இதுவும் கடந்து வாழவே...
காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை இங்கு வரவேற்க போவது தேவிகா மற்றும் ராம், நம் நாயகன் நாயகி ஆவர்.
அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி அரசியல் மீதும் குடும்பத்தின் மீதும் அதீத நாட்டம் கொண்டவள் நேர் கொண்டு நடப்பவள் அந்த நேர்மையை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பவள். பிஸினஸ் பாலிடிக்ஸை கரைத்து குடித்த குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன், பிஸினசுக்காக நெளிவு சுழிவு அறிந்து செயல்படுபவன். இவர்கள் சந்திக்கும் போது அவளின் நேர்மையான கண்களை சந்திக்க முடிந்ததும் முடியாமல் தவிர்க்கிறான் ராம், செப்பு கலந்தாலும் தங்கம் தங்கம்தானே என்ற உண்மையை அவளின் காதல் தேவிகாவுக்கு உணர்த்துமா?
