Epi – 20 – சந்திரிகா ❤️ வைஷூ

இதுவரை…

    வைஷ்ணவி விடுதியில் தங்கி இருப்பதாக வீர்- இடம் பொய்யுரைத்திருக்க அந்த விடுதியின் முதராளியே இவள் தான். தன் வேஷத்தை கலைத்தவள் உண்மையான ரூபத்தில் தோழி சந்திரிகாவை சந்திக்க பப்பிற்கு சென்றாள்.

  இனி…

  வைஷு உள்ளே நுழைந்ததும் அவளின் ஆண் தோழன் ஒருவன் நெருங்கி வந்து கட்டியணைத்தான். 

 ” You are too hot baby.. 🔥

இன்னைக்காவது எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் குடுக்கலாமே..”

  “ஆ… முதல்ல என்னை போட்டு நசுக்காமல் நகர்ந்து நில்லு..” என எரிச்சலோடு அவனை தள்ளி விட்டாள். 

  “இங்க பாரு சர்மா, எனக்கு உன் மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் கிடையாது நீ எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் இந்த மாதிரி வேலைக்குலாம் நான் வரமாட்டேன்..”

   அவள் மறுத்து பேசிக் கொண்டிருந்த சமயம் சர்மாவின் கண்கள் அவளின் கழுத்தில் இருந்து கீழே இறங்கியது. 

  “எவ்வளவு கொட்டி கொடுத்தாலும்  என்கிட்ட மட்டும் வர மாட்டேன்னு சொல்ற,  ஆனா எவனோ ஒருத்தன் கிட்ட போயிருக்க..” 

  “வாட் நான்சென்ஸ், எனக்கென ஒரு கொள்கை இருக்கு உடம்பை விற்கிற அளவுக்கு நான் இறங்கி போகலை..”

  “அப்போ இது என்னது..”

  சர்மாவின் கரம் அவளின் முக்கிய அங்கத்தின் மேல் பகுதியை தொட உடனே கையைத் தட்டி விட்டாள். 

  சர்மா கைகாட்டியது வீர்-ன் பற் தடயங்களை. 

  “நான் என்னமோ செஞ்சுட்டு போறேன் உனக்கு எதுக்கு அதெல்லாம்..?  வந்தோமா பார்ட்டியை என்ஜாய் பண்ணோமானு கிளம்பு..”

  சர்மாவை ஒதுக்கி வைத்தவள் சந்திரிகாவை தேடி கிளம்பினாள்.

  “வைஷு.. வைஷு…. நான் இங்கே இருக்கேன்..”

  சந்திரிகா கைகாட்டி அழைக்க, அதை பார்த்த வைஷு புன்னகையோடு அவளருகே சென்றாள். 

  தன் வாழ்வில் அவளுக்கு இருக்கும் ஒரே துணை இந்த தோழி மட்டும் தான். 

  “என்ன வழக்கம் போல அந்த சர்மா உன்னை கட்டியணைத்து பாசத்தில் பிழிஞ்சு எடுத்துட்டானா..”

  “அந்த பொறுக்கி என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க போறான்.. ” என்றாள் வைஷு. 

  “இங்க பாரு வைஷு, நீ இந்த மாதிரி டிரஸ் பண்ணிக்கிறதுனாலையோ, நைட் டைம்ல பார்ட்டிக்கு வரதுனாலையோ அவன் உன்கிட்ட அப்படி நடந்துக்கலை.  உனக்குன்னு ஒரு துணை இல்லாததால் தான் அப்படி நடந்துக்கிறேன்..” 

      சந்திரி, ஆரம்பிச்சுட்டியா என் வாழ்க்கையில் என்ன நடக்குதுன்னு உனக்கே தெரியும்ல,  குடிகார அப்பனை வச்சுக்கிட்டு மாசமானா செலவுக்கு நான் கஷ்டப்படுறேன். இதில் கல்யாணம் செஞ்சுக்கிட்டு இன்னொரு வீட்டில் போய் கஷ்டப்படணுமா,  எனக்குன்னு என் அப்பன் முழுசா ஒரு பவுன் கூட சேர்த்து வைக்கவில்லை.. இருக்கற ஹாஸ்டலையும் அடமானம் வச்சு கடன் வாங்கியிருக்கான், ஹாஸ்டலில் இருந்து வரும் வருமானம் வட்டி கட்டவே சரியா போகுது.…

   ஒன்னும் இல்லாதவளா வாழுறதுக்கு எனக்கு இஷ்டமில்லை. செட்டில் ஆன பிறகு தான் கல்யாணத்தை பற்றி யோசிக்கணும்..”

  வைஷு உரைத்துக் கொண்டிருந்த சமயம் சந்திரிகாவின் கண்கள் அவளின் மார்பின் மேல் இருந்த காயத்தை கவனித்தது. 

  உடனே வைஷூவின் காதை பிடித்து திருகினாள் சந்திரிகா..

  “வலிக்குதுடி ஏன் என் காதை பிடிச்சு திருகுற..”

  “என்னடி தடிப்பு இது , எவனோ கடிச்சு விட்டிருக்கான் போல,  நீ எப்பயும் இந்த மாதிரி தப்பை செய்ய மாட்டேன்னு நினைச்சேன்..”

  தோழியிடம் இருந்து வம்படியாய் தன் காதை காப்பாற்றிக் கொண்டாள் வைஷு. 

  “இப்பவும் அதே மாதிரியே நம்பு எந்த தப்பும் நடக்கலை. நல்ல வேலையா அந்த பொம்பளை வீட்டுக்குள்ள வந்துட்டாள். இல்லைன்னா கண்டிப்பா நடந்திருக்கும்…”

      வீர்-உடன் இணைய இருந்த சம்பவத்தை நினைத்து ஜிவ்வென்று உணர்ந்தாள் வைஷூ. 

  “ஏய் நீ ஏதோ தப்பு பண்ற , விஷயத்தை முழுசா சொல்லு..” என சந்திரிகா கேட்க

வைஷூவும் அனைத்தையும் கூறி முடித்தாள்.

  “வேணாம் வைஷூ, நீ இத்தனை நாளா செஞ்ச மாதிரி சின்ன விசயம் இல்லை இது ஒரு மனுசனோட உயிர் சம்பந்தப்பட்ட விசயம்..”

  “உயிரா… அந்த அளவுக்குளாலாம் அவன் என்னை காதலிக்கலை..”

  “நோ வைஷூ.. பொய்யோ உண்மையோ காதலோடு விளையாட கூடாது தப்பு… உனக்கு பணம் வேணும்னா என்கிட்ட கேளு…”

  “இன்னும் எத்தனை வருஷத்துக்கு உன்னை நம்பியே நான் இருக்கிறது.  இந்த ஒரு வேலையை மட்டும் சரியா முடிச்சா எனக்கு 20 லட்சம் கிடைக்கும். அப்றம் அந்த பணத்தை வச்சு சின்னதா பிஸ்னஸ் ஸ்டார்ட் செஞ்சு மேல வந்திடுவேன். 

   உனக்கு இருக்குற லைஃப் எனக்கு இல்லை சந்திரிகா, உன்னை பார்த்துக்க அப்பா அம்மா இருக்காங்க, சரியான சமயத்தில் கல்யாணம் செஞ்சு வச்சாங்க, இப்போ புருசன் கூட சந்தோசமா இருக்க….  ” 

  பேசிக் கொண்டிருந்த சமயமே சந்திரிகாவின் எண்ணிற்கு அவளின் கணவன் அழைத்தான். 

  “உன் புருசனுக்கு 100 ஆயுசு… 

என்னைப் பாரு இந்த போனுக்கு நலம் விசாரிக்க கால் பண்ற ஒரே ஆள் நீ தான்.

நான் ராத்திரி முழுக்க போலைனா கூட என் அப்பன் கண்டுக்க மாட்டான். இவ்வளவு ஏன் செத்தே போனாலும்..”

  உடனே சந்திரிகா வைஷூவின் வாயில் கை வைத்து பேச விடாது தடை செய்தாள்.

  “ஏண்டி இப்படிலாம் பேசுற, கொஞ்ச நேரம் அமைதியா இரு…”

  போனை அட்டண்ட் செய்தாள் சந்திரிகா..

   “ஹலோ சந்திரி, நீ எப்போ வீட்டுக்கு வருவ..”

  “ஒரு அரைமணி நேரம் ஆகும்ங்க..பப்பில் இருக்கேன்..”

  “யாரு அந்த வைஷ்ணவி கூட இருக்காளா..”

  “ஆமா… ”

  “மத்த எந்த ஃபிரண்ட்ஸ்ஸா இருந்தாலும் தைரியமா நான் காத்திருப்பேன். நீ இருக்கிறது அவள் கூடனா நான் இப்பவே வந்து உன்னை பிக்கப் செஞ்சிக்கறேன்..”

  “இல்லைங்க நானே வந்திடுவேன்..”

  அவள் பேசிக் கொண்டிருந்த சமயமே அழைப்பை துண்டித்தார் அவளின் கணவன்.  

   “என்ன..? என் கூட சுத்தாதன்னு சொன்னாரா… உன் அப்பா அம்மா ஒரு ஆள் விடாம எல்லார் கிட்டயும் என்னை பற்றி சொல்லிடுவாங்க போல, இல்லைனா புதுசா கல்யாணம் ஆன உன் புருசனுக்கு கூட என்னை பற்றி தெரிஞ்சிருக்குமா..”

  “அப்டிலாம் இல்லை.. நான் சேஃபா வரனும்னு கூட்டிட்டு போக வரார்.  வா கீழ போய் காத்திருக்கலாம். அவருக்கு உன்னை அறிமுக படுத்துறேன். உன்னை கல்யாணத்தில் நிறைய பேருக்கு மத்தியில் சந்திச்சது கண்டிப்பா நியாபகம் இருக்காது…”

  “உண்மை தான் கண்டிப்பா அவருக்கு என்னை நியாபகம் இல்லை. அப்படி இருந்திருந்தா வீர்-க்கு ட்ரீட்மென்ட் பார்க்க வீட்டுக்கு வந்தப்பவே என்னை அடையாளம் கண்டுபிடிச்சிருப்பாரே..”

  வைஷூ கூறியது வியப்பாக இருந்தது.

  “என்னடி சொல்ற… !!”

  “உன் ஹஸ்பண்ட் சரண் தான், வீர் உடைய நெருங்கிய நண்பர்..”

  “போச்சு இப்படியா வந்து மாட்டிக்கனும்…”

   தலையை பிடித்துக் கொண்டாள் சந்திரிகா.

  “நீ ஏன் பயப்படுற, உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு பார்த்தா தானே அவருக்கு நம்ம நட்பை பற்றி தெரிய வரும்…”

   “இருந்தாலும் பயமா இருக்குடி… நீ ஏமாத்துறது அவருடைய ஃப்ரண்டை , இந்த உண்மை தெரிஞ்சா என்கிட்டயும் தானே கோச்சிப்பாரு… ”

  “அப்போ இனிமே நீயும் நானும் சந்திச்சிக்க வேணாம்..”

  “என்ன வைஷூ இவ்வளவு சாதாரணமா சொல்ற..”

  “நான் சீரியஸா தான் சொல்றேன். என்னால் உன் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம்..”

   பேசிக் கொண்டிருந்த வைஷூ, சரண் பப்பினுள் நுழைந்ததை கண்டதும் எழுந்து கூட்டமாக ஆடிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கொண்டாள்.

   திடீரென்று வைஷூ மறைந்ததும், சந்திரிகா எழுந்து தேட அவளின் தோளில் கை வைத்தான் சரண்.

  “சந்திரி… ? நாம போலாமா…?”

   தன் மனைவியின் முக வாட்டத்தை கண்டான்.

  “ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு..?”

  “ஒன்னுமில்லை நாம போலாம் வாங்க..”

  இனி வைஷூவை காண இயலாதா என்ற வலியோடு விடை பெற்றாள் சந்திரிகா.

  சரண் காரை டிரைவ் செய்ய அருகில் சந்திரி அமர்ந்திருந்தாள். அவ்வேளையில் வீர் அழைப்பு விடுத்தான். சரண் அந்த அழைப்பை அட்டண்ட் செய்ய..

  “ஹலோ வீர், நீ சொன்ன வேலையை முடிச்சிட்டேன்டா…”

  “அப்போ ஏண்டா எனக்கு கால் செய்யலை.. ” என வீர் கேட்க 

  “சந்திரிகாவை பிக்கப் செய்ய வெளிய வந்திருக்கேன். வீட்டுக்கு போன பிறகு கால் பண்ணலாம்னு பார்த்தேன்.

டேய் வீர், எதுக்கும் ஒரு முறை யோசிக்கோடா, அந்த பொண்ணு கிட்ட இதை பத்தி பேசினியா..”

  “ நான் நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்திருக்கேன்.  இனி அவள் தான் எனக்கு எல்லாமே , நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல நாங்க இரண்டு பேரும் கையெழுத்து போட்ட உடனே அவளுக்கும் எனக்குமான உறவே இன்னும் பலமாகும்..”

  “அந்தப் பொண்ணு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா….?”

   “எதுக்காக கையெழுத்து போடுறோம்னு அவளுக்கு தெரிஞ்சா தானே ,நான் பார்த்துக்கிறேன் . அவள் மனசுக்குள்ள நான் இருக்கேன்டா, கண்டிப்பா கோவிச்சுக்க மாட்டாள். சரி நாளைக்கு நீயும் உன் வைஃப்ம் சாட்சி கையெழுத்து போட ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்துருங்க..”

  சரண் இடம் போன் பேசிவிட்டு வைத்த வீர் நாளை நடக்கவிருக்கும் முக்கிய நிகழ்வை நினைத்து நிம்மதியில் உறங்கினான். 

  “என்னங்க போனில் பேசினது யாரு..”

    “வீர் தான் கூப்பிட்டான். அவன் ஒரு பொண்ணை காதலிக்கிறான். ஆனால் அந்த பொண்ணு தனக்கு எந்த சொந்தமும் இல்லை. நான் ஒரு பிச்சைக்காரி மாதிரி என்னை விட்டுட்டு வேற ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்கன்னு சொல்லியிருக்காள். இவனால அந்த பொண்ணை விட முடியலை. அந்த பொண்ணு கிட்ட எதுவுமே சொல்லாமலே ரிஜிஸ்டர் ஆபீஸ்ல எல்லா ஏற்படும் செய்ய வச்சிட்டான்..”

  தன் கணவன் கூறிய விஷயம் கேட்டு சந்திரிகா வியந்து போனாள்..!  இடையில் இருக்கும் ஏமாற்று வேலை தெரிந்தால் என்ன நிகழும் என படபடப்பு தெரிந்தது. 

இதற்கெல்லாம் பதில் நாளை தெரியவரும். 

                                    😉

கதையை தொடர்ந்து  படிக்கும் வாசக நட்புகளே அவ்வப்போது கருத்து பக்கத்திற்கு வருகை தாருங்கள். போட்டி முடிந்த பிறகு தான் என் அடையாளம் வெளியே தெரிய வரும். ஆனால் நீங்கள் தாராளமாய் அடையாளத்தோடு கருத்துக்களை பதிவிடலாம். வாசகர்களுக்கான போட்டியும் இந்த வலைதளத்தில் உள்ளது. 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page