இதுவரை…
வீர் வைஷ்ணவியிடம் தன்னை பிடிக்குமா என கேட்டு தன் காதலை உரைத்து வினா எழுப்ப, அவளோ அவன் மனதில் நிலைக்கும் வண்ணம் தூண்டி விட்டவாரே பதிலை உரைத்து வெளியேறினாள். சித்துவை சந்தித்த வைஷ்ணவி நம் திட்டம் நிறைவேறியது என அவனிடம் சந்தோசமாய் கூறி தன்னுடைய பாதி பேமெண்ட்டை கேட்டாள்.
இனி…
சித்துவை சந்தித்து விட்டு, அவனின் கம்பெனியில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவி அதே காரில் அவள் தங்கியிருக்கும் விடுதி வாசலில் சென்று இறங்கினாள்.
விடுதியை தலை நிமிர்ந்து பார்த்து உள்ளே நுழைய, கட்டிடத்தின் உள் செல்லாமல் அதன் பக்கவாட்டுத் தடத்திலிருந்து நடந்து பின்பக்கத்தை அடைந்தாள்.
அந்த விடுதியின் பின்புறம் இரண்டு பெட் ரூம் வசதி கொண்ட ஒரு குடியிருப்பு கட்டிடம் இருக்க, அதன் வாயிலில் நின்று இரு பெண்கள் வைஷ்ணவியின் தந்தையை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.
“இதையே தான் பல மாசமா சொல்றீங்க சாதாரணமான தண்ணீர் வசதி கூட இல்லாத இந்த ஹாஸ்டலுக்கு மாசம் 5000 வாடகை கேக்குறீங்க, இதெல்லாம் சரி வராது இன்னைக்கே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்க போறோம். என பெண்ணொருவள் கூற, அருகில் நின்றிருந்த மற்றொரு பெண்ணும் அதை ஆமோதித்தாள்.
“ஆமா இவங்க கிட்டலாம் பேசிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. கதை கதையா சொல்லி நம்மளை ஏமாத்துவாங்க நாம இப்பவே போலீஸ் ஸ்டேஷன் போகலாம்…” என்றாள் இன்னொருவள்
அந்தப் பெண்கள் இருவரையும் சமாளித்தவாறு திக்கி திணறிக் கொண்டிருந்தார் வைஷ்ணவியின் தந்தை ஐயாசாமி. அப்போது வைஷ்ணவியே அங்கு வந்தாள்.
“என்ன பிரச்சனை இங்க ..”
“இந்த ஹாஸ்டல்ல பிரச்சனை இல்லைனா தான் பெரிய விஷயம். உங்க நிர்வாகமே சரி இல்லை. சொல்லி சலுத்து போச்சு, இன்னைக்கு ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் கொடுக்க போறோம்.
வாடி போலாம்..”
தன்னுடன் வந்த தோழியை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் நடைபோட வைஷ்ணவி சொடக்கிட்டாள்.
“போலீஸ் ஸ்டேஷன் தானே தாராளமா போ … நான் உன்னுடைய அப்பா அம்மாவுக்கு கால் பண்ணுவேன்
நேத்து நைட் 10 மணிக்கு தானே நீ ஹாஸ்டலுக்கு வந்த, உன்னை ட்ராப் பண்ணது உன்னுடைய லவ்வர் தானே..
சிசிடிவி கேமராவில் எல்லாமே ரெக்கார்ட் ஆகி இருக்கு. அந்த ஆதாரத்தை உன்னை பெத்தவங்களுக்கு போட்டு காட்டுறேன். உன் அப்பா கூட போலீசில் கான்ஸ்டபிள் தானே , ரொம்ப கண்டிப்பானவர்னு கேள்விப்பட்டேன் உன் விசயம் தெரிஞ்சா என்ன பண்ணுவாரோ..”
வைஷ்ணவி சரியான விஷயத்தை கொண்டு அவர்களை கையாண்டாள். தன் மகளா கொக்கா என்ற பார்வையில் நெஞ்சை நிமிர்த்தி நின்றார் வைஷ்ணவியின் தந்தை ஐயாசாமி.
“மேடம் தயவு செஞ்சு என் அப்பா கிட்ட மட்டும் இந்த விஷயத்தை சொல்லிடாதீங்க அப்புறம் என் காதலே அவ்வளவு தான்..”
“இப்ப மட்டும் மரியாதை எங்கே இருந்து வருதுடி , ஞாபகம் வச்சுக்கோ இந்த ஹாஸ்டல்ல நீ தங்கி தான் ஆகணும். அப்படியே நீ இங்கிருந்து வெளியே போறதா இருந்தாலும் உன்னுடைய அட்வான்ஸ் பணம் கேட்கக்கூடாது. எங்கேயாவது வெளியே போய் ஒரு மூச்சு விட்ட உன் கதையை ஊரு முழுக்க போஸ்டர் அடிச்சு ஓட்டுவேன். போ இங்க இருந்து..”
வீராப்பாய் வசனம் பேசிய பெண்கள் இருவரும் வைஷ்ணவியின் வாய் பேச்சில் அமைதியோடு தலைகுனிந்து சென்றனர்.
“என்னடி இவள் இப்படி ராங்கியா இருக்காள். இந்த இடத்தை விட்டு போகவும் முடியலை. இவளை சமாளிக்கவும் முடியலை. இவளைலாம் எவனாவது கல்யாணம் செஞ்சுக்கிட்டான் அவ்வளவு தான்.. நம்மளோட தலை எழுத்து இங்க தான் தாங்கி ஆகணும் போல..”
சலித்துக் கொண்டே அந்தப் பெண்கள் இருவரும் விடுதிக்குள் நுழைந்தனர்.
“வாம்மா வைஷ்ணவி, நீ மட்டும் வரலைனா இந்த இரண்டு பொண்ணுங்களும் போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பாங்க, அப்புறம் அப்பா தான் ஜெயிலுக்கு போயிருக்கணும்..”
“ யோவ் ஐயாசாமி என்கிட்ட நல்லா வாய் பேசுறல்ல அவங்களை சமாளிக்க முடியாது உன்னால..”
தன் தந்தையை திட்டிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவள் சோஃபாவில் அமர்ந்தாள்.
“என்னம்மா பண்றது அப்பா விவரம் தெரியாம வளர்ந்துட்டேன். உன் அளவுக்கு எனக்கு புத்தி கிடையாது..”
“உன் நாடகத்தை என்கிட்ட காட்டாத இப்படியே பேசி பேசி தான் என் அம்மாவை மயக்கி கல்யாணம் செஞ்சுக்கிட்ட, நீ நல்லவனா இருந்திருந்தா நான் ஏன் இப்படி ஊரை ஏமாத்திட்டு சுத்த போறேன்..”
தன்னைப் பற்றி தன் மகள் புட்டு புட்டு வைக்கிறாளே… என தப்பிக்க நினைத்தான் ஐயாசாமி.
“சரிம்மா அதெல்லாம் இருக்கட்டும் நேத்து ராத்திரி நீ வீட்டுக்கு வரவே இல்லையே எங்க போயிருந்த ..”
“ஆமா பொண்ணு மேல அப்படியே ரொம்ப பாசம், ஏன் நேத்தே ஒரு போன் போட்டு கேட்டிருக்கலாமே..”
“அது கொஞ்சம்..”
விஷயத்தை கூறுவதற்கு முன் அதை சொல்லால் நிறுத்தி இழுத்துக் கொண்டே தலையை சொரிந்தான் ஐயாசாமி.
“போதையில் மட்டையாகி இருப்ப , அதானே..”
“விடுமா அதையே சும்மா சொல்லி காட்டாத அப்பாவை பத்தி உனக்கு தெரிஞ்சது தானே, நீ எங்க இருந்தேன்னு சொல்லு..”
“அதான் புது வேலை ஒன்னு வந்திருக்குன்னு சொன்னேனே, அந்த விஷயமா ஹாஸ்பிட்டல் வரை போயிருந்தேன். லேட் ஆனதுனால அங்கேயே தங்கிட்டேன்..”
“ காலையிலிருந்து உன்னை பார்க்காமல் நான் தவிச்சு போயிட்டேன். இனிமேல் வீட்டுக்கு வர நேரமில்லைனா எனக்கு ஒரு போன் செஞ்சு சொல்லுமா..”
நாடகம் ஆடும் தன் தந்தையை முறைத்துப் பார்த்தாள். எதுவும் பேசாது அமைதியாக அறைக்கு நடக்க.…
“என்னம்மா அப்பா சொல்லிக்கிட்டே இருக்கேன் கண்டுக்காம போற..”
“உன்னை என்னனு கண்டுக்குறது, மூணு நாளைக்கு முன்னாடி தானே 2000 ரூபாய் கொடுத்தேன். இப்ப மறுபடியும் பணம் கேட்டு குலையுற….”
“2000 ரூபாய் எதுக்குமா ஆகும். அப்பாவோட மருந்து செலவெல்லாம் விலையேறி போச்சு..”
“ஆமா நீ குடிக்கிற மருந்து என்னன்னு எனக்கு தெரியாது பாரு, இப்படியே குடிச்சு உடம்பை கெடுத்துக்கோ…”
வைஷ்ணவி கண்டபடி திட்ட அதில் கண்கலங்கினான் ஐயாசாமி. ஆனால் அதில் ஒரு அன்பு தெரிந்தது .
“யோவ் எதுக்கு இந்த பீலிங் …”
“என்ன தான் அப்பாவை நீ மரியாதை இல்லாமல் பேசினாலும், நான் குடிச்சு உடம்பை கெடுத்துக்க கூடாதுனு நீ நினைக்கிற பாத்தியா..”
“நான் ஏன் நீ குடிச்சு உடம்பை கெடுத்துக்க கூடாதுனு நினைக்க போறேன். தாராளமா குடி பணம் தானே இந்தா 500 ரூபாய்..”
தன்மகள் கொடுத்த பணத்தை ஆனந்த தொடுக்கையில் வாங்கினார்.
“ நல்லா குடிச்சு உடம்பை கெடுத்துக்கோ ஆனா எனக்கு ஹாஸ்பிட்டல் செலவு மட்டும் வச்சிராத, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா, உன் பிணத்தை தூக்கி போட்டுட்டு இந்த ஹாஸ்டலை வித்துட்டு நான் வேற எங்கேயாவது போய் செட்டில் ஆகிடுவேன்..”
அவள் கூறிய பதில் கேட்டு புன்னகைத்துக் கொண்டிருந்த ஐயாசாமி அசிங்கமாய் முகத்தை வைத்துக் கொண்டான்.
“ராத்திரி எல்லாம் நான் சரியா தூங்கலை ரெஸ்ட் எடுக்க போறேன் தொந்தரவு பண்ணாம அமைதியா கிளம்பு..”
“சரிம்மா அப்பாவும் வெளியே மருந்து கடை வரை போயிட்டு வரேன் நீ ரெஸ்ட் எடு..”
தந்தை வெளியே செல்ல, அறைக்குள் நுழைந்த மகள் உடையை கழட்டினாள்..
புடவையின் பின்னை 🧷 கழட்டி அருகில் இருந்த டேபிளில் வைக்க, முந்தானை விலகியதும் அவளின் கண்களுக்கு ஒரு தடிப்பு தெரிந்தது.
தன் மேனியில் இருந்த சிவந்த தடிப்பை கண்ணாடி முன்னே நின்று கண்டாள். அது வீர்-ன் பற்களால் பதிந்தது. அவளின் நெஞ்சுக்குழியில் முகம் புதைத்த சமயம் உருவான சிறு காயம் அது.
அந்நொடி அவள் அனுபவித்த அவனின் தொடுதலும், மூச்சுக்காற்றின் சத்தமும் ஏறிய உணர்ச்சியையும் ஒரு முறை நினைத்துப் பார்த்தாள்.
.. நல் வேலையாக எதுவும் நடக்கவில்லை என தலையை அசைத்து நிம்மதி காற்றை ஊதினாள்.
“இந்த வீர் கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும் போல, வேலையை முடிச்சிட்டு கிளம்பலாம்னு பார்த்தால் புள்ளையை கொடுத்திடுவான் போல..
ஒன்னும் இல்ல வைஷு எத்தனையோ பேரை பார்த்திருக்க இவன் யாரு பொடியன், வேலையை முடிச்சிட்டு பேமெண்ட்டை வாங்கிட்டு கிளம்பிட்டே இருக்கணும்..”
கண்ணாடி முன்னே நின்றவள் தனக்குத்தானே தைரியம் கூறிக்கொண்டு குளியலறைக்கு டவலோடு கிளம்பினாள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அவளின் குளியல் அறைக்கதவு திறக்கப்பட, உடலில் டவலை மட்டும் நெஞ்சுவரை ஏற்றி கட்டிக் கொண்டு தன் ஈர கூந்தலை அசைத்தவாறு வந்தாள்.
ஹேர் டிரையர் மூலம் தனது கூந்தலின் பாதி ஈரத்தை குறைத்தவள் கட்டிய டவலோடு அப்படியே படுக்கையில் உறங்கினாள். இது அவளின் அன்றாட பழக்கம், குளியலுக்குப் பிறகு எதைப் பற்றியும் கவலை கொள்ளாது அப்படியே நித்திரையில் ஆள்வது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவளை சில மணி நேரங்களுக்குப் பிறகு ஒலித்த அவளின் அலைபேசி தட்டி எழுப்பியது.
அழைத்திருந்தது வைஷ்ணவியின் நெருங்கிய தோழி சந்திரிகா..
திரையில் எண்ணை பார்க்காமலேயே அவள் அட்டண்ட் செய்து தூக்கத்தோடே “ஹலோ” என்றாள்.
“ஹேய் வைஷு, மணி ஏழு ஆச்சு உனக்காக காத்துட்டு இருக்கேன் நீ எப்போ வருவ..”
திடுக்கிட்டு கண்விழித்தவள் கடிகாரத்தில் நேரத்தை கவனித்தாள்.
“ இதோ ரெடியாகிட்டு இருக்கேன் கால் மணி நேரத்தில் வந்துருவேன்…”
தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தவள் உடலில் இருந்த அந்த ஒற்றைத் டவலையும் கழட்டி எறிந்து விட்டு பார்ட்டிக்கு செல்வதற்காக ஆடைகளை தேடி அணிந்தாள். அவளின் நீண்ட கூந்தலை அலங்காரம் செய்து கொள்ள அது காற்றில் பறந்து விளையாடியது.
மொத்த தோற்றமும் மாறி ஒப்பனை கொண்ட வைஷ்ணவியாய் தென்பட்டாள்.
அவளின் அறை கதவு திறக்கப்பட அவள் வெளியே வந்த சமயம் சோஃபாவில் குடிபோதையில் உறங்கிக் கொண்டிருந்தான் ஐயாசாமி.
சத்தம் கேட்டு கண்விழித்தவனுக்கு தன் மகளின் முட்டிக்கால் தான் தென்பட்டது. அதற்கு மேல் தான் அவளின் ஆடை தொடர்ந்தது.
“ என்னம்மா பார்ட்டிக்கு கிளம்பிட்டியா பார்த்து போயிட்டு வா ரவுடி பசங்க நிறைய பேரு இருக்காங்க..”
“நல்ல அப்பனா இருந்திருந்தா எனக்கு புத்திமதி சொல்லி வீட்டில் உட்கார வைக்கனும் பார்த்து போயிட்டு வான்னு சொல்ற, விட்டா எவனாவது நல்ல வருமானம் கொடுத்தால் என்னை வித்துருவ..
நான் வர டைம் ஆகும் கதவை தாழ்ப்பாள் போட்டுடாத சும்மா மேலோட்டமா சாத்தி வை..”
தந்தையை திட்டி விட்டு அவள் வெளியேற, ஐயாசாமி புலம்ப ஆரம்பித்தான்.
“நான் புத்திமதி சொன்னா மட்டும் நீ என் பேச்சைக் கேட்டுடுவியா என்ன..? எல்லாத்துக்கும் ஒரு காலம் வரும்…”
போதையில் உளறிக்கொண்டே உறங்கி விட்டான்.
முழு மேக்கப்போடு ஸ்டைலான உடையில் வெளியேறிய வைஷ்ணவியை ஹாஸ்டலில் இருந்த பெண்கள் கண் இமைக்காது பார்த்தனர்.
“இவள் அப்படி என்ன தாண்டி வேலை பார்க்கிறாள். தினமும் டிரெண்டியா டிரஸ் பண்ணிக்கிட்டு வெளியே போறா இவளுக்கு எங்க இருந்து வருமானம் வருது..”
“நமக்கெதுக்குடி, இவளை பற்றி ஏதாவது பேசிணோம்னு தெரிஞ்சா அதுக்கு கூட நம்ம அப்பா அம்மாவுக்கு கால் பண்ணிடுவாள். அதுக்கு அமைதியாவே இருந்துக்கலாம்..”
வைஷ்ணவி வழக்கமாக செல்லும் பப்பினுள் நுழைய, அங்கே இசையின் சத்தம் காதை கிழிக்க இவளை கண்டதும் முன்னால் வந்து அணைத்தான் ஒருவன்.
ஹாய் வைஷு…🫂
You are looking too hot பேபி.. 🔥 🔥
😉
