அவளை பற்ற வைக்க ஒருவன் தீப்பெடியை உரச அவள் பின்னே நகர்ந்துக் கொண்டே, “வேண்டாம் அண்ணா ” என்று கை எடுத்து கும்பிட்டாள்.
அவன் விட்டான் இல்லை அவள் உடம்பு முழுக்க நடுங்க ஆரம்பித்து “அம்மா…!” என்று கத்தினாள்.
அந்த சத்தம் காமாட்சியின் இதயம் என் மகளுக்கு எதுவும் ஆக கூடாது என்று மட்டும் தோன்றி யாரைப் பற்றியும் கவலைப் படாமல் “யாரும் என் பொண்ணு மேல கை வைக்காதீங்க” என்றுக் கத்தினார்.
ஆனால் அங்கு இருந்தவர்கள் கமாட்சியைப் பிடித்து தள்ள அவரிகளிடம் போராடியவரை
“காமாட்சி” என்ற தன் கணவரின் குரல் கேட்க அப்படியே நின்று, தன் கணவரைப் பார்த்து, “ஏங்க அவ நம்ம பொண்ணுங்க” என்று பாவமாக கேட்டார்.
“இப்படி ஓடி போன பொண்ணு எப்பவும் என் பொண்ணு இல்லை அவளுக்கு இதுதான் தண்டனை!” என்றுக் கூறினார்
“நான் ஓடல நான் எந்த தப்பும் பண்ணல,” என்று கண்கள் கலங்க குரல் நடுக்கத்துடன் கூறினாள். குழலி!
ஆனால் அதை கேட்க தான் யாரும் தயாராக இல்லை.
அவளது தந்தை நாற்காலியில் அமர்ந்தபடியே மூச்சை வேகமாக இழுத்துக் கொண்டிருந்தார் கண்களில் கோபம் அதைவிட அதிகமான அவமானம்
“என் மானம் போச்சு…” என்று பற்களைக் கடித்துக் கொண்டார்.
அந்த வார்த்தை குழலியின் உள்ளத்தை கிழித்து ரணமாகி இந்த வார்த்தைகளை கேட்பதை விட மரணமே சிறந்தது என உடம்பில்
மண்ணெண்ணெய் துளிகள் வழிய அப்படியே நின்று விட்டாள்.
ஆனால், அவன் நெருப்பைப் பற்ற வைக்கும் முன்னே ஒரு வலிய கரம் தடுத்து ஓங்கி ஒரு அரை விட்டதில் கன்னம் வீங்கி திரும்பி பார்க்க அங்கே ருத்திர மூர்த்தியாய் அமுதன் நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் அவளுக்கு ‘இவர் ஏன் இங்கு வந்தாரு’ என்று தோன்றினாலும் அடுத்த நிமிடமே அவன்தான் தனக்கு அடைக்கலம் என்று அவனின் பின்னே சென்று ஒளிந்து கொண்டாள்.
அவனைக் கண்டதும் அவர்களுக்கு எங்கிருந்து தான் கோபம் வந்ததோ, தூரமாக நின்றிருந்த அனைவரும் அவனை சூழ்ந்துக் கொள்ள எல்லோரையும் அடித்து துவம்சம் செய்து விட்டு அங்கிருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து அவள் மேல் ஊற்றிக் கொண்டே, “ஏண்டி அவன் தான் பற்ற வைக்கிறான் தெரியுது இல்லை அப்பறம் அவனை தள்ளி விட்டு வந்து தண்ணி ஊத்தி வெளிய போக தெரியாது அப்படியே என்னை பற்ற வைன்னு உக்காந்து இருப்பீயா,” என்றான்.
அவள் அவனைப் பார்த்து “நீங்க எப்படி இங்க வந்தீங்க, ” என்றாள்.
“தெரியல உன்னை இந்த வீட்டு வாசப்படில விட்டுட்டு போகும்போது உங்க அம்மாவும், நீயும் ரியாக்ட் பண்ணது எனக்கு ஏதோ தப்பா பட்டுச்சு அதனாலதான் என்ன நடக்குதுன்னு பார்க்க வந்தேன் வந்தா இப்படி இருக்கு சரி சரி வா போகலாம்” என்று அவள் கையைப் பிடித்து மெதுவாக அழைத்துச் செல்லும் நேரம் அவனால் அடிபட்டு கிடந்தவன் மெல்ல தட்டு தடுமாறி கீழே இருந்த கத்தியைக் கொண்டு வந்து அமுதனின் பின்னிருந்துக் குத்தும் நேரம் அவன் சட்டென்று திரும்ப இடுப்பில் பட வேண்டிய கத்தி அவன் கைகளிள் பட்டு விட்டது.
அதைப் பார்த்த குழலி பதறி, “ஐயோ என்னங்க ஆச்சு ” என்றுக் கத்தினாள்.
அவன் அவளை தன்னுடன் சேர்த்துக் கொண்டே, “ஏய் எனக்கு ஒன்னும் இல்லை டி” என்றான்.
“இல்லை என்னால தான் உங்களுக்கு இப்படி ஆகுது நீங்க முதலில் இங்க இருந்து போங்க ” என்றுக் கூறினாள்.
அவன் தன்னை குத்தியவனை ஒரு அடித்ததில் இவள் இன்னும் இரண்டு அடி பின்னே சென்று நின்றுக் கொண்டாள்.
அந்த கையில் ரத்தம் வழிய வழிய மீண்டும் எழுந்து வந்தவர்களை எல்லாம் அடித்து முடிக்கும் வரை அவள் வைத்த கண் வாங்காமல் அங்கேயே நின்று விட்டாள்.
குழலியின் தந்தையோ காமாட்சியைப் பார்த்து “இது தான் நீ பொண்ணு வளர்த்த லட்சணம் எவனோ ஒருத்தன் வந்து அவளை இழுத்துப் பிடிச்சுட்டு நிக்கிறான். இவளும் அவன் கூட ஒண்டிக் கிட்டு நிக்கிறாள். இனிமே அவ எனக்கு பொண்ணும் இல்லை நான் அவளுக்கு அப்பனும் இல்லை… சீ போ நான் வேணும்னா என் கூட வா அவ வேணும்னா அப்படியே போய்டு” என்று அவர் உள்ளே செல்லும் முன்
“டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க” என்று பதறிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான் சேகர்.
அங்கு நடப்பதைப் பார்த்தவன் அமுதனிடம் வந்து மன்னிப்பு கேட்டு அங்கிருப்பவர்களைப் பார்த்து கண் அசைவிலேயே அமைதியாக இருக்க சொன்னான்.
அவர்களும் சேகர் மன்னிப்பு கேட்டவுடன் அமுதனின் இடம் நன்றாக புரிந்தது. அதனால் அவர்களும் அமைதியாகினர்.
“சேகர் என்ன இது எல்லாம்” என்று குழலியின் தந்தைக் கேட்கவும், மெல்ல அவரிடம் சென்று, “அப்பா அவன் பெரிய இடம் அவங்களை போக விடுங்க போகட்டும் ஆனால், குழலியை இந்த டாக்குமெண்ட்ல சைன் பண்ண சொல்லிடுங்க…” என்று மெதுவாக சொன்னான்.
“இது என்ன பத்திரம் சேகரு” என்றார்.
“இந்த வீட்டை குழலி பேர்ல இருந்து என் பெயருக்கு பவர் எழுதிட்டு வந்து இருக்கேன்” என்று பொய் சொன்னான். ஆனால் அவன் அந்த வீட்டை அவன் பெயரிலேயே பதிந்து வந்திருந்தான்.
“நீ சொல்றதும் சரி தான் சேகர் ஒழுங்ககெட்ட கழுதைக்கு எதுக்கு சொத்து,” என்றார்.
இதைக் கேட்ட ‘காமாட்சி அவளை பாதுக்காக்க காலம் கடந்து ஒரு சொந்தம் வந்திருக்கு அதுக்கு முன்னாடி உங்க சொத்தெல்லாம் உனக்கு தேவையே படாது’ என்று மனதில் நினைத்துக் கொண்டு தன் மகளை நலமாக வாழ்த்திக் கொண்டே அவளை ஒரு பார்வைப் பார்த்தார்.
ஆனால், குழலி இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை தன் அண்ணனும், தந்தையும் எதையோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் அவர்களிடம் சென்று, “அப்பா என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க அவரை விட்டுடுங்க” என்றாள்.
” காலம் போன பின்னாடி உனக்கு ஒரு ஆம்பளை துணையை தேடினது மட்டும் இல்லாமல் இப்போ அவனுக்காக வந்து என்கிட்டயே விட சொல்லி கேக்குற உனக்கு எவ்ளோ திமிரு டி” என்றுக் கூறிக் கொண்டே அவள் அருகில் வரவும் அமுதன் தன் வலியை பொருட்படுத்தாமல் அவள் அருகினில் வந்து அவளைப் பின்னிருந்து இழுத்து தன் பக்கம் நிற்க வைத்துக்கொண்டான்.
“என்னை விடுங்க” என்று அவனிடமிருந்து பிரிந்து சென்று மீண்டும் தன் தந்தையிடம் அதே கேள்வியை கேட்டு நின்றாள்.
அதற்கு அவள் தந்தை பதில் சொல்லும் முன்பே சேகர் முந்தி கொண்டு வந்து “இப்ப என்ன குழலி உனக்கு அவரை விட்டுடனும் அதுதானே அவரை நாங்கள் விட்டுவிடுவோம் அதே சமயம் நீங்க அவர் கூட நினைச்ச மாதிரி வாழ்க்கை வாழலாம் இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு இந்த சொத்துக்கும் உனக்கு எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டே இரு” என்றான்.
அவள் சற்று யோசிக்காமல் அவனிடம் இருந்து பேனாவை வாங்கி கையெழுத்து இட்டு விட்டு அமுதனிடம் திரும்பி, “நீங்க போங்க, ” என்றாள்.
அவனுக்கு இதற்கு என்ன சொல்லுவது என்றே தெரியாமல் அவளை அதிர்ச்சியாக பார்த்தான்.
“நீங்க போங்க சார் நான் என்னை பார்த்துப்பேன் இது என் வீடு” என்றாள்.
அவள் அந்த வார்த்தை சொன்னது தான் தாமதம் சேகர் அவன் தலை முடியை பிடித்து கீழே தள்ளிவிட்டு “இது ஒன்னும் வீடு இல்ல இனிமே என் வீடு வெளியே போடி” என்று கத்தினான்.
அதைக் கேட்டவளுக்கு என்ன செய்வது என்று திகைத்து கண்ணீர் மல்க நின்றவளை அமுதன் கையைப் பிடித்து இழுத்து செல்ல, “நீங்க எதுக்கு இப்படி இழுத்துட்டு போறீங்க எங்க அப்பா அங்க உடம்பு முடியாம இருக்காரு, ” என்றாள்.
அவன் திரும்பி அவளை தன் ரத்தம் படிந்த கைகளிலேயே கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டு தன் வலியைக் கூட பொருட்படுத்தாமல் கை வளைவிலேயே வைத்துக் கொண்டான்.
அவனிடம் இருந்து விலக நெளிந்துக் கொண்டே ‘என்ன இவரு ஏதோ பொண்டாட்டி மாதிரி எப்போ பாரு அடிச்சிட்டே இருக்காரு’ என்று மனதிற்குள் நினைத்தாள்.
ஆனால் அது அவளுக்கு மட்டும் அதிர்ச்சி இல்லாமல் அவர்களை பார்த்து நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் அதிர்ச்சி தான் குறிப்பாக, அவளின் தந்தை, “இதை எல்லாம் என் வீட்டுக்கு வெளிய போய் வச்சிக்கங்க இது சுத்தமானவங்க மட்டும் இருக்கிற வீடு முதலில் வெளிய போ நீங்க நின்ன இடத்தை எல்லாம் ஆசிட் ஊத்தி தான் கழுவணும்” என்றார்.
எந்த வார்த்தை தன் தந்தையின் வாயில் இருந்து வரக் கூடாது என்று நினைத்தாளோ அந்த வார்த்தை வரவும் அவனிடமிருந்து மெல்ல விலகி, “அப்பா நான் எந்த தப்பும் பண்ணல அப்பா,” என்று சிறு பிள்ளை போல் அவரின் காலடியிலேயே வந்து நின்றாள்.
அவர் வாயை திறக்கும் முன்னே காமாட்சி, “அடியே நீ தப்பு பண்ணாதது தான் இங்க நடக்கிறதுலேயே தெரியுதே அதனால முதலில் இங்க இருந்து கிளம்பு,” என்றாள்.
“அம்மா நான்” என்று அழைத்தவளை அவர் தடுத்து நிறுத்தி, “போதும் கிளம்பு, ” என்று சொல்லவும் என்ன செய்வது என்று தெரியாமல் மெல்ல அவங்கிருந்து கிளம்பினாள்.
அவள் அப்படி சென்றது அமுதனுக்கு ஏனோ வருத்தமாக இருந்தது இவர்களை கொல்லும் அளவிற்கு கோவம் வந்தாலும் அதனால் அளவுக்கு ஏதாவது ஆகி விடுமோ? என்று யோசித்தே அவளை விட வேகமாக சென்று, வெளியில் எங்கு செல்லலாம் என முழித்து நின்றவளை, “ஏய் வண்டியில் ஏறு” என்றான்.
“இல்லை சார் என்னால உங்களுக்கு நடந்தது எல்லாம் போதும் நீங்க போங்க” என்றாள்.
“இங்க பாரு ஒழுங்கா வண்டியில் ஏறு, என்றுக் கூறி விட்டு உன் சட்டையை கழட்டி தன் கைகளில் சுற்றி முடிச்சு போட்டுவிட்டு அவளை நிமிர்ந்து பார்க்க அவள் எதுவும் பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவர்கள் வெளியில் செல்லவும் சேகருக்கு ஓர் எண்ணிலிருந்து போன் வரும் சரியாக இருந்தது.
கதையின் போக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க…
