அவள் முதல் அவள் வரை
அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது.
காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும்.
சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான்.
சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள்.
சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார்.
சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு.
