அவளை மறக்கத்தான்

பாகம் – 1

அவளை மறக்கத்தான்.

அவன் சென்ற விமானம்  ரன்வேயில் வேகமெடுத்து உயரே பறந்துக் கொண்டியிருந்தது.

பரீட்சையமான லண்டன் ஹீத்ரு விமான நிலையம் பரபரப்புயின்றி சிறு புள்ளியாய்   அவன்  கண்ணுக்கு கீழே தெரிந்தது.

விமானம் உயரே உயரே பறக்க அவன் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.

மேகங்கள் இவன் தனியே  போவதை  விரும்பாமல், அதுவும் கூடவே ஓடி வந்தது.

கூடவே  ஓடிவரும் மேகத்தை ஜன்னல் வழியாக பார்த்தான்.

அந்த மேகத்தினுடையே ஜெனி வருவதும்,மறைவதுமாக இருந்தாள்.

ஜெனி…ஜெனி ….அவனின் வாய் முணுமுணுத்தது.

சிவப்பு கலர் உடையில் பளீரென்று இருந்த ஏர் ஹோஸ்டஸ் , அவனிடம் எதாவது உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டாள்.

அவளை பார்த்து சிறிதாக முறுவலித்து விட்டு, வேண்டாம். நன்றி என்று சொன்னான்.

பிஸினெஸ் கிளாஸ் பயணியர்கென்று ஸ்பெஷலாக தயாரித்த உணவை கொடுத்து விட்டு, தொழில் நிமித்த புன்னகையை சிந்திவிட்டுச் சென்றாள்.

ஏர் ஹோஸ்டஸுக்கு தொந்திரவு கொடுக்காமல் உணவை கொறித்து விட்டு, கண்களை மூடி படுத்துக் கொண்டான்.

ஜெனி… அவன் முன்னாள் மனைவி.

அவளை முதன்முதலில் பார்த்தது, பிஸியான கிண்டி  சாலையில். துப்பட்டா பறக்க பறக்க ஒரு பெண் யாரையும் லட்சியம் செய்யாமல் தன் ஸ்கூட்டியில்   பறந்து கொண்டியிருந்தாள்.

இவனும் அதே சாலையில் பயணித்து கொண்டியிருந்தான்.

இவனை இடிப்பது போல் சென்றவளை பார்த்தான். முகம் முழுவதும் ஸ்கார்ப்பால் இழுத்து மூடி,, தன் வெள்ளை நிற துப்பட்டாவை பறக்க விட்டபடி, போய்க் கொண்டியிருந்தாள்.

என்ன  இது……. இந்தப் பெண் இப்படி போகிறாள். ஒன்று அவளுக்கு ஆக்ஸிடென்ட் ஆகும். அல்லது அவளால் மற்றவர்களுக்கு

ஆகப்போகிறது என்று நினைத்துக் கொண்டே அவளை பின் தொடர்ந்தான்.

 

பீக் அவர். 

வண்டிகளின் இரைச்சல் சத்தம்.அவரக்கு அவசரம்.  யாரைப்பற்றியும் இலட்சியம் செய்யாமல் தன் பயணத்திலே குறியாக இருந்தார்கள்.

கிண்டி  இன்ஜினியரிங் கல்லூரி  தாண்டி போய் கொண்டு இருந்தாள்.

வலது பக்கம் திரும்பி, OM.R. சாலையில் இந்திராநகர் ரயில்வே ஸ்டேஷனை தாண்டி, டைடல் பார்க்கை நோக்கி போய் கொண்டியிருந்த வளிடம் அருகில் போய் , “ஹலோ மேடம் இப்படி போனால் எப்படி, ….விபத்து ஆகிவிடப் போகிறது,” என்று சொல்ல,

வண்டி இரைச்சலில்  அவன் சொல்வது  காதில் கேட்காமல், தன் கைனடிக் ஹோண்டாவை ஸ்லோ செய்து என்ன வென்று கேட்டாள்.

 

இவனும் அவள் அருகே நிறுத்தியதும், தன் முகத்திலிருந்த ஹெல்மெட்டை கழற்றினாள்.

“ஒரு பொன்மானை நான் காண தகம திமித்தோம்”.

“அவள் விழிகளில் பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்”

டி.ராஜேந்தர் எழுதியது இவளுக்கு பொருத்தமாக இருக்கிறதே என்று நினைத்தான். 

மனதோ  தத்ததத்தத் தகதிமித் தகதிமி

தத் தத் தகதிமி தோம்” என்று சதிராட,

அவளின் குரல் அவனை நிறுத்தியது.

“வழி மறித்து எதோ சொல்லிவிட்டு, கற்பனையில் இருந்தால் எப்படி…?

தன் மனதை அவள் கண்களிலிருந்து மீட்டு, சுயநினைவுக்கு வந்தான்.

“இப்படி உங்கள் துப்பட்டாவை காற்றில் பறக்கவிட்டு போனால் ஆக்ஸிடென்ட் ஆகாதா” என்று கேட்க,

“ஹலோ மிஸ்டர்  என்ன சொல்கிறீர்கள்”.

“நான் உங்களை ராஜ்பவனிலிருந்து பாலோ பண்ணிக் கொண்டு வருகிறேன். உங்களின் துப்பட்டா வண்டியில் சிக்கிக் கொள்ள போகிறது”. என்றதும்,

அவளும் தன் உடையை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.

ஹலோ மிஸ்டர்… 

அவசரமாக “ஐயாம் தினேஷ்”  என்றான் .

“இருந்து விட்டு போங்கள்”.

iநான் எங்க  துப்பட்டா போட்டு இருக்கேன்.நீங்கள் யாரையோ நினைத்து என்னை வழிமறித்து இருக்கிறீர்கள்.”

அப்போது தான் அவள் முகத்திலிருந்து கண்களை  அவசரமாக எடுத்து  அவள் உடையை பார்த்தான். 

அந்தப் பெண் வெள்ளையில் சிகப்பு பூப்போட்ட  சூடிதார், அதற்கு மேட்சாக வெள்ளை துப்பட்டாவை பறக்க விட்டுயிருந்தாள்.

இவள் போட்டு இருப்பதோ வெள்ளை சட்டையும், லைட்  ப்ளூ கலர் ஜீன்னும்  போட்டு இருந்தாள்.

அவளோடது  ஸ்கூட்டி பெப்.      இவளோடது  கைனடிக் ஹோண்டா.

ஒரே  பிங்க் கலர்.

அப்போது தான் புரிந்தவனாக ஸாரி என்றான்.

“ஹலோ… நீங்க எங்க போகணுமோ  அங்க போங்க. அதை விட்டுட்டு, யாரையா துரத்திக் கொண்டு போகிறீர்கள்.”

இவன் கொஞ்சம் ரோஷம் வந்தவனாக,அப்படி ஒன்றும் பெண்களை துரத்துபவன்  நானில்லை. எதோ நல்லது நினைக்கப் போய் இப்படி ஆகிவிட்டது.

அவன் கோபமும், பரிதாபமாக அசடு வழிந்ததை பார்த்ததும் இவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

 

சிரித்துக் கொண்டே பார்த்து போங்கள் என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.

சே…சே…. இப்படி பல்பு வாங்கி விட்டனே  என்று தன்  டியோவை கிளப்பினான்.

இன்று பார்த்து, தன் அம்மாவின் வண்டியை எடுத்து விட்டு வந்தது தப்பா போச்சி. என் புல்லட் பறந்து  போயிருக்கும். யாரையும் பார்க்காமல் போய் இருப்பேன். ஆனால் அவன் மனதோ,

அவ் விழிகளில் பழரசம்”—- என்று நினைத்து.

 

அவளை பின் தொடர்ந்தான்.

அந்த துப்பட்டா பெண்ணை பின் தொடர்ந்த போது பதற்றத்தில் இருந்தான்.

இவளை தொடர்வது  மனதுக்கு இதமாக  இருந்தது.  

 

அவள் வேகமாக தன் வண்டியை செலுத்தி டைடல் பார்க்கில் நுழைந்து விட்டாள். 

அவள் அப்படி போகும் போது, ரிவர்வியூ கண்ணாடியில் அவனை பார்த்தாள்.

அவன் அவளை தொடர வேண்டும் என்று முயற்சி எடுத்தது போல் இருந்தது.  சரிவர தொடர முடியாமல் தத்தளித்தை பார்க்கும் போது, உதட்ரோரம் சிரிப்பு வழிந்தது.

 

தன் அலுவலகம் வந்ததும்  இண்டிகேட்டர் போட்டு, உள்ளே நுழைந்தாள்.

 

இவள் உள்ளே நுழைவதை பார்த்துக் கொண்டு,பெருமுச்சு விட்டபடி  பள்ளிக்கரணையில்   இருந்த தன் மருத்துவனைக்கு சென்றான்.

 

அவனுக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை . அவனுக்கே தன்னை குறித்து   அதிசயமாக பட்டது. 

என்னாச்சி எனக்கு….. ? என்று தன் மோவாயை தடவியவாறு கேட்டுக் கொண்டான்.

 

அவன் அந்த மருத்துவ மனையில் இருதய பிரிவில் இளநிலை உதவியாளன். நல்ல வேளை இன்று எந்த அறுவை சிகிச்சையும் இல்லை. 

 

எத்தனையோ பெண்களுடன் பழகி இருக்கிறான் . பேசி இருக்கிறான்.  இவள் போல்  யாரும் நெருக்கமாக உணர்ந்ததில்லை.

 

வேறு  யாராவது பார்த்த மாத்திரத்தில்

காதல்  வந்தது என்றால் சிரித்து இருப்பான்.

புதிய நபர், புதிய அனுபவம், கிடைக்கும் போது, மூளையின்  டோபமைன் சிஸ்டம் அதிகமாக செயல்பட்டு,  மகிழ்ச்சியை தூண்டுகிறதோ..

 

அவனால்  தன் வேலையில் கவனமாக செயல்பட முடிய வில்லை.

தன் ஸீனியரிடம் சொல்லிவிட்டு, மருத்துவ மனையை விட்டுச் சென்றான்.

அவனது டியோ  நேராக டைடல் பார்க் சென்றது.

அவளை பார்க்க மாட்டோமா என்று மனம் ஏங்கியது.

 

அவளது கண்களின் தரிசனம் கிடைக்குமா என்று தேடினான்.

 

இரண்டொரு பெண்கள் இவனை  ஓரக்கண்களால் பார்த்து  தங்களுக்குள் எதோ பேசி சிரித்தபடி சென்றார்கள்.

 

இவனுக்கு  உரைத்தது. என்ன செய்கிறேன். அவளிடம் பெண்களை துரத்துபவன் நானில்லை  என்று ரோஷமாக சொல்லிவிட்டு,  இப் பொழுது  சில நிமிடங்கள் சந்தித்த பெண்ணிற்காக ,அவள் வருவாளா  மாட்டாளா என்று கூட தெரியாமல் அவள் வருகைக்காக காத்து இருக்கிறேன்.

 

தன் மனதை தேற்றிக் கொண்டு மறுபடியும் சந்தித்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று  தன்னை தேற்றிக் கொண்டு சென்று விட்டான்.

அவன் போவதை ஜெனி பார்த்தாள். காலையில் பார்த்தவன். அவன் பெயர் கூட தினேஷ்  என்று  சொன்னது அவள் ஞாபகத்திற்கு வந்து

 

அவன் தனக்காக வந்து இருப்பானோ என்று யோசித்தாள்.

சே.சே.. இருக்காது.

 

இங்கு எத்தனையோ நபர்கள் வேலை செய்கிறாரகள் யாருக்காக வந்தானோ…

காலையில்  ஒரு முறை தான் பார்த்தாள் அதெப்படி இவ்வளவு தூரத்தில் அவன் தான் என்று அடையாள படுத்திக் கொண்டாள்.

 

வேறு யாராவது இருக்கலாமே என்று மனம்  யோசித்தாலும் இருக்காது

அவன் வண்டியை அவளருகில்   ஒரு விதமாக  சாய்ந்து  நிறுத்தியது இன்னும் அவள் மனக்கண்ணில்  அச்சடித்து போல் இருக்கிறது

தான் ஹெல்மெட்டை கழற்றியதும் கண்களை கிறங்க பார்த்தது அவளை என்னவோ செய்தது நிஜம்.

ஒரு வேளை அவன் என்னைத் தான் பார்க்க வந்து இருப்பானோ என்று நினைத்ததில் , அவளது  மூளையில்

டோபமைன்’ என்ற மகிழ்ச்சி ஹார்மேன் சுரந்தது.

 

அவள் முதுகுக்கு பின்னாலிருந்து யாரோ அவளை கட்டி பிடிக்க வே அதிர்ந்தாள்.

ஒரு முறை உடலை உதறிக் கொண்டாள்.

பின்னாலிருந்த அமலா   கலவென்று சிரித்தாள்.

 

ஜெனி பொய் கோபத்தை காட்டி,உன்னிடம்,”எத்தனை தடவை சொல்லி  இருக்கேன். பின்னாலிருந்து கட்டிபிடிக்காதே என்று. “

%சரி.சரி. இன்னிக்கு ஏன் அதிர்வு அதிகமா இருக்கு. நான் எப்போதும் செய்வதுதானே.’

 

“தெரியலடி.எதோ யோசித்துக்கொண்டு இருந்தேன். அதனால் பயந்துவிட்டேன்”.

 

“அப்படி என்றால், நீ  யாரையோ மனதில் நினைத்துக்கொண்டு இருந்து இருக்கிறாய்” என்று தன் மனதில் இருப்பதை அப்படியே அமலா  சொன்னதும், சிறிது தடுமாறித்தான் போனாள்.

“ஏய்…உனக்கு என்ன ஆச்சு……இப்படி முழிக்கிற. யார் அவன்……..? கண்களைசிமிட்டிக் கொண்டே கேட்க,

“நீ வேற. ஒன்றுமில்லை. யாரையும் நினைக்கவில்லை.  வா… டீ குடிக்கலாம். “

 

“நான் பபிள் டீ  குடிக்கப்போறேன்.” என்று அமலா சொன்னதும், “சரி. வா..என்று  புட் கோர்ட் போனார்கள்.

 

“நீயேன் லேட்டாக வர்ற. காலையில் உன் வீட்டிற்கு போன் போட்டேன்.உனக்கும் போன்  செய்தேன். நீ எடுக்கல.உன் அம்மா பேசினார்கள். ஆபீஸிற்கு கிளம்பிவிட்டாய் என்று சொன்னார்களே.”

 

“ஆமாம். ஜெனி. சீக்கிரம் கிளம்பிவிட்டேன். என் சித்தி US.போறாங்க. கிராண்ட் ஸ்வீட்ஸில். வாங்க பெரிய லிஸ்ட் கொடுத்துவிட்டு இருந்தார்கள் . அதில் பாதி  ஏர்போர்ட்டில் தூக்கி போட்டுவிடுவார்கள். அங்க என்னவோ சாப்பாடு கிடைக்காத மாதிரி இங்கிருந்து சுமந்துக்கொண்டு போகிறார்கள். “

 

“ஒன்அவர் பர்மிஷன் கேட்டு இருந்தேன். அங்கு வாங்கியதை பக்காவா  பேக் பண்ணி எடுத்துட்டு என் ஸ்கூட்டியில் முடியல.  ஒரு ஆட்டோவில் போய் கொடுத்து விட்டு  மறுபடியும் கிராண்டுக்கு போய் என் ஸ்கூட்டி யை  எடுத்துட்டு   வந்தேன். ஆப்டே லீவாகி விட்டது.”

 

“சித்தி வீடு. பக்கத்தில் தான் இருக்கிறது. அவர்களே வாங்கிக் கொள்ளலாமே.”

 

“இதல்லாம் என் அம்மா பண்ற வேலை  எனக்கு சித்தி யு.எஸ் ஸில் வேலை வாங்கி  தருவார்களாம். ‘

 

%என்னது…என்னது’…? என்று ஜெனி புருவத்தை உயர்த்த

“அது முடியாது என்று எனக்குத் தெரியும். அம்மாவுக்குத் தெரியல.’.

புட் கோர்ட்   வந்ததும்   அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு டேபிளில் அமர்ந்தார்கள்.

 

அமலா  அவளிடம், “இன்று ஒரு முக்கியமான விஷயம்  ஒன்று நடந்தது. நான் கிண்டி வரும் போது, என் துப்பட்டாவில் போட்டு இருந்த சேஃடி பின் அவிழ்ந்து  காற்றில் பறந்து கொண்டு வந்தது. ஒருவன்  பின்னாலிருந்து   எதோ சொல்ல முயற்சி செய்ததை பார்த்தேன். அப்போது தான்  என் துப்பட்டா பறப்பதை கவனித்தேன்.”

 

“இது எங்கே நடந்தது” என்று அவசரமாகஜெனி கேட்டாள்.

“அண்ணா  என்ஜினிரிங்  காலேஜிலிருந்து”……..

 

அப்போது தான் அமலாவை பார்த்தாள்.

வெள்ளை நிற துப்பட்டா போட்டு இருந்தாள்.

 

தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page