இதயத்தின் மொழி
தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை.
