பாகம் – 2

2 அவளை மறக்கத்தான்.

அமலா  ஜெனியிடம்,” அந்த  பீக் அவரிலும்,   ஒருவன்   தன்னை  பின்தொடர்ந்து துப்பட்டா காற்றில் பறப்பதை  சொல்ல முயற்சித்தான். 

நான் நேராக  போய் கிராண்ட் ஸ்வீட்ஸில் நின்று விட்டேன். திரும்பி பார்த்தேன். அவன் வரவில்லை” என்று  சொன்னதைக் கேட்டதும், ஜெனிக்கு புரிந்து போயிற்று.

அவன் அவளை விட்டு, தன்னிடம் வந்து விட்டதை அமலாவிடம் சொல்லாமா என்று நினைத்தாள்.

‘தேவையில்லை . அவனே இவள் ன்று நினைத்து என்னிடம் பேசி இருக்கிறான். . மறுபடியும் அவனைப் பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.’என்று யோசித்து,

அமலாவிடம் “இனிமேல் கவனமாக இரு. உனக்கும் ஆபத்து, மற்றவர்களுக்கும் ஆபத்து உண்டாகும். “

“சரிங்க மேடம். இனிமேல் தங்கள் சித்தப்படி கவனமாக இருப்பேன”  .என்று நாடக பாணில் சொல்லி சிரித்தாள்.

ஜெனி மசாலா டீயும்  அமலா பபிள் டீயும் குடித்து விட்டு  தங்கள் வேலைகளை கவனிக்கச் சென்றனர்.

இருவருமே ஒரே கல்லூரியில் படித்தவர்கள். கேம்பஸ்  இண்டர்வியூவில் H.C.L. ல் செலக்ட் ஆகி 

ஒன்றாகவே வேலையும் செய்கின்றனர்.

ஜெனிலியா  சென்னையில் பிறந்து வளர்ந்தவள் . வேறு ஒரு  கம்பெனியில் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லா தவள். அப்பாவும்,அண்ணனும் தங்கள் பிஸினெஸ்  சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டி பறக்கின்றனர்.  

சமையலுக்கான எண்ணெய், சோப், ஷாம்பூ என்று  ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தங்கள்  வியாபாரத்தை, பாக்டரியை நடத்துகிறார்கள்.

அமலா, திருநெல் வேலியிலிருந்து  தன் படிப்புக்காக அம்மாவுடன் சென்னை வந்தவள். ‘அவளின் அம்மா உமாராணி 

ஸ்டேட்  பாங்கில்  வேலை செய்கிறார். அவருக்கு கணவன் இல்லை. இறந்து விட்டார். சாதாரண காய்ச்சல் என்று படுத்தவர். டாக்டரிடம் செல்வதற்குள் இறந்து விட்டார்.

அவர் விட்டுச் சென்ற சொற்ப பணத்தில் தன் மாமியாரையும் கைவிடாமல், பெண்ணையும் படிக்க வைத்துள்ளார்.

திருநெல்வேலிருந்து மலங்க  மலங்க முழித்துக் கொண்டு கல்லூரியின் படோபத்தைக்  கண்டு பயந்து ஓர் ஓரமாக நின்றவளிடம், ஜெனி தான் முதலில் பேசினாள்.

அவளின் பயத்தையும் போக்கினாள்.

அமலாவின்  படிய வாரிய ஜடை பின்னலைக் கண்டு சிரித்து ஒதுங்கியவர்களை இலட்சியம் செய்யாமல்  கடந்துபோகச்  சொல்லிக் கொடுத்தவள் ஜெனி .

ஜெனி  பெரிய காரில் கல்லூரிக்கு  வருவதை பார்த்து மிரண்டாள்.

இவள் பெரிய   இடம் போல இருக்கே. பெரிய இடத்து பெண்கள்   ஒருவரையும் மதிக்க மாட்டார்கள் என்றெல்லவா நினைத்து இருந்தாள்..

அவளிடம் பழக, பழக அவள் நினைப்பு பொய்த்து போனது. எப்படியோ முன் ஜென்மத்து உறவு போல் ஒட்டிக் கொண்டார்கள்.

இருவரும் தம்தம் எல்லைக்குள் நிற்க கற்றுக் கொண்டார்கள்..

இந்த  நான்கு வருட என்ஜீனியரிங்  படிப்பில்  ஒரு முறை கூட ஜெனி தன் வீட்டிற்கு அமலாவை அழைத்ததில்லை.

அமலா வீட்டிற்குச் சென்று அவள்  அப்பத்தா கைமணத்தில் செய்த தேங்காய்  சொதி குழம்பு,  இடியாப்பம்,

கரி தோசை., இடிச்ச சம்பல் எல்லாவற்றையும்   ஆசை தீர சாப்பிட்டு இருக்கிறாள். 

அமலாவிற்கும்   ஜெனியின் வீட்டை பார்க்க வேண்டும் என்று ஆசை தான்.அவள் அப்படி அழைத்து போகாதற்கு எதாவது காரணம் இருக்கும்  என்று  கேட்கவே மாட்டாள்.

ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டதால் அந்த நட்பு தொடர்ந்தது

ஜெனியும்,கமலாவும்  அலுவலகத்தை  விட்டு வெளியே வந்தனர்.

ஜெனி தன்  ஹோண்டாவில் ஏறிக் கொண்டு, “ நாம் நாளை  புக் ஃபேர் (Fair) போகலாமா..”

அமலா தன் தலையில் தட்டிக் கொண்டு சேஸ மறந்தே போய் விட்டேன்.,

என்னது?

“இன்னிக்கு நைட்   டிரெயினில்  நாங்கள் திருநெல் வேலி போகிறோம். “

“என்ன   திடீரென்று ஸஸ.குலதெய்வம் சாமி  கும்பிடவா.?

“இல்லை. சித்தப்பா ஒரு நிலத்தை விற்கிறாராம்.  ஸைன் போடுவதற்கு  மூவரையும் கூப்பிட்டுள்ளார். அம்மா, அப்பத்தா, நான் மூவருமே போகவேண்டும், ஸாரிப்பா சொல்ல மறந்து விட்டேன்.”

“சரிடி. ஸேப் ஜர்னி” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.

வீட்டிற்கு போக 8 மணிக்கு மேல் ஆகிவிட்டது. 

R.A. புரத்தில் வீடு.  நவீன பங்களா  டைப் பெரிய வீடு.  – காம்பவுண்டை ஒட்டி சீராக வெட்டப்பட்ட அசோக மரம்  கம்பீரமாக  நின்றது.

வாட்ச்மேன் இவளது வண்டியை பார்த்தும்,  அவசர அவசரமாக சல்யூட் அடித்தப்படி  கதவை திறந்தான்.

தன் கைப்பையை எடுத்துக் கொண்டு உள்ளே போனதும் அம்மா சுதா கத்தினாள்.

“உனக்கு என்ன தலையெழுத்துஸ  வெளியே  போய் வேலை செய்யணும்  எத்தனை மணிக்கு வர்ற. அதுவும் டூவீலரில்ஸ.இத்தனை கார்கள் இருக்கிறது. இதில்  எதாவது ஒரு காரை எடுத்துக் கொண்டு போகலாமே”.

“காரில் போனால்  இப்பொழுது வந்தது போல் வந்து இருக்க முடியாது. இன்னும்  தாமதமாக வருவேன்.  அதுவுமில்லாமல் என் ஒருத்திக்கு எதுக்கு  தனி கார்? எனக்கு  என் டூவிலரே போதும்.”

அப்போது வந்த அண்ணி மதிவதனி  “எதுக்கு தனி காரா”ஸ.

“போகும் போது பஸ் ஸ்டாட்டில் நிற்பவர்களை ஏற்றிக் கொண்டு போயேன். நன்றாகஇருக்கும்.” என்று கேலியாக  பேச, முறைத்தாள்.

“மாமாவும்,உன் அண்ணனும்  ஒரே கம்பெனிக்கு போனாலும் தனித்தனி காரில் தான் பயணமாவார்கள்.”

“அதனால் தான் தாறுமாறாக பொல்லுஷன் ரேட் ஏறுகிறது” என்று மேலும் அண்ணியின் பேச்சை கேட்க  விரும்பாமல், சமையல் காரம்மா ராஜத்தை கூப்பிட்டு  நான் பிரஷ் அப் ஆகி விடுகிறேன். சாப்பாடு எடுத்து வையுங்கள் என்று சொல்லிவிட்டு, தன்னறைக்குச்  சென்றாள்.

மாமியார் சுதா தன் மருமகள் மதிவதனியிடம்  “ நாம்நல்லதே  சொல்லக் கூடாது.”

மருமகள் இவர்களை விட பணம் படைத்தவள். அதனால் மாமியார் எப்போதும் அவள் பக்கமே நிற்பார். 

அண்ணியோ  ஏழைகளை கண்டால் துச்சமாக மதிப்பவள்.  ஜெனியின் எளிமையை சுத்தமாக  ஜீரணித்துக் கொள்ள முடியாதவளாக இருந்தாள்.

“அத்தைஸஎன்   அண்ணாவை ஜெனிக்கு கல்யாணம் பண்ணலாம் என்று நினைக்கிறேன். அவனும் ஆசைப்படுகிறான்.”

சுதாவுக்கு பெருமிதமாக இருந்தது.

இருக்காதா பின்ன. மொத்த சொத்திற்கும் இவர்கள் இருவர் தானே வாரிசு. 

கண்களில் ஆசை பளபளக்க, “சரிடா செல்லம். உன்  அண்ணாவைவிட இவளுக்கு 

நல்ல இடம் கிடைத்து விடுமா.உன் அம்மாவும், அப்பாவும் தங்கமானவர்கள். ஜெனி சிறப்பா வாழுவாள். உன் மாமாவிடம் பேசுகிறேன்”.

“மாமாவும் ஒப்புக் கொள்வார்.  இவள் என்ன சொல்வாளோ.

அவனுக்கு இவள் டூவீலரில் போவதெல்லாம் பிடிக்கவில்லை.  வேலைக்கு போவதும் பிடிக்கவில்லை.”

“அவ அப்பா  சொன்னால் கேட்டுப்பா”. 

“அப்புறம் நாளை ஜெனியை  டின்னருக்கு அழைக்கிறான். நீங்களே அவளிடம் சொல்லி விடுங்கள். டைம்    அப்புறம் சொல்றேன் என்று சொல்லி இருக்கான்.”

“சரிம்மா. நான் சொல்லி விடுகிறேன். அவள் தயாராக இருப்பாள். “ என்று சொல்லிவிட்டு, மனதிற்குள்  ,’கடவுளே  இதெல்லாம் சரியாக நடக்க வேண்டும்.

என் பெண்ணிற்கு  நல்ல புத்தியை கொடுப்பா’ என்று வேண்டிக் கொண்டாள்.

ஜெனி ராஜம் வைத்த  புல்கா, சிக்கன்  கிரேவியும் சாப்பிட்டு விட்டு,  லானில். வாக்மேனில் பாட்டு கேட்டபடி  நடந்து கொண்டு இருந்தாள்.

ஜெனி  வாக்மேனில் இருப்பதை அறியாத சுதா,

மருமகள் சொன்னதை சொல்லிவிட்டு போய் விட்டாள்.

இவள் காதில் எதுவும் விழவில்லை. 

சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்து விட்டு தன்னறைக்கு போய் விட்டாள்.

வாட்ஸ் அப்பில், அமலா  டிரெயினில் இருப்பதை செல்ஃபி எடுத்து இவளுக்கு மிஸ்யூ என்று அனுப்பி இருந்தாள்.

Hug ஈமோஜியையும்  ஸ்மைலியையும்  போட்டு விட்டு  குட் நைட் சொல்லி தூங்க போய் விட்டாள்.

தூக்கத்தில்  ஹலோ மிஸ்டர்.

“நான் தினேஷ்” என்றது  ரீவைண்ட் ஆக வந்து கொண்டே யிருந்தது. அவன்  வண்டியில் சாய்ந்து நின்றதும் , தன் கண்களை நேராக பார்த்ததும் வர, “அப்படி பார்க்காத “என்று தூக்கத்தில் உளறினாள்.

திடுக்கிட்டு முழித்தாள்.

‘என்ன இது, அவன் ஞாபகம் ஏன் வர வேண்டும். நாம் அலுவலகத்தில் தெருவில், காபி ஷாப்பில் மற்றும் பல இடங்களில் பார்க்கிறவர்கள் எல்லோரும் நம் கனவில் வருகிறார்களா?.

சில நிமிடங்களே   பார்த்த இவன் ஏன் வரவேண்டும். இந்த பரந்த சென்னையில் மறுபடியும் அவனை எங்கு பார்க்கப் போகிறேன். அது சாத்தியமே இல்லயே.

எழுந்து பால்கனி கதவை திறந்துக் கொண்டு, நேரம் போவது தெரியாமல் அமர்ந்து  நட்சத்திரங்களை பார்த்து கொண்டுயிருந்தாள்.

மணி இரண்டு அடித்தது.

போனை எடுத்து பார்த்தாள்.

அமலா FB யில் ஆன்லைனில் இருப்பது தெரிந்தது.

“வாட்ஸப்பில், “ஏண்டி பிசாசு. தூங்காமல் FB யில் இருக்கிற”

பதிலுக்கு “அடியேய் நீயும் தூங்கலயா.”

 

“கனவுடி”.

“ம்ம்ம்ஸ இங்க ஒருத்தன்  விடற குறட்டை சத்தத்தில் தூக்கமே வரல.  ஸ்வீட் ட்ரீம்ஸ் எங்க வரப்போகுது “ என்று அமலா பதிலுக்கு  அனுப்ப,

சரி. இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கு.

“உன் கனவில் யாரடி”..

“யாருமில்லை.”  முழித்தவுடன் ஞாபகத்திற்கு வரவில்லை  என்றாள்.

“சரிடி. எதோ ஸ்டேஷன் வந்து இருக்கு.. திருச்சி  என்று நினைக்கிறேன்.  நிறைய பேர்  ஏறுவார்கள்.”

ஜெனியும் போனை அணைத்து விட்டு,  அவனை நினைக்கக் கூடாது. 

 தூங்கணும் என்று நினைத்து, அவனை நினைத்துக்கொண்டே தூங்கினாள் –

காலையில்  வெளிச்சம் வந்து முழித்து பார்த்தால் மணி. காலை. 11.  

‘அடடேஸ இவ்வளவு நேரமா  தூங்கி விட்டேன்.’

எழுந்து அழகான ஒரு சோம்பலை முறித்து பால்கனியில் நின்று பார்த்தாள்.

ராஜம் தோட்டக் காரருக்கு காபி கொடுத்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள். 

அவர்கள் கணவன்  மனைவியாக ஆகப் போகிறவர்கள்.. 

மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள். பார்க்க வே நன்றாக இருக்கும். 

மனதிற்குள்  சிரித்து விட்டு தன் வேலைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தாள்.

ராஜம் கையில் லெமன் டீ . . அதை நன்றி சொல்லி வாங்கி குடித்து விட்டு, “ராஜம்மாஸ இப்போ எனக்கு மோர்சாதம் மட்டும் போதும். ரெடி பண்ணி வையுங்க. நான் சாப்பிட்டு விட்டு வெளியே போகணும் ” என்றாள்.

“சரி கண்ணு” என்று போக இருந்தவளை தடுத்து, “என்ன சொல்றார் உங்க வருங்கால கணவர் “

கணவர் என்றதும் முகம் சிவந்து,” அட போங்கம்மா இந்த  46 வயசுல கல்யாணம் தேவையா” என்று கேட்கிறார்.

“தேவை என்று தானே சொன்னீர்கள்.”

ம்ம்ம் என்று வெட்கம் தாங்காமல் ஓடிவிட்டார்.

இவளும் சாப்பிட்டு விட்டு , தன் காரை எடுத்துக்கொண்டு புத்தக திருவிழாவிற்கு சென்றாள்.

விடுமுறை ஆனதால் நல்ல கூட்டம் .

லிஸ்ட் கையில் இருப்பதால்  ஜெனி வாங்குவதற்கு சுலபமாக இருந்தது.

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம், குற்றப்பரம்பரைஸ வேலவராம மூர்த்தி.

குள்ள சித்தன் சரித்திரம். யுவன் சந்திரசேகர்.

ஒரே ஒரு சயின்ஸ் பிக்ஷன் திரில்லர், kata basis. by R.F. Kuang. 

இவற்றை மட்டும்  அந்த கூட்டத்தில் வாங்கிக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

எதோ போன் வந்தது போல் இருக்கவே எடுத்து பார்த்தாள்.

அம்மாவிடமிருந்து  10 மிஸ்டு கால்கள்.

எதுக்கு இத்தனை தடவை போன் செய்து இருக்கிறார்.

டைம் என்னவென்று பார்த்தாள்.

மணி 7.

‘சரி வெளியே போய் பேசுவோம் “என்று அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

இவளை நோக்கி   யாரோ ஓடி வருவது போல் இருக்கவே பார்த்தாள்., 

தினேஷ்..

தொடரும்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page