இதுவரை…
வைஷ்ணவியின் மீது இருக்கும் பெங்களூர் கேஸை ஞாபகப்படுத்தி அவளை தன் பேச்சைக் கேட்க வைத்தான் வீர். வீட்டிற்கு வந்த தன் அத்தை நீலாவதியை சமாளிக்கும் பொறுப்பை வைஷ்ணவி இடமே ஒப்படைத்தான் அவளும் வேறு வழியின்றி எதிர்கொண்டாள்.
இனி…
“ஏன்மா உனக்கு தான் உறவுக்காரங்கன்னு சொல்லிக்க யாரும் இல்லை . வீர்-க்கு நாங்க இரண்டு பேரும் இருக்கோம்னு உனக்கு தெரியுமில்ல நீயாவது அவன் கிட்ட எங்களை அழைக்கணும்னு சொல்லிருக்க வேண்டாமா..
இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் செஞ்சிருக்கீங்க, இதுதான் நீங்க இரண்டு பேரும் உறவுக்கு கொடுக்கிற முக்கியத்துவமா… ”
நீலாவதி கேட்ட கேள்விக்கு தன்னையே பதில் அளிக்குமாறு உரைத்த வீர்-ஐ கடிந்து கொண்டு வாய்க்குள்ளேயே முனகினாள் வைஷ்ணவி.
‘இப்போ இந்த அம்மா கிட்ட என்னன்னு சொல்லி சமாளிக்க, வைஷ்ணவியின் மூளைக்குள் கேள்வி ஓட அதிலிருந்து பதிலும் கிடைத்தது.
எவரும் சற்றும் எதிர்பாராத வார்த்தையாய் நீலாவதியை அழைத்தாள் வைஷ்ணவி .
“அம்மா…”
அவள் அம்மா என அழைத்த வார்த்தையில் வீர் இரும்பி விட்டான்.
அம்மா என பாசத்தோடு அழைத்தவாரே நீலாவதியின் அருகில் அமர்ந்தாள் வைஷ்ணவி.
“எங்களுக்கு உங்களை விட்டால் யாரும் இல்லை .உங்க கிட்ட சொல்லாம கல்யாணம் நடந்தது ரொம்ப வருத்தம் . என்ன நடந்துச்சுன்னா…
எனக்கு யாருமே இல்லை இத்தனை வருஷமா தனிமையில் இருந்துட்டேன். திடீர்னு என் அப்பா திரும்ப வந்துட்டாரு..”
“உனக்கு யாருமே இல்லைனு வீர் சொன்னான்..”
“ஓடிப்போன அப்பா திரும்ப வரதுக்கு முன்னாடி வரை நான் அனாதையா தான் இருந்தேன். ஆனால் எப்படியோ என்னை கண்டுபிடிச்சு திரும்ப வந்துட்டாரு, வந்தவரு எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லியும் கல்யாண ஏற்பாடு செஞ்சுட்டார். கல்யாண நேரம் நெருங்க நெருங்க எனக்கு இவருடைய ஞாபகமாவே இருந்தது. அப்போ தான் என்னுடைய காதலை நானே உணர்ந்தேன்.
எப்படியாவது வந்து என்னை கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன். இவரும் அங்க வந்தார்.
ஆனால் என்னுடைய அப்பா என் பொண்ணை அழைச்சிட்டு போக உனக்கு என்ன உரிமை இருக்குன்னு கேட்டார் அந்த சூழ்நிலையில் தான் எங்க கல்யாணம் நடந்தது..”
‘அடப்பாவி ஒரு நிமிஷத்துக்குள்ள ஒரு லவ் ஸ்டோரியே ரெடி பண்ணிட்டாளே..’
வீர்-ன் ஆச்சரியமான முகத்தை கவனித்தார் நீலாவதி.
“அதானே பார்த்தேன். இல்லைனா என்னுடைய வீர் என்கிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டானே… ” என்றார் நீலாவதி.
அவளின் பொய் ஒரு புறம் இருந்தாலும், தன்னுடைய அத்தையை அவள் சமாதானம் செய்ததே போதும் என தன் அத்தையின் அருகே மண்டியிட்டு கையைப் பிடித்து அமர்ந்தான் வீர்.
“இப்பவாவது உங்க மனசு சமாதானம் ஆனதா, என்னை மன்னிப்பீங்களா..”
“என் பொண்ணால நீ தப்பிச்சிட்ட..”
“உங்க பொண்ணா..?”
“ஆமா வைஷ்ணவி என்னை அம்மானு அழைச்சாலே, அப்போ அவள் எனக்கு பொண்ணு தானே.
சரி நீங்க இரண்டு பேரும் ஏதாவது சாப்பிட்டீங்களா..”
“இல்லம்மா எதுமே சாப்பிடலை. எனக்கு கூட ரொம்ப பசிக்குது நான் உடனே போய் சமைக்கிறேன்..”
பொறுப்போடு எழுந்தாள் வைஷ்ணவி.
“அட நான் இருக்கும் போது நீ ஏன் சமைக்கிற, உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு இப்பவே சமைச்சு தரேன்..”
“பெரியவங்க உங்களுக்கு எதுக்கு சிரமம்..”
“இதில் என்ன சிரமம் உனக்கு சாப்பிட என்ன வேணும்னு சொல்லு..”
“நீங்க இவ்வளவு தூரம் சொல்றதால கேட்டுக்குறேன். இட்லி ,பூரி வெண்பொங்கல்னு இது மாதிரி எது செஞ்சாலும் எனக்கு ஓகே..”
“இதே கேள்வியை ரம்யா கிட்ட கேட்டிருந்தால், பீட்சா, பர்கர்னு கண்டதை சொல்லிருப்பாள். பொண்ணுனா உன்னை மாதிரி இருக்கணும். இரு நான் சமைச்சு கொண்டு வரேன்..”
செல்லும் முன்பு கூட தன்னை திட்டி விட்டு செல்லும் அம்மாவை முறைத்தாள் ரம்யா.
இப்போது வீர்-ஐ திரும்பிப் பார்த்து இல்லாத தன் சட்டை காலரை உயர்த்தி காண்பித்து, திறமையோடு புருவத்தை உயர்த்தினாள் வைஷூ.
“உனக்கு இருக்க பித்தலாட்டத்துக்கு நீ எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை..”
வீர்-ன் புகழ்ச்சி கூட குத்திக் காட்டுவது போல் இருந்தது. அப்போது சோஃபாவில் அமர்ந்திருந்த ரம்யாவை கண்டாள் வைஷ்ணவி.
“ஹாய் ரம்யா, நீ எத்தனாவது படிக்கிற..”
“ஹாய் அத்தை, நான் 12த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்..”
வைஷ்ணவி தொடர்ந்து ரம்யா உடன் பேசிக் கொண்டிருந்தாள் . அதையெல்லாம் கவனித்த வீர் இவள் நான் விரும்பிய வைஷ்ணவியாக இருந்திருக்கக் கூடாதா என ஏங்கிப் போய் பார்த்தான்.
அதன் பிறகு சில நிமிடங்களில் காலை உணவை தயார் செய்திருந்தார் நீலாவதி.
அனைவரும் காலை உணவை உண்டு முடித்தனர். அதன் பிறகு வீட்டு வேலைகளை நீலாவதி கவனிக்க, வேறு வழியின்றி உதவி செய்வது போல் நாடகம் ஆடினாள் வைஷ்ணவி.
“வீர் இங்க வா..”
“என்ன அத்தை வீட்டுக்கு போகணுமா டிராப் பண்ணட்டா..”
“எங்களை வீட்டுக்கு அனுப்புறதிலேயே குறியாய் இரு. இந்த லிஸ்ட்ல சில சாமான் எல்லாம் எழுதி இருக்கேன் போய் வாங்கிட்டு வா , முன்னையாது வீட்டில் நீ மட்டும் தான். இப்போ வைஷூவும் இருக்காள் . இரண்டு பேரும் சாப்பிடுறதுக்கு மளிகை சாமான் இருக்க வேண்டாமா..”
அத்தை கொடுத்த லிஸ்டை வாங்கிக் கொண்ட வீர் ,வெளியே சென்று அவற்றை எல்லாம் வாங்கி ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வந்தான்.
அதன் பிறகு மாலை வரை அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் நீலாவதி. அவ்வேளை கோவிலுக்கு கிளம்பலாம் என அனைவரையும் அழைத்தார்.
கார் பார்க்கிங்கில் அனைவரும் காத்திருக்க நீலாவதி மட்டும் தாமதமாக வந்து சேர்ந்தார்.
“கோவிலுக்கு போகலாம்னு எங்களை தயாராக சொல்லிட்டு நீங்க ஏன் இவ்வளவு லேட்டா வரீங்க..” என வீர் கேட்க
“சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்காத, காரை எடு கிளம்பலாம்..”
நேராய் கோவில் வாயிலில் கார் நிற்க அனைவரும் உள்ளே சென்றனர்.
இறைவன் சன்னதியின் வெளியே நின்று கை கும்பிட்டு வணங்கினர்.
‘கடவுளே என் மருமகன் ஒரு நல்ல பொண்ணை கல்யாணம் செஞ்சிருக்கான். அவன் வாழ்க்கை சந்தோஷமா அமையனும். நான் கோபத்தில் ஏதாவது வார்த்தை விட்டிருந்தால் அது அவனை பாதிக்கக் கூடாது. அந்த பிள்ளைகளை பத்திரமா பார்த்துக்கோப்பா…’
அக்கறையோடு வேண்டினார் நீலாவதி.
‘கடவுளே இந்த வீர் கிட்ட இருந்து எனக்கு எப்படியாவது விடுதலை வாங்கிக் கொடு உனக்கு பல்க்கான அமௌன்ட் உண்டியலில் காணிக்கையா போடுறேன். இதை மட்டும் நிறைவேற்றிடு… ’
வைஷ்ணவியின் வேண்டுதல் இது போலவே நீண்டு கொண்டிருக்க, வீர் அவனின் மனதில் இருந்த எண்ணத்தை இறைவனிடம் பகிர்ந்து கொண்டான்.
ஆனால் அது ரகசியமாகவே காக்கப்பட்டது.
பூசாரி வழங்கிய திருநீர் மற்றும் குங்குமம் இரண்டையும் வைஷ்ணவி நெற்றியில் வைத்துக்கொள்ள துணிந்த சமயம் கையை தடுத்தார் நீலாவதி.
“இரும்மா வீர் உனக்கு பொட்டு வச்சு விடுவான்..”
“இந்தா வீர் குங்குமத்தை எடுத்து வைஷ்ணவி உடைய நெற்றிவகுடில் வச்சு விடு, உங்க கல்யாணத்தை பார்க்கிற பாக்கியம் தான் இல்லை, பொட்டு வைக்கிறதையாவது பார்க்கிறேன்..”
காலையில் திருமணம் முடிந்த சமயம் கூட அவளின் நெற்றியில் பொட்டு வைக்கவில்லை வீர், இப்போது அத்தைக்காக குங்குமத்தை கையில் எடுத்தான்.
அவளோ இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாள். எல்லாம் நீலாவதி கிளம்பும் வரை தான் இந்த நாடகம் என அமைதி காத்தாள். ஆனால் உள்ளுக்குள் இருந்த காதலில் வீர்-ன் கைகள் நடுங்கியது. இந்த செய்கை அவனின் மனதை தொடும் ஒரு அங்கமாக மாறியது.
கையில் இருந்த குங்குமம் அவளின் நெற்றியில் படிய, இந்த உறவிற்கான அர்த்தத்திற்கு மேலும் பலமாய் சாட்சி சேர்ந்தது.
அதுவரை கேடி வைஷ்ணவியாய் கண்ணிற்கு தெரிந்தவள் மனைவியாய் தோற்றம் அளித்தாள்.
கோவிலில் இருந்து வெளியே வந்த நீலாவதி ஆட்டோவை நிறுத்தினார்.
“அத்தை எதுக்காக ஆட்டோவை நிறுத்துறீங்க, உங்களையும் ரம்யாவையும் நானே டிராப் பண்றேன்..”
“பரவால்ல வீர், நேரம் ஆச்சு டிராபிக் அதிகமாக இருக்கும். நாங்க ஆட்டோவில் கிளம்பிக்கிறோம். நீயும் வைஷ்ணவியும் வீட்டுக்கு கிளம்புங்க..
இரண்டு பேரும் பார்த்து இருங்க…”
அவர்களைப் பத்திரமாக இருக்க கூறிவிட்டு, ரம்யா உடன் ஆட்டோவில் ஏறி கிளம்பினார் நீலாவதி.
நீலாவதி கிளம்பிய பிறகு தன் நெற்றியில் இருக்கும் குங்குமத்தை அழிக்க வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தாள் வைஷு. ஆனால் இப்போது அந்த ஞாபகம் இல்லாமல் அமைதியோடு காரில் அமர்ந்து கொண்டாள். வீர்-ம் அவளை அடிக்கடி பார்த்தவாரே காரை ஓட்டினான்.
அவர்களின் பிளாட்டை அடைந்த சமயம் இரவு நெருங்கி இருக்க, உடைகளை மாற்றிக் கொள்வதற்காக அறைக்குள் புகுந்தாள்.
அறையின் தோற்றத்தை கண்டு இருவருமே அதிர்ச்சியில் நின்றனர். பெரிதாக அலங்காரம் இல்லை என்றாலும், நன்கு மணக்கும் பூக்களின் வாசனையும் அறையில் இருந்த பாலும் பழமும் ஏற்பாட்டை நன்கு உரைத்தது. இவை எல்லாம் நீலாவதி செய்தது. கோவிலுக்கு கிளம்புவதற்கு முன்பாகவே இதை தயார் செய்திருந்தார்.
“ஓ இதுக்காக தான் உன் அத்தை கார் பார்க்கிங்க்கு லேட்டா வந்தாங்களா..”
வைஷ்ணவி எதார்த்தமாய் பேசியவாறு திரும்பி நோக்க, வீர் அவளை நெருங்கி இருந்தான்.
“என்ன பண்ற நீ..”
வினா எழுப்பியவளின் உதடுகளில் விரல் வைத்து தடுத்தவன், பேசாதே என கண்களால் கூறினான்.
நெற்றியில் அவன் வைத்த குங்குமத்தை கண்டவன், அதற்கு கீழேயே மெல்ல தன் உதடுகளை பதித்தான்.
திறந்திருந்த அவளின் விழிகள் அவன் கொடுத்த முத்தத்தில் அதிர்ச்சியோடு விரிந்தது.
நெற்றி முத்தத்தை தொடர்ந்து அவனின் கைகள் அவளின் கன்னம் ஏந்த, பிறகு இதழ் கண்டு குவிந்தான்.
சட்டென விலக்கி விடவும் அவளுக்கு தோன்றவில்லை. இவளுக்கு தான் மனதில் காதல் இல்லை. ஆனால் அவன் கொண்டிருக்கும் காதல் கண்ணில் புலப்பட்டது. அதன் அர்த்தத்தில் காமம் தெரியவில்லை. அந்தப் பார்வைக்கு அர்த்தம் தேடி அவள் விழிக்க ,அந்த இடைவெளியில் உதடுகள் அவனிடம் சரணடைந்தது.
அவன் தரும் இதழ் முத்தத்தில் தன்னை மறந்து கண்களை மூடினாள். இதற்கு முன் இதே அறையில் வீர் அவளை குளிர் அவதியால் கட்டியணைத்த சமயம் உதட்டை ஆட்கொள்ளவில்லை.
இவளின் வாழ்வில் பெறும், முதல் இதழ் முத்தம் இதுவே. காதலின் மொழி துவங்கியது.
😉
