Epi – 16 – சிக்கியது முந்தானை

இதுவரை…

    இரவு முழுவதும் வைஷ்ணவி ரம்யாவிற்கு துணையாக மருத்துவமனையில் இருந்தாள். ரம்யாவை டிஸ்சார்ஜ் செய்து அத்தையின் வீட்டில் டிராப் செய்த வீர் இல்லம் திரும்புகையில் காய்ச்சல் தலைக்கு ஏறியது. 

இனி… 

   தன் படுக்கையறைக்குள்  மயங்கிய நிலையில் தரையில் இருந்தான் வீர்.

  நேரம் கடந்து கொண்டிருக்க இப்படியே விட்டால் அவன் உயிருக்கு ஆபத்தாய் போகும் அவனை காக்கவே அங்கு வந்து சேர்ந்தாள் வைஷ்ணவி. 

  ஐந்தாவது ப்ளோரின் லிப்ட் கதவு திறக்கப்பட வெளியே வந்தாள் வைஷ்ணவி. 

  “ம்… இந்த ப்ளோர்னு மட்டும் தான் ஞாபகம் இருக்கு எந்த பிளாட்னு தெரியலையே..”

  யோசித்தவள் சரியாக வீர்-ன் வீட்டுக்கு எதிரே இருந்த நீலாவதியின் தோழி வீட்டின் காலிங் பெல்லை அடித்தாள். 

  எதார்த்தமாய் வீட்டின் கதவை திறந்தவர் வெளியே வைஷ்ணவி நின்றிருந்ததை பார்த்து திகைத்தார். 

   ‘இந்த பொண்ணு தானே அன்னைக்கு போதையில் ஆடிட்டே வந்தாள். திரும்பவும் இங்கே ஏன் வந்திருக்காள்..’

  “ஆன்ட்டி இங்க வீர் சாரோட  பிளாட் எங்க இருக்கு..”

  “என்னை பார்த்தா ஆன்ட்டி மாதிரி தெரியுதா..”

  உடனே அவர் கோபத்தில் முறைத்தார். 

  “Sorry அக்கா,  வீர் சாருடைய பிளாட் எங்க இருக்கு..”

 “ நீ எதுக்கு கேக்குற, எங்க இருந்து வந்திருக்க..”

 “ நான் அவருடைய ஆபீஸில் வேலை செய்றேன். ஒரு முக்கியமான விஷயமா அவரை பாக்கணும்..”

  அவளை கீழே இருந்து மேல் வரை பார்த்தவர்,

  ‘ இவ்வளவு அழகாக இருந்தால் அவன் ஏன் மயங்க மாட்டான்..’ என நினைத்தார்.

  “அதோ அந்த பிளாட் தான்..” என கை காட்டினார். 

  “தேங்க்யூ ஆன்ட்டி..”

   “ம்…. 🤨🤨”

  “Sorry… அக்கா.. தேக்யூ.. ”

  ஆளை விடுங்கடா சாமி என வீர்-ன் பிளாட் காலிங் பெல்லை அடித்தாள்.

  மீண்டும் அந்த ஆன்ட்டி தன்னை கவனிக்கிறார்களா என ஓரக் கண்ணால் அவள் பார்க்க, அங்கே நின்றவாறு முறைத்துக் கொண்டுதான் இருந்தார். 

  ‘இவங்க வேற முறைக்கிறாங்களே, சார் சீக்கிரம் கதவை திறங்க..’  என மேலோட்டமாய் அவள் கதவைத் தட்ட கதவு திறந்தே தான் இருந்தது. 

 “ என்ன கதவு திறந்தே இருக்கு..”

  அவள் உள்ளே நுழைய அதை கண்ட எதிர்வீட்டுப் பெண்மணி உடனே நீலாவதிக்கு அழைப்பு விடுத்தார். 

அவரோ ரம்யாவை கவனித்தவாறு அருகில் இருந்ததால் மொபைல் ரிங் ஆனதை கவனிக்கவில்லை. 

  “என்ன இந்த நீலாவதி கால் பண்ணா எடுக்க மாட்டேங்குறாள். இந்த பொண்ணு வந்திருக்க விஷயத்தை இப்போ நான் எப்படி தெரியப்படுத்த..?”

  போட்டுக் கொடுக்கும் வேலையில் தான் அவ்வளவு ஆனந்தம் கிடைக்கிறது இவருக்கு. 

  பிளாட்டினுள் நுழைந்த வைஷ்ணவி வீடு அமைதியாக இருப்பதை உணர்ந்து அவனை அழைத்தாள்.

  “சார்..? 

  சார் நான் வைஷ்ணவி வந்திருக்கேன்…”

‘என்ன ஒரு சத்தத்தையும் காணலை..’

“  சார் வீட்ல  இருக்கீங்களா..”

  “அவர் இல்ல போலேயே ஆனா வீட்டோட கதவை திறந்து போட்டுட்டு எங்க போனாரு, இப்போ இந்த கிரெடிட் கார்டை அவர்கிட்ட கொடுக்கணுமே..”

  நேற்று இரவு ரம்யாவிற்கு ஆடை வாங்குவதற்காக இவன் கொடுத்த கிரெடிட் கார்டு இவளிடமே இருந்தது ஏதேனும் தேவை இருக்கலாம் என தான் அதை கொடுப்பதற்காக மீண்டும் வந்தாள்.

  ‘சரி கார்டை இங்கே டேபிள் மேல வச்சிட்டு அவருக்கு போன் செஞ்சு சொல்லிடலாம்..’

  அவள் மனதிற்குள் ஒரு கணக்குப் போட கையோடு வீர்-ன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். 

  மொபைல் ரிங் சத்தம் உள்ளே இருந்து கேட்டது. 

”  ம்… என்ன சத்தம் உள்ளே கேட்குது..” எட்டிப் பார்த்துக் கொண்டே அவள் முன்னேற, படுக்கை அறையில் இருந்து தான் ஒலி எழும்பியது. 

  “சார்..?”

   மொபைல் ரிங் ஆகும் சத்தம் மட்டும் கேட்க, வீர்-ன் குரல் கேட்கவில்லை.  அவள் கதவை திறக்க வீர்-ன் கால்களில் மோதியது கதவு. 

   இரண்டு கால்கள் தரையில் தெரிந்ததும் ஏதோ கொலை என்பது போல் நடுங்கி அச்சத்தில் காதில் வைத்திருந்த போனை தவற விட்டாள். 

  போன் தரையில் விழுந்த அதிர்ச்சி கூட இல்லை, மாறாக தரையில் விழுந்து இருப்பது வீர் சார் என உணர்ந்தவள் உடனே அருகில் சென்றாள்.

 “ சார் உங்களுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி தரையில் விழுந்திருக்கீங்க..?”

   அவனின் நெற்றியை தொட்டுப் பார்த்தவள் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்ததை உணர்ந்தாள். 

  அவனிடம் எந்த அசைவும் இல்லை.  சிரமப்பட்டு அவனை தாங்கி பிடித்து மேலே தூக்கினாள். அருகில் இருந்த படுக்கையில் படுக்க வைக்க முயற்சித்தாள். ஆனால் அவனின் எடையை தாங்க முடியாது அவனுடனே சேர்ந்து தரையில் விழுந்தாள்.

 ” அம்மா என் இடுப்பு… 

என்ன இவ்வளவு வெயிட்டா இருக்காரு..”

  வேறு வழியின்றி மயக்கத்தை தெளிவைப்பதற்காக உடனே கிச்சனுக்கு ஓடினாள். 

  அவன் அருந்துவதற்கு மிதமான சூட்டில் நீரை காய்ச்சினாள். பிறகு அதே தண்ணீரை அவனின் முகத்தில் தெளித்து தடவி விட்டாள். 

  “சார் கொஞ்சம் கண் திறந்து பாருங்க… ”

  வைஷ்ணவியின் குரல் கேட்டு வீர் மெல்ல கண்களை திறந்தான். அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்தவள் தலையை தன் மடி மீது தாங்கினாள்.

  “இந்தாங்க சார் கொஞ்சம் தண்ணி குடிங்க..”

  அவள் கொடுத்த தண்ணீரை குடித்தவன் பிறகு தான் மெல்ல சுய நினைவிற்கு வந்தான். 

 “ என்ன சார் இவ்வளவு காய்ச்சலை வச்சுக்கிட்டு ஏன் தனியா இருக்கீங்க உங்க அத்தை வீட்டுக்கே போய் இருக்கலாமே.. நான் ஹாஸ்பிடலுக்கு போய் விசாரிச்சேன் நீங்க அங்கிருந்து கிளம்பிட்டதா சொன்னாங்க. உங்க கிரெடிட் கார்டை குடுக்குறதுக்காக வந்தேன்..”

  அவன் இருந்த அரை மயக்கத்திற்கு அவள் மடி மீது தான் தலை சாய்ந்திருக்கிறோம் என்பதை அவன் உணரவில்லை. 

  மெல்ல எழுந்து அமர்ந்தவன் நெற்றியை பிடித்தவாறு படுக்கையில் சாய்ந்தான். 

  “”வாங்க சார் ஹாஸ்பிடலுக்கு போலாம்..

  “இல்ல வைஷு என்னால கார் ஓட்ட முடியாது அந்த அளவுக்கு எனக்கு சக்தி இல்லை..”

 “ சரி நான் ஒரு வாடகை காரை புக் பண்றேன் நாம ஹாஸ்பிட்டல் போலாம்..”

  “அதெல்லாம் வேணாம்..” 

   

   மறுத்தவன் முயற்சி செய்து படுக்கை மீது அமர்ந்தான். அவனை கை தாங்கலாக பிடித்து உதவி செய்தாள் வைஷு. 

  “இவ்வளவு காய்ச்சலை வச்சிக்கிட்டு ஹாஸ்பிட்டல் வேண்டாம்னு சொல்றீங்க..” 

  “என்னுடைய போனில் சரண்-னு ஒரு நம்பர் இருக்கும் அதுக்கு கால் செஞ்சு எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லு..”

  விஷயத்தை உரைத்தவன் அமர்வதற்கு தெம்பில்லாமல் தலையணையில் சாய்ந்து கொண்டான். 

  வீர் அவனுடைய போனை எடுத்துக் கொடுக்க, அதிலிருந்த சரண் என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். 

  “ஹலோ சொல்லுடா, என்ன சண்டே அதுமா கால் பண்ணிருக்க..”

 ” ஹலோ..” 

    பதில் கொடுத்தாள் வைஷு. 

  தன் நண்பனின் எண்ணில் ஒரு பெண்ணின் குரல் கேட்டதும் வியந்தான் சரண். 

 “ எக்ஸ்க்யூஸ் மீ ,வீர் சாருக்கு உடம்பு சரியில்லை உங்களுக்கு கால் செஞ்சு சொல்ல சொன்னாரு..”

 ” வீர் இப்போ எங்க இருக்கான்? அவன் உடம்புக்கு என்ன ஆச்சு..” 

  “அவருக்கு காய்ச்சல் அதிகமா இருக்கு..

இப்போ வீட்டில் தான் இருக்காரு..”

  “நான் உடனே வரேன் அவனை கொஞ்சம் பார்த்துக்கோங்க..” என்றான் சரண்.

  அழைப்பை துண்டித்த பிறகு தான் மறுமுனையில் பேசிய பெண் யார் என கேள்வி எழுந்தது சரணுக்கு..

  அடுத்த கால் மணி நேரத்தில் சரண் வீர்-ன் பிளாட்டிற்கு வந்து சேர்ந்தான். 

  அதற்குள் வீர் அருந்துவதற்கு சுடுநீரையும் கஞ்சியையும் காய்ச்சி ஏற்பாடு செய்திருந்தாள் வைஷு. 

  கிச்சனிலிருந்து அவள் வெளியே வரும் சமயம் சரண் உள்ளே வந்திருந்தான். 

  “எனக்கு கால் பண்ணது நீங்க தானா..”

  “ஆமா நான் தான், என் பேரு வைஷ்ணவி அவருடைய ஆபீஸில் வேலை செய்றேன்..”

  “சரி வீர் எங்க..”

 “ பெட்ரூமில் இருக்காரு..”

  சரண் சென்று சந்தித்த சமயம் வீர் மோசமான நிலையில் இருந்தான் இவ்வளவு காய்ச்சலை வைத்துக்கொண்டு இன்னும் தன்னை அழைக்காமல் தாமதித்து விட்டானே என கோபமும் வந்தது.

 “ எதுக்குடா இவ்வளவு காய்ச்சலோட படுத்திருக்க முன்னையே ஒரு போன் கால் செஞ்சிருக்க மாட்ட..”

   “நீ என்னமோ சொல்றேன்னு தெரியுது ஆனா சளி பிடிச்சிருக்கு காது இரண்டும் அடைச்சுகிச்சு ,நீ பேசுறது ஒன்னும் கேட்கலை..” என்றான் வீர்.

  “சுத்தம் இன்னும் வேற என்னவெல்லாம் பண்ணுது.. ”

 ” சார் அவருக்கு உடம்பு வலி இருக்குன்னு நினைக்கிறேன் அவருடைய கை காலை அவரே பிடித்து விடுகிறார் . அப்புறம் குளிர்ல நடுங்குகிறார்.. ” என வைஷூ எடுத்துக் கூறினாள்.

  ” பின்ன 104 டிகிரிக்கு மேல இருக்கு, காய்ச்சல் சமயத்தில் உடல் வெப்பநிலை அதிகமாச்சுன்னா குளிரும் வரும்..

இவனுக்காகவே சூட்கேஸ் குள்ள மருந்து மாத்திரையோட சுத்துறேன் நான்..”

   வீர் ஐ பரிசோதித்த சரண் அவனுக்கு தர வேண்டிய மருந்துகளை எடுத்து வைத்தான். 

  “நீங்க இன்னும் எவ்வளவு நேரம் இங்க இருப்பீங்க.. ” என சரண் கேட்க 

 “ என்ன விஷயம் சார் சொல்லுங்க..”

  “அவனுடைய வயிற்றுக்கு ஏதாவது ஆதாரம் கொடுத்து அப்புறமா இந்த மருந்தை அவனுக்கு கொடுக்கணும் . பிறகு இரண்டு மணி நேரம் கழிச்சு மறுபடியும் இதே மருந்தை கொடுக்கணும்.  சிரமம் பார்க்காமல் கூட இருந்து அவனை கவனிச்சுட்டு போறீங்களா..? எனக்கும் வேலை இருக்கு இவன் கூட இப்போதைக்கு இருக்க முடியாது..”

  “பரவால்ல சார் நான் பார்த்துக்கிறேன் மருந்தை கொடுங்க..”

  “ரொம்ப நன்றி..” என்றான் சரண்.

  சரண் தன் நண்பனிடம் பேசி விட்டு கிளம்பினான். ஆனால் எதற்குமே வீர் பதில் உரைக்கவில்லை.  அவனின் காதுகள் சளி அடைத்து கேளாது இருந்தது.

  அவனுக்காக காய்ச்சிய கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஸ்பூன் 🥄 கொண்டு ஊட்டி விட்டாள். 

 “ சார் இந்த கஞ்சியை சாப்பிடுங்க உங்களுக்கு மருந்து கொடுக்கணும்..”

  “கஞ்சியா எனக்கு அதெல்லாம் உள்ள இறங்காது வைஷு..”

  மேலோட்டமாய் கண் திறந்தவாறு பதில் கூறினான். 

  “பின்ன இந்த அளவுக்கு காய்ச்சலை வச்சிக்கிட்டு காரசாரமா சாப்பிடுவீங்களா அமைதியா வாயை திறங்க… ”

  அவள் உரிமையோடு அதட்ட வேறு வழியின்றி இவனும் வாயை திறந்தான். 

  சிரமப்பட்டு அரை பாத்திர கஞ்சியை மட்டும் குடித்தவன் மேற்கொண்டு உண்ண மறுத்து விட்டான். 

  பிறகு ஐந்து நிமிட இடைவெளி கழித்து அவன் அருந்துவதற்கு மருந்தை கொடுத்தாள்.

 ” சார் நல்லா தூங்கி எந்திரிங்க இரண்டு மணி நேரம் கழிச்சு நான் எழுப்புறேன் இன்னொரு முறை மருந்து சாப்பிடணும்..” என்றாள்.

   அவள் இவனுக்கு போர்வை போர்த்தி விட கழுத்து வரை மூடிக்கொண்டு இடைவெளி இல்லாது கூனி குறுகி தூங்கினான். பார்க்கவே பாவமாக இருந்தது. 

  வீட்டில் ஆங்காங்கே கலைந்து இருந்த பொருட்களையும் ஆடைகளையும் சரி செய்து வைத்தாள். அவனுக்காக காய்ச்சியை கஞ்சியின் மீதியை இவளே குடித்து தனது காலை உணவையும் முடித்துக் கொண்டாள்.  

  நேரம் கடந்திருக்க இரண்டு மணி நேரமும் தாண்டியது. கடிகாரத்தை கவனித்தாள்.

  ‘நேரமாச்சு மருந்து கொடுக்கணுமே..’

   உடனே அவள் படுக்கையறைக்கு செல்ல வீர் நன்கு உறக்கத்தில் இருந்தான் ஆனால் காய்ச்சல் குறைந்த பாடில்லை. 

  ‘என்ன காய்ச்சல் இன்னமும் குறையலை,  இரண்டாவது மருந்தையும் கொடுக்கணும் அப்போதான் சரியாகும்..’ 

   தனக்குள்ளே பேசிக்கொண்டவள் அவனை எழுப்பினாள்.

  “சார் எழுந்திருங்க நேரம் ஆச்சு மருந்து சாப்பிடணும்..”

  அவளின் அழைப்பிற்கு அசைவில்லாது உறங்கினான். இது வேலைக்காவது என அவனை கை தாங்கலாய் பிடித்து சாய்ந்து அமர வைத்தாள் . அப்போதும் கண் திறக்காமல் மிதமான குரலில் பேசினான். 

  “என்ன வைஷு..”

  “சார் இன்னொரு முறை இந்த மருந்தை குடிக்கணும்..”

  “குடு…”

  அவன் மருந்தை வாங்குவதற்காக கண்ணை திறக்காமலேயே கையை உயர்த்த எங்கெங்கயோ கையை காற்றில் ஆட விட்டான். 

  “நீங்க அமைதியா இருங்க நானே மருந்தை ஊட்டி விடுவறேன்..”

  மூடியில் ஊற்றிய மருந்தை அவனுக்கு கொடுத்தாள்.   அந்த சிறிய இடைவெளியில் கூட அவனால் குளிரை தாங்க முடியவில்லை. 

   “”வைஷு அந்த ஏசியை ஆஃப் பண்ணு..

   “சார் ஏசி போடவே இல்லை.. 

உங்களுக்கு குளிர் அதிகமா இருக்கு முதல்ல பெட்சீட்டை போர்த்திக்கோங்க..”

  அவனின் காலருகே இருந்த போர்வையை இவள் குனிந்து எடுக்க ,அதற்குள் போர்வையைத் தேடிக் கையை நீட்டியவனுக்கு அவளின் முந்தானை சிக்கியது. 

  இருந்த குளிருக்கு ஒரே இழுப்பாய் தன் நெஞ்சோடு போர்த்திக் கொண்டான். 

   அவன் இழுத்த வேகத்தில் அவளின் ஆடை  நழுவ,  எதிர்ப்பாராத செயலில் திடிகிட்டவள் வீர்-ஐ திரும்பிப் பார்த்தாள்.

  அவன் கண் திறக்கவில்லை . என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தான் ஆடையை பிடித்து இழுத்து உள்ளார் என புரிந்து கொண்டாள்.

  சத்தமிட்டால் கண்களைத் திறந்து விடுவாரோ என்ற அச்சத்தில் தன் உடலோடு கையை வைத்து மறைத்துக் கொண்டவள் புடவையை மெல்ல இழுத்தாள். 

  லேசாக இழுக்க, அவனும் அதே நகர்வோடு அவனருகே இழுத்தான். 

  ‘ இது வேலைக்கு ஆகாது வைஷு  சட்டுனு புடவையை இழுத்துக்கிட்டு உடனே போர்வையை அவருக்கு போர்த்தி விட்டுடு… ’

  இவள் முடிவோடு புடவையை சட்டென இழுக்க அவனும் அதே வேகத்தோடு அவன் பக்கமா இழுத்தான். புடவையோடு சேர்ந்து இவளும் அவன் மீது சரிய, இருவரின் இடைவெளியும் குறைந்தது. 

                                    😉

   

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page