அமுதன் தன்னுடைய பெங்களூர் வேலையை முடித்துக் கொண்டு வர, அவனிடம் அவள் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.
அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சீக்கிரம் கிளம்பி வா என்று சென்று விட்டான்.
“ஏனோ? அவன் அன்று அடித்தது கூட வலிக்கவில்லை இப்போது இப்படி பாராமுமாக சென்றது மனதில் வலித்தாலும் வேறு வழி என்று கிளம்பி வந்தாள்.
அதன் பின் அவனும் தயாராகி இருவரும் வெளியே வர அந்த வீட்டின் செக்யூரிட்டி ஓடி வந்தார்.
ஓடி வரும்போது அங்கிருக்கும் பழுப்பு தடுத்து கீழே விழுந்து விட அவரை ஓடி சென்று இவன் தூக்கி நிறுத்தினான். அமுதன்!!
அவர் கீழே விழுந்த வேகத்தில் கால் முட்டியில் அடிபட்டு அவரால் எழுந்து நிற்க கூட முடியாமல் போய்விட வேறு வழியில்லாமல் அமுதன் அவரை அள்ளி தூக்கி ஜீப்பில் போட்டப் பிறகு தான் அங்கு ஒரு ஜீவன் நின்று தன்னையே பார்த்துக் கொண்டு நின்றவளை, “வா!” என்று சைகை செய்தான் அவளும் மெதுவாக வந்து நிற்க, “இவரை நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு வரைக்கும் மட்டும் வெயிட் பண்ணு உன்னை வந்து கூட்டிட்டு போறேன், “என்று கூறிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டான்.
அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜீப்பில் ஏறி அமர்ந்தவர் வலியில் துடித்துக் கொண்டே “சார் உங்களுக்கு எதுக்கு இவ்ளோ சிரமம் நானே என் வண்டியில போய் இருப்பேனே,” என்றார்.
” இதுல என்ன சிரமம் இருக்கு வாங்க” என்றதோடு முடித்துக் கொண்டு அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முட்டியில் உள்ள எலும்பு ஏற்கனவே தேய்மானம் அடைந்திருந்ததிலேயே அடிபட்டதால் அவருக்கு எலும்பு சற்று விலகி இருப்பதாக கூற வேறு வழியில்லாமல் அவனே அவருக்கு சிகிச்சைகளையும் முடித்து வீட்டிற்கு அழைத்து வரும்போது மாலை 6யை தொட்டிருந்தது.
அவரை வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் பொன்னம்மாவும் குழலியும் அவருக்கு இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்க மருத்துவமனையில் நடந்தவற்றையெல்லாம் கூறிவிட்டு குழலியை பார்த்து, ” வா கிளம்பலாம், ” என்று கூறினான்.
“இவ்வளவு நேரத்துக்கா?” என்று இழுத்தாள்.
“ஆமா நாளைக்கு எல்லாம் எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு போகலாம் வா,” என்றான்.
அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு பொன்னம்மாவிடம் இரண்டு நாட்களிலேயே இருவரும் தாய் மகளை போல பழகிவிட்டதால் அவரை பிரிய மனமில்லாமல் சிறு தலை அசைப்பை தந்துவிட்டு மெல்ல வெளியே வந்தவளை மீண்டும் பொன்னம்மாள் அழைத்து அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்து அனுப்பி வைத்தார்.
இந்த அன்பை பார்த்தவுடன் அமுதனுக்கே ஒரு நிமிடம் ஆச்சரியம் வந்து தொற்றிக் கொண்டது எப்படி? இந்த குறுகிய நாட்களில், இப்படி பழக முடியும் என்று அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து நின்று, “போகலாம் சார்” என்றாள்.குழலி!!
அவள் அப்படி சொன்னவுடன் தான் தெளிந்து வேகமாக இறங்கி தன்னுடைய ஜீப்பில் இருவரும் ஏறி அமர வண்டி புறப்பட்டது.
நொடிக்கு ஒரு முறை அவனையே திரும்பி பார்த்துக் கொண்டு வந்தாள். ஆனால், அதன் காரணம் அவளுக்கு விளங்கவில்லை அது தவறு என்று தெரிந்தும் அவனை காண்பது நிறுத்தவே இல்லை அவள்!!
இப்படியே அவர்கள் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலே என்பதை போலவே ஒருவரை ஒருவர் பார்த்தும் பார்க்காமலும் காஞ்சிபுரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு அங்க காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்,,
இங்கு சேகரோ தன் சித்தியிடம் அன்று பேசி முடித்த உடனேயே டிரஸ்ட்டில் எப்படியோ பேசி முடித்து கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப் போல குழலின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்து அதில் தனக்கும் ஒரு ஆதாயம் தேடிக் கொண்டான் இவன் எல்லாம் என்ன ஜென்மமோ? அது அவனைப் படைத்தக் கடவுளுக்கே தெரியாது.
அவன் வந்தவுடன் குழலின் தந்தை முதலில் விசாரித்தது குழலியை பற்றி தான் அவன் குழலியின் அன்னை காமாட்சியை பார்க்க காமாட்சி சொல்லாதே என்பது போல் சைகை செய்தார்.
இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த குரலின் தந்தை, “என்ன ஆச்சு” என்று அதற்கு கேட்க சேகர் எல்லாவற்றையும் ஏதோ நேரில் இருந்து பார்த்தது மட்டுமில்லாமல், கொஞ்சம் தன் பங்குக்கும் சேர்த்து அளந்து விட்டு விட்டான்.
அவர் அதைக் கேட்டு கொந்தளித்துவிட்டு “என் பொண்ணு இந்த வயசுல இப்படி ஒரு காரியத்தை செய்த பின்பு இனி எனக்கு ஆபரேஷன் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் அவளைக் கண்டு அவளை கண்டுபிடித்து வெற்றி கண்டு துண்டமாக போட்ட பிறகுதான் நான் இந்த ஆப்ரேஷன் செஞ்சுக்குவேன்,” என்று சபதமிட்டு அந்த ரோஷத்திலேயே எழுந்தும் அமர்ந்து கொண்டார்.
சேகர் தன் திட்டம் பலித்த மகிழ்ச்சி உள்ளுக்குள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ” விடுங்கப்பா! இதை பெருசு பண்ணி நம்மளே நம்மளோட மானத்தை வாங்கிக்கொள்ளலாமா? அவ தான் நம்ம குடும்பத்தை பத்திக் கவலைப் படாமல் போய்ட்டா நாம ஏன்? அதை ஊதி பெருசாக்கணும், ” என்று சமாதானம் படுத்துவது போல் இன்னும் ஏற்றி விட்டான்.
இதை பார்த்துக் கொண்டிருந்த காமாட்சிக்குத்தான் இவன் என்ன ரகமோ என்று அவனை முறைத்துக் கொண்டிருக்க அந்த நேர்த்தில் தானா குழலின் தந்தையை பார்க்க உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து குழலியைப் பற்றி விசாரிக்க வேண்டும்… எல்லாமே சேகரின் ஏற்பாடு என்று உணராத அவரும் நடந்தவற்றை எல்லாம் கூற அனைவரும் அவளை தேடும் வேலையில் மும்பரமாக ஈடுப்பட்டனர்.
இங்கு அவர்கள் போக்குவரத்து நெரிசலில் ஆறு மணிக்கு கிளம்பியவர்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்து சேரவே 9 மணி ஆகிவிட்டது.
அவளுக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தைப் பார்த்தவுடன் தான் கண்ணில் ஒரு தெளிவு வந்து முகத்தில் ஒரு சிறு மின்னல் வெட்டியது.
அதையும் அவன் மனதில் குறிக்கத் தவறவில்லை இருந்தபோதிலும் அவளை வம்பிழுக்க விரும்பி “நல்லா பார்த்துக்கோ இது காஞ்சிபுரம், ” என்றான்.
காலையில் இருந்து அவனின் பாராமுகத்தை தாங்கமுடியாமல் இருந்தவளுக்கு அவன் இப்படி கிண்டலாக சொல்லவும் ஏனோ? இனம் புரியாத மகிழ்ச்சி வந்து மனதில் ஒட்டிக் கொண்டு இயல்பாக “இது எங்க ஊர் சார் எங்களுக்கு தெரியாதா,” என்றாள் ஒரு துள்ளலோடு,,
” உங்க ஊரு தான் யாரு இல்லைன்னு சொன்னது, அது சரி உங்க வீட்டுக்கு வழி தெரியுமா?” என்றான் இவனும் அதே நக்கல் தோணியில்
“அதெல்லாம் தெரியும் நானே போய்க்கிறேன் போங்க” என்று சென்றவளை வேகமாக கையை பிடித்து தடுத்து நிறுத்தி, ” எங்கன்னு சொல்லு நானே கூட்டிட்டு போய் விடுகிறேன், ” என்றான்.
அவனின் அந்த சிறு தொடுதல் அவளுக்கு என்னவோ செய்ய அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவனும் அவளைத்தான் பார்த்தான்.
இருவரின் பார்வையும் மோதிக் கொள்ள ஏதோ ஒரு புது வித உணர்வு வந்து மனதில் ஒட்டிக் கொண்டது. அந்த ஒட்டுதலை அங்கே வந்த பேருந்தின் ஹாரன் சத்தம் காதில் கிழித்துக் கொண்டு வர அவன் சட்டென்று கையை எடுத்து விட்டான்.
அதில் தெளிந்தவளும் “எங்க வீடு கீரை மண்டபம்,” என்று சொல்லி அந்த புறம் திரும்பிக் கொண்டாள்.
அவனும் அதன் பிறகு எதுவும் பேசாமல் அவளிடம் வழியை மட்டும் கேட்டுக் கொண்டு அவள் வீட்டு வாசற்படியில் வண்டியை வந்து நிறுத்தவும் குழலியின் தாய் காமாட்சி வெளியே வரவும் சரியாக இருந்தது.
இவளை கண்டவுடன் அவர் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அவள் கைகளில் இரண்டு அடியை போட்டு, ” ஏய் இங்க எதுக்குடி வந்த வேகமா இங்க இருந்து போ, “என்று தன் மகளை காப்பாற்ற வேண்டி அவர் வெளியே செல்ல அவள் அதை புரிந்து கொள்ளாமல், அமுதனை பார்க்க அவனும் போ என்று சைகை செய்தான்.
தன் தந்தையின் குணம் தெரியும் என்பதால் அவளும் அமுதனை உள்ளே வா என்று அழைக்கவில்லை அவள் அவனை பார்த்துக் கொண்டிருக்க அவன் தன் ஜிப்பை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.
அவன் சென்றபிறகு குழலின் தாய் தன் மகளை அடித்து ” இப்ப எதுக்குடி இங்க வந்து நின்ன அது தான் நல்ல வாழ்க்கை அமைந்து போச்சு இல்லை நல்லபடியா வாழ வேண்டி தானே, ” என்று தன் வீட்டிலிருந்து யாராவது வருகிறார்களா என்று எட்டிப் பார்த்து பேசிக்கொண்டிருக்க அவர்களின் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ அவர்களின் வீட்டில் குடியிருக்கும் பெண்ணொருத்தி வெளியே வந்து, ” ஏ குழலி வந்துட்டியா நீ ஏதோ ஓடி போய்ட்டாதா பேசிக்கிட்டாங்களே, ” என்று கேட்கும் கேட்ட பின்பு தான் தன் அன்னை எதற்காக விரட்டி அடித்தார் என்பது அவளுக்கு புரிந்தது.
உடனே தன் அன்னையைப் பார்த்து, “அம்மா நான் ஒன்னும் பண்ணலமா,” என்று அவள் சொல்லவும் இவர்களின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவர்களின் உறவினர்கள் வெளியே வரவும் சரியாக இருந்தது.
அவர்களைக் கண்டதும் அவளுக்கு ஒன்றும் புரியாமல், ” அம்மா ஏம்மா சித்தப்பா பெரியப்பா எல்லாம் வந்திருக்காங்க என்ன ஆச்சு, ” என்று ஒன்றும் புரியாதவள் போல் தன அன்னையிடமே கேள்வி கேட்டு நின்றாள்.
அங்கே சுத்தி இருந்தவர்களோ காமாட்சியை குழலிடமிருந்து பிரித்து அவளை சரமாரியாக அடித்தனர்.
சேகர் அவள் வந்துவிட்டதை உறுதி செய்த பின்பு தான் தயாரித்து வைத்திருந்த பத்திரத்தை வாங்க அருகில் இருக்கும் வக்கீல் அலுவலகத்திற்கு சென்று விட்டான்.
காமாட்சி எவ்வளவு தடுத்தும் உள்ளிருந்து கார்குழலின் தந்தை மெதுவாக தட்டு தடுமாறி நடந்து வர தன் தந்தை எப்படியும் தன்னை காப்பாற்றுவார் என்ற நோக்கில் அவர் காலடியில் சென்று விழுந்து, “அப்பா நான் எந்த தப்பும் பண்ணல அப்பா, ” என்றவளின் முடியை பிடித்து எடுத்து தன் பலம் மட்டும் அடித்து அவளைக் கீழே தள்ளிவிட்டு இவ எனக்கு வேண்டாம் என்னவோ பண்ணிக்கோங்க, ” என்றுக் கூறி விட்டு அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார்.
இதை கேட்ட ஒருவன் அவள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்கவ வந்து விட்டான்.
