Epi – 17 – குளிரும் நெருப்பும்

இதுவரை..

  வீட்டில் அதீத காய்ச்சலினால் மயக்கத்தில் இருந்த வீரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டாள் வைஷு. அதிக காய்ச்சலால் வீர் உடல் குளிர்ச்சியை உணர அருகில் இருந்த வைஷ்ணவியை அறியாது சீண்டி விட்டான். 

இனி.…

  வீர் உரங்கிய இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் மருந்தை பருக வைத்தாள் வைஷு. மருந்தை அருந்தும் இடைவெளி நேரம் கூட குளிர் தாங்க முடியாமல் மீண்டும் போர்வையை தேடியவன் , கைப்பிடிக்குள் மாட்டிய அவளின் முந்தானையை தன்னோடு இழுத்துக் கொண்டான். 

  அவனின் செயலில் திடுக்கிட்டு நோக்கியவள் , கண் திறவாது குளிரில் நடுங்கிய வீர்-ஐ கண்டாள். 

  அறியாது செய்த செயலுக்கு கோபம் கொள்ளக் கூடாது என மெல்ல ஆடையை அவள் புறமாக இழுத்தாள். 

  வீர்-ம் அதே வேகத்தில் முந்தானையை அவன் புறமாக இழுத்து தன்னை முழுதாய் கழுத்து வரை மூடிக்கொண்டான். 

  ‘இது வேலைக்கு ஆகாது வைஷு, ஒரே அடியாய் புடவையை உன் பக்கம் இழுத்து உடனே அவருக்கு போர்வையை போர்த்தி விடு… ’

  மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டவள் ஒரே வேகத்தில் புடவையை இழுக்க, அதே சக்தியில் அவனும் பிடித்து வைக்க அவன் மீதே சரிந்து விழுந்தாள். 

  தாங்காத குளிரில் நடுங்கி கொண்டிருந்தவனுக்கு சூடான உடல் கிடைத்ததும் அணைத்துக் கொள்ள கைகள் உந்தியது. 

 “சார் தெரியாம விழுந்துட்டேன்..”

  விஷயத்தை உரைத்தவாறு அவள் நிமிர்ந்து பார்க்க, வீர் கண்களை மூடிய நிலையில் அவளை இறுக்கி அணைத்திருந்தான். 

  அவளின் மென்மையான தேகத்தில் இருந்து வரும் சூடு அவனுக்கு இதமாய் இருந்தது. மீண்டும் மீண்டும் வேண்டும்  என உள்ளம் கேட்க அந்த சூட்டை இறுக்கி அணைத்துக் கொண்டான். 

  அவனின் இறுக்கமான பிடியில் விழி விரிந்த ஆச்சரியத்தோடு அவளின் மூச்சு அப்படியே நின்றது. இதுவரை இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண் தோழியை கூட அணைத்ததில்லை அவள்.

  தவிப்பில் அவளின் மூச்சு ஏறி இறங்க எச்சில் விழுங்கியவாரே வீர்-ன் கன்னத்தில் தட்டி எழுப்பினாள்.

 “ சார் கண்ணை திறங்க, நான் வைஷு நீங்க என்னை தான் பிடிச்சிருக்கீங்க விடுங்க சார்..”

  அவள் பேசும் குரல், வழி அடைத்த அவன் காதுகளுக்கு கேட்டது போல் தெரியவில்லை.  மென்மையான தேகமும் இதமான சூடும் அவனுக்குள் இருந்த உணர்வுகளையும் தட்டி எழுப்பியது. 

  “விடுங்க என்னை…”

தன் கரம் கொண்டு அவனின் நெஞ்சில் ஊன்றி விலக்கினாள்.

  ஆனால் பிரயோஜனம் இல்லை அவனின் ஆற்றல் அதிகரிக்க, முகத்தை அவளருகே கொண்டு வந்தான். 

  காதலோடு கூடும் கூடலாக இருந்தால் முதலில் உதடுகளை ஆட்க்கொண்டிருப்பான். ஆனால் சுயநினைவில் இல்லா கூடலாய் போக சூடான அவளின் கழுத்தில்  முகம் வைத்தான். 

   இந்த நிமிடம் தான் செய்வது தவறு என உணரும் நிலையில் அவன் இல்லை.  கைப்பிடியில் மாட்டியிருப்பது வைஷ்ணவி என்றும் அவன் அறியவில்லை.  ஏதோ இதமான ஒன்று தனக்கு கிடைத்துள்ளது, அதை பயன்படுத்திக் கொள்ளும் பிரம்மை போதையில் மிதந்து கொண்டிருந்தான். 

  அவளின் சக்திக்கு வீர்-ஐ விலக்கி வைப்பது இயலாத காரியமாக போனது.  மேலும் அவனின் டிரிம் செய்த தாடிகளும் உதடுகளும் கழுத்திலும் , அதற்கு கீழும் உராச, இதுவரை தீண்டாத அங்கங்களை இவன் உராசியதில் அவளும் மோகம் ஏறினாள். 

  தன் கைவிரல்களை உள்ளங்கைக்குள் அடக்கி எழுந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அவனை விலக்கிக் கொண்டிருந்தாள்.

  கழுத்து ,முதுகு , கை ,இடை என அவளின் கால் வரை வீர்-ன் கை வேலை செய்ய, உச்சம் ஏறியவள் உள்ளங்கைக்குள் அடங்கியிருந்த தன் விரல்களை விடுவித்தாள். அவை தானாய் வீர்-ன் முதுகை வளைத்துக் கொண்டது. 

  இருவரும் குளிரும் நெருப்புமாய் இதமான ஓட்டத்தில் பங்கு கொண்டனர். 

  அவனின் ஒவ்வொரு தீண்டலுக்கும் திக்கென அவளின் மூச்சுக்காற்று வெளியே வர , அவனின் முதுகை கீறி விட்டாள் . அணிந்திருந்த ஆடையையும் தாண்டி அவனின் முதுகு காயம் கொண்டது. 

   கண் திறவாத அவனின் குளிருக்கு தடையில்லாத நெருப்பாய் அவள் மாறினாள். 

  அவ்வேளையில் வீர்-ன் வீட்டுக்குள் அத்தை நீலாவதி மதிய உணவு சாப்பாட்டை சுமந்தவாரே நுழைந்தார். 

  “என்ன இவன் கதவை திறந்து வச்சுட்டு என்ன பண்றான். காலம் கெட்டு கிடக்கு யார் வேணா உள்ள வருவாங்க..”

  பேசியவாரே வீட்டிற்குள் வந்தவர் கதவை சாத்திவிட்டு கையில் கொண்டு வந்த மதிய உணவு கேரியரை தூக்கினார். 

  “வீர் எங்க இருக்க ,அத்தை உனக்காக மதிய சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்”

  வீர்-ன் படுக்கை அறைக்கதவு திறந்திருக்க, வீர்-ன் பெயரை கூறி வயதில் மூத்த பெண்மணி ஒருவர் அழைத்துப் பேசியது வைஷ்ணவியின் காதுகளுக்கு கேட்டது. 

  உடனே திடுக்கிட்டு கண் திறந்தவள், சட்டென வீர்-ஐ விலக்கி விட்டாள்.

  தான் அணைத்திருந்த நெருப்பு மெத்தை விடுபடாது என நினைத்தவன்,  இறுக்கமான பிடியை எப்போதோ தளர்த்தி இருந்தான்.  

அதனால் இம்முறை வீர்-ன் பிடியை இலகுவாய் விடுவித்து எழுந்து நின்றாள். 

  நடந்த விஷயத்தை உணர்ந்தவள் கண் கலங்க துவங்கினாள். உடனே தன் புடவையை சரி செய்து அணிய, அவ்வேளை சரியாக அறைக்கதவை திறந்தார் நீலவதி. 

  படுக்கையில் வீர் நெழிந்த வண்ணம் இருக்க,  அருகில் அறையும் குறையுமாக தன் புடவையை சரி செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணையும் கண்டார். 

  “யாருடி நீ, என் மருமகன் பக்கத்துல என்ன பண்ற..?”

  தன் மகளுக்காக பல வருடங்களாக அன்பாய் பாதுகாத்த வந்த தன் மருமகனை எவளோ தொட்டுவிட்டாள் என உணர்ந்ததும் கோபம் தலைக்கு ஏறியது. 

  வந்திருக்கும் நீலாவதி வீர்-ன் அத்தை என வைஷ்ணவி நன்கு அறிவாள்.

  புடவையை சரி செய்து கொண்டே அவருக்கு என்ன பதிலை உரைக்க என தடுமாறினாள். 

  ஆனால் இவளின் பதிலுக்கு அவர் காத்திருக்கவில்லை . அறைக்குள் நுழைந்தவர் அவளை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். 

 “ ஆ….”

வைஷ்ணவி வலியில் தன் கன்னத்தை பிடித்துக் கொண்டாள். 

  “உன்னைத்தான் கேட்கிறேன் யார் நீ,  என் மருமகனோட பெட்ரூம் குள்ள உனக்கு என்ன வேலை.. ”

  விசாரித்த நீலாவதி அவளின்  பின்னந்தலையை தன் கையோடு பிடித்தார். 

 “ நான் அவர் கூட ஆபீஸ்ல வேலை செய்றேன் பர்சனல் அசிஸ்டன்ட்..”

  கண் கலங்கி, குரல் நடுங்கிய வைஷ்ணவியின் வார்த்தை வெளியே வர நீலாவதி மேற்கொண்டு பேசினார். 

  “ஆபீஸில் வேலை செய்றவளுக்கு பெட் ரூம் குள்ள வர என்ன அவசியம்..? என் மருமகனை வளைச்சு போட்டியா உன் உடம்பை காட்டி அவனை உன் பக்கம் இழுத்திட்டியா வெக்கமா இல்லை.. ”

  வீர்-ன் காதுகளுக்குள் வைஷ்ணவியின் குரல் ஒலித்த சமயம் இதமாக தான் உணர்ந்தான். ஆனால் நீலாவதி வைஷ்ணவி இருவரின் குரலும் ஒரே சமயம் ஒலிப்பதை ஆபத்து என தெளிவாக புரிந்து கொண்டான்.  போதை கலைந்து கண்களை கசக்கி விழி விரித்து பார்த்தவன், வியந்து போனான்.  தன் அத்தை, வைஷ்ணவியின் பின்னந்தலையை பிடித்து திட்டிக் கொண்டிருந்தார். 

  தடுமாறிய பாவனையோடு படுக்கையில் இருந்து எழுந்தவன் அத்தையிடம் பேசினான். 

  “அத்தை என்ன பண்றீங்க அந்த பொண்ணை விடுங்க..”

  வீர் நீ இப்படி ஒரு துரோகம் பண்ணுவேன்னு நான் கனவில் கூட நினைக்கலை,  உனக்காகவே என் பொண்ணு காத்துட்டு இருக்காள் அப்படி இருக்கும் போது இவளை உன் படுக்கையறைக்குள் அனுமதிச்சு..”

  “நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலை அவளை விடுங்க…”  என்றான். 

  “என்ன எதுவும் நடக்கலையா, அந்த கருமத்தை தான் என் கண்ணால பார்த்தேனே எதுக்காக இவளுடைய ஆடை இப்படி கலைந்து கிடக்கணும்..”

   நீலாவதியின் கேள்விக்கு பிறகு தான் வீர் தன்னுடைய கண்களை சரி செய்து வைஷ்ணவியின் தோற்றத்தை கவனித்தான். மண்டையில் அப்போது தான் உரைத்தது.

  ‘ தான் அணைத்த்திருந்தது, காம உணர்வுகளை பொழிந்தது எல்லாம் வைஷ்ணவியிடமா.. !!’

  “வாடி வெளியே இனி இந்த வீட்டு பக்கமே நீ எட்டிப் பார்க்க கூடாது..”

  வீர் கை வைத்ததால் அவளின் புடவை முக்கால் வாசிக்கு மேல் உடலில் இருந்து நழுவி இருந்தது. அரைகுறை தோற்றத்தில் இருந்தவளை அப்படியே அறையை விட்டு வெளியே இழுத்து வந்தார். 

  “அத்தை என்ன பண்றீங்க, அந்த பொண்ணு புடுவையை முழுசா கட்டிக்கட்டும்…”

  “மானங்கெட்டவளுக்கு என்ன சொரணை வேண்டி இருக்கு, வீட்டை விட்டு வெளியே அனுப்புறேன் வெளிய நின்னு கட்டிக்கட்டும்..” என்றார் நீலாவதி. 

 ” ப்ளீஸ், அப்படியெல்லாம் பண்ணிடாதீங்கம்மா, தெரியாம தப்பு நடந்துருச்சு, என்னை மன்னிச்சிடுங்க என் புடவையை மட்டும் கட்டிக்க நேரம் கொடுங்க… ” என கெஞ்சினாள் வைஷூ.

  “அம்மாவா, உன்னை மாதிரி கேடுகெட்டவள் எல்லாம் என்னை அம்மானு கூப்பிடுற அளவுக்கு நான் தரம் குறைந்து போகலை.

    என்னடி தெரியாம தப்பு நடக்கிறது,  தெரிஞ்சே தான் வீட்டுக்குள்ள வந்திருக்க நீ..”

  “இல்ல அத்தை அந்த பொண்ணு சொல்றது உண்மை தான். எனக்கு காய்ச்சல் அதிகமா இருக்கு குளிர் தாங்காமல் நான் தான் அவள் கிட்ட தப்பா நடந்துகிட்டேன் தப்பு என் மேல தான்.. ” என்றான் வீர்.

  “உன்னை பார்த்தாலே உடம்பு சரியில்லைன்னு தெரியுது. ஆனால் இவள் தெளிவாகத்தானே இருந்திருக்காள் பிறகும் ஏன் நீ அணைக்கும் போது விலக்கி விடலை எல்லாம் திட்டத்தோடு தான் உள்ளே வந்திருக்காள், நீ அமைதியா இரு உனக்கு ஒன்னும் தெரியாது போடி வெளியே..”

  வைஷ்ணவியை தர தரவென கதவருகே இழுத்துச் சென்றவர் கதவின் தாழ்ப்பாளில் கை வைத்தார். 

  “அத்தை ப்ளீஸ், தயவு செஞ்சு இப்படி எல்லாம் நடந்துக்காதீங்க, நீங்களும் ஒரு பெண் பிள்ளையை பெத்திருக்கீங்க இவளை இப்படியே வெளிய அனுப்ப உங்களுக்கு எப்படி மனசு வருது..”

  தன்னை எதிர்த்துப் பேசிய வீர்-ஐ வியந்து பார்த்தார் நீலாவதி. 

  “முதல்ல அவளுடைய பின்னந்தலையில் இருந்து கை எடுங்க…”

  எடுக்காவிட்டால் அவனே கையை உதறி விடுவான் போல அதுபோல சத்தமிட்டான். 

  “வீர் இவளுக்காக என்கிட்ட சத்தம் போடுறியா நீ..”

  “நான் இப்போ எவ்வளவு விளக்கினாலும் உங்களுக்கு எதுவும் புரியாது. இங்கிருந்து கிளம்புங்க நாம அப்புறம் பார்க்கலாம்…”

  “என்னை வெளியே அனுப்பிவிட்டு இவள் இந்த வீட்டில் இருக்கணுமா, இத்தனை வருஷமா என் மருமகன்னு பாசமாய் உன்னை பார்த்துக்கிட்டதுக்கு  நல்ல மரியாதை கொடுக்கற… 

   நீ எங்க மேல அன்பு வச்சிருக்கேன்னு நம்பினோம் என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்குவேன்னு கனவு கண்டிட்டு இருந்தேன்…”

  “அச்சோ அத்தை, உங்களுக்கு எத்தனை முறை சொல்றது ரம்யாவை அந்த கண்ணோட்டத்தில் நான் பார்க்கலை..”

  “புரியுது சாமி, உன் கண்ணெல்லாம் இவள் மேல தான். இப்படிப்பட்ட பழக்கம் இருக்குன்னு சொல்லியிருந்தா, ரம்யா இல்லைனாலும், உனக்கு வேற நல்ல பொண்ணா பார்த்து நானே கல்யாணம் செஞ்சு வச்சிருப்பேனே, எதுக்கு கண்டவளையும் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வந்து…  ச்சீய்…”

  “அசிங்கமா பேசாதீங்க அத்தை, இவள் ஒன்னும் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது.  நான் இவளை நேசிக்கிறேன் இவளை தான் கல்யாணம் செஞ்சுக்க போறேன்..”

  வீர் பட்டென விஷயத்தை உரைத்தான். ஆனால் வைஷ்ணவிக்கு அது பெரியதாக தெரியவில்லை.  தன் அத்தையின் முன் மானத்தை காப்பாற்றுவதற்காக அவ்வாறு உரைக்கிறார் என நினைத்தாள். 

  “கட்டிக்கோப்பா தாராளமா கட்டிக்கோ, எங்களை விட இவள் தான் முக்கியம்.  இதுக்கு மேல நீ சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் வரேன்..” 

  கையெடுத்து கும்பிட்டு கண்ணீரோடு அங்கிருந்து வெளியேறினார் நீலாவதி. 

  நழுவிய தன் புடவையை கையோடு பிடித்தவாறு மண்டியிட்டு தலையில் அடித்து அழுதாள் வைஷ்ணவி. 

                                     😉

  

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page