந்த பாட்டிலை பிடுங்கி தரையில் போட்டு உடைத்தான். 

  சித்துவின் தந்தை அவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். 

   “ஏன்டா, ஏன் இப்படி பொறாமையில் சாகுற அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலைன்னா அதுக்கு வீர் என்ன பண்ணுவான்..? அம்மா இல்லாத பையன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தேன். ஆனா உறவுகளோட அருமை சொல்லிக் கொடுக்காமல் வளர்த்துட்டேன். உன்னையே நினைச்சு உனக்காகவே வாழ்ந்துட்டு இருக்க என்னை பற்றி யோசித்து பார்த்தியா..

   வீர் – ஐ பாரு படிச்சு முடித்துட்டு சொந்தமா பிசினஸ் பண்றதுனு வாழ்க்கைக்கு அடுத்த கட்டத்துக்கு முன்னேறிட்டான். நீ மட்டும் ஏன் டா இப்படி குடியும் போதையுமா இருக்க, வேண்டாம் டா விட்டுடா… “

   “இப்ப கூட அவனை வச்சு தான் எனக்கு புத்திமதி சொல்லணுமா.. இனி இந்த குடியை நான் தொட மாட்டேன் எவனை வச்சு எனக்கு புத்திமதி சொன்னீங்களோ அவனைவிட மேல வாழ்ந்து காட்டுறேன்.  சொந்தமா பிசினஸ் பண்றான்னு சொன்னீங்கள்ல, உங்ககிட்ட இருந்து ஒத்த பைசா எதிர்பார்க்காம நானும் சொந்தமா பிசினஸ் ஆரம்பிப்பேன் மேல வருவேன் இவனை கீழே தள்ளி காட்டுறேன்..”

  சித்துவின் வார்த்தைகளைக் கேட்டு வீர் மனம் நொந்தான். 

  “சித்து நான் உன்னோட ஃபிரண்டுடா என்னை ஏன்டா எதிரியாய் பார்க்கிற கஷ்டமா இருக்குடா..”

  “நான் பட்ட கஷ்டத்தை விடவா நீ அதிகம் பட்டுட்ட , இனி நீ யாரோ நான் யாரோ என் வீட்டை விட்டு வெளியே போடா..”

  “டேய் சித்து..”

  “அப்பா கடைசி முறையாக கேட்கிறேன் உங்களுக்கு நானா இல்ல அவனா..”

  பெற்ற மகனை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை அமைதியாக நின்றார். 

  “நீங்க கஷ்டப்பட வேண்டாம் அப்பா,  நானே வெளியே போய்க்கிறேன்..” என்றான் வீர்.

   வீட்டை விட்டு வெளியேறும் வீர்-ஐ தடுக்க முடியாமல் மகன் பாசத்தில் கட்டுப்பட்டு நின்றார் சித்துவின் தந்தை. 

    நடந்ததை வைஷூவிடம் கூறி முடித்தான் வீர். அப்படியே உணவும் அவர்கள் பசியை போக்கியிருக்க கைகளை கழுவிக் கொண்டாள் வைஷு. 

  “ஓ அதனாலதான் உங்க ஃபிரெண்ட் சித்து உங்களை போட்டியா நினைக்கிறாரா ஆனால் அவர் ஒரு விஷயத்தை மறந்துட்டார் உங்களோட திறமைக்கு முன்னாடி நிச்சயமா அவரால நிற்க முடியாது..”

   அன்றைய இரவு வெகுநேர பேச்சுக்கு பிறகு வைஷு அந்த சோபாவிலேயே படுத்து உறங்கினாள். வீர் அறைக்கு வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். 

  சூர்ய உதயம் துவங்கியிருக்க வைஷ்ணவி வீர்-ஐ தட்டி எழுப்பினாள்.

  “சார்..”

  அவளின் முதல் குரலுக்கே கண்விழித்தான். 

   “ராத்திரி எல்லாம் இந்த சேர்ல தான் படுத்து தூங்குனீங்களா? நீங்க உள்ள சோபாவில் படுத்திருக்கலாமே நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை..”

  “பரவால்ல வைஷு உனக்கு நல்லா தூக்கம் வந்துச்சா..”

  “எனக்கென்ன சார் உங்களை கஷ்டப்படுத்திக்கிட்டு என்னை சொகுசா தான் பார்த்துக்கிட்டீங்க..

அப்புறம் எனக்கு இப்ப ஹாஸ்டலுக்கு போக வேண்டியது இருக்கு. உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்னு தான் வந்தேன்..”

  “தேங்க்யூ வைஷூ, ராத்திரி முழுக்க ரம்யாவுக்கு துணையா இருந்ததுக்கு..”

  “இப்போ எதுக்காக எனக்கு நன்றி சொல்றீங்க, ரம்யா என்னை அக்கான்னு கூப்பிட்டாள். அப்போ அவள் எனக்கு தங்கச்சி, என் தங்கச்சியை பார்த்துகிட்டதுக்கு நீங்க நன்றி சொல்லணும்னு அவசியம் இல்லை..”

  “ஓ…. அப்படியா அப்போ என் அத்தை நீலாவதி உனக்கு அம்மாவா..”

 “ ஆமா, எனக்கு அம்மா தான்..”

  “அப்போ நான் உனக்கு என்ன முறை..?”

  மாமன் முறை வருகிறது ஆனால் இவள் என்ன கூறுகிறாளோ.

  “நீங்க எனக்கு  Boss ” என்றாள்.

  “சுத்தம் இப்படி மக்கா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கலை..”

  “என்ன சார் சொல்றீங்க நீங்க எனக்கு பாஸ் தானே சரியா தான் சொல்லி இருக்கேன்..”

  “சரி விடு.. நான் உன்னை டிராப் பண்ண வரேன்..”

  “வேண்டாம் சார் எப்படியும் கொஞ்சம் நேரத்தில் உங்க அத்தை வந்துருவாங்க அவங்க வரும் போது நீங்க இங்க இருந்தா தானே நல்லா இருக்கும். நானே போய்க்குவேன். ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்றாள் 

    “ஹாஸ்டலுக்கு போனதும் எனக்கு கால் செஞ்சு சொல்லு..”

    நெற்றியை பிடித்தவாறு அவன் பேச அவன் முகத்தோற்றத்தில் தெரிந்த வித்தியாசத்தை கவனித்தாள் வைஷு. 

  திடீரென அவனின் நெற்றியில் ஜில்லெனு அவளின் கை பதிந்தது. 

   “சார் உங்களுக்கு காய்ச்சல் அடிக்குது நேத்து ராத்திரி நல்லா தானே இருந்தீங்க திடீர்னு எப்படி காய்ச்சல் வந்துச்சு..”

  தூக்கத்திலிருந்து இப்போது தான் அவன் எழுந்தான்.  காய்ச்சல் வந்த விஷயத்தை அவனே இன்னும் உணரவில்லை. ஏதோ சோர்வை மட்டும் உணர்ந்தான்.

  “எனக்கு ஹாஸ்பிட்டல் சரவுண்டிங்கே ஒத்துக்காது. நான் நல்லா இருந்தா கூட காய்ச்சல் வந்துடும்..”

  “அப்படின்னா நேத்து என்கிட்ட சொல்லிட்டு நீங்க வீட்டுக்கு போயிருக்க வேண்டியது தானே,  சிரமப்படுத்திகிட்டு இங்க தங்கி இப்போ காய்ச்சல் வந்திருச்சு..”

 “ பரவால்ல வைஷு, ஒன்னும் பிரச்சனை இல்ல நீ ஹாஸ்டலுக்கு போ அத்தை வந்த பிறகு ரம்யாவை டிஸ்சார்ஜ் செஞ்சு வீட்டுக்கு கிளம்பிடுவோம்..”

  அவனைக் காய்ச்சலோடு விட்டுச்செல்ல மனமில்லை. வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால் அமைதியோடு கிளம்பினாள்.

  சற்று நேரத்தில் நீலாவதியும் வந்து சேர்ந்தார் . அவரிடம் ரம்யா காப்பாற்றப்பட்டது யாரால் என்ற விஷயத்தை உரைத்தான். 

  “அட என்ன வீர், நான் தான் உன்கிட்ட சொன்னேன்ல இன்னைக்கு காலையில் விடிஞ்சதும் வந்துவிடுவேன்னு, அந்த பொண்ணை இங்கேயே இருக்க வைக்க வேண்டியது தானே? நேரில் பார்த்து நன்றி சொன்னால் தான் என் மனசே ஆறும்..” 

  “பரவால்ல அத்தை இன்னொரு நாள் மீட் பண்ணிக்கலாம். நான் போய் டிஸ்சார்ஜ் வேலை எல்லாம் கவனிக்கிறேன் நீங்க போய் ரம்யாவை பாருங்க..”

  நீலாவதி அறைக் கதவை திறந்து தன் மகளை சென்று சந்தித்தார்.  ரம்யா கூட வைஷூ செய்த உதவியை பற்றி தான் கூறினாள். உடன் தன் தாய் மீதும் கோபம் கொண்டாள். தம்முடைய கோபத்தால் தான் ரோட்டில் அனைவர் முன்னும் நான் போதையில் நடந்து அசிங்கப்பட்டேன் என கோபித்துக் கொண்டாள். 

  டிஸ்சார்ஜ் வேலை முடிந்து ரம்யாவை அத்தையின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் வீர். 

  “அத்தை நீங்க ரம்யாவை பார்த்துக்கோங்க நான் ஈவினிங் வரேன்..”

   “வீர் இன்னைக்கு சண்டே தானே ஆபீஸூம் லீவு, இங்கேயே இரு எதுக்கு வீட்டுக்கு போற..”

  மகள் மீது கவனத்தை வைத்திருந்த நீலாவதி வீர்-க்கு காய்ச்சல் இருந்ததை கவனிக்கவில்லை. 

  “இல்ல அத்தை கொஞ்சம் டயர்டா இருக்கு, நான் வீட்டுக்கு போய் தூங்குறேன் அப்புறமா இங்க வரேன்..”

  “கொஞ்ச நேரம் காத்திரு உனக்கு டிபன் செஞ்சு தரேன்..”

   “அதெல்லாம் நான் வெளிய பார்த்துக்கிறேன் அத்தை, நீங்க போய் முதல்ல ரம்யாவை கவனிங்க..  ”

  தன் அத்தையிடம் கூறி விட்டு காய்ச்சலோடு வீடு திரும்பினான் வீர்.  தன் அப்பார்ட்மெண்ட்டை அடைந்த பிறகு லிப்டின் பட்டனை தொட கண்கள் மங்கலாய் தெரிந்தது. 

   லிப்டில் இருந்து வெளியே வந்தவன் தன்னுடைய பிளாட்டிற்கு நடந்து செல்வதற்குள் தள்ளாடினான்.

   கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் நேராய் படுக்கையறைக்குள் தான் சென்றான்.  சிரமப்பட்டு நடந்து வந்தவன் காய்ச்சலின் வீரியத்தில் அப்படியே மயங்கினான்.  

  படுக்கை அருகே அவன் மயங்கி விழுந்திருக்க மூச்சு விடும் அசைவு கூட தெரியவில்லை.

                                     😉

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page