ரெண்டு வாரம் கழிந்திருந்தது.
இதழின் வயிறு கை கால்களில் கண்ணாடி குத்தி ஏற்பட்ட காயமெல்லாம் முழுதாக சரியாகி இயல்பாக நடக்கும் நிலைக்கு கூட கால்கள் சரியாகி விட்டது.
ஆனாலும் பெண்ணவள் கால் வலிக்கிறதென்று கட்டுடன் சுற்றி கொண்டிருக்க, இஷாவோ கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சற்று கெடுப்பிடியான நிலையில் இருந்ததால் நேரத்துக்கு செல்வது தாமதமாகவே சென்று வந்து கொண்டிருந்ததால் இதழை கவனிக்க முடியவில்லை.
இன்று வார இறுதி விடுமுறை தினம் என்பதால் இஷாவே காலை உணவை தானே சமைத்து முடித்திருந்தாள்.
பின் ஆடவர்கள் இருவரும் சாப்பிட அமர, அதன் பின் ஐந்து நிமிடம் கழித்து கட்டிட்ட கால்களுடன் சற்று கெந்தியப்படியே நடந்து வந்து சத்தியன் பக்கமிருந்த நாற்காழியில் அமர்ந்து கொண்ட இதழோ தனக்கான உணவை தானே தட்டில் போட்டு சாப்பிட தொடங்கினாள்.
ஏனோ அதிசயத்திலும் அதிசயமாக பேசும் இருவருமே அமைதியாகவே சாப்பிடும் பணியை செய்தனர்.
அக்னியோ எதிரேயிருந்த நண்பனை ஒரு முறை பார்த்துவிட்டு பின்னர் பார்வையை இதழ் புறம் பதித்தவன் ஏதோ பேச வர, அதற்குள் இஷா “இதழ் இன்னும் கால் வலியிருக்கா” என்றதுக்கு பெண்ணவளும் முகத்தை பாவமாக வைத்து கொண்டு ஆமென்று தலையாட்ட, தாடையை தடவிய இஷாவோ “மே பீ இந்த வீக்ல சரியாயிடும்.. இனி பேண்டேட் ஸ்டாப் பண்ணிட்டு நடைங்க வீக்கம் வந்தா மட்டும் ஐஸ் வச்சிக்கலாம்” என்க,
அவளும் சரியென்று தலையாட்டிவிட்டு தட்டில் ஐயக்கியமானாள்.
அவளை ஆடவன் கூர்ந்து நோக்கி கொண்டிருக்க, அப்பார்வை பெண்ணவள் உணர்ந்தாலும் காட்டிக் கொள்ளாதது போல் சாப்பிட்டுவிட்டு தட்டிலே கை கழுவி எழுந்து விட, அதற்காகவே காத்திருந்தவன் போல் தானும் தட்டிலே கையை கழுவிய அக்னி அவள் உணரும் முன்னே அவளை தூக்கி கொண்டு மொட்டை மாடிக்கு சென்று அடிக்கும் உச்சி வெயிலில் நிற்க வைத்துவிட்டான்.
இவன் அதிரடியில் பதறி பின்னால் வந்து இருவரும் அவனின் செயலில் பயந்து விட, சத்தியனோ “டேய் மச்சி என்னடா பண்ற… ஸ்வீட் ஹார்ட் பாவம்டா வெயில்ல நிக்க விட்ருக்க.. ஏற்கனவே அவளுக்கு லெக் பெயின் இருக்குல” என்று பெண்ணவள் அருகில் செல்ல போக,
நண்பன் கையை பற்றி தடுத்த அக்னியோ விரலை வாயில் வைத்து “உச்” என்று அடக்கிவிட்டு, மார்பில் கையை கட்டி கொண்டு பெண்ணவள் என்ன செய்கிறாள் என்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
அவன் மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் நின்ற மற்ற இருவருமே அவளையே பரிதாபமாக பார்த்தப்படி நின்றிருக்க, இதழுக்கோ நேரமாக வெயில் அதிகரித்ததில் காலை தரையில் ஊன்ற முடியாமல் தூக்கி எடுப்பது வைப்பதுமாக திண்டாடி கொண்டிருந்தாள்.
‘எதுக்கு இந்த அனல்.. அனல்ல நிக்கவிட்டு பழி வாங்குது.. ஒருவேளை கண்டுபிடிச்சிருச்சோ கால் வேற சூடு தாங்கல பேசாம சரண்டராக வேண்டியது தான்’ என்று மனதிற்குள் நினைத்தப்படியே எதிரே கைக்கட்டி நின்று படம் பார்ப்பது போல் பார்ப்பவனை முறைத்து தள்ளிய இதழோ “உங்களுக்கு அனல்ன்னு பெயரு வச்சதுக்காக.. இப்படி அனல்ல விட்டு பழி வாங்குறீங்களே இது நியாயமா” என்றதை கேட்டு,
அவனின் பார்வையின் அனல் அதிகரித்ததில் மிரண்டு “சரி நான் ஒத்துக்குறேன்.. என் கால் சரியாடுச்சு என்னால நல்லாவே நடக்க முடியும்” என்று இயல்பாக நடந்து அவனின் அருகில் வர, மற்ற இருவரும் தான் “அடிப்பாவி” என்பது போல் பார்த்தனர்.
அதில் பெண்ணவள் அசடு வழிந்து நிற்க, அக்னியோ அவளின் கையை பற்றி தர தரவென்று இழுத்து கொண்டு ஹாலிற்கு வந்தான்.
அவன் பின்னயே மற்ற இருவரும் வர, சத்தியனோ “ஸ்வீட் ஹார்ட் கால் சரியாகியும்.. இத்தன நாள் வலிக்குதுன்னு டிராமா பண்ணியா.. பட் வொய்” என்றதை பதில் கூற முடியாமல் பெண்ணவள் தலையை குனிந்து நின்றுவிட,
அவளை துளைத்து எடுக்கும் பார்வை பார்த்த அக்னி “என்னத்துக்குடி தரைய பாக்குற.. அவன் கேக்குறான்ல பதில் சொல்லு”
“அது.. அது கால் சரியாகினா.. எல்லா உண்மையும் சொல்லிட்டு போயிடலாம் நீங்க தான சொன்னீங்க.. உங்ககிட்டயிருந்து தள்ளி போகனும் நினைச்சாலே பயமா இருக்கு.. அதான்” என்றவள் இப்போதெல்லாம் அக்னியிடம் தோன்றும் பாதுக்காப்பு உணர்வில் இயல்பாகவே பேச தொடங்கிவிட்டாள்.
ஆனால் பயம் வந்தாலோ கடந்த கால நிகழ்வை நினைவுப்படுத்தும்படி ஏதேனும் நிகழ்ந்தால் மூச்சு திணறலோடு வார்த்தை திக்குவதும் பெண்ணவளால் கட்டுப்படுத்த முடியாதா ஒன்றாகி போனது.
இவளின் இந்நிலை மற்றவருக்கு வருத்தத்தை கொடுத்தாலும் முன்னவிட பெண்ணவள் தேரியதே போதுமானதாக இருந்தது.
அவளின் பாவமான பேச்சில் எழும் புன்னகையை அடக்கி கொண்ட அக்னி “லுக் மலர்.. நானே நினைக்காம நீ என்னவிட்டு போக முடியாது.. சோ புரிஞ்சிக்கிட்டு உன் டிராமா இதோட மூட்டகட்டிட்டு சும்மா தண்டசோறு திங்காம பொறுப்பா நடந்துக்க பாரு” என்றதில் மூக்கு விடைக்க முறைத்த இதழோ “யோவ் அனலு நான் தண்டாசோறா..” என்றதை கேட்டு அவனின் முறைப்பு அதிகமாகியதில் அசடு வழிந்த பாவையோ “ஹீ ஹீ.. இனி பொறுப்பா மூணு வேலையும் உங்களுக்கு வாயிக்கு ருசியா சமைச்சு போட வேண்டியது மை டியூட்டி”
“குட்.. ஆனா இது பத்தாது.. நீ தங்குற என் வீட்டுக்கு வாடகை கரண்டு பில்.. போட்டு இருக்கிற டிரஸ்.. மூணு வாரமா உனக்கு மருந்து மாத்திரை செலவு அண்ட் காணாததுக்கு உனக்கு சேவகம் வேற பண்ணியிருக்கேன் இதுக்குலாம் சார்ஜ் உங்க அப்பனா கொடுப்பான்” என்றவனின் பேச்சில் ஏதோ விலங்கதனத்தை உணர்ந்த இதழோ “இப்போ அதுக்கு என்ன பண்ணனுங்குறீங்க”
“சிம்பில் என்னோட ஆபீஸ்ல வொர்க் பண்ணு” என்க, சத்தியனோ ‘நீ நடத்து மச்சான்.. நீ எவ்வளவு தூரம் போக போறேன் பாக்க தான போறேன்’ என்று எண்ணியப்படி கமுக்கமாக சிரிக்க,
அக்னியின் பேச்சில் அதிர்ந்த இதழோ “என்ன விளையாடுறீங்களா.. நான் என்ன உங்கள போல டிகிரியா படிச்சிருக்கேன்..” என்க, இடைபுகுந்த சத்தியன் “என்ன ஸ்வீட் ஹார்ட் சாதரணமா சொல்லுற 12த் முடிச்சிருக்க டைப் கூட முடிச்சிருக்கேன் சொன்னியே இது போதாதா” என்றவனை முறைத்த
இதழ் “கிறுக்கு போல பேசாத சத்யா.. என்னோட ஸ்கூல் சர்டிஃபிகேட்ஸ் ஆதார் ஐடி எதுவும் என்கிட்டயில்ல.. டைப் முடிச்சி சிக்ஸ் இயர்ஸ் ஆச்சு.. எனக்கு டச் விட்டு போயிருக்கும்” என்றாள்.
அவள் பேச்சை புருவம் சுருக்கி கேட்ட அக்னியோ “லுக் மலர்.. உன்ன வேலைக்கு வர தான் சொன்னேன்.. இத்தன சர்டிஃபிகேட்ஸ் இருந்தா வேலை தருவேன் சொல்லல.. ஒன்னு புரிஞ்சிக்க அது என்னோட கம்பனி நான் வச்சது மட்டும் தான் சட்டம்.. சோ நான் முடிவு பண்ணிட்டேன்.. நீ தான் எனக்கு டைபிஸ்ட்” என்று அவளின் தலையில் சாதரணமாக இடியை இறக்கிவிட்டு செல்ல, அவனை தடுக்க வழியின்றி செய்தவதறியாமல் சத்யாவை பார்த்தவளோ “நண்பா ஹெல்ப் மீ” என்று பார்வையாலே இரைஞ்ச, அதற்கு மேலை கைகாட்டிவிட்டு சென்றவனுக்கு இருவருக்குள்ளும் எதாவது மாயாஜாலம் நிகழ்ந்தால் போதும் என்றிருந்தது.
அவன் சென்றதில் பார்வையை இஷாவின் புறம் திருப்ப, அவளின் அலம்பில் சிரிப்பை அடக்கியப்படியிருந்த இஷாவோ “மிஸ் இதழ் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. மை பிரதர் இஸ் வாட்சிங் வித் யூ” என்று பயம் காட்டிவிட்டு செல்ல, பெண்ணவள் தான் நாளை எப்படி அவனிடமிருந்து தப்பிப்பது என்று அறியாமல் நொந்து அமர்ந்திருந்தாள்.
**
அன்றைய நாள் முழுவதும் அவன்மேல் கோவமாக இருந்து காரியத்தை சாதிக்க நினைக்க, அவனோ பெண்ணவளை கண்டு கொள்ளவேயில்லை.
மறுநாள் காலையில் கூறியது போல் சமையல் வேலையை முடித்தவள் தானே பொறுப்பாக மற்றவர்களுக்கு பரிமாற, சாப்பிட்டு முடித்தவன் “பத்து நிமிஷம் தான் டைம்.. அதுக்குள்ள சாப்பிட்டு ரெடியாகுற குயிக்” என்று சோஃபாவில் அமர்ந்து விட, நடப்பவற்றை கண்டு சிரித்த சிரிக்கும் இருவரையும் “துரோகிஸ்..” என்று முனுமுணுத்தவளோ பத்து நிமிடத்திற்கு சற்று தாமதமாகவே தயாராகி வந்திருந்தாள்.
அப்படியாவது தன்னை விட்டு சென்று விடுவான் என்ற நம்பிக்கையில்.
ஆனால், அவனோ கைக்கடிகாரத்தை பார்த்து பெண்ணவளை முறைத்துவிட்டு சத்தியனிடம் கண் காட்டி முன்னே செல்ல, இதழோ “சத்யா உன் ப்ரெண்ட்டுக்கு இப்போ மட்டும் கோபமே வராதா நான் லேட்டா வந்தா கோபத்துல விட்டுட்டு போவாருன்னு நினைச்சா.. பிளான் வேஸ்ட்” என்று ஃபீல் செய்தவளை கண்டு புன்னகைத்த சத்யனோ “அவனுக்கா கோவம் வரல.. இந்நேரம் நீ லேட்டா வந்ததுக்கு ஆபீஸ் போனதும் எப்படி பழி வாங்க திட்டமே போட்டுருப்பான்” என்றப்படி பெண்ணவளை இழுத்து சென்று காரில் ஏறிக் கொண்டான்.
***
வழக்கம் போல் ஆடவன் கம்பீர நடையுடன் அழுவலகத்திலிருந்த தன் அறையை நோக்கி செல்ல, உதவியாளனாக மாறிய சத்தியனோ அவன் பின்னே ஓட, இன்று வழக்கத்திற்கு மாறாக அவனுடன் இதழும் ஓடியப்படி “என்ன சத்யா.. இந்த மனுஷன் இம்புட்டு வேகமா போறாரு”
“முத நாளைக்கே இப்படியா.. இனி பழகிக்க” என்றதை கேட்டு பெண்ணவள் அதிர்ந்து முடிப்பதற்குள் அக்னியின் அறைக்குள் வந்து விட்டார்கள்.
அவர்கள் உள்ளே நுழைந்ததுமே சத்யனிற்கு கண்ணை காட்ட, அதனை உணர்ந்து பெண்ணவளை அவனருகே இருந்த தட்டச்சு இயந்திரத்தின் முன் அமர வைத்து,
சில கோப்புகளையும் குமித்து வைத்தவன் “இந்த பைல்ஸ்ல இருக்கிற எல்லாம் டைப் பண்ணி பாஸ்கிட்ட கொடுத்துரு அண்ட் மிஸ்டேக் வரவே கூடாது.. அப்படியும் வந்தா பெர்பெக்ட்டா வருர வரை டைப் பண்ணிட்டே தான் இருக்கணும்”
“ஏதெய்.. இம்புட்டையும் இன்னைக்கே டைப் பண்ணனுமா” என்று அதிர்ந்தவளை கண்டு சிரித்த சத்தியன் “இல்ல ஸ்வீட் ஹார்ட்.. ஃபர்ஸ்ட் டேய் தான.. சோ உன்னால இன்னைக்கு முடிஞ்சளவு பண்ணினா போதும்” என்று கூறி கொண்டிருக்கும் போதே, அவர்களின் அருகில் வந்த அக்னியோ
“லுக் நான் சொன்னத விட பத்து நிமிஷம் லேட்டா வந்த தான.. சோ நாளைக்கு ஆபீஸ் ஓபனாகுற அடுத்த நிமிஷம் நீ இங்கயிருக்கணும்.. என்ன ஏமாத்த நினைக்காத நான் கண்டிப்பா கேமரா செக் பண்ணுவேன்.. அப்புறம் இதவிட பணிஷ்மெண்ட் சீவிராயிருக்கும் அதோட இனி டைம் கீப்அப் ரொம்ப முக்கியம்” என்றுவிட்டு செல்ல,
பெண்ணவளோ அவன் தாக்குதலை நினைத்து மிரண்டப்படி நிற்க, பக்கென்று சிரித்த சத்தியன் “நான் சொல்லல” என்றுவிட்டு “சரி வேலைய பாரு.. அப்புறம் அதுக்கும் பணிஷ்மெண்ட் கிடைக்கும்” என்று தன்னுடைய பணியை காண ஆடவன் சென்றதும்,
‘இது என்னடா ஸ்கூல் போல பணிஷ்மெண்ட்லாம் கொடுக்குறீங்க’ என்று நொந்த இதழோ தட்டச்சு இயந்திரத்தை தட்ட தொடங்கினாள்.
***
மூவரும் அழுவலகத்திலிருந்து மாலை தாண்டி வீடு திரும்பிருக்க, ஆறு வருட இடைவெளிவிட்டு தட்டச்சு இயந்திரத்தை தொடர்ந்து தட்டியதில் பெண்ணவளுக்கோ கை வலியுடன் உடலும் அலுப்பாகி விட்டது.
இதில் அக்னி கொடுத்த தண்டனையும் நினைவுக்கூர்ந்து பாலை மட்டும் குடித்துவிட்டு படுக்கையில் விழுந்தவள் மறுநாள் அதிகாலையிலே கண் விழித்து விட்டாள்.
பின் எழுந்தவள் ஆழ்ந்த உறக்கத்தில் சோஃபாவில் உறங்கி கொண்டிருந்த அக்னியை பார்த்து “யோவ் அனலு இதுக்குலாம் சேத்து எனக்கு நேரம் வரும்போது பழி வாங்குறேன் இருயா” என்று பொருமிவிட்டு வீட்டியில் செய்ய வேண்டிய கடமையை முடித்துவிட்டு தயாராகியவள் கடிகாரத்தில் மணி ஏழு காட்டியதில் நொந்து “ஏழு மணிக்கு ஆபீஸ திறந்து எந்த வேர்ல்ட் ரெகார்ட்லயா இடம் பிடிக்க போறீங்க” என்று புலம்பியப்படியே வெளியே வர,
“மேடம் போலாமா” என்று கார் கதவை திறந்த ஓட்டுனரை கண்டு “எங்க”
“அக்னி சார் தான் மேடம்.. உங்கள ஆபீஸ் இந்த டைமுக்கு கூட்டிட்டு போக வர சொல்லி நேத்தே சொல்லிட்டார்”
‘யோவ் அனலு பரவால ஹிட்லராயிருந்தாலும்.. நீ அக்கரக்காரன் தான்’ என்று தனது மனதுக்குள், அவனை பாராட்டிவிட்டே காரில் ஏறியவள் சரியாக அழுவலகம் திறக்கவும் சென்று சேர்ந்திருந்தாள்.
பின் அவனின் அறையிலிருந்த தனக்கான இடத்தில் அமர்ந்து தட்டச்சு அடிக்க தொடங்கி விட்டாள்.
தொடர்ந்து மூன்று மணிநேரம் தட்டியதற்கு பிறகு சோர்வை உணர்ந்தவள், தாமதிக்காமல் வர வேண்டும் இல்லையென்றால் மறுபடியும் அவனிடம் வாங்கி கட்டிக்கொள்ள முடியாதென்று சமைத்ததை கூட எடுத்து வர மறந்து விட்டாள்.
ஆனால், இப்போது என்னை மறந்து விட்டாயா என்று வயிறு கத்தவும் தான் பாவமாக அமர்ந்திருக்க, அப்போது சத்தியனுடன் உள்ளே நுழைந்த அக்னியோ பெண்ணவள் அசையாமல் அமர்ந்திருப்பதில் “உன் பாஸ் உள்ளே வந்தா எழுந்து விஷ் பண்ணனும் பேசிக் சென்ஸ் கூட இல்ல” என்றதில் சோர்வாக எழுந்த இதழோ “சாரி பாஸ்.. குட் மார்னிங்” என்று காலை வணக்கத்தை தெரிவிக்க,
பதிலுக்கு “குட் மார்னிங்..” என்றுவிட்டு எடுத்து வந்திருந்த, அவள் சமைத்த உணவை நீட்டியவன் “சாப்பிட்டு வேலைய பாரு.. அப்புறம் மயங்கி விழுந்துட்டா மீதி யாரு டைப் பண்றது” என்று அவனின் இருக்கையில் அமர்ந்து கொள்ள,
அவனின் அக்கறையை உள்ளுக்குள் ரகசியமாக ரசித்த இதழோ ‘இப்போலாம் உன்ன ரொம்ப லைக் பண்றேன் அனலு’ என்று வெட்கப்பட்டு கொண்டிருக்க,
‘அடியே என்ன முத கவனிடி’ என்று வயிறு மீண்டும் கத்தியதும் தான் அவனை ரசிக்கும் பணியை நிறுத்திவிட்டு, தன் வயிறை கவனிக்கும் பணியை முடிக்க சென்றாள்.
****
இப்படியே பெண்ணவள் தன் ஒரு மாத காலம் பணியை கடத்திருக்க, அடிக்கடி அவனை ரசித்து கொண்டும் செல்லமாக திட்டி கொண்டும் பொறுப்பாக பணியிலும் ஈடுப்பட்டிருந்தாள்.
அன்று சம்பளம் நாள், அவன் கொடுத்த சம்பள த்தை வாங்கியவளின் கண்களோ உணர்ச்சியில் கலங்கி விட, அதனை தானே துடைத்து விட்ட அக்னியோ “ட்ரீட் உண்டா”
“என்ன வேணும் சொல்லுங்க கொடுக்கிறேன”
“என்ன கேட்டாலும் கொடுப்பியா” என்றவனின் பேச்சில் வேறொரு அர்த்தத்தை தானே யூகித்து கொண்ட பெண்ணவளின் கன்னங்கள் சிவந்து விட,
அதனை அக்கள்வனும் ரகசியமாக ரசித்துவிட்டு “உன்கிட்ட தான கேட்டேன் என்ன கேட்டாலும் தருவியா” என்றதை கேட்டு ஆமென்று தலையாட்டியவள்
‘என்னையவே கேட்டாலும் தருவேன்’ என்பதை மனதுக்குள் நினைக்கவும் தவறவில்லை.
அவளின் பதிலில் புன்னகைத்த அக்னியோ “சரி வா” என்று அவன் கரம் பற்றி இழுத்து செல்ல, வசியம் வைத்தது போல் அமைதியாக அவனின் இழுப்பிற்கு சென்று காரில் ஏறியவள்,
பின்னேயிருந்த சத்தியனை கூட கவனிக்க தவறிவிட்டாள்.
அக்னியை பார்த்தப்படியே மாயலோகத்தில் இருப்பது போல் அமர்ந்திருப்பவளை கண்டு ‘முத்தி போச்சு’ என்று தன் தலையில் அடித்து கொண்ட சத்தியன், தன்னை காணாத பெண்ணவளை கண்டு நொந்து அமர்ந்திருக்க, வரவேண்டிய இடம் வந்ததும் காரை நிறுத்திய அக்னியோ, பெண்ணவளை உலுக்கி இறங்க கூற,
அதில் அசடு வழிந்து பார்வையை திருப்பி வந்த இடத்தை கண்டவளின் கண்களோ கலங்கி திகைப்பில் மூச்சு வாங்கிவிட்டது.
சுவாசம் தொடரும்..
