இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா
சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது.
இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை.
இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள்.
நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும்
தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம்.
அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான்.
நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள்.
அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா?
அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா?
அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும்
நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா?
தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை
நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது?
அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களே
இந்தக் கதையின் பயணம்
